தேவர்கள் மூலம் தூதர்களுக்கு வருவது தான் வேதம்
தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால், மாபெரும் மீட்பின் செய்தியை அலட்சியம் செய்துவிட்டு நம்மால் எப்படித் தப்பிக்க முடியும்? (எபிரெயர் 2:2&3)
இயேசு அதைதான் போதிப்பார் அதன்படி மட்டும்தான் தான் செயல்படுவார்.
ஏனென்றால், என்னுடைய விருப்பத்தின்படி செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்வதற்காகத்தான் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன். (யோவான் 6:38)
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:7)
வேதம் மனமகிழ்ச்சி தரும் (சங்கீதம் 119:92)
இறைவனின் வார்த்தை தேவதூதர்கள் வாயிலாக மெசாயாவுக்கு கொடுக்கப்பட்டு அது மக்களுக்கு போதிக்கப் படுபவைகளுக்கு பெயர் தான் வேதம். அப்படிப்பட்ட வேதம் தான் மக்களுக்கு மன மகிழ்ச்சியைத்தரும். ஆனால் ஏசுவின் வார்த்தை அல்லாத பல அத்தியாயங்கள் பைபிளில் எழுதபட்டுள்ளதா? இருந்தால் அவைகள் தேவ வாக்கியங்களாகுமா? வேத வாக்கியங்களாகுமா?
வேதவாக்கியங்களில் கூட்டவோ குறைக்கவோ மக்களுக்கு அதிகாரம் உண்டா?
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். (வெளிப்படுத்துதல் 22:18)
இந்தத் தீர்க்கதரிசனச் சுருளிலிருந்து யாராவது வார்த்தைகளை எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் விவரிக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்திலும் பரிசுத்த நகரத்திலும் உள்ள எந்தப் பங்கையும் கடவுள் அந்த நபரிடமிருந்து எடுத்துக்கொள்வார். (வெளிப்படுத்துதல் 22:19)
இந்த செய்த்தைகளை நமக்கு தருபவர் யோவான் (ஜான்) ஆவார்.
வெளிப்படுத்துதலின் ஆசிரியர் அப்போஸ்தலன் யோவான் அல்லது அவர் தன்னை இயேசு நேசித்த சீடர் என்று அழைத்தார். ஜான் புதிய ஏற்பாட்டில் ஐந்து புத்தகங்களை எழுதியவர்:
- யோவான் நற்செய்தி (இங்குதான் அவர் தன்னை இயேசு நேசித்த சீடராக அடையாளம் காட்டுகிறார்)- 1 ஜான்- 2 ஜான்- 3 ஜான்- வெளிப்படுத்துதல்
ஜான் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர், அவர் பீட்டர் மற்றும் ஜேம்ஸுடன் "உள் வட்டத்தின்" ஒரு பகுதியாகவும் இருந்தார். மற்ற சீடர்கள் அனுபவிக்காத சில விஷயங்களை இயேசுவுடன் அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. இவற்றில் மிகப் பெரிய ஒன்று அவர்கள் இயேசுவுடன் மலையில் இருந்தபோது அவருடைய உருமாற்றத்தைக் கண்டபோது நடந்தது. மத்தேயு 17, மாற்கு 9 மற்றும் லூக்கா 9ல் இதைப் பற்றி நீங்கள் படிக்கலாம். எனவே ஜான்-இன் செய்திகள் நம்பத்தகுந்த ஆதாரமிக்க செய்தியாகும்.யோவானால் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட நற்செய்தி சிலவற்றை மறுப்பதற்க்காக அவரின் நம்பக தன்மையில் கேள்வி எழுப்பிக்கின்றனர். அதற்க்கான ஆதாரமாக அவரது வயதையும் இந்த சுவிசேஷம் எழுதப்பட்டகாலமாக சொல்லப் படுவதையும் ஒப்பிட்டு மறுக்கின்றனர். அவர் இயேசுவின் சீடர் தான் என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. மாறாக அவர்கள் மறுப்பே அது "பரிசுத்த வேதாகமம்" என்கிற தகுதியை கேள்விக்குறியாக்குகிறது. அவர்களின் வேதத்தில் அவர்களுக்கே நம்பிக்கை அற்று போன பிறகு நாம் அதை ஏற்பது பொருளற்றது.
இப்படி இருக்க இன்று நம்மிடம் இருக்கும் பைபிளின் கி.பி 400 வாக்கில் இறுதி செய்யப்பட்டது என்று https://christianity.org.uk கூறுகிறது
- 04 நியமன சுவிசேஷங்கள் - 4 canonical gospels by Matthew, Mark, Luke, & John
- 01 அப்போஸ்தலர்களின் செயல்கள் - The Acts of the Apostles by Luke - and he is the student of Paul.
