ஆத்திசூடி & இஸ்லாம் - ஒப்பீடு

முன்னுரை 

12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் ஆத்திச்சூடிக்கு முதன் முதலில் 1879 இல் விளக்கவுரை எழுதியது பிற்கால சைவ சமயத்தை சார்ந்த இலங்கை ஆறுமுக நாவலர் ஆவார். அவரது விளக்க உரையை அடிப்படையாக கொண்டுதான் பிற்கால விளக்க உரைகள் அமைந்து உள்ளன. அதாவது ஒரு ஆதீச்சூடிக்கு தான் விளக்கம் கொடுக்கும் பொழுது, தான் அறிந்த மொழி, தான் ஏற்ற சமய தத்துவம், தனக்குரிய கல்வியின் அளவு ஆகியவற்றை பொறுத்த்து அவர் விளக்கம் எழுதி உள்ளார்.  பல பொருள் உள்ள தமிழ் சொற்களுக்கு எனவே அவர் எங்கெல்லாம் பொருந்தாத சொற்களை அல்லது கருத்துக்களை கூறி உள்ளாரோ அவைகளுக்கு மாற்று விளக்கவுரை எழுதி அவைகளை ஏன் அப்படி கருதுகிறேன் என்று ஆதரதத்துடன் விளக்கியும் இந்த ஒப்பீட்டு நூலில் எழுதப்பட்டு உள்ளது. 

இந்த ஒப்பீடு ஆங்காங்கே சில இடங்களில் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஒப்பீடு சட்டு ஆழமாக செய்யும் நோக்கத்தில் தொடங்கபப்டுகிறது.

இதுவாரை செய்யப்பட்ட ஒப்பீடுகள்:


ஆத்திச்சூடி, பொருள் மற்றும் விளக்கம் ஆகியவை ஆறுமுக நாவலரின் விளக்க உரையில் இருந்து எடுக்கப்பட்டது, புதிய விளக்கம் என்பது நமது விளக்கம் ஆகும். 


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. 
 
(பதவுரை) ஆத்தி - ஒருவகையான மரம் என்று சொல்லப்படுகிறது. எனவே அதில் உள்ள மலரை மாலையாக அணிந்து சொல்லப்படுகிறது. சூடி-அணிந்து, அமர்ந்த-அமர்ந்து இருக்கும், தேவனை-இறைவனை,  ஏத்தி ஏத்தி-புகழ்ந்து புகழ்ந்து, தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே. 
 
(மறுப்பு)  ஆத்தி - இது ஒருவகை மரம் என்று சொல்லப்படுகிறது. எனவே அதில் உள்ள மலரை மாலையாக அணிந்து சொல்லப் படுகிறது. ஆனால் இது சரியான கருத்தாக தெரியவில்லை. காரணம் இறைவன் மாலை சூடி தந்தது அழகையோ நறுமணத்தியோ பெருக்கி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் இந்த மரத்தில் இருந்து மலை செய்து அணிந்து கொள்ளும் அளவுக்கு இந்த மரம் பெரியது இல்லை. எனவே அது "ஆதி" என்பது மருவி "ஆத்தி"யாக இருக்க கூடும். அல்லது ஆத்தி என்பது ஆச்சரியமாக இருக்க கூடும். அல்லது ஆத்தி என்பது ஏதேனும் குணமாக இருக்கலாம். அவரவர் விருப்பத்திற்கு இதன் பொருளை விட்டுவிட்டால் "ஆத்தியை அணிந்து அமர்ந்து இருக்கும் இறைவனை புகழ்ந்து புகழ்ந்து வணங்குவோம் நாமே" என்பது தான அதன் பொருள்.

1. ஆத்திசூடி 

அறம் செய விரும்பு
 
(பதவுரை) அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு – ஆசை கொள் 
 
(பொழிப்புரை) தர்மம்/கடமை/நன்மை செய்ய ஆவல் கொள். 

(மறுப்பு) தர்மம் என்பது சமஸ்கிருத வார்த்தை அறம் எனும் சொல்லுக்கு ஒழுக்கம், புண்ணியம், அறன், நற்செயல் என்பன பொருள்களாம். எளிய நடையில் சொல்வதென்றால் நற்செயல்களை செய்ய விரும்பு என்பது இந்த ஆத்திசூடியின் விளக்கம் ஆகும்.

இஸ்லாம்  
 
உங்களில் யார் செயலால் மிகவும் அழகானவர் என்று சோதிப்பதற்காக அவன் வாழ்வையும் மரணத்தையும் படைத்தான்
 
எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (குர்ஆன் 16:128)

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள், தொழு கையையும் நிலைநிறுத்துவார்கள், நாம் அவர் களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன் முறையில்) செலவு செய் வார்கள். நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள், இத்தகையோருக்கு மறுமையில் (சுவனபதியயன்னும்) நல்ல வீடு இருக்கிறது. (குர்ஆன் 13:22)

ஆறுவது சினம்

(பதவுரை) ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபம். 
 
(பொழிப்புரை) கோபம் தணியத் தகுவதாம். / ஆத்திரம் அடக்கு. 
 
இஸ்லாம்  
 
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (குர்ஆன் 3:134)
இயல்வது கரவேல்

(பதவுரை) இயல்வது - இயன்றதை, முடிந்தததை, கர - மறை,கவர் , கரவேல் - மறைக்காதே 
 
(பொழிப்புரை) கொடுக்கமுடிந்த பொருளை கேட்பவர்களிடம் கொடுக்காமல் மறைக்காதே 

(மறுப்பு) இயன்றதை  மறைக்காதே எனும் பொழுது, உன்னால் முடிந்த தனத்தை மறைக்காமல் செய் என்று மட்டும் மட்டும் குறிப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுளள்து. "இயல்வது" என்பது பொதுப்படையாக இருப்பதால் இது அனைத்துக்கும் பொருந்து என்று சொல்லலாம். எனவே உன்னால் செய்யமுடிந்த அறச்செயல்கள் அனைத்தையும் 

இஸ்லாம்  
 
வறுமை நிலைமையிலும் (முடிந்தததை) தானம் செய் - (குர்ஆன் 3:134)
ஈவது விலக்கேல்

(பதவுரை) ஈவது-கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே. 
 
(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே. 
 
இஸ்லாம்  
 
எவர் கருமித்தனம் செய்வதுடன் மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவு படுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம் - (குர்ஆன் 4:37)

இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. (குர்ஆன் 9:79)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறு கூறி இட்டுக்கட்டினார்கள் உண்மை நிலை அறியாமல் சில சஹாபாக்கள் அதில் சம்பந்தப்பட்டார்கள். அதில் ஒருவர்தான் அபூபக்கர் (ரலி) மூலமாக உதவி பெற்று வந்த மிஸ்தஹ் (ரலி) அவர்கள். இது தெரிந்த அபூபக்கர் ரலி அவர்கள் இனிமேல் நான் உதவியே செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்கள். 

அல்லாஹ் வசனத்தை இறக்குகிறான்: இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம் இடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் 24: 22) 

இந்த வசனம் இறங்கிய உடன் அபூபக்கர் ரலி அவர்கள் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள்: “ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்” என்று கூறினார்கள். (நூல் : புகாரி- 6679)

 ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1419)  

உடையது விளம்பேல்

(பதவுரை) உடையது - உள்ள பொருளை, விளம்பேல் - சொல்லாதே 
 
(பொழிப்புரை) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி(பெருமையாய்) சொல்லாதே / தற்பெருமை கூடாது. 
 
இஸ்லாம்  

எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான் - குர்ஆன் 4:38

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)

தன்னிடம் உள்ள செல்வத்தை பெருமைக்காக சொல்வதை கொடுப்பது அல்லாமல் பிறருக்கு ஆர்வமூட்டுவதற்க்காக வெளிபப்டையாக கொடுக்க அனுமதி இருந்தாலும், மறைத்து கொடுப்பதே சிறந்தது. தானம் செய்வதற்க்கே இந்த கட்டுப்பாடு இருக்கின்ற பொழுது பெருமைக்காக தன்னிடம் உள்ள செல்வதை வெளியில் சொல்லுவதை நினைத்து பாருங்கள்.

ஊக்கமது கைவிடேல்

(பதவுரை) ஊக்கம் - மன உறுதியை, கைவிடேல் – கைவிடாதே 
 
(பொழிப்புரை) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே / உற்சாகத்தை (தன்னம்பிக்கை/விடாமுயற்சி) இழக்காதே.
 
இஸ்லாம்   
 
உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? - (குர்ஆன் 4:36)

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். (அல்குர்ஆன்: 3:139)

எண் எழுத்து இகழேல்

(பதவுரை) எண் - கணித, எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழாதே. 
 
(பொழிப்புரை) கற்றலை இகழாதே / கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். 
 
இஸ்லாம்  

நபி(ஸல்)கூறினார்கள், அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலிகளிடம் பெருமையடிக்கவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவோ கல்வியை ஒருவன் தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (அறிவிப்பவர்: கஃப் இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: திர்மிதீ, ஹாகிம், பைஹகீ)

"இரவின் ஒரு சிறுபகுதியில் கல்வி கற்பது, இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் புரிவதை விடச் சிறந்ததாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: மிஷ்காத்)

கல்வியைத் தேடி எவர் செல்கிறாரோ அவருக்கு சுவனத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்குகிறான். மேலும் அவருக்காக வானவர்கள் இறைஞ்சுகிறார்கள். அவர்களின் இறக்கைகளை பணிக்கிறார்கள். சுவனவாசிகள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள் கடலில் வாழம் மீன்கள் உள்பட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றன". (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி)

கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? - (குர்ஆன் 39:9)
ஏற்பது இகழ்ச்சி

(பதவுரை) ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும். 
 
(பொழிப்புரை) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. / இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்) 
 
இஸ்லாம்  
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”…யாசகம் கேட்பதை, அல்லாஹ் வெறுத்துள்ளான்.” - (ஸஹீஹ் புஹாரி 3:591)
ஐயமிட்டு உண்

(பதவுரை) ஐயம் - பிச்சையை, இட்டு - கொடுத்து, உண் - உண்ணு 
 
(பொழிப்புரை) பிச்சையிட்டுப் பிறகு உண் 
 
இஸ்லாம்  
 
அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறை விசுவாசியாக இருக்க முடியாது - (நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா-20160)
ஒப்புர வொழுகு

(பதவுரை) ஒப்புர- ‘ஒப்பு’ என்றால் சமம் என்று பொருள், ‘உரவு’ என்றால் வலிமை, அறிவு, பரத்தல், மிகுதி, உளத்திட்பம் என்று பொருள் ‘ஒப்புரவு’ என்றால் பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு உதவுதல். ஒழுகு- அந்த வழியிலே நட 
 
(பொழிப்புரை) உலகத்தோடு ஒற்றுவாழ் / பகிர்ந்துண்டு வாழ் / பிறரையும் தமக்குச் சமமாகக்கருதி வாழ் என்று பலபொருள்படும் 
 
இஸ்லாம்  

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: றவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி)

நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?’ (குர்ஆன் 47:22)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

 "பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 5991)

ஓதுவது ஒழியேல்

(பதவுரை) ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் – விடாதே 
 
(பொழிப்புரை) ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே. 
 
இஸ்லாம்  
 
கல்வி கற்பது இறைநம்பிக்கையாளரின் மீது கடமையாகும் - (திரிமிதி 74)
ஒளவியம் பேசேல்

பொருள் ஒளவியம் - பொறாமை அல்லது பெருமை கொண்ட வார்த்தைகளை, பேசேல் - பேசாதே. 
 
(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே. 
 
இஸ்லாம்  
 
நபி (ஸல்) அவர்கள் ''பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ, புட்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத் தின்று விடும்''. (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (ஆதாரம் : அபூதாவூத்)

 (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5048

புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

அஃகஞ் சுருக்கேல்

(பதவுரை) அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைக்காதே 
 
(பொழிப்புரை) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே 
 
இஸ்லாம்  
 
நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்- (குர்ஆன்:55:9)
கண்டொன்று சொல்லேல்.

(பதவுரை) கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே. 
 
(பொழிப்புரை) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் (பொய்ச்சாட்சி) சொல்லாதே. 
 
இஸ்லாம்  
 
அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்.)


ஙப்போல் வளை.

                    (பதவுரை) ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு.

(பொழிப்புரை)  ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.  
  
இஸ்லாம்  
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். - புஹாரி 6: 78: 5984


சனிநீ ராடு.

(பதவுரை) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு - நீரிலே தலைமுழுகு

(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் குளி.

இஸ்லாம் 

ஜும்ஆ (வெள்ளி) நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி: 858  

குறிப்பு: ஒவ்வொரு சமூகத்துக்கும் புனித நாள் வேறுபடுகிறது.

ஞயம்பட வுரை.

(பதவுரை) ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.

(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.] 
 
இஸ்லாம் 

மேலும் மக்களிடம் அன்பாகப் பேசுங்கள். (அல்குர்ஆன் 2:83)

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. ... (குர்ஆன் 3:159)

இடம்பட வீடெடேல்

(பதவுரை) இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதே

(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

இஸ்லாம் 

அம்ர் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களுக்காக நான் அஞ்சுவது வறுமை அல்ல, மாறாக உங்களுக்காக நான் அஞ்சுவது என்னவென்றால், உங்களுக்கு முன் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போல உலக செல்வங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படலாம், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டது போல் நீங்கள் அவர்களுக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவீர்கள், அவர்கள் அழிக்கப்பட்டதைப் போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.” - அல்-புகாரி (2988) மற்றும் முஸ்லிம் (2961)
இணக்கமறிந் திணங்கு

(பதவுரை)  இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நட்பு கொள்.

(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய். 
 
இஸ்லாம்

என் இரட்சகனே! நீ எனக்கு அறிவை வழங்குவாயாக! மேலும், நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! (திருக்குர்ஆன்:- 26:83)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒருவன் அவனது நண்பனின் மார்க்கத்தில் உள்ளான். எனவே, நண்பனாக எவனைத் தேர்ந்தெடுப்பது என்பதை உங்களில் ஒருவர் சிந்திக்கட்டும்." நூல்:- அபூதாவூத்-4833, திர்மிதீ-2378

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) நூல் : புகாரி (2101) 

தந்தைதாய்ப் பேண்

(பதவுரை) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று

(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

இஸ்லாம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குர்ஆன் 31:14)
நன்றி மறவேல்.

(பதவுரை) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு. உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.

இஸ்லாம்:  நன்றி இறைநம்பிக்கையின் அடையாளம் 

சக மனிதனுக்கு நன்றி செலுத்திடுதல்  

எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ 403)

‘மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.'(லுக்மான் : 14) 

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் 

நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” (14:7)

அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்பகரா: 243)

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.’ [அல் குர்ஆன்14:34]

அல்லாஹ் யாருக்கு நன்றி செலுத்துகிறான்?

‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 652)

பருவத்தே பயிர்செய்.

(பதவுரை) பருவத்தே - தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு.

(பொழிப்புரை) விளையும் பருவமறிந்து பயிரிடு. 
    எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.

இஸ்லாம்   

விலை மதிப்பற்ற செல்வமான காலத்தை வீணடிப்பது பெருங்குற்றமாகும். இதற்காகக் கடுமையான தண்டனையை மறுமை நாளில் பெற நேரிடும். தண்டனையிலிருந்து தப்பிக்கவும் முடியாது.

மறுமையில் இவர்களது வாதம்: எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம் என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ் நாளை அளித்திருக்க வில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை (என்று கூறப்படும்) (அல்குர்ஆன்: 35:37)

இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம். -  (நூல்: புகாரி.)

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: (திர்மிதி)

மன்றுபறித் துண்ணேல்.

(பதவுரை) மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே.

(பொழிப்புரை) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.

இஸ்லாம் 
 
இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதே 

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் (லஞ்சமாக) கொண்டு செல்லாதீர்கள் (திருக்குர்ஆன்:2:188)

 அபூ ஹீரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் தீர்ப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் அல்லாஹ் சபிக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - (இப்னு ஹிப்பான் 5077, முஸ்னது அப்துர்ரஸாக் 14669)

ஸவ்பான்(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் இருவருக்கும் மத்தியில் லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக பேசுவோரையும் அல்லாஹ் சபிக்கிறான்.  - (தப்ராணீ 1415, பஸ்ஸார் 1353) 

“திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தி வாழும் படியும், பிறருக்கு நலன் செய்து வாழும் படியும், உறவினர்களுக்கு ஈந்து வாழும் படியும் உங்களுக்கு ஏவுகிறான்.” (அல்குர் ஆன்:16:90)  

நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்“ என்று சொல்ல கேட்டேன்“ எனக் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி

இயல்பலா தனசெயேல்.

(பதவுரை) இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

(மறுப்பு) மனிதர்களுக்கு இயல்பிலேயே சில சிந்தனை இயல்பு இருக்கும், மேலே ஒருவன் இருக்கிறான், ஆணுக்கு பெண்மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும் உள்ள ஈர்ப்பு, பெண்ணாக இருந்தாலும் மனைவி அல்லாத உறவுகளின் மீது வேறு வகையான அன்பு, திட்டுட்டு, கொலை, துரோகம் போன்ற பெரும் பாவங்களை செய்யும் பொழுது மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சி. இந்த இயல்புக்கு எதிரான செய்லகளை செய்ய துணிய கூடாது. 

இஸ்லாம் 

(ஒவ்வொரு குழந்தையும் ஃபித்ராவில் (மனிதனின் இயற்கையான நிலையில்) பிறக்கிறது, பிறகு அதன் பெற்றோர் அதை ஒரு யூதராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது ஸொராஸ்டிரியராகவோ ஆக்குகிறார்கள் [புகாரி 2:441]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் கூறினான்: (நான் என் அடியார்களை ஹுனஃபாக்களாக (நேர்மையானவர்களாக) படைத்தேன்.) - ஸஹீஹ் முஸ்லிம் 

நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்.  - முஸ்லிம் 2553

 ஓர் இறைநம்பிக்கையாளர் பாவம் புரிகின்ற போது அவருடைய உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி பதியப்படுகின்றது. தான் செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்தி அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகையில் அவருடைய உள்ளமானது பரிசுத்தப் படுத்தப்படுகின்றது. மாறாக, அவர் (அதிலிருந்து மீளாமல்) மீண்டும் மீண்டும் பாவம் செய்து கொண்டேயிருப்பாரெனில் (கரும்புள்ளி பதியப்படுவதும் அதிகரித்து) அவருடைய உள்ளம் முழுவதையும் (நற்போதனைகள் பயன்தராத விதத்தில், இருளாக) சூழ்ந்து கொள்கின்றது. பாவமானது (கரும்புள்ளிகளாக அவருடைய) உள்ளத்தை சூழ்ந்து கொள்வதைப் பற்றி, அல்லாஹ் தனது வேதமான குர்ஆனில் “அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது (83:14) என்று குறிப்பிடுகின்றான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: இப்னுமாஜா 4242)

விளக்கம்: ஒவ்வொரு குழந்தையும் இறைவனால் படைக்கப்படும் பொழுது நேர்மையானவர்களாக இயல்பானவர்களாக படைக்க பட்டு உள்ளனர். எனவே அவர்கள் பாவம் செய்யும் பொழுது அது இயல்புக்கு எதிரானது என்பதால் உள்ளத்தில் குறுகுறுப்பும் அந்த பாவத்தை நாம் செய்வதை பிறர் பார்ப்பதை வெறுக்கும் மனநிலையும் அல்லாஹ் நமக்கு கொடுத்து உள்ளான். எனவே அந்த செயல்களை செய்யமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அரவ மாட்டேல்.

(பதவுரை) அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.

(பொழிப்புரை) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.

இஸ்லாம் 

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தங்களைப் பழிவாங்கும் என அச்சத்தால் யார் பாம்புகளை (கொல்லாமல்) விட்டு விடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். அவற்றிடம் நாம் சண்டை போட ஆரம்பித்த நாளிலிருந்து அவற்றோடு நாம் இணங்கிப் போனதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4570, முஸ்னது அஹ்மத்

இமாம் அஸ்zஸர்கஷீ கூறினார்கள் : “தீங்கிழைக்கக் கூடிய (பாம்பு, பல்லி, எலி உட்பட) ஐந்து உயிரினங்களையும் கையகப்படுத்துவது (அதை விற்பது, வாங்குவது, வளர்ப்பது, விளையாடுவது) தடுக்கப்பட்டதாகும்.” (துஹ்பதுல் முஹ்தாஜ் : 9/337) , (அல்மன்ஸுர் பில் கவாஇத் : 3/80)


(பதவுரை) இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு.

(பொழிப்புரை) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.

 இஸ்லாம்: மெத்தை-யில் தூங்கலாம் ஆனால் அதனால் தொழுகை பாழாகக் கூடாது:

நபி (ஸல்) அவர்களது படுக்கை விரிப்பு எவ்வாறு இருந்தது என்று அன்னை ஹஃப்ஸாவிடம் (ரளி) வினவப்பட்ட போது, அது ஒரு சாக்குப் பை. அதை இரண்டாக மடித்து நபியவர்களுக்கு படுக்கை யாக்கி விடுவோம் என்று அவர் கூறினார்.

ஒருமுறை நபியவர்கள் காலையில் எழுந்ததும் படுக்கையை விரித்தது யார் என்றார்கள். நான்தான் விரித்தேன் என்றேன். எதை விரித்தீர்கள் என்றார்கள். எப்போதும் விரிக்கும் சாக்குப் பைதான். ஆனால் சற்று மிருதுவாக இருக்கட்டுமே என்று நான்காக மடித்து விரித்தேன் என்றேன்.

இனி இரண்டாகவே மடித்து விரியுங்கள். ஏனெனில், அதன் மிருதுத் தன்மை, தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழ எனக்கு இடையூறாக இருந்தது என்றார்கள் நபியவர்கள். [திர்மிதி]

குறிப்பு: அரேபிய தீபகற்பத்தில் இலவம் பஞ்சு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அது அவர்களின் வாழ்வியலோடு இணைந்து இருக்கவில்லை எனவே இலவம் பஞ்சு என்பது குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.

வஞ்சகம் பேசேல்.

(பதவுரை) வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) கபடச் சொற்களைப் பேசாதே.

இஸ்லாம்: குழப்பம் ஏற்படுத்தும் சொற்களை பேசுபவர் நயவஞ்சகர் என்று இஸ்லாம் சொல்கிறது 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்:அவன் பேசும்போது பொய் உரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான். (முஸ்லீம்)

(முஹம்மதே!) முன்னரும் அவர்கள் (நயவஞ்சகர்கள்) குழப்பம் விளைவிக்க எண்ணினார்கள். பிரச்சனைகளை உம்மிடம் திசை திருப்பினார்கள். முடிவில் உண்மை தெரிந்தது. அவர்கள் வெறுத்த போதும் அல்லாஹ்வின் காரியம் மேலோங்கியது. (குர்ஆன்: 9:48)

நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன்: 9:67)

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (குர்ஆன்: 4:142
 
அழகலா தனசெயேல்.

(பதவுரை) அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) இழிவான செயல்களைச் செய்யாதே.

இஸ்லாம்

 நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிடவில்லை. (குர்ஆன் 7:28)

மானக்கேடான செயல்களின் பக்கம் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ நெருங்காதீர்கள். (குர்ஆன் 6:151)

நிச்சயமாக தொழுகை (மனிதனை) மானக் கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்; நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு(தியானம்) மிகவும் பெரிதாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் வன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ (அவனை ஷைத்தான்) மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) ஏவுவான். (குர்ஆன் 24:21)

(இறை நம்பிக்கையாளர்களான) அவர்கள் (எத்தகையோரெனில்) பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (குர்ஆன் 42:37)

நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ளமாட்டீர்களா? (குர்ஆன்: 5:90-91)

“அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்” என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.(திருக்குர் ஆன் 2:83)

இளமையிற் கல்.

(பதவுரை) இளமையில் - இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்.

(பொழிப்புரை) இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.

  இஸ்லாம்

‘உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாஈ 11832, ஹாகிம் 7846)

"எவரொருவர் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்கிவிடுகிறான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம், அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

அறனை மறவேல்.

(பதவுரை) அறனை- நற்குணம்,  மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) நற்குணத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்களும் "நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)

 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) 

 முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! (திர்மிதி)

பெரும்பாலும் மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும் நற்குணங்களும் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, ஹாகிம்)

அனந்த லாடேல்.

(பதவுரை) அனந்தல் - தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.

(பொழிப்புரை) மிகுதியாகத் தூங்காதே.

இஸ்லாம் 

"இதயத்தைக் கெடுக்கும் ஐந்து விஷயங்களைப் பொறுத்தவரை, அவை குறிப்பிடப்படுகின்றன: மக்களுடன் அதிகமாகக் கலப்பது, ஆசைப்படுதல், அல்லாஹ்வைத் தவிர வேறு எதனுடனும் பற்றுக் கொள்வது, நிரம்பி வழிவது, மிகுதியாக தூங்குவது. இந்த ஐந்தும் இதயத்தைப் பெரிதும் கெடுக்கும்." (மதரிஜ் அஸ்-சாலிகின், 1/453).

கடிவது மற.

(பதவுரை) கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு.

(பொழிப்புரை) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.

இஸ்லாம்  
 
நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன் பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்! நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்.” (ஸஹீீஹுல் புகாரி) 

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, எசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் “அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள். ((ஸஹீஹுல் புகாரி) 
 
“முஃமின் (அல்லாஹ்வை விசுவாசித்தவர்) குத்திக் காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ, ஆபாசமாகப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்.” (அல் அதபுல் முஃப்ரத்) 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“அசிங்கமான செயல்களைச் செய்பவரையும், அசிங்கமான சொற்களைப் பேசுபவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (முஃஜமுத் தப்ரானி, முஸ்னத் அஹ்மத்) 

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (குர்ஆன்  3:134)

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 5180) 

காப்பது விரதம்.

(பதவுரை) காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் - நோன்பாகும்.

(பொழிப்புரை) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும். தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.

   இஸ்லாம் 

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!” என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட நறுமணம்மிக்கதாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)” (புஹாரி: 1894)  
 
‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கை களையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். (புஹாரி: 1903)

கிழமைப் படவாழ்.

(பதவுரை) கிழமைப்பட- (உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு. 
 
இஸ்லாம் 

மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவதுதான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 95)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார் (புகாரி: 13)

 அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)

நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்“ என்று சொல்ல கேட்டேன்“ எனக் கூறினார்கள். - ஸஹீஹ் புகாரி

கீழ்மை யகற்று.

(பதவுரை) கீழ்மை - இழிவானவற்றை, அகற்று - நீக்கு.

(பொழிப்புரை) இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

இஸ்லாம்  

மானக்கேடான செயல்களின் பக்கம் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ நெருங்காதீர்கள். (6:151)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ (அவனை ஷைத்தான்) மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) ஏவுவான். (24:21)

நிச்சயமாக ஷைத்தான் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)
குணமது கைவிடேல்.

(பதவுரை) குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.

இஸ்லாம்  

ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.” (ஸுனனுத் திர்மிதி)

நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் "நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது" என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)

கூடிப் பிரியேல்

(பதவுரை) கூடி - (நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே.

(பொழிப்புரை) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே என்று விளக்கம் சொல்கிறது. இது உடன்பிறந்த உறவையோ அல்லது நட்பையோ குறிப்பிடவில்லை. மாறாக இந்த மார்கத்தையோ அல்லது அதை பின்பற்றும் நல்லோருடன் கூடி பிறகு பிரிய வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறுகிறது.

இஸ்லாம்  

எவர் நம்பிக்கை கொண்ட பிறகு அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ... அவரது இதயம் நம்பிக்கையில் அமைதியுடன் இருக்கும்போது [தன் மதத்தை கைவிட] கட்டாயப்படுத்தப்பட்டவரைத் தவிர. ஆனால், எவர்கள் தங்கள் இதயங்களை நிராகரிப்பிற்குத் திறந்தார்களோ, அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டு, மேலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் உண்டு - [அன்-நஹ்ல் 16:106].

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறும் ஒரு முஸ்லிமின் இரத்தம் சிந்த அனுமதிக்கப்படாது; மூன்று நிகழ்வுகளில் ஒன்றைத் தவிர: ஆன்மாவுக்கு ஆன்மா (அதாவது, கொலைக்கான தண்டனை), விபச்சாரம் செய்யும் திருமணமான ஆண் அல்லது பெண், மற்றும் தனது மதத்தை விட்டு வெளியேறி ஜமாஅத்திலிருந்து (முஸ்லிம்களின் முக்கிய அமைப்பு) பிரிந்தவர்.” (அல்-புகாரி, 6484; முஸ்லிம், 1676)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: ஒரு கிறிஸ்தவ மனிதர் முஸ்லிம் ஆனார். அவர் அல்-பகரா மற்றும் ஆல இம்ரான் ஓதி வந்தார், மேலும் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு (வெளிப்பாடு) எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் கிறிஸ்தவத்திற்குத் திரும்பி, "நான் அவருக்காக எழுதியதைத் தவிர வேறு எதுவும் முஹம்மதுவுக்குத் தெரியாது" என்று கூறுவார். பின்னர் அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்தார், மக்கள் அவரை அடக்கம் செய்தனர், ஆனால் காலையில் பூமி அவரது உடலை வெளியே எறிந்ததைக் கண்டார்கள். அவர்கள், "இது முஹம்மது மற்றும் அவரது தோழர்களின் செயல். அவர்கள் எங்கள் தோழரின் கல்லறையைத் தோண்டி, அவர் அவர்களிடமிருந்து ஓடிவிட்டதால் அவரது உடலை அதிலிருந்து எடுத்தார்கள்" என்று கூறினார்கள். அவர்கள் மீண்டும் அவருக்காக ஆழமாக தோண்டினார்கள், ஆனால் காலையில் பூமி அவரது உடலை வெளியே எறிந்ததைக் கண்டார்கள். அவர்கள், "இது முஹம்மது மற்றும் அவரது தோழர்களின் செயல். அவர்கள் எங்கள் தோழரின் கல்லறையைத் தோண்டி, அவரது உடலை வெளியே எறிந்தார்கள், ஏனென்றால் அவர் அவர்களிடமிருந்து ஓடிவிட்டார்." என்று கூறினார்கள். அவர்கள் அவருக்காக முடிந்தவரை ஆழமாக புதைகுழியைத் தோண்டினார்கள், ஆனால் காலையில் பூமி அவரது உடலை வெளியே எறிந்ததைக் கண்டார்கள். எனவே அவருக்கு நேர்ந்தது மனிதர்களால் செய்யப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள், மேலும் அவரை (தரையில்) வீசி எறிய வேண்டியிருந்தது. (அல்-புகாரி, 3421; முஸ்லிம், 2781)

கெடுப்ப தொழி.

