மறுமை என்ற ஒன்று உண்டா?

தமிழர் சமயம்


மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.(முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுஉலகம் என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.
 
மனநலத்தின் ஆகும் மறுமை (459)
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

என்ற குறள்களில் மறு உலக வாழ்கையை சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்து கையாள்கிறார்:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் (98)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இன்மையும் இன்றி வரும் (1042)

இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அதாவது மறுமை வாழ்க்கையில் சுவர்க்கம் என்பதையும் கச்சிதமாகச் சொல்கிறார்.

அதை,
வானென்னும் வைப்பு (24)
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)
புக்கில் (340)
வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)
வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும்,
பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும்,
அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை)
அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும்,
அதற்குக் காரணம் பற்று (347) என்றும்,
பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346)
ஆசை, வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் துன்பம் என்பது தொடரும் என்றும்,

இம்மையில் செய்த வினையின் விளைவு மறுமையில் மீண்டும் எழும் பொழுது அதன் வினைப்பயன் தொடரும் என்றும், (107, 126, 398, 538),

பற்றற்ற கண்ணே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் (349) என்றும்
படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. - குறள் 23.

இருமை வகை தெரிந்து - இவ்வுலக மறுஉலக வாழ்கை என்னும் இரண்டு உள்ளதென ஆராய்ந்து அறிந்து; ஈண்டு - இம்மையில், அறம் பூண்டார் பெருமை - அறக் காரியங்களை செய்வர் பெருமை; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. குறள் 374

இருவேறு உலகத்து - இம்மை மறுமையில்
இயற்கை திருவேறு - உள்ள பொருள்களின் தன்மைகள் வெவேறு
தெள்ளிய ராதலும் வேறு. - அவர்கள் அதில் அறிவதும் வேறு வேறு

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே. திருமந்திரம்

பொழிப்புரைஅகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

குறிப்புரை : `உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது 

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார். - நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் (01)

கருத்துரைமேமையான தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.

விசேடவுரைதவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.

பதவுரை
மேலை= மென்மையான ;
தவத்தால்= தவங்காரணமாக;
தவம்= நற்றவம்;
செய்யாதார்= செய்யாதவர்கள்;
அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
நோக்கி= பார்த்து;
தாம்புக= தாம் உள்ளே நுழைய;
பெறார்= பெறாதவர்களாய்;
புறங்கடை= தலைவாயிலை;
பற்றி= பிடித்துநின்று;
மிக= மிகவும்;
தாம்= தாங்கள்;
வருந்தி= வருத்தப்பட்டு;
இருப்பர்= இருப்பார்கள்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
உறும் ஆறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும். பாடல்: 95 (மறுமை)

பதவுரை
மறுமையும்= மறு பிறப்பையும்,
இம்மையும்= இப்பிறப்பையும்,
நோக்கி= ஆராய்ந்து,
ஒருவர்க்கு= ஒருவருக்கு,
இயைவ= பொருந்தியவைகளை,
கொடுத்தல்= வழங்கல்,
உறும் ஆறு= பொருந்தும் வழி
வறுமையால்= தரித்திரத்தினால்,
ஈதல்= கொடுத்தல்,
இசையாது எனினும்= கூடாதாயினும்,
இரவாமை= யாசியாதிருத்தல்,
ஈதல்= கொடுத்தலினும்,
இரட்டி= இருமடங்காக,
உறும்= அடையும்.

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர். 243

எந்த மண்ணில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக முளைக்காது.
எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிந்தவர் சுவர்க்கம் புகுவர்.
நல்லறம் செய்யும் தன் முயற்சியால்தான் சுவர்க்கம் புகமுடியும்.
வடதிசை மண்ணிலும் நல்லறம் புரியாமல் வீணானவர்கள் உண்டு.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 275

அலை வீசி எறியும் பெரிய கடலில் இருந்தாலும் நீர் சிறிதளவே இருக்கும் சிறிய கிணற்று நீரையே மக்கள் உண்பர். அதுபோல, வழங்கி, மறுமை இன்பம் பெறாமல் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனின் செல்வத்தை விட, சான்றோரை வாட்டி வதைக்கும் வறுமை நிலையே தலைமையானதாகும்.

