மன்னிக்கும் மனப்பான்மை தான் சிறந்த செயல்முறை அதுவே சிறந்த சிந்தனை..!
தமிழர் சமயம்
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். (திருக்குறள்:156)
பொழிப்புரை : [தமக்குத் துன்பம் இழைத்தவரைப் பொறுமை அற்றுத்] தண்டிப்போர்க்கு ஒரு நாளை இன்பம்; [மன்னித்துப்] பொறுத்தோருக்கு மரணத்திற்கு பிறகும் துணை நிற்கும் புகழ் [கிட்டும்].
பொருள்: ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.
பொன்றும் - பொன்று - அழிதல்; இறத்தல்; தவறுதல்
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனின்று நன்று (அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0152)
பொருள் வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் மன்னிக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
இப்பாடலில் உள்ள பொறுத்தல் என்பதற்கு மன்னித்தல் என்று சிலரும் மறத்தல் என்றதற்கு வெகுளாமை என்று மற்றும் சிலரும் பொருள் கூறினர்
இஸ்லாம்
…அவர்களை மன்னித்து விடவும், பொருட்படுத்தாது விட்டுவிடவும், அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். - (திருக்குர்ஆன் 24:22)
கிறிஸ்தவம்
பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். - (பைபிள் :சீராக் 28:1&2)
உமக்கு எதிராக பாவம் செய்தவர்களை மன்னித்தீர்களானால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை மன்னிப்பார். நீங்கள் மற்றவர்களை மன்னிக்க மறுத்தால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார். (மத்தேயு 6: 14-15)
முடிவுரை:
உலகில் நிகழும் அனைத்து மத இன பூசல்கள் மன்னிப்பின் வெகுமதியை அறியாததாலே நடக்கிறது. விட்டுக்கொடுப்பவர் ஒருநாளும் கெட்டுப் போவதில்லை.
மன்னிப்பு எந்த அளவு சாத்தியம்? சில நிகழ்கால உதாரணங்கள்:
தந்தை தனது மகனின் கொலையில் தொடர்புடைய மனிதனை மன்னித்து அணைத்துக்கொள்கிறார்
இந்த அம்மா தனது மகனைக் கொன்ற வாலிபரை நேருக்கு நேர் சந்தித்தார். நீதிமன்ற அறை வீரர்கள் அவளைப் போன்ற பதிலைப் பார்த்ததில்லை
அசிம் கமிசாவின் மகன் தாரிக், 1995 இல் 20 வயதில் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர் டோனி ஹிக்ஸ், 14 வயது சிறுவன், பழைய கும்பல் உறுப்பினரால் தூண்டுதலுக்கு ஆளானான். ஆரம்ப அதிர்ச்சி தணிந்த பிறகு, துப்பாக்கியின் இருபுறமும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதை அசிம் உணர்ந்தார். டோனியின் தாத்தா பிளெஸ் பெலிக்ஸ் உடன் இணைந்து, இளைஞர்களின் துப்பாக்கி வன்முறையைத் தடுக்கும் நோக்கத்துடன் தாரிக் கமிசா அறக்கட்டளையை அசிம் நிறுவினார்