(பதவுரை) கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - விட்டு விடு.

(பொழிப்புரை) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)

இஸ்லாம்  

ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள் (அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி)

எவருடைய அண்டை வீட்டான் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் சுவனம் செல்லமாட்டார் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (குர்ஆன்: 2:177) 
 
கேள்வி முயல்.

(பதவுரை) கேள்வி - கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்கு; முயல் - முயற்சி செய்.

(பொழிப்புரை) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய். 
 
இஸ்லாம்   

இறை வேதம் தொடர்பாக நபி (ஸல்) அவர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டபோது, அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற அல்லாஹ் கட்டளையிட்டான் என்பதிலிருந்து, கேள்வி கேட்பதன் அவசியம் விளங்கும்.

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (குர்ஆன் 10:94)

என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். - அறி: ஹுதைஃபா பின் யமான் (ரலி), - (புகாரி: 3607)
கைவினை கரவேல்.

(பதவுரை) கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே.

(பொழிப்புரை) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய். (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

இஸ்லாம்   

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ....(சில செய்திகளை சொல்கிறார்)... இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்த செய்தியைக் கூறிவிட வேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்து வைக்கக் கூடும் என்றனர். - (புஹாரி)

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது” என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (குர்ஆன்: 3:187)

கொள்ளை விரும்பேல்

(பதவுரை) கொள்ளை - (பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே.

(பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே. 
 
இஸ்லாம்   

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாகக் கைப்பற்றுகிறாரோ, அவரது கழுத்தில் (மறுமை நாளில்) அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும். - (புஹாரி 2452)

 நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.’ - (குர்ஆன் 4:10)

(பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை .... எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள். குர்ஆன் 29:29&37 

கோதாட் டொழி

(பதவுரை) கோது-குற்றம் பொருந்திய, வீணான, ஆட்டு- விளையாட்டை, ஒழி-நீக்கு.

(பொழிப்புரை) குற்றமான அல்லது வீணான விளையாட்டை விட்டுவிடு.

கோதாட்டொழி என்பதன் பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள். 
 
இஸ்லாம்  

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நர்தஷீர் (காய்விளையாட்டுகள்) விளையாடுகின்றாறோ அவர் தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார். இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 4549)

நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள் - அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) நூல் : (புகாரி 6220)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அம்பெறிந்து விளையாடும் பொழுது) உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள் - நூல் : (முஸ்லிம் 3617)

“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது. யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்: 5003

“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். - அறி : முஆவியா இப்னு ஹைதா (ரலி) (திர்மிதீ: 2315) 
சக்கர நெறிநில்.

(பதவுரை) சக்கரநெறி – (அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் – அடங்கி யிரு.

(பொழிப்புரை) அரசன் கட்டளை வழியில் அடங்கி நட, அரசாங்க விதிகளை மதித்து நடத்தல், அல்லது சக்கரம் போல மையத்திலிருந்து சமமாக அனைத்து திசைகளிலும் ஒரே நீளத்தில் இருப்பது போல, நீதியும் உண்மையுடனும் நடுவுடனும் நடந்துகொள்ளுதல் என்பதாகும்.   

இஸ்லாம்  

உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்கள் அழிந்ததற்குக் காரணம் என்னவெனில் அவர்களில் செல்வாக்கு மிக்க ஒருவன் திருடினால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். ஆனால் பலவீனமான ஒருவன் திருடி விட்டாலோ, அவன் மீது தண்டனையை நிறைவேற்றி விடுவார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி ﷺ அவர்கள் கூறியதாவது : ''தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து எதையேனும் (குறைகண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும்." - இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு 'அன்ஹு) அறிவித்தார்.  நூல் : ஸஹீஹ் புகாரி 7053.

நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான குஃப்ர் (இறைமறுப்பு) என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர' என்று எங்களிடம் நபி ﷺ அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்." - நூல் : ஸஹீஹ் புகாரி 7056. 

அதீ பின் ஹாதிம் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது  : நாங்கள் நபியவர்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்டோம் : "இறையச்சமுள்ள, நல்ல ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை. மாறாக தீய ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதை பற்றி கேட்கிறோம்..?" நபி ﷺ அவர்களது பதில் : "அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். ஆட்சியாளர் சொல்வதை கேட்டு, அதற்கு கீழ்ப்படியுங்கள்." - தபரானி ஃபில் கபீர் 17/101 (ஹதீஸ்கலை இமாம் அல்பானி அவர்கள் இச்செய்தியை 'ஸஹீஹ்' என்று 'திலால் அல்-ஜன்னா'-வில் பதிந்துள்ளார்கள்)

இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு 'அன்ஹு) அவர்களிடம் மக்கள் வந்து வலீத் இப்னு உக்பா எனும் ஆட்சியாளரைப் பற்றி ஆட்சேபனை தெரிவித்தபோது,  இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு 'அன்ஹு) அவர்கள் கொடுத்த பதில் : "நீங்கள் பொறுமையாக இருங்கள். 50 ஆண்டுகள் அநீதி இழைக்கும் ஆட்சியாளர் இருப்பது, 1 மாத கால குழப்பத்தை விட சிறந்தது." - இமாம் முஸனி அவர்களின் ஷரஹ் ஸுன்னா 13

சான்றோ ரினத்திரு.

(பதவுரை) சான்றோர் – அறிவினால் நிறைந்தவர்களுடைய, இனத்து – கூட்டத்திலே, இரு – எந்நாளும் இரு.

(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

இஸ்லாம்  

என்றால் தனது நற் செயலால் பின்பற்றத்தக்க தகுதியுடைய அதாவது ஒரு சான்றாக இருக்க கூடியவர் தான சான்றோர் ஆவார். இஸ்லாம் சான்றோராக யாரை கூறுகிறது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு உங்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தலைமுறையினருக்குப் பிறகு, “அவர்களை அடுத்து வருபவர்கள்“ என்று இரண்டு தடவை கூறினார்களா, மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. பிறகு “அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படமாட்டாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) - முஸ்லீம்

மேற்கண்ட நபி அவர்களின் விளக்கத்தின் படி, சான்றோர் யார் என்பதும், யார் சான்றோர் இல்லை என்பதும் விளங்குகிறது. எனவே இந்த விளக்கத்தின் படி இருக்கும் சான்றோருடன் இணங்கி இருத்தல் வேண்டும் என்று பின்வரும் வசனங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறு எவரையும் நீ தோழமைகொள்ள வேண்டாம். உனது உணவை இறையச்சம் உள்ளவரை தவிர வேறு எவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூ சயீத் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4832, திர்மிதீ
சித்திரம் பேசேல்.

(பதவுரை) சித்திரம்-பொய்ம்மொழிகளை, வரைபடத்தை பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே அல்லது படம் வரையாதே.

இஸ்லாம் 

பொய் பேசாதே 

 

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. - அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் முன்னுரை ஹதீஸ்-6  

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன்: 9:77)

ஒரு முஃமினான மனிதர் உண்மை பேசுகிறார். உண்மையே பேச வேண்டுமென்று முயற்சியும் செய்கிறார். அந்த மனிதர் அல்லாஹ்விடத்தில் உண்மையாளர் என்று எழுதப்படுவார். அந்த உண்மை அவரை நன்மைக்கு வழி காட்டி கொண்டே இருக்கும். நன்மை அவரை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். பிறகு கூறினார்கள்: ஒரு மனிதர் பொய் பேசுகிறார். இப்படியாக ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார். அல்லாஹ்விடத்தில் இவன் பொய்யனாக எழுதப்பட்டு விடுவான். பொய் பாவத்திற்கு வழிகாட்டுகிறது. பாவம் நரகத்திற்கு வழிகாட்டுகிறது. - அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, (நூல் : புகாரி, எண் : 6094)

படம் வரைதல் கூடாது  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : றுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் உருவப் படங்களை வரைகிறவர்களும் அடங்குவர்! (நூல் : புகாரி : 6109)  
 
யாரேனும் ஓர் ருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்! அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது (நூல் : புகாரி : 2225)
சீர்மை மறவேல்.

(பதவுரை) சீர்+மை=சீர்+மை-ஒழுக்கமான, மதிப்பான, அழகான குணத்தை, மறவேல்- மறந்துவிடாதே.

(பொழிப்புரை) புகழுக்குக் காரணமான ஒழுக்கமான, மதிப்பான, அழகான செயல்களை குணத்தை  மறந்துவிடாதே.

இஸ்லாம் 

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2)  

 நபி (ஸல்) அவர்கள் "நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது" என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் "நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா) 

நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.(குர்ஆன் 68:4)

சுளிக்கச் சொல்லேல்.

(பதவுரை) சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக,சொல்லேல் - (ஒன்றையும்) பேசாதே.

(பொழிப்புரை) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.

இஸ்லாம் 

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (குர்ஆன் 3:159)

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், இல்லையானால் மெளனமாக இருக்கட்டும். (நூல்: புகாரி: 6018)

சூது விரும்பேல்.

(பதவுரை) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

இஸ்லாம் 

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)
செய்வன திருந்தச்செய்.

(பதவுரை) செய்வன-செய்யும் செயல்களை, திருந்த - செவ்வையாக, செய் - செய்.

(பொழிப்புரை) செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.

இஸ்லாம் 

ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும் - (குர்ஆன் 3:122)

 உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)

‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?‘ என்று கேட்டனர். ‘னது (தொழுகையின் போது) ருகூவுவையும், ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: அஹ்மத் 22040)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசர அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லிவிட்டு, ( ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ ) “நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் முறையாகத் தொழவில்லை” என்று சொன்னார்கள். அந்த மனிதர் திரும்பிப்போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுதுவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ அலைக்கஸ் ஸலாம் (உன்மீதும் சாந்தி நிலவட்டும்) என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், ( وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي‏ ) “சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا ) “நீர் தொழுகைக்கு நின்றதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவீராக. பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்வீராக. பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக. அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக. அதில் சற்று நேரம் நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக. பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக” என்று சொன்னார்கள். (நூல்:- புகாரீ-757, முஸ்லிம்-662, அபூதாவூத்-730, திர்மிதீ-279, நசாயீ-874, இப்னுமாஜா-1050)

சேரிடமறிந்து சேர்.

(பதவுரை) சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர் - அடை.

(பொழிப்புரை) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.

இஸ்லாம் 

ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300)
சையெனத் திரியேல்.

(பதவுரை) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி, திரியேல் - திரியாதே

(பொழிப்புரை) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே

இஸ்லாம் 

சையெனத் திரியேல் என்பதை மற்றவர்களை 'சீ' அவமானப்படுத்த வேண்டாம் அல்லது மற்றவர்கள் உன்னை சீ என சொல்லும் அளவுக்கு  வெட்கம் கெட்ட செயலை செய்யாதே என்று இரண்டு வகையாக நான் புரிந்து கொள்கிறேன். இவ்விரண்டையும் இஸ்லாம் வெறுக்கிறது. 

வெட்கம் கேட்ட செயலை செய்ய கூடாது  

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: " மக்களை சென்றடைந்த ஆரம்பகால தீர்க்கதரிசன போதனைகளில் இதுவும் ஒன்று: 'உங்களுக்கு ஹயா (வெட்கம்) இல்லையென்றால் , நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்' " (அல்-புஹாரி)

வெட்கம் கெட்ட செயலை பரப்ப நினைக்க கூடாது 

“எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.(குர்ஆன் 24-19)

மற்றவர்களை கேவலப்படுத்த வேண்டாம் 

அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம்: 5010)

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (திருக்குர்ஆன் 17:23)

சொற்சோர்வு படேல்.

(பதவுரை) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே

(பொழிப்புரை) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே

முதுமொழிக்காஞ்சி 8. சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப.

பொருள் சொற் சோர்வுபடச் சொல்லுதலான், அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர்.  சோர்வு—வழுவுதல், சொற்சோர்வு—சொல்ல வேண்டுவதை மறப்பான் ஒழிதல்.

(ப-ரை.) சொற்சோர்வு உடைமையின்—ஒருவன் சொல்லும் சொற்களில் தவறுதல் உடையனாதலால்,எ சோர்வும்—அவனிடத்துள்ள எல்லாத் தவறுகளையும், அறிப- அறிவர்.


(பொழிப்புரை) ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு, அவனுடைய சொற்சோர்வே அறிகுறி.

இனியவை நாற்பது : “சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பினிதே.” 

இஸ்லாம் 

மேற்கொண்ட இரு பாடல்களின் விளக்கத்தின்பாடி சொற்சோர்வு என்றால் பேச்சில் தடுமாற்றம், கவனமின்மை, தவறான சொல், மறதி உடன் சொல்லப்படும் சொல் ஆகிய பொருள் படும்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். [அல்குர்ஆன் 33:70.] 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். (திர்மிதி 1950)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  (புகாரி 6478)

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ”உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!” என்று அவர்கள் கூறினார்கள். (புகாரி 3559)

சோம்பித் திரியேல்.

(பதவுரை) சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு, திரியேல் - வீணாகத் திரியாதே.

(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

இஸ்லாம்  
 
மேலும், இதற்குப் பிறகுள்ளதின் நலவையும் கேட்கின்றேன். இந்த நாளின் கெடுதியில் இருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும், இதற்குப் பிறகுள்ள தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய இரட்சகனே! உன்னைக் கொண்டு சோம்பேறித்தனம், முதுமைப்பருவம், பெருமையின் தீங்கு, உலகத்தின் குழப்பம் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய இரட்சகனே! உன்னைக் கொண்டு நரகில் இருக்கும் வேதனையில் இருந்தும் கப்ரில் இருக்கும் வேதனையில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (முஸ்லிம் 
 
‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை”  (அல்-குர்ஆன் 4:142)

தக்கோ னெனத்திரி.

(பதவுரை) தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி - நடந்துகொள்.

(பொழிப்புரை) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.

இஸ்லாம்  

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ் ஒரு அடியானை நேசிக்கும்போது, ஜிப்ரீலை அழைத்து, 'நான் இன்னாரை நேசிக்கிறேன்; எனவே நீரும் அவரை நேசிப்பீராக!' என்று கூறுவான். அப்போது ஜிப்ரீல் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் வானத்தில், 'நிச்சயமாக அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்!' என்று அறிவிப்பார். அப்போது வானவாசிகள் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் (மக்களிடத்தில்) ஏற்பு அளிக்கப்படுகிறது.

மேலும், அல்லாஹ் ஒரு அடியான் மீது வெறுப்புக்கொள்ளும்போது, ஜிப்ரீலை அழைத்து, 'நான் இன்னார் மீது வெறுப்புக் கொண்டுள்ளேன்; நீரும் அவர் மீது வெறுப்புக்கொள்வீராக!' என்று கூறுவான். அப்போது ஜிப்ரீல் அவர் மீது வெறுப்புக்கொள்வார். பிறகு ஜிப்ரீல் வானவாசிகள் மத்தியில், 'நிச்சயமாக அல்லாஹ் இன்னார் மீது வெறுப்புக் கொண்டுள்ளான்; எனவே நீங்களும் அவர் மீது வெறுப்புக்கொள்ளுங்கள்!' என்று அறிவிப்பார். அவ்வாறே அவர்களும் அவர் மீது வெறுப்புக்கொள்வார்கள். பிறகு பூமியில் அவருக்கு வெறுப்பு ஏற்படுத்தப்படுகிறது."(ஸஹீஹ் புகாரி)

அல்லாஹ் விரும்பும் மனிதனை மக்கள் விரும்புவார்கள். சரி அல்லாஹ் யாரை விரும்புகிறான்? 

பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (குர்ஆன் 2:222)

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (குர்ஆன் 5:13)

நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (குர்ஆன் 49:9)

(உண்மை) அவ்வாறல்ல. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறை வேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ (அவர்கள்தான் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறையச்சம் உடையவர்களை நேசிக்கிறான். (குர்ஆன் 3:76)

அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான். (குர்ஆன் 3:134)

(சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான். (குர்ஆன் 3:146)

 அல்லாஹ் நல்லவர்களையே நேசிக்கிறான். (குர்ஆன் 3:148)

எனவே தன்னை தவறிலிருந்து திருத்திக்கொண்டவர்களை, தூய்மையானவர்களை, நல்லவர்களை, நீதிமான்களை, இறையச்சம் உடையவர்களை, சகித்து கொள்பவர்களை, அழகிய குணம் உடையவர்களை, நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான் எனவே அவர்கள் உலகில் உள்ள பெரியோர்கள் உட்பட நல்லோர் அனைவரும் புகழும் நிலையில் இருப்பர்.

தானமது விரும்பு.

(பதவுரை) தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு - ஆசைப்படு.

(பொழிப்புரை) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி

இஸ்லாம்  

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:92)‏

(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, நீங்கள் தான தருமங்கள் செய்தால் தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் கிடைக்கும் என்று வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி : 1410)

திருமாலுக் கடிமை செய்.

(பதவுரை) திருமாலுக்கு - சிவனுக்கு, அடிமைசெய் - தொண்டுபண்ணு

(பொழிப்புரை) திருமாலுக்கு அடிபணி. 
 
(மறுப்பு) அவ்வையார், அறியும் சிவனும் ஒன்னு என்று கூறுபவர். மேலும் அவர் சைவ சமய நூல்களையும், சமண நூல்களையும் தான் குறிப்பிட்டு உள்ளாரே தவிர வைணவ நூல்களை அல்ல. 
1) தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்
3) மூவர் தமிழும் 4) முனிமொழியும்- 5) கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (நல்வழி 40)

மேலும் வைணவம் தமிழ்நாட்டில் கால்பதித்தது கிறிஸ்துவுக்கு 10 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் (wiki).  சிவனுக்கு அடிபணி என்பதைத்தான் அவ்வையார் இவ்வாறு கூறி உள்ளார்.

இஸ்லாம்  

திருமந்திரம் கூறும் சிவனும் அல்லாஹ்வும் ஒருவனே என்று ஆய்வு செய்வோருக்கு விளங்கும். 
 
திருமாலுக்கு அடிமை செய்தல் என்றால் திருமால் சொல்லும் கட்டளைக்கு கீழ்ப்படிதல் என்று பொருள். திருமாலின் கட்டளையை எப்படி அறிந்துகொள்ள முடியும்? அவனது மறைநூல்கள் வாயிலாக. தமிழ்கூறும் நல்லுலகில் இன்று திருமால் என்றால் விஷ்ணு, நாராயணன், கிருஷ்ணனன், ராமன் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த மறைநூல்கள் எதுவும் தமிழில் உள்ளதா? இல்லை. சிலர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழ் மறைநூல் என்பர், ஆனால் விஷ்ணு பக்தர்கள் தங்களின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல்கள்தான் அவைகள். மேலும் வேதம் அல்லது மறைநூல் என்பது இறைவனிடமிருந்து நந்தி தேவர் மூலம் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குருமார்களுக்கு உபதேசிக்கப்பட்ட அதை அவர் அவருடைய சீடர்களுக்கும் மக்களுக்கும் போதிப்பது ஆகும். ஏனென்றால் மறை என்பது மாய மந்திரம் அல்ல, அது மக்கள் பின்பற்றப்படவேண்டிய அறநெறிகள் ஆகும். அந்தவகையில் செல்லோருக்கும் சென்றடைய வேண்டிய மறைநூல்கள் தமிழில் சைவத்துக்குத்தான் உள்ளதே தவிர, தமிழில் வைணவத்தின் எந்த மறைநூலும் கிடையாது. 

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (குர்ஆன் 11:23)

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள். (குர்ஆன் 19:93)

தீவினை யகற்று.

(பதவுரை) தீவினை-பாவச் செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு.

(பொழிப்புரை) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு. 
 
