இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா?

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124) 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல செயல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (குர்ஆன் 47:2)

 இஸ்லாத்தை ஏற்கும் முறைமை என்ன?

"அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" (புகாரி 3861)

கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். 

கிறிஸ்தவம்

 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். (அப்போஸ்தலர் 10:43)

இயேசுவின் முக்கிய போதனை என்ன? 

வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை (மாற்கு 12:28-29)

மரணத்தை எதிர்நோக்கிய வாழ்வு

தமிழர் சமயம் 

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல். (இனியவை நாற்பது 28)

ஆற்றானை - செய்யமாட்டாதவனை
கூற்றம் - எமன்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

இஸ்லாம் 

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்; உங்களுடைய சிற்றின்பங்களை, உங்களது அற்ப ஆசைகளை விட்டு உங்களை துண்டிக்க வைக்கக்கூடிய மரணத்தை நினைவு கூறுங்கள். வாழ்க்கையில் நெருக்கடியாக இருக்கும் போது மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வாழ்க்கை மரணத்தின் நினைவை விசாலமாக்கி விடும். ஒருவன் வசதியாக இருக்கும் போது, விசாலமான வாழ்க்கையில் இருக்கும் போது, மரணத்தை நினைத்தால் அந்த மரணம் அவனது அந்த வாழ்க்கையை நெருக்கடி ஆக்கிவிடும். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, (நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ 1211)


கிறிஸ்தவம் & யூதம் 

ஏனெனில் இந்த உலகம் நம் வீடு அல்ல; இன்னும் வரவிருக்கும் பரலோகத்தில் உள்ள எங்கள் நகரத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். (1 பேதுரு 2:11).


தஞ்சம்

தமிழர் சமயம் 

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே,
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே,
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். (இனியவை நாற்பது 26)

தன்னை, தஞ்சமாக வந்தடைந்தவர் தம் விருப்பத்தை நிறைவேற்றும் மாட்சிமை இனியது. நாணம் இல்லாத வழிச் செல்லாத ஊக்கம் இனியது. உதவ இயன்றவற்றை மறைக்காத தன்மை இனியது. 
 
இஸ்லாம் 

(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 09:6)

கிறிஸ்தவம் & யூதம் 

ஓர் அடிமை உன்னிடம் அடைக்கலம் புகுந்திருந்தால், அவர்களை எஜமானிடம் ஒப்படைக்காதே. அவர்கள் விரும்பும் இடத்திலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஊரிலும் அவர்கள் உங்களிடையே வாழட்டும். அவர்களை ஒடுக்க வேண்டாம் (உபாகமம் 23:15-16)

புறமுதுகிட்டு ஓடுதல்

தமிழர் சமயம் 

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். - (இன்னா நாற்பது 4)

புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (உலக நீதி 36)

பொருள்: கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே 
 
இஸ்லாம்  

''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' (அல்குர்ஆன் 5:21)

கிறிஸ்தவம் & யூதம் 

ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். (சங்கீதம் 78:9-11)

 10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன். 13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம். (யோசுவா 7:12)

நம்பிக்கையற்றவர்களை கொல்லலாமா? *

கிறிஸ்தவம் & யூதம்  

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

இஸ்லாம் 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190) 

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)  

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 2:192) 

 'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறான்;மக்காவிற்கு நீங்கள் செல்லுங்கள் மக்காவை வெற்றி கொள்ளுங்கள் அங்கிருந்து முஷ்ரிக்களை வெளியேற்றுங்கள் என்று. (அல்குர்ஆன் 9 : 28)

எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:40)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

 '(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 09:6)

முடிவுரை 

இறைவனை அவன் தந்த கட்டளையை இவர்கள் மறுக்க செய்வார்கள் என்கிற  அடிப்படையில் ஒரு நாட்டின் படைக்கு, அதன் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சட்டம் ஆகும். இது தனி மனிதன் இன்னொரு தனிமனிதனை கொலை செய்வதை ஆதரிக்கும் சட்டமல்ல.