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார். 329

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக எண்ண வேண்டும் 

பேறுஅழிவு சாவு பிறப்புஇன்பத் துன்பம் என்ற
 ஆறுஉள அந்நாள் அமைந்தன - தேறி
 அவைஅவை வந்தால் அழுங்காது விம்மாது
 இவைஇவை என்றுஉணரற் பாற்று. - அறநெறிச்சாரம் 149

 விளக்கவுரை செல்வம், வறுமை, இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் என்னும் இந்த ஆறும் முன்பு செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; (ஆதலால்) இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் மகிழாது, வருந்தாது நம்மை நாடி வந்த இவை, இன்ன வினைகளால் வந்தன என்று ஆராய்ந்து அடங்குவதே செய்யத்தக்கது.


ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே! பாடல் - 150

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
 தானே தனக்கு மறுமையும் இம்மையும்
 தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
 தானே தனக்குக் கரி.

விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.

சிறந்த துணையாவது செய்வினையே பாடல் - 151

செய்வினை அல்லால் சிறந்தார் பிறர்இல்லை
 பொய்வினை மற்றைப் பொருள்எல்லாம் - மெய்வினவில்
 தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
 நீயார் நினைவாழி நெஞ்சு.

விளக்கவுரை நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாய் அமைவதின்றிச் சிறந்த துணைவர் வேறு எவரும் இல்லை! நிலை பெற்றவை என நீ எண்ணுபவை எல்லாம் அழியும் தன்மை உடையவையே! உண்மையை அறிய வினவினால் தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் யார்? நீ இவர்களுக்கு யார்? (இவர்கள் உன்னுடன் எத்தகைய தொடர்பை உடையவர்?) இவர்கள் நிலையான தொடபற்றவர்கள்.

எண்ணருந்துன்பம் உடலுக்கு! பாடல் - 152

உயிர்திகிரியாக உடம்புமண் ணாகச்
 செயிர்கொள் வினைகுயவ னாகச் - செயிர்தீர்
 எண்அரு நல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
 எண்அருநோய் துன்பம் அவர்க்கு.

விளக்கவுரை குற்றம் தரும் வினை, பாண்டம் செய்யும் குயவனாக நின்று, உயிர்க் காற்றையே தண்ட சக்கரமாகவும், எழுவகைப்பட்ட, தாதுவையே களிமண்ணாகவும் கொண்டு குற்றத்தினின்று நீங்காத நினைத்தற்கு அரிய பாத்திரத்தைச் செய்யும் அந்த உடலுக்குள் அதனை அனுபவிக்கும் சீவர்க்கு அளவிட இயலாத கொடிய நோய்கள் பல உள்ளன.

மறுமையைப் பற்றி எண்ண வேண்டும் பாடல் - 153

முன்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதுஓர்
 இல்பிறந்து இன்புஉறா நின்றவர் - இப்பிறப்பே
 இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
 முன்னி முயன்றுஒழுகற் பாற்று.

விளக்கவுரை முன்னைய பிறவியில் தாம் இயற்றிய அறச் செயல் காரணமாக, நல்ல ஒரு குடியில் தோன்றி இன்பத்தை அனுபவிப்பவர்கள், இம்மை இன்பத்தையே இன்னமும் எண்ணி, அதற்காக முயல்வாராயின், மறுமையில் அடைவது துன்பமே ஆகும். ஆதலால் இம்மை இன்பத்தில் செலுத்தும் கருத்தை ஒழித்து, மறுமை இன்பத்துக்குக் காரணமான அறத்தை நினைத்து முயன்று அதனைச் செய்வதே சிறந்தது.

மறுமைக்கு அறம் செய்யாதவர் அறியாதவர் பாடல் - 154

அம்மைத் தாம் செய்த அறத்தின் வரும்பயனை
 இம்மைத் துய்த்து இன்புஉறா நின்றவர் - உம்மைக்கு
 அறம்செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
 கறந்து உண்டுஅஃது ஓம்பாமை யாம்.

விளக்கவுரை முன் பிறவியில் தாம் செய்த அறம் காரணமாக இப்பிறவியில் இன்பம் அனுபவிப்பவர்கள் அறத்தைச் செய்யாமல் ஐந்து பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பங்களை நுகர்ந்து கொண்டு வாளா இருத்தல், நல்ல பசுவின் பாலைக் கறந்து அருந்தி, அப்பசுவை உணவிட்டுக் காவாமல் இருத்தல் போலாம்.

