சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா என்று ஆய்வு செய்ய முதலில் சந்தானம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.
சனாதன தர்மத்துக்கு ஆரிய மதம் என்று இன்னொரு பெயரும் உண்டு. அது பிற்கலத்தில் இந்து மதம் என்று அழைக்கப்பட்டது.
சரி இந்த ஆரியர்கள் யார்? இன்றைய தீவிர இந்து தேசியவாதம் பேசும் மக்களின் முன்னோடிகளான கோல்வால்கர் மற்றும் விவேகானந்தர் ஆகியோர் வட புலத்திலிருந்தும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்ததாக முறையே ஒப்பு கொள்கின்றனர். ஆனால் அக்காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதி என்கின்றனர்.
ஆனால் இவர்களின் கருத்துக்கு வரலாற்று இந்தியாவின் எல்லை முரண்படுகிறது. உதாரணமாக,
- இமயம் முதல் கடல்கொண்ட குமரிவரை தமிழ் ஆண்டதற்கான பல்வேறு தரவுகள் கிடைக்க பெருகின்றன, மேலும் ஒரு நிலத்தில் இரு வேத பாரம்பரியங்கள் தொடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே ஆரியர்கள் இந்த நிலப்பரப்பை சார்ந்தவர்கள் அல்ல.
- தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம், இரண்டும் தொன்மை வாய்ந்த மொழிகள், ஆனால் தமிழுக்கு தான் சொந்தமாக எழுத்துருக்கள் உள்ளன, வரலாற்று நோக்கில் சமசுகிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமசுகிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன. சமஸ்கிருதத்தின் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெத்தன் மொழியை ஒத்தது. எனவே ஆரியர்கள் இந்தியர்கள் அல்ல.
- புவியியல் அமைப்பும் ஆரியர்கள் ஒரு கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைந்து உள்ளது. எனவே ஆரியர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.
- கோல்வால்கர் சொல்வது போல வடதுருவம் முழுவதும் இந்தியாவுடன் எக்காலத்திலும் இணைந்து இருந்ததில்லை என்கிறது வரலாறு. மேலும் விவேகானந்தர் சொல்வது போல ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் எல்லைக்குள் தொடந்து இருந்ததற்கு ஆதாரமோ அல்லது இன்றைய தென் இந்திய கலாச்சார பண்பாடுகளுடன் ஒன்றி இருந்ததற்கான ஆதாரமோ இல்லை. மேலும் ஆரிய நூல்களில் சொல்லப்பட்ட நில, கால சூழ்நிலைகள் இந்தியாவிற்கு பொருந்தாத உதாரணங்கள். சைவ சமண நூல்களில் சொல்லப்பட்ட பூ காய் கனி விலங்கு நில அமைப்பு போன்றவைகள் தான் இந்த மண்ணுக்கு பொருந்தும் உதாரணங்கள். எனவே ஆரியர்கள் நம்மவர்கள் அல்ல.
- இன்று இந்தியா எனும் நிலப்பரப்பை ஏறக்குறைய முழுமையாக முதன் முதலில் மௌரியர்கள் கிமு 322-லும், பிறகு மொகலாயர்கள் கிபி 17ஆம் நூற்றாண்டிலும், பிறகு ஆங்கிலேயர்களும் உருவாக்கினார். அதற்கு முன் இப்படி ஒரு ஒன்றிணைந்த கட்டமைப்பே இல்லை. எனவே ஆரியர்கள் அதற்க்கு முன் இந்த மண்ணுக்கு தொடர்புடையவர்களாக இருந்து இருக்க வாய்ப்பில்லை.
இதன் விளைவாக நாம் அறிவது என்னவென்றால் ஆரியர்கள் அவர்கள் பேசும் சம்ஸ்கிருத மொழியில் இயற்றிய வேதத்தை அடிப்படையாக கொண்ட சனாதன மதம் தமிழர்களின் அல்லது இந்தியர்களின் சமயம் அல்ல.
இதன் காரணமாக சனாதனம் தொடர்பான செய்திகள் தமிழர் சமயத்தில் இருக்க வாய்ப்பு இல்லையா என்றால், சமய பாரம்பரியங்கள்தான் வேறே தவிர நான்மறைகளும் அதாவது அனைத்து சமயங்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்கிற அடிப்படையில் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால்,
- இரண்டும் வெவ்வேறு வேத பாரம்பரியம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
- வேதங்கள் தான் முதன்மையானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
- வேதத்துக்கு முரண்படும் புராண இதிகாசங்கள், வேதத்தை திரித்து இயற்ற பட்ட சட்டங்கள் புறந்தள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
- வேதம் அந்த பாரம்பரியத்தை சார்ந்த எல்லோருக்குமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
- எல்லா வேதங்களும் ஒரே மாதிரியான அறத்தைதான் போதிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எல்லாம் ஒன்று என்றால் சனாதனத்தை பின்பற்றலாமா என்றால்? "கூடாது" என்பதுதான் பதில். ஏன்? இறைவனை அறிய விரும்புவோர், இறைவனின் சட்டத்தை பின்பற்ற விரும்புவோர் தத்தம் மொழியில் உள்ள வேதத்தை கற்று செயல்படவேண்டும். மாற்று மொழி சட்டத்தை அல்லது வேதத்தை பின்பற்ற தத்தம் மொழியில் உள்ள வேதத்தில் வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருந்தால் பிழையில்லை. இல்லையேல் 100% மாபெரும் பாவம் ஆகும். அது தனது மொழியில் உள்ள வேதத்தை நிராகரிப்பது ஆகும். அது உலகை படைத்து மக்களுக்கு வெவ்வேறு மொழியில் வெவ்வேறு காலத்தில் வேதத்தை வழங்கிய இறைவனை நிராகரிப்பது ஆகும்.
சைவ நூல்களில் சனாதனம் பற்றிய செய்திகளின் ஆதாரங்கள் என்ன என்று கேட்டால்? ரிக் யஜுர் சாம வேதங்களை அதன் உபநிடதங்களை சமஸ்கிருதத்தில் முறையே கற்றவர் சைவ ஆகம நூல்களான தேவாரம் திருவாசகம் திருமந்திரம் ஆகியவற்றையும் முறையே கற்று இருந்தால் அவர் ஒப்பிட்டு சொன்னால் மிகமிக ஏற்புடையதாகி இருக்கும். மற்றவர்களும் செய்யலாம், ஆனால் அதை ஏற்போர் மிக மிக குறைவு. அவ்வாறு ஒரு நூல் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.