நா காக்க

தமிழர் சமயம் 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் 127)

விளக்கம்: எவற்றைக் காக்கா விட்டாலும் நாவை காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

கிறிஸ்தவம் 

மரணமும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் உள்ளன, அதை விரும்புவோர் அதன் கனிகளை உண்பார்கள். ( நீதிமொழிகள் 18:21)

இஸ்லாம் 

 யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்ம ஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்குச் சொர்கம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

சிவராத்திரி என்றால் என்ன?

சைவம் பொறுத்தவரை வணக்க வழிபாடுகள் அனைத்தும் சைவ ஆகம விதிப்படிதான் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் அறிவோம்.

எந்த சைவ ஆகமத்தில் சிவராத்திரி பற்றி, என்ன குறிப்பிடப் பட்டுள்ளது என்று அறிய விரும்புகிறேன். ஏனென்றால் சிலர் எழுதிய கட்டுரைகளில், சிவனே நேரடியாக சிவராத்திரி பற்றி கூறியதாக குறிப்பிட்டு உள்ளதாக கூறி உள்ளனர்.

முதலில், சிவராத்திரி என்றால் என்ன? இதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.

கருத்து 1:

கருத்து 2:

கருத்து 3:

கருத்து 4:

கருத்து 5: 


மேலே குறிப்பிட்டுள்ள எந்த கதையும் சிவா ஆகமமான தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரத்தில் குறிப்பிட்டவைகள் அல்ல. அவ்வாறு இருந்திருந்தால் பாடல்களை குறிப்பிட்டு இருப்பார்கள்.

சிவன் யார்? எப்படிப்பட்ட பண்புகளையும் உருவ அமைப்பையும் கொண்டு உள்ளான் என்று சிவ ஆகமத்தில் ஒன்றான திருமந்திரம் கூறுவதை பார்ப்போம்.

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)

பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன்.

சிவனுக்கு யாரும் உரை செய்ய முடியாது. இந்த கருத்தை நாம் எப்படி புரிந்துகொள்வது? சிவன் உருவத்திலும் ஆற்றலிலும் இவ்வாறு இருப்பான் என்று மனிதர்கள் யாரும் யாரும் வரையறை கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுக்கும் வரையறைகள் பிழையானவை. ஏனென்றால் சிவனை கண்டவர் யாரும் இல்லை.

எனவே சிவனை நாம் அறிந்துகொள்ள சிவ ஆகமம் கூறும் வரைவிலக்கணங்கள் தான் சரியான அணுகுமுறை. சிவனை பற்றி பின்வரும் பாடல் கூறும் கருத்தை காண்போம்.

சிவன் லிங்கத்தில் இல்லை

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

- (திருமந்திரம் - 7ம் தந்திரம் - 11 சிவபூசை 1)

சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

சிவன் பாலினமற்றவன் எனும் செய்தி அவன் துணைவியை கொள்ள தேவையற்றவன் என்ற கருத்தை கூறுகிறது. அந்த வகையில் அவனுக்கு மகன்கள் இருக்க முடியாது.

சிவன் ஒருவனே கடவுள்

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

சிவன் ஈடு இணையற்றவன்

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

மேற்சொன்ன இரு கருத்துக்களும் கூறவருவது என்னவென்றால், அவனுக்கு இணையாக கூறப்படும் பிரம்மன் விஷ்ணு போன்ற கதாபாத்திரங்கள் ஒன்றே இல்லை என்பதாம்.

இந்த வரையறைகள் சிவராத்திரிக்கு கூறும் அனைத்து கருத்துக்களையும் மறுக்கிறது. ஏனென்றால் சிவனுக்கான சிவாகமம் கூறும் இந்த வரையறைகளோடு சிவராத்திரி கதைகளில் கூறப்படும் சிவன் பாத்திரம் முரண் படுவதை நீங்கள் அறியலாம்.

சரி நாங்கள் இதை கொண்டாடுவதால் சிவன் என்ன கோபித்து கொள்ள போகிறானா? இல்லை ஆனால் ஈசன் யார் என்று அறியாமல் நாம் செய்யும் அனைத்தும் வீண் என்று சிவ ஆகமம் கூறுகிறது.

காலை சென்று கலந்துநீர் மூழ்கில்என்?

வேலை தோறும் விதிவழி நிற்கில்என்?

ஆலை வேள்வி அடைந்துஅது வேட்கில்என்?

ஏல ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே! (தேவாரம் 5:99:5)

என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். காலையில் எழுந்ததும் நீராடி விட்டால் சரியாகிவிடுமா? செய்ய வேண்டிய கருமங்கள் எல்லாவற்றையும் விதிப்படிச் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஒரு வேள்விச் சாலைக்கு உரிமை பெற்று வேள்விகள் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஈசனே இறைவன் என்று அறிந்து ஒழுகாமல் எதுவும் சரியாகாது.

