முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறநெறி நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவங்கடிமலர்க் குன்ற மலையது தானே. - திருமந்திரம் 19(ப. இ.) ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி - அறிவின் அடையாளம்.
இஸ்லாம்
அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5160.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக