ஊருக்கு உபதேசம்

தமிழர் சமயம் 


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை குறள் 834]

பொருள்: ஒருவர் நூல்கள் பலவற்aறை கற்றுத் தேர்ந்து இருப்பார்கள், கற்றவற்றை தர்க்கத்தினாலோ அல்லது அனுபவத்தினாலோ உள்ளமும் உணர்ந்து இருப்பார்கள், தான் கற்றவற்றை பிறர்க்கு உரைத்தும் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்விலே அதனை பின் பற்றாமல் அதன் அப்படி நடக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களை விட அறிவில்லாதவர்கள் பேதைகள் யாரும் இல்லை. ஏனெனில் அறிவை பெறாதவர்கள் அறிவிலிகள் (பேதைகள்) ஆனால் அறிவை பெற்றும் அதன் படி ஒழுகாதவர்களை போன்ற பேதையை விட பேதை யாரும் இல்லை. 

இஸ்லாம்

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் பகரா 44)

கிறிஸ்தவம் 

இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். “வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. (மத்தேயு 23:1-3)

2 கருத்துகள்:

  1. லூக்கா 6:31 கூறுகிறது, “மற்றவர்கள் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே அவர்களுக்காகவும் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  2. யோசுவா 1:8
    இந்த நியாயப்பிரமாணப் புத்தகம் உங்கள் வாயிலிருந்து விலகாமல், இரவும் பகலும் அதைத் தியானித்து, இதில் எழுதியிருக்கிறபடியெல்லாம் செய்ய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் உங்கள் வழியை செழிப்பாக மாற்றுவீர்கள், பின்னர் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்

    பதிலளிநீக்கு