அசைவ தமிழர்
புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்? | 147 |
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும் | 148 |
பொய் தெய்வங்கள் எவைகள்?
கிறிஸ்தவம்
“அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், ‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். - (எரேமியா 10:11)
ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்! உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர். அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள். அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை. அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. நியாயத்தீர்ப்புக் காலத்தில், அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும். - (எரேமியா 10:14-15)
நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன். - (மீகா 5:14)
இஸ்லாம்
பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். (குர்ஆன் 55:26-27)
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! - (திருக்குர்ஆன் 28:88)
தமிழர் சமயம்
அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமைமிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சிவணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்டகுணங்களில் குன்றா தவர். - (அறநெறிச்சாரம் அவ்விநயம் ஆறு பாடல் -60)விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.
இறைவன் பொய் சொல்ல மாட்டான் *
கிறிஸ்தவம்
தேவன் பொய் சொல்லமாட்டார். - எபிரேயர் 6:16
தேவன் சத்தியமுள்ளவர், அவர் பொய் சொல்கிறவர் அல்ல, அவர் கறைபடாதவர் (சங் 117:2, 1சாமு 15:29)
எது உண்மையாக இறைவனின் மதம், சமயம் [அ] மார்க்கம் !
மதங்கள் இரண்டு வகை வகைப்படும்
- உண்மை சமயம் - கறைபடா அல்லது முடிவுறா மறைநூலை கொண்டது.
- பொய் சமயம் - கறைபட்ட, முடிவுற்ற அல்லது மனிதன் எழுதிய மறைநூலை கொண்டது.
"கறைபடா" என்றால், அது எவ்வாறு வழங்கப் பட்டதோ அவ்வாறே இன்றுவரை மாறாது முதல் நூலுக்கான அல்லது வழிநூலுக்கான இலக்கணத்தோடு இருத்தல் என்று பொருள்.
"முடிவுறா" என்றால், இன்றும் அது நடைமுறைப் படுத்த வேண்டிய சட்டமாக இருத்தல் என்று பொருள். அதாவது அதற்குப் பிறகு எந்த வழிநூலும் வழங்கப் படவில்லை என்றும், அந்த சொற்களில் திரிபு ஏதும் ஏற்படுத்தவில்லை என்றும் பொருள்.
"கறைபட்ட" என்றால், அதில் புது செய்திகள் உரிமையில்லா ஆசிரியர் மூலம் இணைக்கப்பட்டோ, நீக்கப்பட்டோ இருத்தல் என்று பொருள். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நபர்தான் அந்த குறிப்பிட்ட மறைநூலில் சேர்க்கவோ நீக்கவோ உரிமையுள்ளவர்.
"முடிவுற்ற" என்றால், அந்த நூல் பல காரணங்களளால் ஓதி உணர தகுதியற்றதாக மாறியிருப்பதாகும். பொருள் திரிதல், மறுவுதல், பாரம்பரியமாக கற்றுத்தரும் ஆசிரியர் அற்றுப் போதல், அதன் அடுத்த வழி நூல் தோன்றி இருத்தல் போன்றவைகள் சில காரணங்களாம். முடிவுற்ற மறைநூல்களிலேயே மக்களால் கறைபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்.
"மனிதன் எழுதிய" மறைநூல் என்றால், பல்வேறு மொழியில் உள்ள வேதங்களை கற்று, தனது மொழி அறிவைக்கொண்டு நூல் ஒன்றை எழுதி அதை இறைவனிடமிருந்து வந்ததாக அல்லது புனிதமானதாக கூறி ஒரு சமயத்தை துவங்குவது.
ஒரு நூலின் தன்மையை மறைநூல்களின் வரையறையினையோடு ஒப்பிட்டு அதன் முழு வடிவமைப்பை ஆய்வு செய்யும் பொழுதும், அந்த நூலை எழுதிய குருவின் தன்மையை ஆய்வு செய்யும் பொழுதும் உண்மை சமயம் எது? பொய் சமயம் எது? என்று கண்டறியலாம்.
இறைவனின் ஒவ்வொரு நூலும் அது பேசும் சமயம் தான் உண்மை மார்க்கம் என்று கூறுவதை பார்க்கலாம். உதாரணங்கள்,
தமிழர் சமயம்
சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்குஅவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)
பொருள்: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள்.
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. (திருமந்திரம்: 38)
இஸ்லாம்
‘….இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (குர்ஆன் 5:3)
‘...நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (குர்ஆன் 3:19)
‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)
கிறிஸ்தவம்
அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)