- 14 பவுலின் நிருபங்கள் - 14 Pauline epistles
- 07 பொது நிருபங்கள் மற்றும் - 7 general epistles by James, Peter, John, & Jude
- 01 வெளிப்படுத்தல் புத்தகம் - The Book of Revelation by John
27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல், 4ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப், கி.பி. 367ல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் ஹிப்போ (393) மற்றும் கார்தேஜ் (397) சபைகளின் போது முதன்முதலில் இறுதி செய்யப்பட்டது. இதில் முதல் நான்கு நியமன சுவிசேஷங்கள் மத்தேயு, மார்க், லூக்கா மற்றும் ஜான். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையின் அதே அடிப்படைக் கோட்பாட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.விடியற்காலையில், அவர் தம்முடைய சீஷர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார், அவர்களில் அவர் அப்போஸ்தலர்களாகவும் நியமிக்கப்பட்டார்:
1) சைமன் (அவருக்கு அவர் பேதுரு (Peter) என்று பெயரிட்டார்),2) அவருடைய சகோதரர் ஆண்ட்ரூ,3) ஜேம்ஸ்,4) ஜான்,5) பிலிப்,6) பர்த்தலோமிவ்,7) மத்தேயு,8) தாமஸ்,9) அல்பேயுவின் மகன் ஜேம்ஸ்,10) வைராக்கியம் என்று அழைக்கப்பட்ட சைமன்,11) ஜேம்ஸின் மகன் யூதாஸ் மற்றும்12) துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோட். — லூக்கா 6:12–16
எனவே யூதாஸ் தவிர்த்துஇந்த 11 சீடர்கள் வாயிலாக, அல்லதுஇயேசுவுடன் சில நாட்களாவது பயணித்த, அல்லதுகுறைந்த பட்சம் இயேசுவை நேரடியாக கண்ட, அல்லதுஆகக் குறைந்த பட்சமாக இயேசு காலத்தில் வாழ்ந்த மக்கள் மூலம்இயேசு சொன்ன அல்லது செய்த செய்திகள் பைபிளில் இடம் பெறலாம்.
அந்த அடிப்படையில் மார்க்-இன் சுவிசேஷங்களை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவருடைய தாயார் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்களில் முக்கியமானவர். அப்போஸ்தலர் 12:12 எருசலேமில் உள்ள அவளது வீடு மற்ற சீஷர்களுக்கு கூடும் இடமாக பயன் படுத்தப்பட்டது என்று நமக்கு சொல்கிறது. இந்த வசனத்திலிருந்து அவளது மகனின் முழுப்பெயர் ஜான் மார்க் என்பதையும் அறிகிறோம். - churchofjesuschrist.org
ஆனால் இயேசு அவர்களுடன் நேரடி தொடர்பை கொண்ட நபர்களில் பேதுரு, ஜான், மத்தேயு, ஜேம்ஸ், ஜூடா மற்றும் மார்க் ஆகியோரின் நற்செய்திகள் மட்டுமே பைபிளில் ஹிப்போ (கி.பி 393) மற்றும் கார்தேஜ் (கி.பி 397) சபைகளினால் சேர்க்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளிப்படுத்துதல் 22:19 வசனத்துக்கு எதிரானது. ஏனென்றால் உண்மை பைபிளின் ஒரு பகுதி நீக்கப்பட்டு உள்ளது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.
மேலும், இயேசுவின் சீடர்கள் அல்லாத பால் மற்றும் லூக்கா ஆகியோரால் எழுதப்பட்ட கடிதங்கள் அலல்து சுவிஷேஷங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது வெளிப்படுத்துதல் 22:18 வசனத்துக்கு எதிரானது. ஏனென்றால் தேவனின் வார்த்தைகள் அல்லாத ஒரு பகுதி பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது.
எதை சேர்த்தார்கள் என்று கூட ஓரளவு கண்டு பிடிக்கலாம், எதை எல்லாம் நீக்கினார்கள் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?
