மறுமையில் இறைவனை யார் சந்திப்பார்?

கிறிஸ்தவம் :

 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். - மத் 5:8 
__________________________________________________

இஸ்லாம் :

அந் நாளில் சில முகங்கள் மலர்ந்திருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கோண்டிருக்கும். (குர்ஆன் 75 : 22, 23)

சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
(பின்னர்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக,
(சூரியனால்) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக,
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக, வானத்தின் மீதும்
அதை (ஒழுங்குற) அமைந்திருப்பதன் மீதும் சத்தியமாக
பூமியின் மீதும் இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக
ஆத்மாவின் மீதும் அதை ஒழுங்குபடுத்தியதன் மீதும் சத்தியமாக
அவன் (ஆத்மாவாகிய) அதற்கு அதன் தீமையையும் அதன் நன்மையையும் உணர்த்தினான் (ஆத்மாவாகிய) அதைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார் - 91:1-8
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)

உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் முழு உடலும் சீர்கெடும். அதுதான் இதயம் ஆகும். (புகாரீ - 52)
_____________________________________________________________

திருமந்திரம் :

2819. முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

(ப. இ.) முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோனாவன். ஞானம் - திருவடியுணர்வு. ஞானத்தோன் - திருவடிசேர் அடிமை; நாயன்மார். அத் திருவடியுணர்வு கைவந்தபின் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப் பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருட் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கை யுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோராவர். அவரே பேரின்பப் பேரறிவினராவர்.

குறள் : 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற  (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34)

உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.

சான்று :
http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2571
https://www.bible.com/ta/bible/339/MAT.5.8.TAMILOV-BSI
http://ulahawalam.blogspot.com/2013/11/blog-post_9.html

8 கருத்துகள்:

  1. ''மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி­), நூல்: புகாரீ 7435

    பதிலளிநீக்கு
  2. சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ''இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். ''நீ எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா?'' என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது. அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி­) நூல்: முஸ்லி­ம் 266

    பதிலளிநீக்கு
  3. அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

    பதிலளிநீக்கு
  4. ''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, ''தமது ஆடையை (பெருமைக்காகக்) கீழே இறக்கிக் கட்டியவர்; (செய்த உபகாரத்தை) சொல்­க் காட்டுபவர்; பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்லி­ம் 171

    பதிலளிநீக்கு
  5. பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (அல்குர்ஆன் 17:37)

    ''யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி), நூல்: முஸ்­லிம் 147

    பெருமை என்றால் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம்மை அலங்கரித்துக் கொள்ளாமலும் விரும்பிய அழகிய ஆடைகளை அணியாமலும் இருக்கக் கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ''தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?'' என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­), நூல்: முஸ்லி­ம் 147

    பெருமையோடு ஆடையைத் தரையில் படுமாறு அணிந்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் கண்டு கொள்ள மாட்டான். அவர்களுக்குத் தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, ''(அவர்களில் ஒருவர்)தமது ஆடையை தரையில் படுமாறு அணிபவர்....'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­லிம் 171

    அரசியல்வாதிகளிடம் இந்த நடைமுறையை நாம் காணலாம். அழகிய வெள்ளை வேட்டியை அணிந்து வரும் இந்த அரசியல்வாதியின் வேட்டி ஊரை பெருக்கிக் கொண்டு வரும். இவ்வாறு இவர்கள் அணிவது பெருமையைக் கவனத்தில் கொண்டு தான். எனவே இதைப் போன்று அணியும் பழக்கத்தை யாரும் மேற்கொள்ளக் கூடாது.

    ''(முன் காலத்தில்) ஒருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­), நூல்: புகாரீ 3485

    பதிலளிநீக்கு
  6. முதுமொழிக் காஞ்சி தாண்டாய் பத்து 10:4.

    நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான்.

    நிற்றல் வேண்டுவோன் - ஒரு நிலையில் நிலைத்தலை விரும்புகின்றவன்
    தவம் செயல் - நோன்பு செய்தலை

    முக்தி வேண்டுபவன் தவம் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. எபிரேயர் 1214 எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது.

    பதிலளிநீக்கு
  8. 284. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
    சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
    பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
    முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

    https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/first-tantra/first-tantra-19-shiva-knows-those-who-love-others/

    பதிலளிநீக்கு