இஸ்லாமியர்கள் சொல்லும் இன்ஜீலும் கிருஸ்துவர்கள் சொல்லும் பைபிளும் ஒன்றா? வேறு வேறா?

இரண்டும் வேறு வேறு. எப்படி?

இஸ்லாம் சொல்லக்கூடிய இஞ்சீல் என்பது கர்த்தர் தந்து தூதரான இயேசு அவர்களுக்கு தேவதூதர் கேப்ரியல் மூலம் வழங்கிய கட்டளைகள் ஆகும். எனவே அது இயேசுவுக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகள் எழுதிய நூலின் அமைப்பில் இருக்க வேண்டும் அதாவது அந்த கருத்துகளோடு முரண்பட கூடாது அல்லது இயேசு மக்களுக்கு உபதேசித்ததை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அது இயேசுவின் சீடர்களால் தொகுக்க பட்டு இருக்க வெண்டும். ஏன் என்றால் இயேசுவின் உபதேசங்களை தொகுக்கும் அறிவும் உரிமையும் அவர்களுக்குத்தான் இருக்க முடியும்.

இன்று மக்கள் கையில் வைத்து இருக்கும் புதிய ஏற்பாடு பைபில்கள் இயேசு அவர்களின் மறைவுக்கு பிறகு சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு சில அரசியல் முக்கியஸ்தர்களை கொண்டு உருவானது. மேலும் அதில் இயேசுவின் நான்கு நேரடி சீடர்களின் சுவிசேசங்கள் மட்டுமே உள்ளது மற்றவை இயேசுவை நேரடியாக கண்டிராத இயேசுவின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சொன்னவர்கள் எழுதிய கடித போக்குவரத்து ஆகும்.

எனவே புதிய ஏற்பாட்டை இரண்டாக பிரித்து அதில் நேரடி சீடர்களின் சுவிசேசங்கள் பழைய ஏற்ப்பாட்டுக்கு முரன்படமல் இருப்பதை காணலாம். ஆனால் இயேசுவின் காலத்துக்கு சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு வந்த அவரின் சீடர் அல்லாத புதியவர்கள் பைபிளில் சேர்த்த கருத்துகளுக்கு பழைய ஏற்பாடு முரண்படுவதையும் காணலாம்.


உதாரணமாக,
  • தேவன் ஒருவரே என்று பழைய ஏற்பாடும், இயேசுவும் கூறுகிற பொழுது தேவன் மூவர் என்று புதிய ஏற்படு கூறுவதை நீங்கள் காணலாம்.
  • அதேபோல விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்பது ஆப்ரஹாம் சந்ததிக்கும் கர்த்தருக்கும் உள்ள முறிக்க படாத ஒப்பந்தம் ஆகும். அதற்கு கட்டப்படுவது ஆபரஹமின் சந்ததி ஒவ்வொருவரின் மீதும் கடமை என்று பழைய ஏற்ப்பட்டிலும், கடவுளுக்கு கட்டுபடாதவர் விருத்தசேதனம் செய்ய தேவை இல்லை, கடவுளுக்கு கட்டுபடுவதுதான் பிரதானம் என்று பவுல் புதிய ஏற்ப்பாட்டில் குழப்பி இருப்பதையும் காணலாம். இதன் மூலம் விருத்த சேதனம் செய்வதே கடவுளின் கட்டளைக்கு கட்டுபடுவதுதான் என்கிற நேரடி புரிதலை குழப்பி மக்களை திசை திருப்புவதை இவர்கள் வெற்றிகறமாக செய்து முடித்து உள்ளனர்.
  • விக்கிரக ஆராதனை கூடாது என்று பழைய ஏற்ப்பாட்டில் கூறப்பட்டு உள்ளதை அறியும் நாம், புதிய ஏற்பாட்டை பின்பற்றுவதாக கூறும் கத்தோலிக்கர்கள் விக்கிரக ஆராதனையில் திளைத்து இருப்பது நாமறிந்ததே!