நல்ல பிறவி தீய பிறவிகளுக்குக் காரணம் பாடல் - 155

இறந்த பிறப்பில்தாம் செய்த வினையைப்
 பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருப்பது
 செய்யும் வினையால் அறிக - இனிப்பிறந்து
 எய்தும் வினையின் பயன்.

விளக்கவுரை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முன் பிறவியில் செய்த நல்வினை தீவினைகளை, எடுத்துள்ள இப் பிறவியில் அடையும் இன்பதுன்பங்களால் அறிந்து கொள்க. இனிமேல் பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை, இம்மையில் பிறந்து செய்யும் நல்வினை தீவினைச் செயல்களால் அறிவார்களாக!

வீடுபேற்றை அடையாத பிறவி பயன் அற்றது பாடல் - 156

தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தார்
 ஆய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
 மேலைப் பிறப்பும் இதுவானால் மற்று என்னை?
 கூலிக்கு அழுத குறை.

விளக்கவுரை மக்கள் வேறொரு தொடர்பும் இல்லாமல் தம்தம் வினை காரணமாகத் தாயும் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் என உறவினராய் வந்து பிறந்து வீடு பேற்றை அடைய முயலாமல் தம்முள் சிலர் வருந்த இறந்துபோதல், வரும் பிறவியிலும் அவர் மீண்டும் தோன்றி அவர்களுள் சிலர் வருந்த இறந்து விட்டால், அவர்கள் வாழ்க்கை ஒருவருக்கொருவர் கூலியின் பொருட்டு அழுத செயலாகும்.
 

இஸ்லாம்


(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 2:4

குர்ஆன் இரு உலக பொருள்களின் தன்மைகளை  இப்படி கூறுகிறது "(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - திருக்குர்ஆன் 2|25

இவ்வுலக மனிதன் அறிய முடியாதது பற்றி திருக்குர்ஆன் "32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது." என்று கூறு கிறது மேலும் மறுமையில் அவன் நிலை பற்றி "99:7,8. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்." இவ்வாறு கூறுகிறது.

திருக்குறள் என்பது ஓரிறை கொள்கையை மட்டுமன்றி மேலே குறிப்பிட்ட அனைத்து இஸ்லாமிய கொள்கைகளையும் வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறது.. ஆனால் அதற்க்கு பொழிப்புரை எழுதிய காலகட்டத்தில் வாட மொழியிலிருந்து வந்த சித்தாந்தங்களின் ஆதிக்கத்தால் எழு பிறவி என்று குறிப்பிடபட்ட இடங்களை ஏழு பிறவி என்று கருத்து திணிப்பு பொழிபபுறையில் இருப்பது  உண்மை. அனால் அது மீண்டும் எழும் பிறவியை அதாவது மறுமையை அவ்வாறு விளக்குகிறது. 

முடிவில் திருக்குறள் இம்மை வாழ்க்கை மறுமை வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வரையறைகள் வரம்புகள் இஸ்லாத்துடன் நிரப்பமாக ஒத்துபோகிறது.. 

இது இறைவன் திருக்குரானில் சொன்ன விஷயங்களையும் அதாவது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறை தூதர்கள் அனுப்ப பட்டார்கள் அவர்களை அந்த சமுதாயத்தில் இருந்தேஅவன் தேர்வு செய்து அனுப்பினான் அவர்கள் விளங்கும் பொருட்டு என்றதும் அவர்கள் உலகம் மற்றும் உலக மக்கள் அனநிவரையும் படைத்த இறைவனாகிய அவனையே வணங்க வலியுறுத்தினார்கள் என்று  கூறியதும் நிரூபணம் ஆகிறது. 

மேலும் வேதத்தை உடையவர்களை உங்களுக்கும் எமக்கும் இடையிலான ஒருபொதுவான விஷயத்தின் பக்கம்வாருங்கள் என்ற இறை வசனத்தை கொண்டு் அழைப்பு விடுப்பதன் மூலம்  ஏறக்குறைய 95% போதனைகள் ஒன்றாகவே இருக்கும் வேத வசனங்களை பின்பற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடியும்.  
 
 
 

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. - (முஸ்லிம் 5436.)

24 கருத்துகள்:

  1. மனநலத்தின் ஆகும் மறுமை (459)
    மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)
    மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

    என்ற குறள்களில் மறு உலக வாழ்கையை சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்து கையாள்கிறார்:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பந் தரும் (98)

    இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இன்மையும் இன்றி வரும் (1042)

    இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அதாவது மறுமை வாழ்க்கையில் சுவர்க்கம் என்பதையும் கச்சிதமாகச் சொல்கிறார்.

