நந்தி பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அதில் சில,
- நந்தியும் சிவனும் ஒருவரே
- நந்தி ஒரு தேவர்
- நந்தி ஒரு மாடு
நந்தி என்கிற பாத்திரம் திருமந்திரம் எனும் சைவ மறைநூல் மூலம் நாம் அறிகிறோம். எனவே அதை ஆராய்வோம் வாருங்கள்.
இவ்வாறு ஆய்வு செய்யும் பொழுது முதன் முதலில் நாம் அறிய வேண்டியது இரண்டு சொற்களுக்குமான வரையறைகளாக அல்லது பண்புகளாக வேதங்கள் சொல்வது என்ன என்று ஆராய்வோம்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)
சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)
ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)
பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை
ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.
- மனிதர்கள் வரையறுத்து கூற முடியாதவன்
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ (திருமந்திரம் 2915)
- ஆணுமல்ல, பெண்ணுமல்ல, பேடனல்ல
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, 4)
நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. - (திருமந்திரம் - 11 சிவபூசை 1)
நந்தி யார்? என திருமந்திரம் கூறுவது,
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி யாமே.
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும்சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப்பயன் அறியாரே. (திருமந்திரம் 1. குரு பாரம்பரியம் 1–6)
- நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
- நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
- நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
- மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன்
- நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியன் நந்தி
- நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.
முடிவுரை:
- சிவன் ஈடு இணை அற்றவன் X நந்திகள் நால்வர்.
- சிவன் ஒரே கடவுள் X நந்தி ஒரு தேவர்.
- சிவன் தானாக தோன்றியவன் X நந்தி சிவனால் படைக்கப்பட்டவர்.
- சிவன் முத்தொழிலையும் செய்பவன் X நந்தி சிவன் சொல்வதை செய்பவர்.
எனவே சிவனும் நந்தியும் வேறு வேறு. சிவன் எனபவன் தேவர், அசுரர், மனிதர் என மூன்று இனத்தையும் படைத்த ஒரே கடவுள். நந்தி எனபவர் சிவன் படைத்த தேவர் இனத்தை சேர்ந்தவர்.
ஆன்மிகம் தொடர்பாக ஏற்படும் முரணான கருத்துக்களுக்கு காரணம், நாம் ஆன்மீகவாதி என்று கருதும் ஒருவரின் காட்டுரைகளை அல்லது பேச்சுக்களை கேட்டு நமது கருத்துக்களை கட்டமைத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த நபரின் வேதம் தொடர்பான அறிவு, அவரின் சிந்தனை ஆகியவற்றை நாம் அறிவதில்லை. இந்த சூழ்நிலையில் நாம் நமது மொழியில் உள்ள நமது வேதத்தை வாசிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
அவ்வேதத்தை வாசிக்கும் பொழுது நமக்கு சொற்களின் பொருள் புரியாமல் இருக்கலாம். அச்சமயத்தில் அந்த ஒரு பாடலுக்கு பலவேறு விளக்க உரையை நீங்கள் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு விளக்க உரையும் ஒன்றுக்கொன்று முரண்படும், தளர்ந்து விடாதீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து அந்த சொற்களுக்கான பொருளை தேடுங்கள். அவைகளை பொருத்தி புரிந்துகொள்ள முயலுங்கள்.
இதில் சில நேரங்களில் நமக்கு சிக்கல்கள் ஏற்படும்பொழுது நாம் தொல்காப்பிய நூல் சூத்திரத்தையும், திருமந்திர நான்மறை தத்துவத்தையும் கற்று பின்பற்ற வேண்டும்.
இவ்வளவு சிரமம் ஏன் படவேண்டும்? குறளும், திருமந்திரமும், ஆத்திச்சூடியும், நல்வழியும், திருக்குர்ஆனும், பைபிளும் கூறும் கல்வி இதுதான். இதை கற்றவர்களுக்கு இவ்வுலகில் நிம்மதியும் மறுஉலகில் சொர்க்கமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.