இவ்வாறு பழைய ஏற்பாடு, இயேசு-வின் வார்த்தை, மற்றும் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சீடர்கள் கூறிய கருத்துகளுக்கும், பின்னாளில் வந்த நபர்கள் புதிய ஏற்பாட்டில் கூறி உள்ள கருத்துகளுக்கும் முரண்பாடுகள் இருப்பது வெளிப்படை. அதாவது இயேசுவின் கருத்தோடு பவுல் உள்ளிட்ட புதியவர்கள் முரண்படுகிறார்கள். அதாவது கர்த்தரின் வேதங்களுக்கு இவர்களின் கருத்து முரண்படுகிறது. அதாவது இஸ்லாம் கூறும் இஞ்சீலுக்கு இன்று நாம் அறிந்த பைபிள்கள் முரண்படுகிறது.

பாவம் என்றால் என்ன?

பாவம் என்றால் என்ன என்று அறிய முயலும் பொழுது அதனுடன் சேர்த்து பாவ புண்ணியங்களை வரையறுககும் உரிமை யாருக்கு உண்டு என்பதையும் அறிய வேண்டும். சரி பிழை-களை வரையறுப்பது யார்? என்பதை அறியாத பட்சத்தில் இன்று influencers என்ற பெயரில் எவர் எவரோ தனக்கு தோன்றியதை வாத திறமையின் மூலம் நியாய படுத்துவதை பார்க்கிறோம். மேலும் அவர்களின் வலையில் பெரும்பாலானோர் விழுவதையும் பார்க்கிறோம். இவ்வாறு தீய வழியில் செல்வதை தடுக்கும் வண்ணமாக நாமிந்த அடிப்படை அறிவை வளர்ப்பது மிக மிக அத்தியாவசியம்.

தமிழர் சமயம்  

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்.

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே. - திருமந்திரம் 1047 
  
கருத்து: புண்ணியம்‌, பாவம்‌ என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின்‌ பயனாக நன்மையும்‌, பாவத்தின்‌ பலனாகத்‌ தீமை, துயரம்‌ ஆகியவையும்‌ வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள்‌ சிலரே. அவர்கள்‌ ஞானிகள்‌ எனப்படுவார்கள்‌. புண்ணியம்‌, பாவம்‌ எனும்‌ இவை இரண்டும்‌, ஜீவன்களைப்‌ பற்றிட வரும்‌ பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின்‌ ஆணி வேரையே அறுத்து, மனதைத்‌ தீய வழிகளில்‌ செல்லாதபடித்‌ தடுக்கும்‌ மன உறுதி பெற்றால்‌, பரம்பொருள்‌ இருக்குமிடம்‌ அறியலாம்‌. ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்‌!

விளக்கம்: புண்ணியம்‌, பாவம்‌ எனும்‌ இரண்டைச்‌ சொல்லி, அவற்றால்‌ விளையும்‌ விளைவுகளையும்‌ சொல்கிறது இப்பாடல்‌! புண்ணியத்தால்‌ நன்மையும்‌, பாவத்தால்‌ தீமையும்‌ விளையும்‌ என்னும்போது, பாவத்தை வெறுக்கலாம்‌, விலக்கலாம்‌. ஆனால்‌, நன்மை தரும்‌ புண்ணியத்தை ஏன்‌ விலக்க வேண்டும்‌ எனும்‌ சந்தேகம்‌ எழும்‌. இதற்கு முன்னோர்கள்‌ ஓர்‌ அற்புதமான உதாரணம்‌ சொல்வார்கள்‌. இரண்டு பறவைகள்‌. ஒன்று தங்கக்‌ கூண்டில்‌ அடைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்று தகரக்‌ கூண்டில்‌ அடைபட்டிருக்கிறது. இந்த இரண்டில்‌ எது உயர்ந்தது என்றால்‌, இரண்டுமே அல்ல!

