தமிழர் சமயம்
தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னைவிலக்குறின் `மேலே விதி`என்று கொள்கஅனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானைநினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே (பாடல் எண் : 13)
பொழிப்புரை: இறைவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அது தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; அவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் பத்தி செய்பவராயே விளங்குவர்.
இஸ்லாம்
“அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை (பாவங்களையும் தீய செயல்களும்) அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. உள்ளது” - (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் 83:14)
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள். (குர்ஆன் 59:19)
கிறிஸ்தவம்
ஆனால் உங்கள் அக்கிரமங்கள் உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையே ஒரு பிரிவினை உண்டாக்கியது, உங்கள் பாவங்கள் அவர் கேட்காதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைத்துவிட்டது. (ஏசாயா 59:2)
கிருபையினாலே விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்கள் சொந்த செயல் அல்ல; இது கடவுளின் பரிசு, செயல்களின் விளைவு அல்ல, அதனால் யாரும் பெருமை பேசக்கூடாது. (எபேசியர் 2:8-9)
அருளினா லன்றி யகத்தறி வில்லை
பதிலளிநீக்குஅருளின் மலமறுக்க லாம். 101
இறையருள் இருந்தாலன்றி நெஞ்சில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம்
1 ஜான் 3:17
பதிலளிநீக்குஆனால் ஒருவன் உலகப் பொருட்களை வைத்திருந்து, தன் சகோதரன் தேவைப்படுவதைக் கண்டு, அவனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தை மூடிக்கொண்டால், அவனிடத்தில் தேவனுடைய அன்பு எப்படி நிலைத்திருக்கும்?
https://www.openbible.info/topics/bad_friends
இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
பதிலளிநீக்குதெருளும் சிவசிந்தை யால். 102
இறைவன் அருளால் மனத்திருள் நீக்கித் தெளிவான சிவசிந்தை கிட்டும்.