இறைவன் ஒளியால் ஆனவன்

தமிழர் சமயம் 

விளங்கொளி அங்கிவிரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே. (திருமந்திரம் 2683)

பொருள் : சோதி மயமான இறைவன் ஆன்மாவில் விளங்க, ஒளிமயமான அக்கினியும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும் சந்திரனும் வளமான ஒளிகளாக ஆன்மாவில் பிரகாசித்தன. வளப்பம் மிக்க ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன எனில், பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாகக் கொண்டு கலந்து விளங்கியதேயாம்.

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே (திருமந்திரம் 2684
 
பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)

இஸ்லாம் 

நிச்சியமாக அல்லாஹ் ஒளிமிக்கவன்... {அல்லாஹ், வானங்களுக்கும் பூமிக்கும் ஒளியாவான்} [ஸூரதுன் நூர் 35]

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 291)


கிறிஸ்தவம் 

தேவன் வெளிச்சம், அவருக்குள் இருளே இல்லை என்று நாங்கள் அவரிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே. (1 யோவான் 1:5 )

3 கருத்துகள்:

  1. இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப் பட்டுவிடும். குர்ஆன் ( 39 : 69)

    பதிலளிநீக்கு
  2. يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏
    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
    (அல்குர்ஆன் : 9:32)

    பதிலளிநீக்கு
  3. அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென். (1 தீமோத்தேயு 6:16)

    பதிலளிநீக்கு