இஸ்லாம்  

பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும். பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)

கிறிஸ்தவம்  

பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். (1 யோவான் 3:4)

சனாதன மதம்  

பாவம் என்பது தெய்வீக சட்டத்தை வேண்டுமென்றே மீறுவதாகும். உள்ளார்ந்த அல்லது "அசல்" பாவம் இல்லை. ஆன்மா என்றென்றும் இழக்கப்படும் மரண பாவமும் இல்லை. சாதனா, வழிபாடு மற்றும் துறவறம் மூலம் , பாவங்களை நிவர்த்தி செய்யலாம்.  (ஸ்லோகா 52)

நல்லறங்களாக நால்வேதங்கள் எதை எல்லாம் சொல்லுகிறதோ அதற்கு முரணாக நடப்பது தான் பாவம் ஆகும். மேலும் மனிதனின் உள்ளுணர்வும் பாவத்தை அறிந்தே வைத்து உள்ளது.

பாவம் செய்வதன் மூலம் தற்காலிகமாக சில இன்பங்கள் பெறலாம் ஆனால் அதே சமயத்தில் அதை செய்வதை மனம் முழுமையாக ஏற்காது.

பாவத்தை செய்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், தமிழர் சமயம் என எல்லா சமயங்களும் ஒரே குரலில் கூறுவது என்னவென்றால் அது இறைவனின் நெருக்கத்தை அகற்றும், நரகத்துக்கு கொண்டு செல்லும், துன்பத்துக்கு வழிவகுக்கும், இளிவடைய செய்யும்.

மாறாக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல பௌதீக வாழ்விலும் பல நன்மைகள் உண்டு.

உதாரணமாக, மனதில் எழும் தற்காலிக இன்பங்களை கட்டுப்படுத்தும் ஒரு நபருக்கு அறிவுக்கூர்மை அதிகமாகிறதாக நவீன அறிவியல் கூறுகிறது.

இஸ்லாமிய உலகின் மிக முக்கிய அறிஞர் ஒருவரான இப்னு தைமியா, தனக்கு அறிவு குறைபாடு அல்லது நியபக மறதி ஏற்படும் சமயத்தில் உடனடியாக பாவமன்னிப்பு கேட்பதில் ஈடுபடுவார் என்பது வரலாறு.

பெரும்பாலும் இந்துக்களின் கோவில்களில் ஏன் "காளை மாடு" சிலை வைக்கபட்டுள்ளது? "காளை மாடுகளை வழிபாடு" எப்படி வந்தது?

 இந்து கோவில் என்று நீங்கள் குறிப்பிடுவது சிவன் கோவிலை என்று நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்து வேறெந்த கோவிலிலும் கர்பகிரகத்திற்கு எதிராக மாட்டின் சிலை வைக்க பட வில்லை. இருந்தால் உங்கள் தகவல்கள் வரவேற்க்கப் படுகிறது, அறிய ஆவலாக உள்ளோம்.

இந்த கேள்விக்கு நேரடியாக பதில் தரும் முன், சில அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அந்த காளை மாட்டை நந்தி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே நந்தி என்றால் யார்? மக்கள் மத்தியில் நந்தி என்ற பெயருக்கு பொருளாக என்னவெல்லாம் சொல்லப்பட்டு உள்ளது? என்பதை ஆய்வு செய்ய சில இணைய தரவுகளை காண்போம்.

ஆன்மீகம் : இதில் நந்தியை ஒரு மனிதர் போல சித்தரித்து வயது வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவர் அமரர் அதாவது தேவர் இனத்தை சேர்ந்தவர் என்று வேறு சில தகவல்கள் கூறுகிறது.

ஆன்மீகம்.இன்: நந்தியின் நிறம் வெண்மை என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அவர் சிவ பெருமானின் வாகனமாக கூறப்படுகிறது அதற்கும் வேதங்களில் ஆதாரமில்லை. "நம்மை வணங்குவோரை" என்று பன்மையில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. "ஒருவனே தேவன்" என்று உறுதியாக கூறுவதில் சைவ ஆகமங்கள் பிரதானமாக உள்ளது.

