உலகம் கொண்டாடப்பட வேண்டிய இடமல்ல!

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள் :10)

பிறவி - பிறப்பு. இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது;

பெரும் கடல் - இந்த வாழ்க்கையின் அளவையும் அதில் உள்ள துன்பங்களையும், உவமை படுத்த பெரிய கடல் என்கிற பதம் பயன்படுத்த படுகிறது;

நீந்துவர் - நீந்துவார்கள்; வாழ்க்கை கடலில் நீந்தும் பொழுது கேளிக்கைகளுக்கும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பில்லை. 

நீந்தார் - நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; அதாவது கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு நோக்கத்தை மறைந்தவர்.

இறைவன் - தனக்கு உவமை இல்லாத ஒருவன்

அடி-தாள்; சேராதார்-சென்றடையாதார். இங்கு இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

இஸ்லாம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். (முஸ்லிம்: 5663)

கிறிஸ்தவம்:

இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். - ரோமர் 12:2

முடிவுரை:

 இவ்வுலகில் வாழக்கூடிய குறுகிய காலம் என்பது மறுமை என்னும் முடிவில்லா வாழ்க்கையில் வீடுபேறு அலல்து நரகத்தை அடைவதற்கான பரீட்சை ஆகும். எனவே இவ்வுலகத்தில் வாழும் நாட்களில் கடலில் நீந்துவதை போலவோ, சிறையில் இருப்பதை போலவோ தேவைகளையும் இன்பங்களையும் தவிர்த்து பயணியை போல வாழ வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக