தமிழர் சமயம்
மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.(தேவாரம், திருமுறை 1, 076 பொது, பாடல் 1)
பொருள்: அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.
நெஞ்சு நினைத்து தம் வாயாற் பிரான்என்றுதுஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்றுமஞ்சு தவழும் வடவரை மீதுறைஅஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. (திருமந்திரம் 2707)
பொருள் : தினமும் தூங்குவதற்கு முன் உள்ளத்தில் நினைத்து, வாயால் தெய்வமே என்று கூறி உன் துணையுடன் உன் திருவடியில் சரண் அடைகிறேன் என்று எண்ணி இருப்பின், வெண்மேகம் தவழும் வடக்கு எல்லையை உறைவிடமாக கொண்ட இறைவனை அஞ்சினால் அவனது அருள் பெறலாமே.
சொ.பொருள்: பிரான் - இறைவன், கடவுள், தெய்வம்; துஞ்சும் பொழுது - உறங்கும் பொழுது; மஞ்சு - வெண்மேகம்; வடவரை - வட + வரை = வடவரை; வட - வடக்கு; வரை - எல்லை; மீதுறை = மீது + உறை; உறை - இருப்பிடம்; அஞ்சி - பயந்து;
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே - திருமந்திரம் 810
விளக்கம்: இவனருள் வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன் கருணை பொழிவான், அறிவு மினுங்கப் பெறும். வான்கங்கை பாயப் பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்.
காய்ந்த அறிவு - மினுங்கும் அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி
கிறிஸ்தவம்
கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்: மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்: அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவரும் நல் அறிவை உடையவர்கள்: அவருடைய துதி என்றென்றும் நிலைத்திருக்கும். - (சங்கீதம் 111:10)
“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். (மத்தேயு 10:28)
இஸ்லாம்
இப்னு மஸ்வூத் ரலி கூறினார்கள் ; "அறிவு என்பது அதிகமான செய்திகளை (ஹதீஸ் அறிவிப்புகள்) அறிந்து வைப்பதல்ல, உண்மையில் அறிவு என்பது அல்லாஹ்வை அஞ்சுதல் தான்" (இப்னு ஹிப்பான் - ரௌலத்தல் உகாலா 9)
அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன். (குர்ஆன் 74:56)
நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (குர்ஆன் 5:44)
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (குர்ஆன் 9:13)
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பதிலளிநீக்குபின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்;
தன்னை அறிவது அறிவாம்; அஃதுஅன்றிப்
பின்னை அறிவுஅது பேய்அறிவு ஆகுமே. (திருமந்திரம் 2318)
அறிவு என்பது முயற்சியால் விளைவது; தவம் என்று சிறப்பிக்கத்தக்க முயற்சி. அறிவுத் தவம். செய்த தவத்தின் மேன்மையை எவ்வாறு அறிவது? அந்தத் தவத்தால் விளைந்த அறிவைக்கொண்டே அறியலாம். பெற்ற அறிவு தன்னை அறியும் அறிவானால், அதற்காகச் செய்த முயற்சி தவம்தான். தன்னை அறியும் அறிவே அறிவு. ஏனைய அறிவெல்லாம் பேய் அறிவு. அதென்ன பேய் அறிவு? ஆவதைவிட்டு ஆகாதவற்றை அறிய அலையும் அறிவு.
அறியாமை விட்டு அறிவு இன்றாம் அறிவு விட்டு அவ்
அறியாமை இன்று ஆகும் அந்த – அறிவும்
அறியாமையும் ஆர்க்கு என்று அம் முதலாம் தன்னை
அறியும் அறிவே அறிவு
(இத்தொடரை எழுதுவதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு முதலில் ஞாபகம் வந்தது இந்தச் செய்யுள்தான் என்றதால், இதில் உள்ள ஈற்றடியையே தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறேன் என்பதை வாசகர்கள் இந்நேரம் ஊகித்திருக்கலாம். )
பொருள்: (இது உடல், இது மனம், இது புத்தி, இது ஆன்மா, ஒவ்வொன்றும் வேறு என்ற இவ்வாறான) பாவனையுடன் கூடிய அஞ்ஞானத்தை விட்டு உலக நடப்பைக் கவனிக்கும் அறிவு என்பதொன்று தனியாக இல்லை. அதே போல உலகை தனக்கு அறிவிக்கும் அறிவை விட்டு அஞ்ஞானமும் தனித்தே இருக்காது. அந்த அறியாமையாகிய அஞ்ஞானமும், தனக்கு அறிவிக்கும் அறிவும் யாருக்கு உண்டாகிறது என்று விசாரித்து (இவை இரண்டுமே உதித்து ஒடுங்கும்) நான் என்று எழும் அகந்தையின் மூலமாகிய உண்மை சொரூபத்தை உணர்கின்ற அறிவே உண்மையான மெய்யறிவு ஆகும்.
“அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
அறிவு வடிவு என்று அறிந்திருந் தேனே”
~ தந்திரம் 8, அறிவுதயம்: பாடல் 2357
பொருள்:
பேர் அறிவின் வடிவம் என்று அறியாது இருந்த என்னை எம் அண்ணல் நந்தி அகஇருள் நீக்கி உண்மை அறிவின் வடிவத்தை உணர்த்தி அருள்செய்தான். தவத்தால் மலம் நீங்கி நானும் பேரறிவின் வடிவு என்று குரு அருளால் அறிந்துணர்ந்து, சிவ அறிவின் வடிவாய் விளங்கினேன். ஞான குரு சீடனின் அறியாமையை நீக்கி மெய் அறிவினை அருளுவார்.
அறிவு ஐம்புலனுடனே நான்றதாகி
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறிவுள்ளே அழிந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரனாமே.
(திருமந்திரம் - 119)
கருத்து : ஐம்புலன்களின் வழியில் ஈடுபட்டு சென்று சேரும் வழி தெரியாமல், ஆழம் காணமுடியாதவாறு பிறவிக் கடலில் மூழ்கி அறிவு அழிகின்றது. அப்போது, தெய்வமே குருவாக வந்து அருள் செய்யும்.
மத்தேயு 10:28 ESV / 66 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
பதிலளிநீக்குஉடலைக் கொன்றாலும் ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களுக்கு அஞ்சாதீர்கள். மாறாக ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்கக்கூடியவருக்கு அஞ்சுங்கள்.
நபியே நீங்கள் மக்களை பயப்படுகிறீர்களா?அல்லாஹ் தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். (அல்குர்ஆன் 33 : 37)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குوَإِيَّايَ فَارْهَبُونِ
என்னையே பயந்து நடுங்குங்கள். (அல்குர்ஆன் 2 : 40)
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ
மக்களை பயப்படாதீர்கள்.என்னை பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5 : 44)
فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.(அல்குர்ஆன் 3 : 175)
இப்படி தக்வாவிற்கு பல வார்த்தைகள் உள்ளன. அதுபோன்று خشوع-ஹுஷூஃ என்ற வார்த்தையும் உள்ளது.
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் 23 : 1-2)
இப்படி எந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும்,அடியான்அல்லாஹ்வுடைய நினைப்பு வரும் பொழுது அல்லாஹ்வைப் பற்றிப் பேசும்பொழுது,
إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். (அல்குர்ஆன் 8:2)
https://www.muftiomar.com/videodetails/744
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
பதிலளிநீக்கு9:64. முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
9:119. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
5:28. அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
5:11. முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
5:7. மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, “நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
5:4. (நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
5:28. அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
5:52. எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
5:94. ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
லூக்கா 12
பதிலளிநீக்குதேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்
4 பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. 5 நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.
6 “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. 7 இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.