காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே. (தேவாரம் 3320)பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் ஊக்குவிக்கும் நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குவது, அனைவருக்கும் தலைவனான சிவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும்.
கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் - சொல்லுதல். நாதன் - தலைவன், அரசன், ஆசிரியன், கடவுள், இறைவன், சிவன், அருகன்.
இஸ்லாம் & யூதம்
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (குர்ஆன் 5:83)
அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள். (அல்குர்ஆன் 19:58)
கிறிஸ்தவம்
..பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக [a] உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர். (நெகேமியா 8:9)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள் என்று சொன்னார்கள். நான் தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும் (நபியே) உங்களை இவர்களுகு எதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும் எனும் (4 : 41) வது வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. (நூல் : புகாரி 4582)
பதிலளிநீக்குhttps://www.bayanapp.indiabeeps.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/
பதிலளிநீக்கு