எனவே சிவராத்திரி என்பது சிவ ஆகமம் கூறும் சிவனின் வரையறைகளுக்கு முரணாக உள்ளது,மேலும் அது சிவனால் அவனது ஆகமத்தில் கூறாத ஒரு நடைமுறை அல்லது விழா ஆகும். 

ஆகம் கூறாத ஒன்று அன்றைய போலிசாமியார்களால் ஏற்படுத்தப் பட்டது, இன்றைய போலி சாமியார்களால் வியாபாரம் செய்யப் பயன்படுத்தப் படுகிறது. 

உலகின் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு இணையான நூல் எதுவும் உள்ளதா?

எமது கோணமும் பதிலும் உங்களுக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் சத்தியம் நிறைந்தது.

உலகின் பொதுமறை என்று திருக்குறளை யார் முதன் முதலில் அழைத்தது என்று தெரியவில்லை. எந்த சங்க நூலிலும் அவ்வாறு குறிப்பிடவில்லை. தமிழின் மீள் எழுச்சிக்கு பிறகு அதாவது கடந்த நூற்றாண்டில் பலர் இவ்வாறு கூற கேள்விப்படுகிறோம். காரணம் அதில் சொல்லப்படும் அறங்கள் அனைத்தும் ஞாலம், உலகம் முழுமையையும் குறிப்பிட்டு கூறப்படுவதால் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம். மேலும் எந்த கடவுளின் பெயரையும் தனியாக குறிப்பிடாமல் கடவுள், இறைவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று பண்புகளை குறிப்பிட்டு பொதுப்படையாக பேசுவதால் கூட இருக்கலாம்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் குறளின் சுருக்கமான ஆத்திசூடியும், குறளின் விரிவுரையான நாலடியாரும் உலகப் பொதுமறை என்று அழைக்கப்பட வேண்டுமே?

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் தேவாரமும், திருவாசகமும், திருமந்திரமும், உலக நான்மறைகள் அனைத்தும், சித்தர்கள் நூல்களும் உலகப்பொதுமறையாக இருத்தல் வேண்டுமே? ஆதாரம்?

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

திருக்குறள் சிறந்த நூல், மறை நூல் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உலகப்பொதுமறை என்று அதை மட்டும் குறிப்பிடுவதை விட உலகில் உள்ள அனைத்து நூல்களையும் உலகப்பொதுமறை என்று அழைப்பதுதன் சரியான வாதம் ஆகும்.

ஆனால் திருக்குறளையும் மேலே குறிப்பிட்டு உள்ள நூல்களையும் மறைநூல்களாக அதாவது வேதமாக ஏற்க்காதோர் பலர் உண்டு. இந்து என்ற பெயரில் அவர்களை பின்பற்றுவோர் தான் இங்கே அதிகமாக உள்ளனர். இவைகள் ஞானம் தரும் மறைநூல்கள்கள், வாழ்க்கையின் பிரச்னைக்கு தீர்வு தரும் நூல்கள், மன அமைதிக்கு வழி தரும் நூல்கள், படித்தால் புரியும் நூல்கள் எனபதை அவர்கள் உணர்வதில்லை.

இதனை நாம் படிக்காததால் ஏற்படும் ஒரே ஒரு நஷ்டத்தை கூறுகிறேன், மற்றதை நீங்களே கணித்து கொள்ளுங்கள். சைவம் தமிழரின் சமயம், சிவன் தமிழின் கடவுள், சிவ ஆகமங்கள் தமிழில் மட்டும்தான் உள்ளது ஆனால் நம்மவர்கள் வடக்கில் உள்ள காசிக்கு செல்கின்றனர். திருமந்திரம் கொண்ட நாம், சிவாகமம் இல்லாத அவர்கள் எழுதிய அமரகோஷ் நாவலை நாம் படித்து கொண்டு இருக்கிறோம். வேடிக்கை.

குறளுக்கு இணையான நூல்கள் தமிழில் மட்டுமல்ல, உலகில் வெவ்வேறு மொழிகளிலும் உண்டு. அதை அறியாமல் (அ) காழ்ப்புணர்வுடன் (அ)  தற்பெருமை கொண்டு நாம் அதை ஏற்பதில்லை, அவ்வளவுதான்.

வேதத்தை பொருள் அறியாமல் ஓதலாமா?

தமிழர் சமயம்


வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.(பாடல் எண் : 51) 
 

பொருள்வேதத்தை ஓதி வீடு பெற்றனர்! வேதத்தில் நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் உள்ளன. எனவே தர்க்கவாதத்தை விட்டு வேதத்தை ஓதி அனுபூதி மான்கள் முக்தி பெற வேண்டும்.

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (
பாடல் எண் : 36) 

பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே 

இஸ்லாம்


அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 4:82)

கிறிஸ்தவம்


இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8) 

முடிவுரை


வேதம் என்பது பொருள் புரியாமல் ஓதுவதற்கு அல்ல. அது ஓதி உணர்ந்து தானும் பின்பற்றுவதற்கான அறங்களை கொண்டது ஆகும். அதை பின்பற்றாதோர் வீடுபேறு அடைய மாட்டார் என்பது வேதங்களின் கூற்று. வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

ஒரு அறிவுரை என் வாழ்க்கையையே மாற்றி விட வேண்டும். அப்படி இருந்தால் ஏதேனும் ஒன்று கூறுங்கள்?

சிறந்த கேள்வி

அறிவுரை எளிமையாக கிடைப்பதால், மலிவாக பார்க்கப் படுகிறது.

"ஒருவர் அறிவுரை வழங்கும் பொழுது பொறுமையாக முழுமையாக கேட்கவும்" என்பதுதான் எனது அறிவுரை. இதற்குத்தான் இன்று பெரும் பஞ்சம் நிலவுகிறது.

யார் அறிவுரை கூறினாலும் செவி கொடுத்து பொறுமையாக கேட்க வெண்டும். கூறப்படும் அறிவுரை அர்த்தமற்றதாக தோன்றினாலும், கூறும் நபர் உங்கள் பார்வையில் சரியானவராக இல்லை என்றாலும்.

எந்த அறிவுரை உங்களுக்கு தேவை உள்ளதாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது. ஒருவேளை நீங்கள் அறிவுரை கூறப்படுவதை வெருப்பவர் என்று மக்களுக்கு தெரிய வரும் பொழுது உங்களுக்கு அறிவுரை கூற முன் வர மாட்டார்கள். அது பல நல்ல விடயங்கள் உங்களுக்கு கிடைப்பதிலிருந்து தடுத்து விடும். இலவசமான மலிவான அறிவுரைகள் உங்களுக்கு விலைமதிப்புள்ள பொருளாக மாறிவிடும்.

ஒருவர் அறிவுரை தரும்பொழுது பொறுமையாக கேட்டு அவருக்கு நன்றி கூறி புன்னகையோடு கடந்து செல்ல வேண்டும். ஒருவேளை அவர் உங்களுக்கு வேண்டுமென்றே தவறான அறிவுரை கூறினாலும், அல்லது அவர் அறியாமல் தவறாக உபதேசம் செய்பவராக இருந்தாலும் அவர் அறிவுரை கூறுவதை நாம் தடுக்க கூடாது. அறிவுரை பெற்ற பின்பு அதை ஆய்வு செய்து ஏற்ப்பதும் தவிர்ப்பதும் நமது கைகளில் உண்டு. ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்பது உங்களுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.

அறிவுரை பெறுவது தொடர்பான கருத்துக்களை உலக சமய நெறி நூல்கள் என்ன கூறுகிறது என்று காண்போம் வாருங்கள்.

தமிழர் சமயம்

அறவுரையின் இன்றியமையாமை

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். (அறநெறிச்சாரம் பாடல் - 2)

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அறம் கேட்டற்குத் தகாதவர்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்

புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை

ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு

ஆன்றவர்கள் கூறார் அறம்.(அறநெறிச்சாரம்பாடல் பாடல் - 7)

விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொரியோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள். 

கிறிஸ்தவம்

ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது. - (நீதிமொழிகள் 25:12)

முட்டாளின் வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையானது, ஆனால் ஞானி அறிவுரையைக் கேட்கிறான். - (நீதிமொழிகள் 12:15)

அறிவுரைகளைக் கேளுங்கள், அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் ஞானத்தைப் பெறுவீர்கள். - (நீதிமொழிகள் 19:20)

ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது. - (நீதிமொழிகள் 29:1)

கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்; முட்டாள்கள் ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7)

ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான் - (நீதிமொழிகள் 16:20) 

இஸ்லாம்

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். (குர்ஆன் 87:9-12)

(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (திருக்குர்ஆன் 2:269.)

திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? - (திருக்குர்ஆன் 54:17) 

சியோனிச பயங்கரவாதிகளின் சிந்தனையும் திட்டமும்

முடிவுரை

இன்றைய இளைஞர்கள் உபதேசம் செய்வோரை "பூமர்அங்கிள்" என்று இளித்து கூறுவதை கண்டால் பரிதாப மட்டுமே படமுடியும். அறநூல்கள் உபதேசம் கேட்பதின் அவசியத்தை கூறுவதையும், இவ்வுலகை கெடுக்கும் நோக்கத்தை கொண்டு உள்ள சியோனிச பயங்கரவாதிகள் மக்களிடம் இதில் உள்ள சிறிய சுனக்கத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவலும் உபதேசத்தின் அவசியத்தை உணர்த்துகிறது