நீதிக்காக, உண்மைக்காக, சத்தியத்துக்காக, தர்மத்துக்காக போராடுவதாக கருதும் ஒருவர் பொய், பித்தலாட்டம், ஏமாற்று, அநீதி, அக்கிரமம், கொலை, கொள்ளை செய்து, அவைகளை வெற்றிபெற செய்துவிட முடியுமா?

 மிக முக்கியமான கேள்வி.

  1. சமயங்களுக்குள்ளே ஏற்படும் பூசல்களுக்கு காரணம், "தான் செய்யும் முறை தவறு என்றாலும், நோக்கம் சரி" என்ற சிந்தனை எல்லா சமயத்தினருக்கும் உண்டு. எனவே "நல்ல நோக்கத்தை அடைய தீமை செய்வதில் பிழை இல்லை" என்பது நமது பொது சிந்தனையாக இருக்கிறது.
  2. "நாங்கள் செய்வது அநீதி என்றால், அவர்கள் செய்தது நீதியா?" என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.
  3. "நாம் எவ்வளவுதான் நேர்மையாக, அறத்துடன், நீதியுடன் நடக்க முயன்றாலும், எதிரி இது எதையும் பின்பற்றுவதில்லை, எனவே நாங்களும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் நாம் கருதுகிறோம்.
  4. தான் நேரடியாக அநீதி செய்யவில்லை என்றாலும், "இவ்வாறு அநீதியை ஈடுபடுவோர் தன் சமயத்தை காக்க, அல்லது தன் இனத்தை காக்க, அல்லது தன் மொழியை காக்கத்தான் இவ்வாறு செய்கிறார்" என்று கருதுவதால் செய்பவர்களை பொதுமக்கள் ஆதரிப்பது உண்டு.

சுருக்கமாக சொன்னால் நீதி-யை பொறுத்த நிலைப்பாடாக இல்லாமல், தான், தனது என்ற அடிப்படையில் அல்லது உணர்ச்சி வேகத்தில் நிலைப்பாடுகள் எடுக்கப்படுகிறது.

ஆனால் இக்கேள்விக்கு "நிச்சயமாக முடியாது" எனபதுதான் பதில்.

  • இந்த பதில் உண்மை தன்மையை அறிய முதலில் நாம் ஆதரிக்கும் சமயத்தின் அறநெறிகளை மறைநூல்கள் மூலம் கற்க வேண்டும். மறைநூல்கள் கூறும் அறநெறிகளை பின்பற்றவில்லை என்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கற்று அறிய வேண்டும். ஏனென்றல் எல்லோரும் "தான் சரி, எதிரிதான் தவறு செய்தவர்" என்ற எண்ணம் கொண்டவர்களாய் இருப்போம். எனவே நாமும் நமது செயலும் சரியா? என்று சுய பரிசோதனை செய்வதற்காக நமது கருமங்களை வேதம் கூறும் அறங்களோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஒருவேளை ஒப்பிட்டு பார்ப்பதாக இருந்தால் எதிரியின் செயலைதான் ஒப்பிட்டு பார்ப்போம். இந்த அணுகுமுறையால் நமக்கு ஏதும் தீங்கு இல்லை என்று கருதுகிறோமா என்று தெரியவில்லை.
  • இரண்டாவது, இவ்வாறு சார்புடன் நடக்க அனுமதி உண்டா? என்று வேதங்களை தேடி வாசிக்க வேண்டும். அவ்வாறு சார்புடன் நடப்பதால் நமக்கு நமது சமுதாயத்துக்கும் ஏற்படும் தீமை என்ன? என்றும் ஆய்ந்து அறிய வேண்டும்.
  • மூன்றாவது இவ்வாறு அநீதி செய்வதன் மூலம் நாம் விரும்பும் நீதி நிலைபெறுமா? அல்லது கடவுள் மகிழ்ச்சி அடைவாரா? என்று ஆய்ந்து அறிய வேண்டும்.

இவைகளை ஏன் செய்ய வேண்டும்? ஏனென்றால் இறைவன் தான் கூறும் அறங்களுக்கு, தர்மத்துக்கு, மார்க்கத்துக்கு வழிப்படுவோரை தான் விரும்புவான் அவர்களுக்குத்தான் சொர்க்கத்தில் இடமளிப்பான் எனபது அவனது வாக்குறுதியாக இருக்கிறது. எனவே நாம் செய்யும் செயலால் நமது நோக்கத்துக்கே தீங்கு என்கிற பொழுது இதை கற்று அறிந்து அதற்க்கு வழிப்படுவதுதான் அறிவுடைமை.

இந்த கோணத்தில், சில ஆதாரங்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

சார்புடன் நடக்கலாமா?

தமிழர் சமையம்

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்

கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,

நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்

குற்றம் தரூஉம் பகை. - (திரிகடுகம் 86)

பொருள்: உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை. - (குறள் - செங்கோன்மை 1)

பொருள்நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும். (தண்டனை கொடுப்பது தனிமனிதனின் உரிமை அல்ல.)

இஸ்லாம்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:4:135)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன்:5:8)

கிறிஸ்தவம் / யூதம்

“அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும். (உபாகமம் 1:16)

நமையின் மூலம் தான் தீமையை வெல்ல முடியும். (அ) நீதியை வெல்ல அநீதியால் ஒருபோதும் முடியாது.   

தமிழர் சமயம்

அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்

திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்

புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய

அல்லவை நீங்கி விடும்'. (பழமொழி நானூறு 23)

அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடைவார்கள். 'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து.

கிறிஸ்தவம்

பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள். - (ரோமர் 12:21)

இஸ்லாம்

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். - (குர்ஆன் 41:34)

சிவபெருமானும் நந்தியும் வேறுவேறா? ஒன்றா?

நந்தி பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அதில் சில,

  • நந்தியும் சிவனும் ஒருவரே
  • நந்தி ஒரு தேவர்
  • நந்தி ஒரு மாடு

நந்தி என்கிற பாத்திரம் திருமந்திரம் எனும் சைவ மறைநூல் மூலம் நாம் அறிகிறோம். எனவே அதை ஆராய்வோம் வாருங்கள்.

இவ்வாறு ஆய்வு செய்யும் பொழுது முதன் முதலில் நாம் அறிய வேண்டியது இரண்டு சொற்களுக்குமான வரையறைகளாக அல்லது பண்புகளாக வேதங்கள் சொல்வது என்ன என்று ஆராய்வோம்.

சிவம் என்பது,

  • கடவுள்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

  • ஈடு இணையற்றவன்

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

வனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

  • தானாக தோன்றியவன்

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

  • ஆதியும் அந்தமும் அற்றவன்

ஆதியோ டந்தம் இலாத பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை

  • சொர்கத்தில் உள்ளான்

ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.

  • மனிதர்கள் வரையறுத்து கூற முடியாதவன் 

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ (திருமந்திரம் 2915)

  • ஆணுமல்ல, பெண்ணுமல்ல, பேடனல்ல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, 4)

  • முத்தொழிலையும் செய்பவன்

நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

  • லிங்கத்தில் இல்லை

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. - (திருமந்திரம் - 11 சிவபூசை 1)

நந்தி யார்? என திருமந்திரம் கூறுவது,

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி யாமே.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும்சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப்பயன் அறியாரே. (திருமந்திரம் 1. குரு பாரம்பரியம் 1–6)

  1. நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
  2. நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
  3. நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
  4. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன்
  5. நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியன் நந்தி
  6. நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

முடிவுரை:

  • சிவன் ஈடு இணை அற்றவன் X நந்திகள் நால்வர்.
  • சிவன் ஒரே கடவுள் X நந்தி ஒரு தேவர்.
  • சிவன் தானாக தோன்றியவன் X நந்தி சிவனால் படைக்கப்பட்டவர்.
  • சிவன் முத்தொழிலையும் செய்பவன் X நந்தி சிவன் சொல்வதை செய்பவர்.

எனவே சிவனும் நந்தியும் வேறு வேறு. சிவன் எனபவன் தேவர், அசுரர், மனிதர் என மூன்று இனத்தையும் படைத்த ஒரே கடவுள். நந்தி எனபவர் சிவன் படைத்த தேவர் இனத்தை சேர்ந்தவர்.

ஆன்மிகம் தொடர்பாக ஏற்படும் முரணான கருத்துக்களுக்கு காரணம், நாம் ஆன்மீகவாதி என்று கருதும் ஒருவரின் காட்டுரைகளை அல்லது பேச்சுக்களை கேட்டு நமது கருத்துக்களை கட்டமைத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த நபரின் வேதம் தொடர்பான அறிவு, அவரின் சிந்தனை ஆகியவற்றை நாம் அறிவதில்லை. இந்த சூழ்நிலையில் நாம் நமது மொழியில் உள்ள நமது வேதத்தை வாசிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

அவ்வேதத்தை வாசிக்கும் பொழுது நமக்கு சொற்களின் பொருள் புரியாமல் இருக்கலாம். அச்சமயத்தில் அந்த ஒரு பாடலுக்கு பலவேறு விளக்க உரையை நீங்கள் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு விளக்க உரையும் ஒன்றுக்கொன்று முரண்படும், தளர்ந்து விடாதீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து அந்த சொற்களுக்கான பொருளை தேடுங்கள். அவைகளை பொருத்தி புரிந்துகொள்ள முயலுங்கள்.

இதில் சில நேரங்களில் நமக்கு சிக்கல்கள் ஏற்படும்பொழுது நாம் தொல்காப்பிய நூல் சூத்திரத்தையும், திருமந்திர நான்மறை தத்துவத்தையும் கற்று பின்பற்ற வேண்டும்.

இவ்வளவு சிரமம் ஏன் படவேண்டும்? குறளும், திருமந்திரமும், ஆத்திச்சூடியும், நல்வழியும், திருக்குர்ஆனும், பைபிளும் கூறும் கல்வி இதுதான். இதை கற்றவர்களுக்கு இவ்வுலகில் நிம்மதியும் மறுஉலகில் சொர்க்கமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடவுளுக்கு ஓய்வு தேவையா? *

 ஓய்வு என்றல் பொதுவாக கலைப்புக்குப்பின் ஏதும் செய்ய இயலாமல் கலைத்தது இருபப்தாக எடுத்து கொண்டால் கடவுளுக்கு ஓய்வு தேவை இலலை. இதை அவனே அவனது நான்மறைகளில் கூறுகிறான்.

இஸ்லாம்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (ஆயத்துல் குர்ஸி)

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

கிறிஸ்தவம்

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. - (ஏசாயா 40:28)

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

குறிப்பு: சில பைபிள் வசனங்களில் கர்த்தர் ஓய்வு எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளது. இங்கே "ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்கிறது. "களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் குறிப்பிடவில்லை என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இது தவறான மொழி பெயர்ப்பின் விளைவு அல்லது திட்டமிட்ட யூதர்களின் சாதியாக இருக்கலாம்.

தமிழர் சமயம் *

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே. (முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் பாடல் எண் : 22)
 
பொழிப்புரை: யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்பு: விடாது தொடர்ந்து நிற்பதால் அவனுக்கு களைப்போ உறக்கமோ ஓய்வோ தேவை இல்லை.