இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். - மத் 5:8
__________________________________________________
இஸ்லாம் :
அந் நாளில் சில முகங்கள் மலர்ந்திருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கோண்டிருக்கும். (குர்ஆன் 75 : 22, 23)
சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
(பின்னர்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக,
(சூரியனால்) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக,
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக, வானத்தின் மீதும்
அதை (ஒழுங்குற) அமைந்திருப்பதன் மீதும் சத்தியமாக
பூமியின் மீதும் இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக
ஆத்மாவின் மீதும் அதை ஒழுங்குபடுத்தியதன் மீதும் சத்தியமாக
அவன் (ஆத்மாவாகிய) அதற்கு அதன் தீமையையும் அதன் நன்மையையும் உணர்த்தினான் (ஆத்மாவாகிய) அதைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார் - 91:1-8
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)
உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் முழு உடலும் சீர்கெடும். அதுதான் இதயம் ஆகும். (புகாரீ - 52)
_____________________________________________________________
2819. முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.
(ப. இ.) முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோனாவன். ஞானம் - திருவடியுணர்வு. ஞானத்தோன் - திருவடிசேர் அடிமை; நாயன்மார். அத் திருவடியுணர்வு கைவந்தபின் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப் பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருட் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கை யுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோராவர். அவரே பேரின்பப் பேரறிவினராவர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34)
உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.
சான்று :
http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2571
https://www.bible.com/ta/bible/339/MAT.5.8.TAMILOV-BSI
http://ulahawalam.blogspot.com/2013/11/blog-post_9.html