மாலை மலர்: நந்தி அவர்கள் எந்த தடையையும் விளக்க வல்லவர் அல்ல. அவர் திருமூலர் போன்ற முனைவர்களுக்கு ஆசானாக இருக்கும் பணியை செய்பவர். எனவே இவரிடம் நாம் பிராத்தனை செய்யவோ அல்லது அவரை வணங்குவதோ எந்த பலனையும் தராது.

விகடன்: நந்தி என்ற சொல்லுக்கு திருமந்திரம் கூறும் பொருள் வேறு. சிவனை வழிபடும் முறையை சிவனின் அறத்தை ஆகாமத்தை சித்தர்களுக்கு உபதேசிக்கும் வேலையை செய்யும் தேவர் அவர். அவர் தனிமனித வளர்ச்சிக்கு எதையும் செய்ய கூடியவராக திருமந்திரம் கூறவில்லை. நந்திகள் நால்வர் என்று திருமந்திரம் தெளிவாக கூறுகையில் ஐந்தாவது நந்தி எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

விக்கி: விக்கியில் சொல்லப்படும் சில செய்திகள் திருமந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் காளையாக சித்தரிக்க படுவதாக கூறப்படும் செய்தி திருமந்திரத்தில் இல்லை.

ஆன்மீக மலர்: முற்றிலும் தவறான விளக்கங்கள்.

இவைகள் மட்டுமல்லாமல் பல வகையில் சுவாரஸ்யமாக பல கதைகள் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. எதார்த்தம் என்னவென்றால் உண்மை ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எனவே அவரை பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றது என்று முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

திருமந்திர ஆகம வேதத்தின் படி நந்தி என்பவர் கீழ்கண்ட பண்புகளை உடையவர்.

  • நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
  • நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
  • நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
  • மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன். எனவே நந்தியும் சிவனும் வேறு வேறு.
  • நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியனாக நந்தி இருந்தார்.
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

திருமந்திரம் கூறும் நந்தியின் வரையறைக்கு முரணான கருத்துக்களையே மேலே குறிப்பிட்ட அனைத்து இணையங்களும் பேசுகின்றன. அநேகமாக அவர்கள் கூறும் கருத்துக்கள் சிவபுராணம் அல்லது நந்தி புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகளாக இருக்கலாம். ஆனால் இந்த புராணங்கள் அடிப்படையிலேயே ஆகமங்களுக்கு முரன்படக் கூடியவைகள் ஆகும்.

தமிழில் தொல்காப்பியம் முதல் திருவாசகம் வரை வந்த நூல்கள் அனைத்தும் வெவ்வேறு முனைவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட ஆகமங்கள் ஆகும். ஆனால் 18 புராணங்கள் அனைத்தும் ஒரே முனிவரால் எழுதப்பட்டது என்கிற செய்தி அதன் நம்பக தன்மையை கேள்விக்குறியாக ஆக்குகிறது. மேலும் அந்த புராணங்கள் இது போன்ற அடிப்படைகளில் ஆகம வேதங்களுக்கு நேரடியாக முரண்படுகிறது என்கிற செய்தியும் அதை வலுப்படுத்துகிறது. எனவே நந்தி என்பவர் மாடு என்கிற கருத்தை கூறும் புராணங்கள் வாயிலாக நந்தியை கோவிலில் வைக்க எண்ணிய அவர்கள் கோவிலில் கர்பகிரகத்துக்கு எதிராக காளை மாட்டின் சிலை வைத்து இருக்கலாம்.