அப்போஸ்தலர்களின் செயல்கள் என்பது கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தலர்களின் ஊழியம் மற்றும் செயல்பாட்டின் விவரிப்பாகும், அந்த இடத்திலிருந்து அது மீண்டும் தொடங்கி லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக செயல்படுகிறது. நடை, சொற்றொடர்கள் மற்றும் பிற சான்றுகளை ஆராயும் போது, நவீன புலமைத்துவம் பொதுவாக, அப்போஸ்தலர் மற்றும் லூக்காவின் சுவிசேஷம் ஒரே ஆசிரியரைப் பகிர்ந்து கொள்கிறது, லூக்கா-அப்ஸ் என குறிப்பிடப்படுகிறது. லூக்-ஆக்ட்ஸ் அதன் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தேவாலய பாரம்பரியம் அவரை லூக் தி சுவிசேஷகர் என 200 ஆண்டுகளுக்கு பின் வந்த பவுலின் துணையுடன் அடையாளப்படுத்தியது, ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் சட்டங்கள் மற்றும் உண்மையான பவுலின் கடிதங்களுக்கு இடையே உள்ள பல வேறுபாடுகள் காரணமாக இதை நிராகரிக்கின்றனர். 80-100 கி.பி. மிகவும் சாத்தியமான தேதியாக இருக்கலாம், இருப்பினும் சில அறிஞர்கள் அதை கணிசமாக பிற்காலத்தில் தேதியிட்டனர், மேலும் இது 2-ஆம் நூற்றாண்டிலும் கணிசமான அளவில் திருத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
ரெட் பைபிள் (சிகப்பு விவிலியம்) என்பது கிறிஸ்துவின் உண்மையான வார்த்தைகள், மேற்கோள்கள், மற்றும் குறிப்புகள், அவற்றின் சூழலில் இருந்து பிரிக்கப்படாமல், அல்லது துண்டு துண்டான அல்லது துண்டிக்கப்பட்ட வடிவத்தில், ஆனால் அவற்றின் சொந்த இடத்தில், பதிவின் ஒருங்கிணைந்த பகுதியாக,சிவப்பு வண்ண வேறுபாட்டில் தெளிவாகத் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் அல்லாதவைகள் கறுப்பிலே பிரசுரிக்கப் பட்டு இருக்கும்.
முடிவுரை
எனவே கூடுதலாக சேர்க்கவும் நீக்கவும் யாருக்கும் அனுமதி இல்லாத பைபிளில் 200 ஆண்டுகளுக்குப் பின் இயேசு சொல்லாத வார்த்தைகளை சேர்த்ததற்கான ஆதாரமும் இயேசுவின் சீடர்களின் நற்செய்திகளை நீக்கியதற்கான ஆதாரமும், அவ்வாறு சேர்த்து நீக்கியவைகள் இயேசுவின் போதனைக்கு எதிராக இருப்பதற்கான ஆதாரங்களும் பைபிள் முழுதும் வரலாறு நெடுக்கும் கொட்டிக் கிடைப்பதை காணலாம்.
மொழிபெயர்ப்புகளும் பைபிளின் அடிப்படை சாரத்தை சிதைப்பதை யாராலும் மறுக்க முடியாது. விரிவாக இங்கே காண்க. இயேசுவின் உண்மையான சீடர்களின் வேறு நற்செய்திகளை இங்கே காண்க.
God vs lord
பதிலளிநீக்குRegarding their etymology, God comes from the Hebrew Elohim and the Greek Theos. Lord is a word that comes from Greek Kurios or Hebrew Adonai. Lord is also related to Old English word ‘hlaford’ that means ruler or master.
Read more: Difference Between God and lord | Difference Between http://www.differencebetween.net/language/difference-between-god-and-lord/#ixzz7crk1rC6z
Lord means, owner, or master. God means, strong one, or mighty one. Without a name to go with it both could apply to many deferent Lords or gods.
பதிலளிநீக்கு1 Corinthians 8:5–6 NW — For even though there are so-called gods, whether in heaven or on earth, just as there are many “gods” and many “lords,” 6 there is actually to us one God, the Father, from whom all things are and we for him; and there is one Lord, Jesus Christ, through whom all things are and we through him.
கிறிஸ்த்தவராக மாற இந்த கீழ்கண்ட நம்பிக்கையை ஏற்க வேண்டுமாம்.
பதிலளிநீக்குஇது ஏசுவுக்கு முன்னிருந்த எவரும் சொல்லாத விடயம். மோஸேவேன் சட்டத்தை பூர்த்தி செய்ய வந்தே இயேசுவின் பெயரால் அநீதி.
ரோமர் 10 : 9,10,11,12,13
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
12. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
https://ta.quora.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
பதிலளிநீக்கு1 யோவான் 1:3
யோவான் இவ்வாறு சொல்லி இருந்தாலும், இவரின் கருத்துக்கள் பல இயேசுவின் கருத்துக்கு முரண்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
சினாப்டிக்ஸ் இல் இயேசுவின் போதனைகள் யோவானின் போதனைகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, ஜோஹனைன் சொற்பொழிவுகள் சினோப்டிக் உவமைகளைக் காட்டிலும் சரித்திரம் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவை இறையியல் நோக்கங்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அறிஞர்கள் ஏறக்குறைய ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். https://en.wikipedia.org/wiki/Gospel_of_John
மத்தேயு 5:19
பதிலளிநீக்குஆகையால், இந்தக் கட்டளைகளில் மிகச்சிறிய ஒன்றைத் தளர்த்தி, அதையே மற்றவர்களுக்குக் கற்பிப்பவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்று அழைக்கப்படுவான், ஆனால் அவற்றைச் செய்து அவற்றைப் போதிப்பவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்று அழைக்கப்படுவான்