(மறுப்பு) இந்த விளக்கம் பிழையானது. காரணம் செய்யப்பட்ட தீவினையை தான் அகற்ற முடியும். தீவினையை செய்யமல் எப்படி அகற்றுவது? இதன் பொருள் செய்த தீவினைக்கு ஏற்ற நல்வினையை செய்து அந்த பாவத்துக்கு பரிகாரம் செய்வதை இந்த பாடல் குறிக்கிறது. பாவ மன்னிப்பு என்று தமிழ் சமயத்தில் இருந்து உள்ளதா? ஆம்.
கொலையே களவுகள், காமம், பொய்கூறல்
மலையான பாதக மாம்அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே (திருமந்திரம் 200)

பொருள் கொலை, களவு, காமம், பொய் பேசுதல் ஆகியவை பஞ்ச மா பாதங்களாகும். அப்பாவங்களை இனி செய்யமல், முதல்வனாகிய சிவனுக்கு அடிமை ஆகி இன்பம் அடைந்தோர்க்கு இப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் இல்லையாம். இவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலும் ஆகும். இது ஒருவகையான பாவமன்னிப்பு, இதில் அந்த பாவங்களை விடுவதும், சிவனின் ஆகம் வித்தியான திருமந்திரத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதும் ஆகும்.

இஸ்லாம்  

ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றான். பின்னர் என்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றனர். நான் அவனை மன்னிக்கின்றேன்”என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அறிவிப்பவர் : அபூதர் (ரலி),( நூல் : அஹ்மத் 20451)

பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (குர்ஆன் 2:222) 
 
தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!. (குர்ஆன் 39:53)

 பாவமன்னிப்பு இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று. எந்த மனிதனும் பாவம் செய்யமல் இருக்க முடியாது என்பது இஸ்லாம் கூறும் நிதர்சனம்.

துன்பத்திற் கிடங்கொடேல்.

(பதவுரை) துன்பத்திற்கு - வருத்தத்திற்கு, இடங்கொடேல் - (சிறிதாயினும்) இடங்கொடாதே.

(பொழிப்புரை) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே. முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது

(மறுப்பு) இந்த விளக்கத்தைவிட, செய்த செயலின் காரணமாக, விதியின் காரணமாக வரும் துன்பத்திற்கு நமது உள்ளத்தில் இடம் கொடுக்க கூடாது என்பதே இதன் பொருளாகும். ஏனென்றால் எவன் ஒருவனும் அவனது வாழ்வில் துன்பம் வருவதை தவிர்த்து தடுத்துவிட முடியாது. வரும் துன்பத்திற்கு உள்ளத்தில் இடம் கொடுக்க கூடாது என்பதே சரியான விளக்கம்.  

இஸ்லாம்  

கவலைப்படாதீர்! நிச்சயமாக, அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்” (குர்ஆன் 9: 40)  

 பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (குர்ஆன் 57:22-23

“அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். அத்தகையவர்கள் நிலையான சுவனங்களில் நுழைந்திடுவார்கள். அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவர்கள் பட்டாடையும் அணிந்து இருப்பார்கள். மேலும், “எங்களை விட்டு எல்லாக்கவலையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! நிச்சயமாக, எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள். ( அல்குர்ஆன்: 35: 33, 34 )
தூக்கி வினைசெய்.

(பதவுரை) தூக்கி - (முடிக்கும் வழியை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (அதன் பின்பு) செய்.

(பொழிப்புரை) முடிக்கத் தகுந்த வழியை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.

(மறுப்பு) இதில் முடிக்கும் வழி என்பது கூடுதல் சொல்லாக இருப்பதுடன், இந்த ஆத்திச்சூடியின் பறந்து பட்ட பொருளை முடக்குகிறது. எனவே ஆய்ந்து ஒரு செயலை செய் என்பதே போதுமான விளக்கம். உடனடி முடிவு தெரியாத பல செயல்கள் உள்ளன. மக்களுக்கு தர்மம் கொடுப்பது, கிணறு வெட்டுவது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது. பொறுமையாக இருப்பது போன்றவைகளின் முடிவை உடனே பார்ப்பது மிக அரிது. எனவே ஒரு செயல் சரியா பிழையா என்று ஆனது செய்தால் போதுமானது. இந்த அப்பாடல் அதைத்தான் குறிக்கிறது. 

இஸ்லாம்  

 மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)(மறுப்பு) தையல் என்பதற்கு "புனைவு" என்ற பொருளும் உண்டு. யார் எப்போழுது இங்கே தையல் என்பது பெண்ணைத்தான் குறிக்கிறது என்று விளக்கம் கொடுக்க முனைந்தார்கள் என்று தெரியவில்லை. புனைவு என்றால் இல்லாத ஒன்றையோ அல்லது உண்மையுடன் பொய் சேர்த்து திரித்து கூறுதலோ ஆகும். எனவே முற்போக்கான பெண்ணாக அறிய படுகிற ஒவையார் பெண் சொல் கேளாதே என்று சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. புனைவான சொற்களை கேட்காதே என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

தெய்வ மிகழேல்.

(பதவுரை) தெய்வம் - கடவுளை, இகழேல் - பழிக்காதே.

(பொழிப்புரை) கடவுளை இகழ்ந்து பேசாதே

இஸ்லாம்  

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் – பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.” (குர்ஆன் 6:108).
 
61. ஆத்திச்சூடி 

தேசத்தோ டொத்துவாழ்

(பதவுரை) தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து - (பகையில்லாமல்) ஒத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமலபொருந்தி வாழு.

 இஸ்லாம்   

“நிச்சயமாக உங்கள் “உம்மத்து” சமுதாயம்(வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்.” (அல் குர்ஆன்.21:92,23:52)
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.(49:10)
“அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். 

62. ஆத்திச்சூடி 

தையல்சொல் கேளேல்

(பதவுரை) தையல் - (உன்)  மனைவியினுடைய சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே. 
 
(பொழிப்புரை) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

(மறுப்பு) தையல் என்பதை மனைவி என பொருள் கொண்டால், மனைவி சொல்லை ஆராயாமல் நடவாதே என்பது இந்த ஆத்திச்சூடியின் பொருளல்ல, மனைவியின் சொல்லை எப்பொழுதும் கேட்காதே ன்றுதான் பொருள்படும்.

தையல் என்பதற்கு "புனைவு" என்ற பொருளும் உண்டு. புனைவு என்றால் இல்லாத ஒன்றையோ அல்லது உண்மையுடன் பொய் சேர்த்து திரித்து கூறுதலோ ஆகும். எனவே முற்போக்கான பெண்ணாக அறிய படுகிற ஒவையார் பெண் சொல் கேளாதே என்று சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. புனைவான சொற்களை கேட்காதே என்றுதான் பொருள் கொள்ள முடியும்.  

இஸ்லாம்   

"நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்" (49 : 6) என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
"தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105) 
 
63. ஆத்திச்சூடி 

தொன்மை மறவேல்

(பதவுரை) தொன்மை - பழைமையாகிய நட்பை,மறவேல் - மறந்துவிடாதே

(பொழிப்புரை) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே

இஸ்லாம்   

7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக
 
64. ஆத்திச்சூடி 

தோற்பன தொடரேல்

(பதவுரை) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்-சம்பந்தப்படாதே

(பொழிப்புரை) தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே.

இஸ்லாம்   

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 6133) .

ஒரே தவறை அல்லது தோல்வியில் முடியும் ஒன்றை மீண்டும் மீண்டும் ஒரு முஸ்லீம் செய்யமாட்டார். 

65. ஆத்திச்சூடி 

நன்மை கடைப்பிடி்

(பதவுரை) நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி-உறுதியாகப் பிடி

(பொழிப்புரை) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள்.

இஸ்லாம்   

2:44. நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
 
66. ஆத்திச்சூடி 

நாடொப் பனசெய்

(பதவுரை) நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும்,ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை,செய் - செய்வாயாக.

(பொழிப்புரை) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய்.

இஸ்லாம்   

4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
ஒப்பீடு :
இறைவனும் அவனுடைய தூதரும் தரக்கூடிய நெறியையே நாட்டிலுள்ளோர் ஒப்புகொண்டது, அவைகளே வேதம் ஆகும்.
 
67. ஆத்திச்சூடி 

நிலையிற் பிரியேல்.

(பதவுரை) நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே.

(பொழிப்புரை) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்துவிடாதே

இஸ்லாம்   

2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
ஒப்பீடு : இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டவனாக (முஸ்லிம்) இருக்கும் நிலை விட்டு மாறாதே.
 
68. ஆத்திச்சூடி 

நீர்விளை யாடேல்.

(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.

(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.

இஸ்லாம்   

7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
 
69. ஆத்திச்சூடி 

நுண்மை நுகரேல்.

(பதவுரை) நுண்மை - (நோயைத்தருகிற) சிற்றுண்டிகளை,நுகரேல் - உண்ணாதே.

(பொழிப்புரை) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே

இஸ்லாம்   

“இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.
 
70. ஆத்திச்சூடி 

நூல்பல கல்.

(பதவுரை) நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும், கல் - கற்றுக்கொள்.

(பொழிப்புரை) அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள்.

இஸ்லாம்   

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 58 : 11)
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள். அல்குர்ஆன் (39 : 9)
ஓதுவீராக! மேலும் உன் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்று கொடுத்தான்!'' (96;3-5)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - ஸஹீஹ் முஸ்லிம் 3358
" ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
இளமையில் கல்வி கற்பதுபற்றி குறிப்பிட்டு நம்மால் சான்று தர முடியவில்லை என்றாலும் பெண் கல்வி மற்றும் கல்வி கதிறவரின் மாண்பு மற்றும் கல்வியின் அவசியம் போன்றவைகளின் சான்றுகளை கொடுத்துள்ளோம்.
 
71. ஆத்திச்சூடி 

நெற்பயிர் விளை.

(பதவுரை) (நெற்பயிர் - நெல்லுப் பயிரை, விளை- (வேண்டிய முயற்சி செய்து) விளைவி.

(பொழிப்புரை) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே மேல்.

இஸ்லாம்   

அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்:
"இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு ஃபரக் (அளவு) நெல்(லை) கூலிக்கு(ப் பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக் கொள்ளாமல்)விட்டுவிட்டுச் சென்றார். நான் அந்த ஃபரக் அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் என்னிடம் தன் கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம் 'அங்கு சென்று, அந்த மாடுகளை ஓட்டிச்செல்" என்றேன். அதற்கவர், 'உங்களிடம் எனக்குரியது ஒரு ஃபரக் அளவு நெல்தானே!" என்று கேட்டார். நான் அவரிடம், 'அந்த மாடுகளை எடுத்துக் கொள். ஏனெனில் அவை (நீவிட்டுச் சென்ற) அந்த ஒரு ஃபரக் நெல்லிலிருந்து கிடைத்தவை தாம்" என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களைவிட்டு (இந்தப் பாறையை) நீக்குவாயாக!" - ஸஹீஹ் புகாரி 3465
எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்த இறை தூதர்கள் பற்றி சொல்லபடுகிறது, இவை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்...
நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்
நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்
நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்
நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல
நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்
 
72. ஆத்திச்சூடி 

நேர்பட வொழுகு.