அது சரி நந்தியின் சிலையை அவர்கள் குறுக்கே வைக்க எண்ணியதன் காரணம் என்ன? நந்தி என்பவர் தான் சிவனுக்கும் திருமூலருக்கும் இடையே இருந்து செய்தி பரிமாறிய வேலையை செய்தவர் ஏனென்றால் மனிதன் நேரடியாக உபதேசங்களை கடவுளிடம் இருந்து பெற முடியாது. அதாவது இறைவனை இவர் மூலம் தான் அறியவும் அடையவும் முடியும் என்று கருதியதால் மனிதர்களுக்கும் சிவனுக்கும் இடையே இந்த நந்தி வைக்கப்பட்டு உள்ளார். இந்த கருத்துக்கள் மீது சந்தேகம் உடையோர் திருமந்திரம் வாசிப்பதொடு பொழிப்புறையை ஆய்வு செய்யத் தொடங்கட்டும். நன்றி.

திருமூலர் போன்ற முனிவர்கள் மட்டுமே நந்தியிடம் இதுபோன்ற உபதேசங்களை பெற முடியும் என்பதும், தமிழர் வேதங்கள் சிலை வழிபாடுகளை அல்லது பல தெய்வ வழிபாடுகளை ஆதரிக்கவில்லை என்பதும் வேறு தலைப்புகள்.

மனைவியை அடிக்கலாமா?

மனைவியை அடிக்கலாமா என்றால் கூடாது என்பதுதான் அறம். சரி எல்லை மீறி தவறு செய்யும் மனைவியை அடிக்கவே கூடாதா?

இஸ்லாம்

அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)

அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (மென்மையாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:34)

உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக படுக்க நேரலாம். (இது முறையா.…) (நூல் : புகாரி-4942)

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி) உமது விளைநிலமாகும். உமது விளைநிலங்களுக்கு நீ விரும்பியவாறு சென்று கொள். (அவளைக் கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

இதற்கு மேலும் கட்டுப்படாத மனைவியை விவாகரத்து செய்யலாம். விவாகரத்து மூன்றுமுறை போதுமான கால இடைவெளியில் செய்யப்படவேண்டும்.

இது போல எல்லை மீரும் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு. எனவே அவரவர் பொறுப்புகளுக்கு தகுந்த உரிமையை பெற்று இருப்பது இயல்பு. அந்த உரிமையின் அளவை மீருவதுதான் ஆதிக்கம் ஆகும். அரசு போடும் சட்டங்களுக்கு நாம் ஏன் கட்டுப்பட வெண்டும்? ஏனென்றால் அரசு நம்மை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது. தாய் தந்தையருக்கு ஏன் கட்டுப்படவெண்டும்? தாய் தந்தையரும் நம்மை பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பில் உள்ளவர்கள். இவர்களுக்கு நாம் கட்டப்படவில்லை என்றால் கண்டிக்கும் உரிமையும், தேவைபட்டால் தண்டிக்கும் உரிமையும் உண்டா? இல்லையா? கணவனும் அப்படித்தானே?

கிறிஸ்தவம்

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்” (எபேசியர் 5:22-24).

பாவம் உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே, கணவனின் தலைமைத்துவத்தின் நியமம் இருந்தது (1 தீமோத்தேயு 2:13).

தமிழர் சமயம்


கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு. [திரிகடுகம் 03]
கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யால்வரும் கேடு. [03] 

விளக்கம்: கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

ஒழுக்கம் மீறும் மனைவியை அடிப்பதை மறைமுகமாக ஆதரிக்கிறது இந்த பாடல்.


நாம் ஏன் அடுத்தவர்களை குறை கூறுகிறோம்? காரணமென்ன?

நாம் நம்மை குறையற்றவர்களாக கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று பலநேரங்களில் நாமே உணர்கிறோம். மனிதர்கள் எல்லோரும் பாவம் (அ) தவறு செய்பவர்கள் தான் என்று உணர வேண்டும்.

யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். - யோவான் 8:7

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்,பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6274
 
அதை உணர்ந்தால் மற்றவரை குறைகூறுவது குறைந்துவிடும்.

நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. (அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மேலும் குறை கூறினால் நமக்கு என்ன நடக்கும்?

"குறை கூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்'' (குர்ஆன் 104:1)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும் - (குறள் 186
 
விளக்கம்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்