    அதை,
    வானென்னும் வைப்பு (24)
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)
    புக்கில் (340)
    வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)
    வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

    ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும்,
    பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும்,
    அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை)
    அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும்,
    அதற்குக் காரணம் பற்று (347) என்றும்,
    பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346)
    ஆசை, வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் துன்பம் என்பது தொடரும் என்றும்,

    இம்மையில் செய்த வினையின் விளைவு மறுமையில் மீண்டும் எழும் பொழுது அதன் வினைப்பயன் தொடரும் என்றும், (107, 126, 398, 538),

    பற்றற்ற கண்ணே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் (349) என்றும்
    படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

    இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. - குரள் 23.

    இருமை வகை தெரிந்து - இவ்வுலக மறுஉலக வாழ்கை என்னும் இரண்டு உள்ளதென ஆராய்ந்து அறிந்து; ஈண்டு - இம்மையில், அறம் பூண்டார் பெருமை - அறக் காரியங்களை செய்வர் பெருமை; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.

    இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு. - 374:

    இருவேறு உலகத்து - இம்மை மறுமையில்
    இயற்கை திருவேறு - உள்ள பொருள்களின் தன்மைகள் வெவேறு
    தெள்ளிய ராதலும் வேறு. - அவர்கள் அதில் அறிவதும் வேறு வேறு
    _______________________________________________________________

    திருமந்திரம்

    பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
    பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
    பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
    சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

    பொழிப்புரை :
    அகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

    ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
    தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
    காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
    மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

    பொழிப்புரை :
    ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

    தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
    தானே தனக்கு மறுமையும் இம்மையும்
    தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
    தானே தனக்குத் தலைவனும் ஆமே.

    குறிப்புரை :
    `உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
    ``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
    மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்``*
    என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
    இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது

    பதிலளிநீக்கு
  2. நாலடியார் :

    அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்
    புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
    மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
    தவத்தாற் றவஞ்செய்யா தார். - நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் (01)

    கருத்துரை
    மேமையான தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.

    விசேடவுரை
    தவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.

    பதவுரை
    மேலை= மென்மையான ;
    தவத்தால்= தவங்காரணமாக;
    தவம்= நற்றவம்;
    செய்யாதார்= செய்யாதவர்கள்;
    அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
    வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
    அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
    நோக்கி= பார்த்து;
    தாம்புக= தாம் உள்ளே நுழைய;
    பெறார்= பெறாதவர்களாய்;
    புறங்கடை= தலைவாயிலை;
    பற்றி= பிடித்துநின்று;
    மிக= மிகவும்;
    தாம்= தாங்கள்;
    வருந்தி= வருத்தப்பட்டு;
    இருப்பர்= இருப்பார்கள்.

    மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
    உறும் ஆறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
    ஈதல் இசையாது எனினும் இரவாமை
    ஈதல் இரட்டி உறும். பாடல்: 95 (மறுமை)

    பதவுரை
    மறுமையும்= மறு பிறப்பையும்,
    இம்மையும்= இப்பிறப்பையும்,
    நோக்கி= ஆராய்ந்து,
    ஒருவர்க்கு= ஒருவருக்கு,
    இயைவ= பொருந்தியவைகளை,
    கொடுத்தல்= வழங்கல்,
    உறும் ஆறு= பொருந்தும் வழி
    வறுமையால்= தரித்திரத்தினால்,
    ஈதல்= கொடுத்தல்,
    இசையாது எனினும்= கூடாதாயினும்,
    இரவாமை= யாசியாதிருத்தல்,
    ஈதல்= கொடுத்தலினும்,
    இரட்டி= இருமடங்காக,
    உறும்= அடையும்.

    எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
    எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
    தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
    கொன்னாளர் சாலப் பலர். 243

    எந்த மண்ணில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக முளைக்காது.
    எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிந்தவர் சுவர்க்கம் புகுவர்.
    நல்லறம் செய்யும் தன் முயற்சியால்தான் சுவர்க்கம் புகமுடியும்.
    வடதிசை மண்ணிலும் நல்லறம் புரியாமல் வீணானவர்கள் உண்டு.


    எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
    அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்
    மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை. 275

    அலை வீசி எறியும் பெரிய கடலில் இருந்தாலும் நீர் சிறிதளவே இருக்கும் சிறிய கிணற்று நீரையே மக்கள் உண்பர். அதுபோல, வழங்கி, மறுமை இன்பம் பெறாமல் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனின் செல்வத்தை விட, சான்றோரை வாட்டி வதைக்கும் வறுமை நிலையே தலைமையானதாகும்.


    வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
    மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
    ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
    சிந்தியார் சிற்றறிவி னார். 329

    புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.
    ________________________________________

    பதிலளிநீக்கு
  3. திருக்குர்ஆன் :

    குர்ஆன் இரு உலக பொருள்களின் தன்மைகளை இப்படி கூறுகிறது "(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - திருக்குர்ஆன் 2|25

    இவ்வுலக மனிதன் அறிய முடியாதது பற்றி திருக்குர்ஆன் "32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது." என்று கூறு கிறது மேலும் மறுமையில் அவன் நிலை பற்றி "99:7,8. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்." இவ்வாறு கூறுகிறது.

    திருக்குறள் என்பது ஓரிறை கொள்கையை மட்டுமன்றி மேலே குறிப்பிட்ட அனைத்து இஸ்லாமிய கொள்கைகளையும் வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறது.. ஆனால் அதற்க்கு பொழிப்புரை எழுதிய காலகட்டத்தில் வாட மொழியிலிருந்து வந்த சித்தாந்தங்களின் ஆதிக்கத்தால் எழு பிறவி என்று குறிப்பிடபட்ட இடங்களை ஏழு பிறவி என்று கருத்து திணிப்பு பொழிபபுறையில் இருப்பது உண்மை. அனால் அது மீண்டும் எழும் பிறவியை அதாவது மறுமையை அவ்வாறு விளக்குகிறது.

    முடிவில் திருக்குறள் இம்மை வாழ்க்கை மறுமை வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வரையறைகள் வரம்புகள் இஸ்லாத்துடன் நிரப்பமாக ஒத்துபோகிறது..

    இது இறைவன் திருக்குரானில் சொன்ன விஷயங்களையும் அதாவது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறை தூதர்கள் அனுப்ப பட்டார்கள் அவர்களை அந்த சமுதாயத்தில் இருந்தேஅவன் தேர்வு செய்து அனுப்பினான் அவர்கள் விளங்கும் பொருட்டு என்றதும் அவர்கள் உலகம் மற்றும் உலக மக்கள் அனநிவரையும் படைத்த இறைவனாகிய அவனையே வணங்க வலியுறுத்தினார்கள் என்று கூறியதும் நிரூபணம் ஆகிறது.

    மேலும் வேதத்தை உடையவர்களை உங்களுக்கும் எமக்கும் இடையிலான ஒருபொதுவான விஷயத்தின் பக்கம்வாருங்கள் என்ற இறை வசனத்தை கொண்டு் அழைப்பு விடுப்பதன் மூலம் ஏறக்குறைய 95% போதனைகள் ஒன்றாகவே இருக்கும் வேத வசனங்களை பின்பற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  4. Ref:
    http://www.vallamai.com/?p=71094
    http://kural.muthu.org/kural.php?kid=349&uid=1
    http://www.tamilvu.org/library/l2100/html/l2100ind.htm
    http://www.thirukkural.com/search/label/%E0%AE%8A%E0%AE%B4%E0%AF%8D
    http://philosophyofkuralta.blogspot.in/
    http://quranmalar.blogspot.in/2014/05/blog-post_15.html
    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10

    பதிலளிநீக்கு
  5. தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்
    25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

    28 ,“உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.

    31 ,“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%206&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  6. இரண்டு வழிகள்
    13 ,“பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். 14 ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%207&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  7. முதுமொழிக் காஞ்சி
    510. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று.

    மறுபிறப்பு அறியாதது - மறுமையுண்மை உணராதது
    மூப்பு அன்று - சிறந்த முதுமையாகாது

    மறுமைக்குரிய அறவொழுக்கங்களை ஒழுகாமலே அடைந்த மூப்புச் சிறப்பாகாது.

    பதிலளிநீக்கு
  8. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
    குறள் 356
    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி
    [அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

    பொருள்
    கற்று - கற்கை - படித்தல்
    கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்

    ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

    ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu- 5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).

    கற்றீண்டு - (மெய்ப்பொருளை) கற்று (அனுபவம் மூலம்) அறிந்தவர்களிடம் கற்று

    பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

    மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

    காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

    கண்டார் - உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

    தலைப்படுதல் - ஒன்றுகூடுதல்; எதிர்ப்படுதல்; மேற்கொள்ளுதல்; பெறுதல்; முன்னேறுதல்; தலைமையாதல்; புகுதல்; வழிப்படுதல்; தொடங்குதல்.

    தலைப்படுவர் - செல்லும் வாழ்வின் பாதை; செயல்படுவார்கள்

    மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

    ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu- 5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5). -

    மற்றீண்டு - மீண்டும் இந்த உலகில் வந்து வாழ பிறக்க

    வாரா - வாராத

    நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

    முழுப்பொருள்
    வாழ்வில் மெய்ப்பொருள், நிலையான பொருள் என்றவற்றை உணர கற்க தக்க அற நூல்களும், ஆன்மீக நூல்களும் இன்றியமையாததாகும். அதைப்போல், அவற்றை கசடற (faultlessly. கசடு - குற்றம்) கற்க, அதனை கற்று, பட்டு உணர்ந்த ஒருவரை குருவாக கொண்டு கற்பது இன்றியமையாததாகும்.

    அப்படி ஒரு குருவிடம் மெய்ப்பொருள் யாது என்று கற்று உணர்ந்தவர், பின்பு அதனை மனதில் அவதானித்து தியானித்து கொண்டே இருந்தார் என்றால் அவர் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணும் வழியை தேர்ந்தேடுப்பார். அதில் பயணிப்பார்.

    அப்படி மெய்ப்பொருள் வேண்டி / தேடி செல்வார் மீண்டும் மானுட வாழ்வில் பிறவி எடுக்க மாட்டார் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.

    ஒருவர் நூல்களை படித்தால் மட்டும் போதாது. மெய்ப்பொருள் அறிய, அவனை அறிய, கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) ஆகியவற்றைக் கொள்ள வேண்டும்.

    கண்டார் என்று சொன்னது எதற்கு என்றால் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணலாம், இதற்காக மற்ற உலகிற்கு (மடிந்து) செல்ல வேண்டியதில்லை

    இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இந்தப் பிறவியிலேயெ மெய்ப்பொருளை காண, அதற்கான வற்றை கற்று, அந்த வழியைத் தேடி செல்வோர் (பெய்ப்பொருளை அடைவார், ஆதலால்) மீண்டும் பிறவி எடுத்து மெய்ப்பொருள் கற்க வேண்டிய அவசியமில்லை என்று.

    https://dailyprojectthirukkural.blogspot.com/2014/03/kural356.html#:~:text=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF.,%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20'%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81'%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

    பதிலளிநீக்கு
  9. மறுமையை ஓப்பிடும் போது அற்பசுகம்

    اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ
    அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.

    (அல்குர்ஆன்:13:26. )

    மறுமைக்கு மிகப்பெரிய சிறப்புண்டு

    اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ وَلَـلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا‏
    (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.

    (அல்குர்ஆன்:17:21.)

    உலகம் அற்பமானது மறுமை நிரந்தரமானது

    يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ وَّاِنَّ الْاٰخِرَةَ هِىَ دَارُ الْقَرَارِ‏
    “என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ – அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.

    (அல்குர்ஆன்:40:39.)

    மறுமையை தவிர வேறு வாழ்க்கை இல்லை

    عَنْ سَهْلٍ قَالَ جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَحْفِرُ الْخَنْدَقَ وَنَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَادِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ رواه البخاري
    ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!’ என்று (பாடியபடி) கூறினார்கள்.

    ( புகாரி-3797 )

    பதிலளிநீக்கு

  10. பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம்,
    அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்,
    பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்,
    சாபம்போல் சாரும், சலித்து. ஏலாதி 60


    பெருமையும், புகழும், அறம் பேணாதசினமும், அருமை நூலும், சால்புக் குணமுமில்லார் சாரின், இம்மை மறுமை யென்னு மிரண்டிற்கும் பாவமும், பழியும் பகையும், சாக்காடும், கேடும், அச்சமு மென்னு மிவ் ஆறு திறமு முனிவராற் சாபமிட்டாற் போலச் சென்று சாரும் வெகுண்டு.

    பதிலளிநீக்கு
  11. குர்ஆன் 89:24. “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.

    பதிலளிநீக்கு
  12. ஏலாதி 77 Elati 77
    நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான், பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின் எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ், வல்லை வீடு ஆகும்; வகு! 77

    நாற்கதியும் துன்பம் நவைதீர்த்தல் வேண்டுவான்
    பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து - நூற்கதியின்
    எல்லை உயர்ந்தார் தவம்முயலின் மூன்றைந்தேழ்
    வல்லைவீ டாகும் வகு 77

    நான்கு நிலைகளில் தோன்றும் பிறப்பிலும் துன்பம் உண்டு.
    துன்பத்தைத் தீர்க்க விரும்புபவன் ஊழ் என்னும் பால் விதிக்கும் கதியை ஆராயவேண்டும்.

    உயர்ந்தோர் நூல்களை முற்றிலுமாக நன்கு பயில வேண்டும்.

    அதன் வழி முயன்று தவம் செய்ய வேண்டும்.
    அப்படிச் செய்தால்
    இறப்பு. நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலத்திலும்,
    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களிலும்
    வானவில்லில் தோன்றும் ஏழு நிறம் போன்ற ஏழு பிறப்புகளிலும்

    விரைவில் வீடுபேறு கிட்டும்.
    இதனை வகுத்து உணர்ந்துகொள்க.

    அறநெறி10 September 2022 at 05:06
    ஏழ், வல்லை வீடு ஆகும் - என்பது ஏழு வகை சொர்க சோலைகளை குறிக்கும்.

    வல்லை (பெ)பொருள் - அகராதி இணையத்திலிருந்து :

    பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
    கோட்டை
    காலம் விரைந்து செல்லுதல், கால விரைவு
    வட்டம்
    விரைந்து வளரும் முருக்கு மரம் (erythrina Indica)

    வீடு என்பது சொர்கத்தை குறிக்கும்

    எழுவகை சுவர்க்கம் உள்ளது அனைத்து மதமும் சொல்லும் உண்மை.
    https://araneriislam.blogspot.com/2014/10/similarities-among-religions.html

    கருத்து பிழை மிக பாவமானது

    பதிலளிநீக்கு
  13. பாடல் எண் : 24
    குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
    டிடையுமக் காலம் இருந்து நடுவே
    புடையு மனிதரார் போகும்அப் போதே
    அடையும் இடம்வலம் ஆருயி ராமே.
    பொழிப்புரை :
    வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.
    குறிப்புரை :
    எனவே, `இம்மை வாழ்வைப் பெரிதாக நினையாது மறுமை நோக்கி முயல்க` என்பது கூறப்பட்டதாம். ``இடையும்`` என்றது `இடையதாகின்ற` என்றவாறு, இனி, உம்மையை அசை நிலை யாக்கினும் ஆம், ``புடையும்`` என்பதில் உள்ள உம்மை, `அயலும்` என இறந்தது தழுவிற்று. `ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல், `இடையும் அக்காலம்` புடையும் மனிதர் ஆர, நடுவே குடையும், குதிரையும், வாளும் கொண்டு இருந்து போகும் அப்போது ஆருயிர் அடையும் இடமே வலம் ஆம்` எனக் கூட்டுக. `மனிதனார்` என்பது பாடம் அன்று, ``அப்போதே`` என்ற ஏகாரம் பிரித்துக் கூட்டப் பட்டது. வலம் - வலிமை.

    பதிலளிநீக்கு
  14. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்

    வீடுபேற்றை அடையச் செய்பவர் பாடல் - 95

    நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!
    விட்டாரை அல்லால் கொளல் வேண்டா - விட்டார்
    பொறிசுணங்கு மென்முலைப் பொன் அன்னாய்! உய்ப்பர்
    மறிதரவு இல்லாக் கதி.

    விளக்கவுரை நறுமணம் பொருந்திய மென்மையான கூந்தலை உடையவளே! நண்பரை அடைய விரும்பினால் பற்றுவிட்ட பெரியோரை அல்லாமல் பிறரைக் கொள்ள வேண்டா. பொலிவையும் சுணங்கையும் மென்மையையும் கொங்கையையும் உடைய இலக்குமியைப் போன்றவளே! அந்தப் பற்று அற்ற பொ¢யோர்கள் பிறவாமைக்குக் காரணமான வீடுபேற்றை அடையுமாறு செய்வர்.

    பதிலளிநீக்கு
  15. கீதை - 15.4 - தன்னைத் தான் அறிய

    ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
    तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥१५- ४॥

    தத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூய: |
    தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4||

    தத: = பிறகு

    பதம் = இடம்

    தத் = அது

    பரிமார்கிதவ்யம் = தேடி அடைய வேண்டும்

    யஸ்மிந் = எங்கு

    க³தா = சென்ற பின்

    ந = இல்லை

    நிவர்தந்தி = திரும்புவது

    பூய:= மீண்டும்

    தம் - அவனுக்கு

    ஏவ = நிச்சயமாக

    சா = மேலும்

    அத்யம் = ஆதி

    புருஷம் =புருஷன்

    ப்ரபத்யே = அடைக்கலம் அடைந்த பின்

    யத: = எப்போது

    ப்ரவ்ருத்தி: = செயல்

    ப்ரஸ்ருதா = விரிவடைகிறதோ

    புராணீ = பழமையான

    (அப்படி அந்த சம்சாரம் என்ற மரத்தை வெட்டிய பின்) ஒருவன் மீளா நிலையை அடைவான். எவனிடம் இருந்து ஆதித் தொழில் தொடங்கிற்ரோ அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

    https://bhagavatgita.blogspot.com/2016/04/154.html

    பதிலளிநீக்கு
  16. கீதை - 15.5 - நாசமற்ற பதம்


    निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
    द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

    நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
    த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||


    நிர்மாநமோஹா = அகந்தையும், மயக்கமும் இன்றி

    ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)

    அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

    விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

    த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

    ஸுக து:க = சுகம் துக்கம்

    ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

    க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

    அ மூடா: = மூடத் தன்மை அற்றவர்கள்

    பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

    அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

    தத் = அது

    அகந்தையும், மயக்கமும் இன்றி;
    பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
    ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
    ஆசைகளில் இருது நீங்கி ,
    சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
    மடமையற்றோர், அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்

    https://bhagavatgita.blogspot.com/2016/04/155.html

    பதிலளிநீக்கு
  17. 2:212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.

    பதிலளிநீக்கு
  18. பிற உயிர்களைக் கொல்வோர், வெகுளி உடையோர், அறநெறியைப் பின்பற்றாதார், கூடா ஒழுக்கம் கொண்டோர், மறுமையை நம்பாதோர் ஆகியோர் முருகன் அருள் பெற மாட்டார்கள் என்று ஒரு பாட்டுக் கூறுகின்றது. (பரிபாடல் 5 : 73-77)

    https://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04112l2.htm

    பதிலளிநீக்கு
  19. மூன்று காலமுந் தோன்ற நின்றனை
    இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
    மறுவிலா மறையோர்
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்  9

    https://shaivam.org/thirumurai/first-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruvelukutrrirukai-oruruvayinai/#gsc.tab=0

    பதிலளிநீக்கு
  20. சகரியா 14
    Tamil Bible: Easy-to-Read Version
    நியாயத்தீர்ப்பு நாள்
    14 பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும். 2 நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள். 3 பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும். 4 அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும். 5 அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் அரசனான உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள்.

    6-7 அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும். 8 அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும் 9 அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே அரசராக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே. 10 அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும். 11 ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.

    12 ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும். 13-15 அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்.

    பதிலளிநீக்கு

  21. அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள். 16 எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அரசனான சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள். 17 பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் அரசனை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார். 18 எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார். 19 அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.

    20 அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும். 21 உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும்.

    அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  22. 39:68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

    பதிலளிநீக்கு
  23. யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:134)

    பதிலளிநீக்கு
  24. அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கை யில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 9:55)

    ''விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட்செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 57:20)

    இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

    ''இவ்வுலகத்தை பயந்து கொள்ளுங்கள்!, பெண்களையும் பயந்து கொள்ளுங்கள்!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4925)

    இவ்வுலக வாழ்க்கை மனிதனை மயக்கத்தில் ஆழ்த்தும் அதன் மீது ஆசையைத் துண்டும், மனிதன் வளரும் போதே இந்த ஆசைள்யும் சேர்ந்தே வளர ஆரம்பிக்கும் அதற்காக மார்க்க சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு விட்டு உலக இன்பங்களுக்கு முதஇடம் கொடுத்துவிடக் கூடாது.

    ''மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை 2. நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 6421)

    நபித்தோழர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலக இன்பங்களைத்தான் மிக அதிகமாக எச்சரித்துச் சென்றுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு