திருமந்திரம் & திருக்குர்ஆன் கூறும் இறைவன் யார்?

ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே.

(திருமந்திரம் கடவுள் வாழ்த்து)


 2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான திருமந்திரத்துக்கு கிபி 1900 களின் நடுவில் பொழிப்புரை எழுதிய பொழிப்புரையாளர்களின் விளக்கத்தை விளக்கி வைத்துவிட்டு  இந்த பாடலுக்கான விளக்கத்தை திருமந்திரத்தில் இருந்தே எடுப்பதுதான் சரியான வழிமுறை. பிறகு அதனோடு இஸ்லாமிய போதனைகளை ஒப்பிடுவோம்.

இந்த திருமந்திர கடவுள் வாழ்த்துப் பாடலானது இறைவனின் பண்புகளை பட்டியலிடக் கூடியதாக இருக்கிறது. இந்த பட்டியலின் விளக்கமாகவும் இந்த பண்புகளை உடைய இறைவன் தான் இதில் உள்ள அறங்களை மக்கள் பின்பற்ற வகுத்து கொடுத்துள்ளான் என உணரும் முகமாக இந்த நூல் அமைந்துள்ளது. எனவேதான் இப்பாடலுக்கான விளக்கத்தை இதற்க்கு தொடர்பில்லாத வேறு நூல்களில் இருந்து எடுப்பது தவறான வழிமுறை ஆகும் குறிப்பாக மாற்று மொழி நூலிலிருந்து முதல் பொழிப்புரை வழங்குவது பிழை. இப்பாடல்கள் உண்மையான விளக்கத்தை திருமந்திரத்தை கொண்டு விளக்கிய பிறகு மாற்று வேதநூல்களோடு ஒப்பிடுவதன் மூலம் அது நமது தத்துவத்தோடு ஒத்துபோகிறதா இல்லையா என்று வேண்டுமானால் கண்டறியலாம். இந்த அணுகுமுறையை கொண்டே இந்த ஒப்பீடு செய்யபப்டுகிறது.

திருமந்திரம் & திருக்குர்ஆன் ஒப்பீட்டாய்வு:


1) ஒன்றவன் தானே (
ஒன்று அவன் தானே): ஒரே ஒருவனாய் தானே உருவானவன்: ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதவன் எனபதுதான் ஒன்று என்பதன் விளக்கம். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் லிங்கமும் சிலையும் படமும் புராணமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல எனபதை இது உணர்த்துகிறது. 

திருமந்திரம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - (திருமந்திரம்)

திருக்குர்ஆன்  

அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (குர்ஆன் 112:1&3)

2) இரண்டவன் இன்னருள் (
இரண்டு அவன் இன் அருள் நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

திருமந்திரம் 

செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. (திருமந்திரம் ஊழ் 2848)

பொழிப்புரை: கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் (நன்மை தீமை எல்லாம்) சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்

திருக்குர்ஆன்   

அவர்களுக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் தீமை நேர்ந்தால், “இது உம்மிடமிருந்து வந்தது” (நபியே!) என்கிறார்கள். நீர் கூறுவீராக: “எல்லாமே அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன.” ஆனால், இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது, ஒரு உண்மையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும் அளவிற்கு? உனக்கு நேர்வது எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது; உனக்கு நேரிடுவது எல்லாம் உன்னிடமிருந்தே வருகிறது… (குர்ஆன்  4:78-79)

3) நின்றனன் மூன்றினுள் (
நின்றனன் மூன்றினுள்நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு,  இறைவன் ஏற்பாடு அல்ல.

திருமந்திரம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. (திருமந்திரம் 404)

பொழிப்புரை: உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் சிவன் ஒருவன் தானே. அவன் அளிக்கும் கடவுள் எனும் கருத்து பிழை.

திருக்குர்ஆன்   

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40) 

இந்த முத்தொழிலில் இறைவன் தன்னுடன் யாரையாவது கூட்டாக அல்லது தனக்கு இணையாக வைத்துள்ளானா? அதாவது முத்தொழில் அழிக்கும் தொழிலை மட்டும் தான் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு மற்ற தொழிலை பொறுப்பு கொடுக்கும் வேலை நடைபெற்றதா? இல்லை என கீழ்வரும் பாடல் சொல்லுகிறது. 

திருமந்திரம்  

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. (திருமந்திரம் 110)
 
பொழிப்புரை: இறைவனை மூன்று ஐந்து என கருதுபவர்கள் ஆதியானவனை அறியாத அறிவில்லாத குருடர்கள் ஆவர். நீதி செலுத்துவது சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் மூவர் என்று பிரித்து கூறுகிறவர்கள் உளறுகிறாரே தவிர வேறு இல்லை.

