ஒவ்வொரு நிலத்துக்கும் மொழிக்கும் வேதம் உண்டு

தமிழர் சமயம் 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். - குறள் 28

பதவுரை :

நிறைமொழி - முழுமையான சொல் 
மாந்தர் - மனிதர் 
பெருமை - பெருமை 
நிலத்து மறைமொழி - அந்த நிலத்தின் மறை நூல் 
காட்டி விடும் - அடையாளம் காட்டும்
 
 உரை: ஒரு சொல் எப்பொழுது முழுமை பெரும்? சொன்னனது படி நடக்கும் பொழுது ஆகும். எனவே சொன்ன சொல் பிபற்றிய மனிதரின் பெருமை பற்றி அந்த நிலத்த்தின் மறைநூல் அடையாளம் காட்டும்.

குறிப்பு: ஒவ்வொருநிலத்துக்கும் ஒரு மறை நூல் உண்டு என்பதை இக்குறள் உறுதிப்படுத்துகிறது. எனவே வேதம் என்றால் வடமொழி வேதத்தை மட்டும் சுட்டுவதும், தமிழில் மறைநூல் இல்லை என கூறுவதும் பெரும் பிழை ஆகும். 

இஸ்லாம் 

மறைநூல் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று 
 
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - (குர்ஆன் 2:38)  
 
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்
 
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213) 

பிற்காலத்தில் மொழிகள் வேறுபட்டதும், ஒவ்வொரு மொழிக்கும் வேதம் வழங்கப் பட்டது (ஒவ்வொரு சமுதாயத்துக்கும் முதல் நூல் உண்டு) 

 "ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" - (குர்ஆன் 14:4)

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்-ஆன் 10:47)

இஸ்லாம் இறுதி சமயமாகவும், முகமது நபி அவர்கள் இறுதி தூதராகவும், குர்ஆன் இறுதி தூதராகவும் இருப்பதால், அவரது காலத்துக்கு முன் உள்ள மொழிகளில் எல்லாம் ஏதம் கொடுக்க பட்டு உள்ளது. அதற்கு பிறகு வந்த மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுகு போன்ற மொழிகளில் வேதம் இருக்கவில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக