நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். - குறள் 511
- எப்படி தெரியுமா நன்மையையும் தீமையையும் பிரித்து வரையறை செய்ய முடியும்?
சுயஅறிவும் நூலறிவும் சேர்தல் வேண்டும்!
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. - குறள் 636
- தமிழில் வேதம் (முதல் நூல் எனப்படும் கடவுள் மனிதனுக்கு பணித்தது- நன்னூல்& தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94) உண்டு அவை என்னவென்று உனக்கு தெரியுமா?
அந்த நூலைத்தான் ஆய்ந்து அறியவேண்டும்! அவைகளின் சிந்தாந்த தொகுப்பு பின்வருமாறு
தமிழர் மதம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது (திருமந்திரம் 2104) : அதாவது சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு இல்லை, பல கடவுள்களும் இல்லை.
- ஒவ்வொரு மதத்திற்க்கும் ஓர் தெய்வம் இல்லை :
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? - சிவவாக்கியர் 222
- சிலைகளை இறைவனாக வணங்க கூடாது - சித்தர் சிவாவாக்கியர் பாடல்கள்
செங்கலும் கருங்கலும் "சிவந்தசாதி லிங்கமும்"
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36
ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.
- மறு ஜென்மம் பூர்வ ஜென்மம் என ஏதும் கிடையாது !!
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47
- ஆனால் மறுமை உண்டு !!
மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)
மறுமை என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.
- சோதிடம் பைத்தியகாரத்தனம் !!
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில். - நாலடியார் 52
புனிதமாக கருதப்படும் தாலி தமிழர் மதம் இல்லை
அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.
உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை'''
19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமத ஆதிக்கம் அதிகமானபிறகு தொடங்கியதே!
- வரதட்சணை கூடாது !!
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே! - அகநானூறு பாடல் 90 - மருதன் இளநாகனார்
திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ’விலை’(சீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.
- வட்டி பெரும்பாவம் !!
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
(திருமந்திரம் - முதல் தந்திரம் - 20, அறஞ்செயான் திறம் - பாடல் எண் 1.)
மனிதனின் பிறப்பே இறைவனை வணங்கத்தான்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09.
- அவனை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா?
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - நாலடியார் 001
- இத்தனையும் அறிந்தபிறகு ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? இவை அனைத்தும் இஸ்லாத்தின் சித்தாந்தம். இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள்.
இந்து மதத்தில் இருந்துகொண்டு
சிலையை வணங்காமல் இருக்க முடியுமா?
சாதி இல்லை என்று சொல்ல முடியுமா?
தாலி வேண்டாம் என்றோ?
வரதட்சணை வேண்டாம் என்றோ?
ஆண் தான் பெண்ணுக்கு விலை கொடுக்க வேண்டும் என்றோ?
வட்டி கூடாது என்றோ?
சோதிடம் பொய் என்றோ?
மறு ஜென்மம் இல்லை என்றோ கூறிவிட முடியுமா?
"முடியாது" ஏனென்றால் இவைகள் தான் இந்து மதத்தின் அடிப்படைகள். ஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும். இந்துவாக அல்ல.
- ஏற்றுக்கொள்ளும் சித்தாந்ததில் பிழைகள் இருக்க கூடாது, பின்பற்றுபவர்களில் இருக்கத்தான் செய்யும். இது அனைவர்க்கும் பொருந்தும், தமிழனாய் இஸ்லாமிய கொள்கைகளே ஏற்றுகொள்ள சிறந்தது இணக்கமானது. முஸ்லிம்களிடத்தில் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் இஸ்லாமிய கட்டமைப்பு ஒரு தானியங்கி சமூக சுத்திகரிப்பு இயந்திரம் போல, தன்னை தானே அவ்வப்போது சீர்திருத்திகொள்ளும்.
- அரபி மொழி பிரச்னை என்றால் இந்துமதம் சம்ஸ்கிருத மொழியை புனிதமாக சொல்கிறது தமிழை சூத்திர மொழி என்கிறது. ஆனால் முகமது நபி அவர்கள் எந்த ஒரு அரபியும் எந்த ஒரு அரபி அல்லாதவரை விட சிறந்தவர் கிடையாது, மொழியால் சிறப்பில்லை, குலத்தால் சிறப்பில்லை, நிறத்தால் சிறப்பில்லை என்பதொடு நற்குணமும் இறை அச்சமுமும் அதிகம் கொண்டவரே சிறந்தவர் என்ற அவரின் முற்போக்கு போதனைகளை வாசித்தால் உனக்கு ஒருவேளை அறிவு வளரலாம்.
- இத்தனை கற்ற பிறகும் இதை அப்படியே விட்டுவிடலாமா என்றால்?
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391