முடிவும் பிறப்பும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது

தமிழர் சமயம் 

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவங்
கடிமலர்க் குன்ற மலையது தானே. - திருமந்திரம் 19

(ப. இ.) ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி - அறிவின் அடையாளம்.

இஸ்லாம் 

அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி)  நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5160

1 கருத்து:

  1. மாற்கு 13:32-37 ESV / 52 பயனுள்ள வாக்குகள்
    "ஆனால் அந்த நாளையோ அந்த நாழிகையையோ பற்றி, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கோ, குமாரனுக்கோ கூடத் தெரியாது, பிதா ஒருவர் மட்டுமே. எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருங்கள். எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தன் வேலைக்காரர்களை ஒவ்வொருவருக்கும் தன் வேலைகளைச் செய்யும்படி கட்டளையிட்டு, வாசற்படிக்காரனை விழித்திருக்கக் கட்டளையிடுவது போலிருக்கிறது. ஆகையால் விழித்திருங்கள்; வீட்டு எஜமான் எப்போது வருவான், மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, அவர் திடீரென்று வந்து உங்களைத் தூங்கிக் காணாதபடிக்கு, ... விழித்திருங்கள்.

    பதிலளிநீக்கு