(பதவுரை) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப் பட, ஒழுகு - நட.

(பொழிப்புரை) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட

இஸ்லாம்   

1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:120. (நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)" எனக் கூறிவிடுங்கள்.
3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) வழியை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
 
73. ஆத்திச்சூடி 

நைவினை நணுகேல்.

(பதவுரை) நை - (பிறர்) கெடத்தக்க, வினை - தீவினைகளை, நணுகேல் - (ஒருபோதும்) சாராதே.

(பொழிப்புரை) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச்செய்யாதே.

இஸ்லாம்   

இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்’ (59:7)
6:155. (மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
19:48. நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்
23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்;
7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
 
74. ஆத்திச்சூடி 

நொய்ய வுரையேல்.

(பதவுரை) நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

இஸ்லாம்   
 
இன்னும் அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகிவிடுகின்றார்கள். மேலும், கூறுகின்றார்கள்: “எங்களுடைய செயல் எங்களுக்கு; உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள் அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை.” - 28:55.
25:72. மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள்
78:35. அங்கு வீணான பேச்சையோ, பொய்யுரையையோ அவர்கள் கேட்க மாட்டார்கள்.
23:1-3. திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்; மேலும், வீணானவற்றைவிட்டு விலகியிருக்கின்றார்கள்;
 
75. ஆத்திச்சூடி 

நோய்க்கிடங் கொடேல்.

(பதவுரை) நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல்-இடங்கொடாதே.

(பொழிப்புரை) உணவு, உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே.

இஸ்லாம்   

அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள். (24:50.)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு. அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1.ஆரோக்கியம் 2.ஓய்வு. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)
 
76. ஆத்திச்சூடி 

பழிப்பன பகரேல்.

(பதவுரை) பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழி சொற்களை, பகரேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச் சொற்களுமாம்.

இஸ்லாம்  

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
“அல்லாஹ்வின் தூதரே, என் மீது தாங்கள் மிகவும் பயப்படுவது ஏன்? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். தன் நாவை பிடித்துக் கொண்டு இதுதான் (அதிகமாக அஞ்சுவது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் தகபிஃ(ரழி) நூல்: திர்மிதி
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ “ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
“ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்;: புகாாி
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
புஹாரி 6136 : அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் தன் அண்டைவீட்டாருக்கு கெடுதல் செய்யாதீர்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் விருந்தினரை உபசரியுங்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் நல்லதையே பேசுங்கள் அல்லது (தேவையற்ற பேச்சுக்கள்,பொய் மற்றும் புறம் பேசுதல் ஆகியவற்றிலிருந்து நீங்கி) மௌனமாய் இருங்கள்.
 
77. ஆத்திச்சூடி 

பாம்பொடு பழகேல்.

(பதவுரை) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக்கொடுக்கிற) பாம்பைப்போல்பவர்களுடனே, பழகேல் -சகவாசஞ் செய்யாதே.

(பொழிப்புரை) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே.

இஸ்லாம்  

னிமையாகப் பழகித் தீங்கு விளைப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்கன் என்று சொல்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் இறைமறுப்பாளனாக வாழ்பவர்கள்.
(முஹம்மதே!) நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?. - (அல்குர்ஆன் 63:4)
'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யேபேசுவான்; வாக்களித் தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:புகாரி)
"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
அவர்கள் உணர்வதில்லை. (அல்குர்ஆன் 2:8,9)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), - முஸ்லிம் (5369)
“இறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம்.” (அபூதாவுது, திர்மிதி)
9:67. நயவஞசகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே! கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறு கின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப்படா விட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5 : 41)
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். அவர்களுடனும் இல்லாமல் இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் (முஹம்மதே!) நீர் காணமாட்டீர்! (அல்குர்ஆன் 4 : 142,143)
 
78. ஆத்திச்சூடி 

பிழைபடச் சொல்லேல்.

(பதவுரை) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி,சொல்லேல்-ஒன்றையும் பேசாதே.

(பொழிப்புரை) குற்ற முண்டாகும்படி பேசாதே.

இஸ்லாம் 

நீ தொழுகையை தொழுவதாக இருந்தால் தனது குடும்பம், பிள்ளைகள், சொத்து, சுகங்கள், எல்லாத்தையும் விட்டு விட்டு இந்த உலகத்தை பிரியக்கூடியவன் எப்படி தொழுகையை தொழுவானோ அப்படி உனது தொழுகையை அமைத்துக் கொள். பேசிவிட்டு அந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்கும் படியான பேச்சுகளை பேசாதே. அதாவது கவனமாக பேசு! மக்களுடைய கரத்தில் எது இருக்கின்றதோ அதற்கு ஆசைப்படாதே. அல்லாஹ்விடத்தில் எது இருக்கின்றதோ அதற்கு நீ ஆசைப்படு என்று மூன்று உபதேசங்களை அந்தத் தோழருக்கு நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, (நூல் : இப்னு மாஜா எண் : 4171.)

 ‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

79. ஆத்திச்சூடி 

பீடு பெறநில்.

(பதவுரை) பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக,நில் - (நல்ல வழியிலே) நில்..

(பொழிப்புரை) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு. 
 
இஸ்லாம்   
 
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும்  உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். - (குர்ஆன் 2:45)
 
80. ஆத்திச்சூடி 

புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

(பதவுரை) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை,போற்றி - (கைவிடாமற்) காப்பாற்றி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) அடுத்தவரை ஆதரித்து வாழு. 
 
இஸ்லாம் 
(ஜகாத் என்னும்) தானங்கள்
  1. தரித்திரர்களுக்கும்,  
  2. ஏழைகளுக்கும்,  
  3. தானத்தை(ஜக்காத்) வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
  4. இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், 
  5. அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,  
  6. கடன் பட்டிருப்பவர்களுக்கும்,  
  7. அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
  8. வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)
அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும், பெண்களுக்கு அவர்கள் சம்பாதித் ததற்கேற்ப பங்கு உண்டு. இருப்பினும் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் - 4:32.

பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். - 4:8.

81. ஆத்திச்சூடி 

பூமி திருத்தியுண்.

(பதவுரை) பூமி - (உன்) விளைநிலத்தை, திருத்தி-சீர்திருத்திப்பயிர் செய்து, உண் - உண்ணு.

(பொழிப்புரை) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு.  
 
இஸ்லாம்  
நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்
நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்
நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்
மேலும் நான்கு நபிகள் தவிர அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்துவந்து இருப்பதன் மூலம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு விளக்குகிறது என்பதை அறியலாம்.. (சான்று)
 
82. ஆத்திச்சூடி 

பெரியாரைத் துணைக்கொள்.

(பதவுரை) பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை,துணைக்கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

(பொழிப்புரை) பெரியாரைத் துணையாக நாடிக்கொள். 
 
இஸ்லாம் 

 இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின்னால் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி, நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்தில் அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) (நூல் :  புகாரி 2957)

பாவமான காரியத்தை ஏவாத வரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்குச் செவி சாய்த்துக் கட்டுப்படுவது முஸ்லிமான ஒருவர் மீது கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ, கட்டுப்படுவதோ கூடாது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல் :  புகாரி  7144, மற்றும் 2955)

83. ஆத்திச்சூடி 

பேதைமை யகற்று.

(பதவுரை) பேதைமை - அஞ்ஞானத்தை, அகற்று - போக்கு.

(பொழிப்புரை) அறியாமையை நீக்கிவிடு. 
 
இஸ்லாம் 

"அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' - (அல்குர்ஆன் 2:67)
 
84. ஆத்திச்சூடி 

பையலோ டிணங்கேல்.

(பதவுரை) பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - கூடாதே.

(பொழிப்புரை) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே. 
 
இஸ்லாம்  
 
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான். 22:4.
 
85. ஆத்திச்சூடி 

பொருடனைப் போற்றிவாழ்.

(பதவுரை) பொருள்தனை - திரவியத்தை, போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு. 
 
இஸ்லாம்  

“மேலும் நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள், விரயம் செய்யாதீர்கள்! நிச்சயமாக அவன் (அல்லாஹ்) விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (07:31)
“மேலும் நீர் வீணாக்க வேண்டாம்! வீணாக்குபவர்கள் திண்ணமாக ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கின்றனர்.” (17:26,27)
“மேலும் நீங்கள் விரயம் செய்யாதீர்கள்! நிச்சயமாக அவன் (அல்லாஹ்) விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (06:141)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (திருக்குர்ஆன் 4:36)
 
86. ஆத்திச்சூடி 

போர்த்தொழில் புரியேல்.

(பதவுரை) போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை,புரியேல் - செய்யாதே.

(பொழிப்புரை) யாருடனும் கலகம் விளைக்காதே. 
 
இஸ்லாம் 

 ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்- 2:191.

'இரண்டு இறைநம்பிக்கையாளர்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' - புகாரி 31
'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி 1739
 
87. ஆத்திச்சூடி 

மனந்தடு மாறேல்.

(பதவுரை) மனம் - உள்ளம், தடுமாறேல் - கலங்காதே.

(பொழிப்புரை) எதனாலும் மனக்கலக்க மடையாதே. 
 
இஸ்லாம் 

 நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம். - 2:147.

88. ஆத்திச்சூடி 

மாற்றானுக் கிடங்கொடேல்.

(பதவுரை) மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடம் கொடேல் - இடங்கொடாதே.

(பொழிப்புரை) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே. 
 
இஸ்லாம் 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (2:208)

89. ஆத்திச்சூடி 

மிகைபடச் சொல்லேல்.

(பதவுரை) மிகைபட - சொற்கள் அதிகப்படும்படி, சொல்லேல் - பேசாதே.

(பொழிப்புரை) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே. 
 