திருக்குர்ஆன்   

(நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை. (குர்ஆன் 18:26)
 
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (குர்ஆன் 5:73)

4) நான்கு உணர்ந்தான் (நான்கு உணர்ந்தான் நான் மறைகளையும் உணர்ந்தவன். 

திருமந்திரம் 

நான்மறை என்பது என்ன? அது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் குறிக்கிறது. அவை அனைத்தையும் உணர்ந்தவன் சிவன்.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருக்குர்ஆன்   

நிச்சயமாக இது (குர்ஆன்) நம்மிடத்திலுள்ள ‘உம்முல் கிதாபில் (தாய் நூலில் - லவ்ஹுல் மஹ்ஃபூளில்) இருக்கிறது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். (குர்ஆன் 43:4)

 ''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191)

குறிப்பு: உலக நான்மறைகள் அனைத்தும் இந்த  லவ்ஹுல் மஹ்ஃபூளின் ஒரு பகுதியாகும்.

5) ஐந்து வென்றனன் (ஐந்து வென்றனன்)  இதற்கு நான்கு வகையான விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது.

முதல் விளக்கம்: மனிதனுக்கு நிகழும் ஐந்து நிலைகளை வென்றவன் 
    1. பிறப்பு, 
    2. பசி, 
    3. காமம், 
    4. தூக்கம், 
    5. இறப்பு 
எனும் ஐந்தை வென்றவன் என்று கூறுவது மற்ற விளக்கங்களை விட பொருத்தமான விளக்கமாக இருக்கலாம்.  

இரண்டாவது விளக்கம்: ஐம்புலன்களை வென்றவன் 

இது ஐம்புலன்களாகிய 
    1. மெய், 
    2. வாய், 
    3. கண், 
    4. மூக்கு, 
    5. செவி
ஆகிய ஐந்து புலன்களை வென்றவன் என்று பொருள் கொள்ளலாம்.  இறைவனுக்கு உருவம் உண்டு, இந்த ஐந்து புலன்களும் ஆனால் மனிதர்களை போல அல்ல. எனவே இந்த புளகிலையும் அவனது கட்டுப்பாட்டில் வைத்து இருபப்வன் என்று பொருள் கொள்வதும் சிறந்த விளக்கமே.

மூன்றாவது விளக்கம்: ஐம்பெரும் பூதங்களை வென்றவன் 

ஐம்பெரும் பூதங்களான 
  1. புவி, 
  2. ஆகாயம், 
  3. காற்று, 
  4. நீர் 
  5. நெருப்பு 
ஆகியவற்றை வென்றவன் என்று பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளின் தேவை இல்லாதவன் என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆனால் அண்டங்களுக்கு அப்பால் உள்ளவனுக்கு இந்த புவியில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது.

நான்காவது விளக்கம்: பஞ்சகீர்த்தியம் 

    1. படைத்தல், 
    2. காத்தல், 
    3. அழித்தல், 
    4. மறைத்தல், 
    5. அருளல் 

என்ற ஐந்து தொழில்களை (பஞ்சகீர்த்தியம்) புரிபவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவும் சரியான விளக்கம் அல்ல. ஏனெனில் "நின்றனன் மூன்றினுள்" எனபதால் ஏற்கவே இதில் மூன்று அம்சங்கள் இடம் பெற்று உள்ளது.

இறுதியாக இந்த நான்கு விளக்கங்களும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடிய தேவைகள் மற்றும் குணங்கள் எதுவும் இல்லாதவன் இறைவன் என்ற பொருளை தருகிறது. இருப்பினும் முதல் இரண்டு விளக்கமே இறைவனுக்கு மிக நெருக்கமாக உள்ளது. இதற்ககான திருமந்திர ஆதாரங்களை இப்பொழுது காண்போம்.

திருமந்திரம் 

சிவன் பிறப்பு இறப்பற்றவன்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25

 சிவ பெருமான் பசியற்றவன் 

ஒடுங்கி நிலைபெற்ற உத்தம ரானால்
கடும் பசி யில்லை கற்று விட்டோர்க்கே
படும் பசி யில்லை பரனை நினையிற்
கடும் பசி யில்லை கழலடி யோர்க்கே.

விளக்கம்: சிவபெருமான் என்றும் பசியற்றவன்; அவனை உணர்ந்தவர்களுக்கும், அவனுடன் கலந்தவர்களுக்கும் (திருமூலர் குறிப்பிடும் 'கற்றுவிட்டோர்') உலகியல் பசியும், பற்றுதலும் நீங்கிவிடும் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.

சிவபெருமான் காமம் அற்றவன் 

"காமனைக் காய்ந்தவன் காமத்தை வென்றவன்
ஆமள வாலுமக் காமமும் இல்லவன்
தீமைகொள் காமம் தீர்த்தருள் செய்தவன்
சேமமென் ஆவிச் சிவனவன் ஆமே."

சிவன் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் 

 

திருக்குர்ஆன்   

அல்லாஹ் எப்படிப்பட்டவன்? 

பிறப்பற்றவன்: அவர் (அல்லாஹ்) யாரையும் பெறவில்லை; எவராலும் பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

பசியற்றவன்: அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை (குர்ஆன் 6:14)

காமமற்றவன்: மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (குர்ஆன் 35:15)

தூக்கமற்றவன்: அவனைத் சிறு தூக்கமோ, உறக்கமோ பீடிப்பதில்லை (குர்ஆன் 2:255)

இறப்பற்றவன்அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; (குர்ஆன் 2:255)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் (குர்ஆன் 112:2.) 

அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் 

 நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (அல்குர்ஆன் 2:20, 41:39)

6) ஆறு விரிந்தனன் (ஆறு விரிந்தனன் மந்திரம்:மறை, பதம்:உணவு, வன்னம்:எழுத்து, புவனம்:உலகம், தத்துவம்:உண்மை, கலை:மொழி என்னும் ஆறாக விரிந்தனன் என்று 19 ஆம் நூற்றாண்டில் விளக்கம் கொடுக்கப்பட்ட்டது. ஆனால் ஆறு நாட்களில் உலகை படைத்தான் என்பதுதான் உண்மைக்கு நெருக்கமான விளக்கம் ஆகும். 

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்   

“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் ; மேலும், அவன் அர்ஷில் உறுதியாக நிலைபெற்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆளுகிறான். அவனது அனுமதியைப் பெற்றாலன்றி, எந்தப் பரிந்துரைப்பவரும் அவனிடம் முறையிட முடியாது. இவனே உங்கள் இறைவன் அல்லாஹ்; எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்: நீங்கள் அறிவுரை பெற மாட்டீர்களா?” (ஸூரா யூனுஸ் 10.3)

7) எழு உம்பர் சென்றனன் (
ஏழ் உம்பர்ச் சென்றனன்பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

திருமந்திரம் 

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (திருமந்திரம் 1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

திருக்குர்ஆன்   

ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

8) இருந்தான் உணர்ந்து எட்டே (
தான் இருந்தான் உணர்ந்து எட்டே தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

திருக்குறள் & திருக்குர்ஆன்  

தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.
    1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
    2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
    3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
    4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
    5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
    6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
    7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
    8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
திருமூலரின் திருமந்திரம் குறிப்பிட்ட இறைவனது எட்டு குணங்களை திருக்குறளிலிருந்து விளக்கியதன் காரணம் ஓளவையார்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர் - (நல்வழி 40)

மனிதன் அழைத்தால் எட்டும் தூரத்தில் சிவன் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்    

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்; அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் பிடரிநரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம் (குர்ஆன் 50:16) 
 
முடிவுரை :

உலகம் முழுவதும் ஒரே குலம் உலகம் முழுமைக்குக்கும் ஒருவனே தேவன்.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html

http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm


6 கருத்துகள்:

  1. 177. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
    அருமை எளிமை அறிந்தறி வாரார்
    ஒருமையுள் ஆமைபோல1 உள்ளைந் தடக்கி
    இருமையுங்2 கேட்டிருந் தார்புரை அற்றே.

    (ப. இ.) ஒரு பிறப்பினுள் ஆமையினைப் போன்று தமக்கு இடர் வரும் நெறியில் ஐம்புலனையும் போக விடாது, இடரில் இன்பமே கடலெனப் பெருகும் நன்னெறியிற் போகச் செய்வதே புலனடக்கம் ஆகும். அங்ஙனம் புலனடக்கியவர்களே புலவோராவர். அவர்கள் எம்பிரான் அருளால் அடக்கப்பெருமையின் பயனாகக் கிடைத்தற்கு அரிய பிறவாச் சிறப்பினை எய்துவர். புலனடக்காப் புன்மையோர் அடங்காமையின் பயனாகச் சிறுமையுற்று எளியராய்ப் பிறப்பு இறப்புக்கு உட்படுவர். புரையாகிய ஐம்புலனடக்காக் குற்றமுடையார் பிறப்பும் சிறப்பும் ஆகிய இரண்டினையும்கேட்டுப் பிறப்புக்கே ஆளாகி வாளா இருப்பர். அக் குற்றமற்றவர் சிறப்புக்கு ஆளாகி அறப்பயன் சேர் பெரியராயிருப்பர். இருந்தார் : (குற்றமற்று) வாய்வாளா திருந்தார் என்றலும் ஒன்று. சிறப்பு - வீடுபேறு.

    https://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=178&book_id=118&head_id=67&sub_id=2384

    184. தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
    தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
    தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்2
    தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.3

    (ப. இ.) ஒப்பில்லாத நம் தலைவனாகிய சிவபெருமானைத் திருவருளால் திருவடியுணர்வு கொண்டு சந்திப்பதாகிய உணர்வினில் நேர்ந்தவிடத்து எளிதாக மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலனும் நம்வயமாயிடும். முன்பு அவ் வைம்புலன்களும் நம்மை அவற்றின் வயமாக்கி வினைக்கீடாக ஆட்டின. அவ் வாட்டுதல் இப்பொழுது அகன்றொழிந்தது. அவ் வைம் புலன்களும் முன்னர் இருள்வழி நின்று பிறப்புக்கு வித்தாம் நிலையாப் பொருள்களில் வேட்கை கொள்ளுவித்தது. அது மாறி இப்பொழுது அருள்வழி நின்று சிறப்புக்கு வித்தாம் நிலைத்த பொருளாம் திருவடியில் வேட்கையினை விளைவிக்கும் தனித்தென்பது : ஆருயிர் தன்னை அவ் வைம்புலன்களில் வேறு எனக் காண்ப தென்பதாகும். சந்தித்து - இறைவனைக் கண்டு.

    https://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=185&book_id=118&head_id=67&sub_id=2384

    பதிலளிநீக்கு

  2. ஒன்பதாம் தந்திரம்
    22. சர்வ வியாபி

    11 விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
    மண்ணவன் ஆய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
    தண்ணவன் ஆய் அது தன்மையின் நிற்பது ஓர்
    கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே.

    https://www.tamilvu.org/library/l4100/html/l41A0ind.htm

    பதிலளிநீக்கு
  3. சிவ பெருமான் பசியற்றவன்

    ஒடுங்கி நிலைபெற்ற உத்தம ரானால்
    கடும் பசி யில்லை கற்று விட்டோர்க்கே
    படும் பசி யில்லை பரனை நினையிற்
    கடும் பசி யில்லை கழலடி யோர்க்கே.

    விளக்கம்: சிவபெருமான் என்றும் பசியற்றவன்; அவனை உணர்ந்தவர்களுக்கும், அவனுடன் கலந்தவர்களுக்கும் (திருமூலர் குறிப்பிடும் 'கற்றுவிட்டோர்') உலகியல் பசியும், பற்றுதலும் நீங்கிவிடும் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.
    சிவபெருமான் காமம் அற்றவன்

    "காமனைக் காய்ந்தவன் காமத்தை வென்றவன்
    ஆமள வாலுமக் காமமும் இல்லவன்
    தீமைகொள் காமம் தீர்த்தருள் செய்தவன்
    சேமமென் ஆவிச் சிவனவன் ஆமே."

    பதிலளிநீக்கு
  4. பாடல் எண் : 17
    தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

    பொழிப்புரை :
    சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.

    குறிப்புரை :
    `தூங்குதல்` என்றது, தம் முனைப்பால் சிவமல்லாத பிற பொருளாகிய தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்ப வற்றையும் அறிதலை ஒழிந்து நிற்றலையாம். இதனையே `அறி துயில்` எனவும், `யோக நித்திரை` எனவும், `தூங்காமல் தூங்குதல்` எனவும் கூறுவர். தம்மையும், தம்மைச் சார்ந்த பாசங்களையும் மறந்திருத்தலால் தூங்குதலும், சிவத்தை உணர்ந்து நிற்றலால் விழித்திருத்தலும் ஆகின்ற இரு நிலைமையும் ஒருங்கு நிகழ்தலை இவ்வாறு உணர்த்துவர் என்க

    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_82.html

    பதிலளிநீக்கு
  5. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
    சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
    சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
    சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 128

    பதிலளிநீக்கு
  6. பாடல் எண் : 21
    அதிமூட நித்திரை ஆணவம் நந்த
    அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
    இதமான கேவலம் இத்திறம் சென்று
    பரமாக ஐயவத் தைப்படு வானே.
    பொழிப்புரை :
    அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத்தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம் போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.
    குறிப்புரை :
    ஆணவத்தின் சத்தி கெடுவது மாயையால் ஆதலின் அஃது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கன்மத்தால் முன்னி` என உருபு விரிக்க. `கேவலம்` - என்பது `அறியாமை` என்னும் பொருட்டாய் நின்றது. `கேவலத்து` என்னும் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. பரம் - மேன்மை `பரம் ஆக` - என்றது `வேறு (கீழ்) ஆகின்ற` என்னும் பொருளைத் தந்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
    இதனால், கீழால் அவத்தை` - எனப்படுவன சகலத்தில் நிகழும் கேவல ஐந்தவத்தைகளாம் - என்பது கூறப்பட்டது.

    பதிலளிநீக்கு