இஸ்லாம் 
அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.- புஹாரி 6830
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)
 
90. ஆத்திச்சூடி 

மீதூண் விரும்பேல்.

(பதவுரை) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல்-இச்சியாதே.

(பொழிப்புரை) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே 
 
இஸ்லாம் 
“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)
“இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

ஒரேடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஜைத்தான் களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27) 

91. ஆத்திச்சூடி 

முனைமுகத்து நில்லேல்.

(பதவுரை) முனைமுகத்து - சண்டை முகத்திலே, நில்லேல் - (போய்) நில்லாதே.

(பொழிப்புரை) போர் முனையிலே நின்றுகொண்டிருக்காதே. 
 
இஸ்லாம் 

 மேலும், உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:190)

மேலும் போரை முதல் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 9:12,13)
சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61)
மதத்தைப் பரப்ப போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13)
சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40)
போரிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:192)
அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக்குர்ஆன் 4:75, 22:39-40)
 
92. ஆத்திச்சூடி 

மூர்க்கரோ டிணங்கேல்.

(பதவுரை) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனே, இணங்கேல் - சிநேகம் பண்ணாதே!

(பொழிப்புரை) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே. 

இஸ்லாம் 

 கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.” அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

93. ஆத்திச்சூடி 

மெல்லினல்லாள் தோள்சேர்.

(பதவுரை) மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டியாகிய, நல்லாள் - பெண்ணுடைய, தோள் - தோள்களையே, சேர் - பொருந்து.

(பொழிப்புரை) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு.

1. மெல்லியா டோன் சேர்' என்றும் பாடம் 
 
இஸ்லாம் 
மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது. (திருக்குரான் 17:32)
உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன்தனித்திருக்க வேண்டாம். (புகாரி, முஸ்லிம்)
 
94. ஆத்திச்சூடி 

மேன்மக்கள் சொற்கேள்.

(பதவுரை) மேன்மக்கள் - உயர்ந்தோருடைய, சொல் - செல்லை, கேள் - கேட்டு நட.

(பொழிப்புரை) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. 
 
இஸ்லாம் 

 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள். (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அதை அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இது தான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். திருக்குர்ஆன் (4:59)

95. ஆத்திச்சூடி 

மைவிழியார் மனையகல்.

(பதவுரை) மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய வேசையருடைய, மனை - வீட்டை, அகல் - (ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ.

(பொழிப்புரை) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு. 
 
இஸ்லாம் 

 (நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்; அது மானக் கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (17:32)

96. ஆத்திச்சூடி 

மொழிவ தறமொழி.

(பதவுரை) மொழிவது - சொல்லப்படும் பொருளை, அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி - சொல்லு.

(பொழிப்புரை) சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு. 
 
இஸ்லாம் 

 உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 24 : 15)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தான் கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பரப்புவரே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும். அறிவிப்பவர் : ஹஃப்ஸ் பின் ஆசிம் (ர­) (நூல் : முஸ்­ம் 6)
நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! (திருக்குர்ஆன் 33:70)
“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)
ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
அல்குர்ஆன் (17 : 53)
 
97. ஆத்திச்சூடி 

மோகத்தை முனி.

(பதவுரை) மோகத்தை - ஆசையை, முனி - கோபித்து விலக்கு.

(பொழிப்புரை) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு.

இஸ்லாம் 
“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம்; எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகின்றானோ; நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” (அல்குர்ஆன் 42:20)
“மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்”. (அல்குர்ஆன் 87:17)
எவரேனும், இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இ(வ்வுலகத்)திலேயே நாம் முழுமையாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 11: 15)
“(எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே”.(அல்குர்ஆன் 11: 16)
“(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; உறுதியாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடையில் (வீண்) பொறாமையேற்படுத்துவதாகவும், பொருள்களிலும், சந்ததிகளிலும் போட்டியே ஏற்படுத்துவதாகவும் (இருக்கின்றது; இதன் உதாரணமாவது) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, அதன் (உதவியால் முளைத்த) பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குப் களிப்பையுண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன. அது காய்ந்த பின்னர், மஞ்சனித்து விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகி விடுகின்றது. (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது) மறுமையிலோ (அவர்களுள் பலருக்குக்) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறன்று” (அல்குர்ஆன் 57:20)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே ஆகும். இறையுணர்வுடையவர்களுக்கு மறுமை வாழ்க்கையே மிக மேலானது. அறிவாற்றல் உடையோர் இதனை உணர்ந்து கொள்ள வேண்டாமா? (6:32)

அவர்களுள் சிலருக்கு அவர்கள் நுகரும் பொருட்டு நாம் அருளி இருப்பவற்றின் மீது நீங்கள் உங்கள் பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் பகட்டணிகலன்களே! இவை மூலம் அவர்களை நாம் சோதிக்கின்றோம். உங்கள் இறைவன் உங்களுக்கு அருளியுள்ளவை சிறந்தவை, நிலையானவை. (20:131) 

98ஆத்திச்சூடி 

வல்லமை பேசேல்.

(பதவுரை) வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (புகழ்ந்து) பேசாதே.

(பொழிப்புரை) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

இஸ்லாம் 

எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. - (குர்ஆன் 4:36)

தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), (முஸ்லிம்: 148)

99. ஆத்திச்சூடி 

வாதுமுற் கூறேல்.

(பதவுரை) வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.

இஸ்லாம் 

நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.  (குர்ஆன் 38:64)

உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 3:66)

அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள். (புஹாரி 1127. Volume :1 Book :19)  
 
இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; (திருக்குர்ஆன் 29:46)
 
100. ஆத்திச்சூடி 

வித்தை விரும்பு.

(பதவுரை) வித்தை - கல்விப்பொருளையே, விரும்பு - இச்சி.

(பொழிப்புரை) கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

இஸ்லாம்    

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (திருக்குர்ஆன்  20:114)
 
101. ஆத்திச்சூடி 

வீடு பெறநில்.

(பதவுரை) வீடு - மோட்சத்தை, பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய ஞானவழியிலே) நில்.

(பொழிப்புரை) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு.

இஸ்லாம்   

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (குர்ஆன் 2:25) 
 
உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3) 
 
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” (குர்ஆன் 2:132)
 
102. ஆத்திச்சூடி 

உத்தம னாயிரு.

(பதவுரை) உத்தமனாய் - உயர்குணமுடையவனாகி, இரு-வாழ்ந்திரு.

(பொழிப்புரை) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு.

இஸ்லாம்  

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. 'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே" என்று அவர்கள் கூறுவார்கள். - (ஸஹீஹ் புகாரி Volume :4 Book :61)
 
103. ஆத்திச்சூடி 

ஊருடன் கூடிவாழ்.

(பதவுரை) ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி - (நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு.

இஸ்லாம்  

மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம்.  (குர்ஆன் 3:103)
 
104. ஆத்திச்சூடி 

வெட்டெனப் பேசேல்.

(பதவுரை) வெட்டு என - கத்திவெட்டைப்போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே.

(பொழிப்புரை) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே.

 இஸ்லாம்

நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள் (குர்ஆன் 3:159)
 
ஆகவே, (இவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் அநாதைகளைக் கடுகடுக்காதீர்கள். (குர்ஆன் 93:9)
 
105. ஆத்திச்சூடி 

வேண்டி வினைசெயேல்.

(பதவுரை) வேண்டி - விரும்பி, வினை - தீவினையை,செயேல்-செய்யாதே.

(பொழிப்புரை) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே.

புதிய விளக்கம்

இஸ்லாம்

 வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள் - (6:151)

106. ஆத்திச்சூடி 

வைகறைத் துயிலெழு.

(பதவுரை) வைகறை-விடியற்காலத்திலே, துயில்-நித்திரையை விட்டு, எழு - எழுந்திரு.

(பொழிப்புரை) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.

இஸ்லாம்  

யா அல்லாஹ் என் சமூகத்திற்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.  (திர்மிதி ; 1212)

நபி ﷺ அவர்கள் ஒரு நாள் சுபுஹுக்கு பிறகு இவர் வந்தாரா? அவர் வந்தாரா? என்று கேட்டார்கள். இல்லையென்று சொன்னபோது சுபுஹும் (அதிகாலை தொழுகை) இஷாவும் (இரவுத் தொழுகை) முனாஃபிக்களுக்குத் தான் பாரமாக இருக்கும். இதன் நன்மையை புரிந்து கொண்டால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள் என்று கூறினார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா ; 3/68)                                                          

ஷைத்தான் ஒருவரின் தலை அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் தூங்கும் நேரத்தில் அவனுக்கு மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். விடிகின்ற நேரம் வந்ததும் நீண்ட இரவு இருக்கின்றது; நீ தூங்கு என்று சொல்வான். அவர் எழுந்துவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். பின்னர் சென்று உளுச் செய்தால் அடுத்த முடிச்சு அவிழ்ந்துவிடும். தொழுகைக்கு தக்பீர் கட்டியபின் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. இதன் பின்னர் நல்ல காலைப் பொழுதை அவன் விடுகின்றான். இல்லாவிட்டால் சோம்பலாக இருப்பான். (புகாரி: 1142, 3269)
 
107. ஆத்திச்சூடி 

ஒன்னாரைத் தேறேல்.

(பதவுரை) ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - நம்பாதே.

(பொழிப்புரை) பகைவரை நம்பாதே.

இஸ்லாம் 

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 60:8-9)

முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா? (குர்ஆன் 4:144)

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். (குர்ஆன் 5:51)

108. ஆத்திச்சூடி 

ஓரஞ் சொல்லேல்.

(பதவுரை) ஓரம் - பட்சபாதத்தை, சொல்லேல் - (யாதொரு வழக்கிலும்) பேசாதே.

(பொழிப்புரை) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.

இஸ்லாம் 

நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 5:42
 
அபூ ஹீரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் தீர்ப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் அல்லாஹ் சபிக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - (இப்னு ஹிப்பான் 5077, முஸ்னது அப்துர்ரஸாக் 14669)

2 கருத்துகள்:

  1. https://www.youtube.com/shorts/YDAw1eoVG6E

    Similarities Between Tamil 🇮🇳 and Thai மாதங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஔவையார் தனிப்பாடல்கள் PDF

    https://www.scribd.com/document/431000210/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-pdf

    பதிலளிநீக்கு