வருடபிறப்பு கொண்டாட்டம் தேவையா?
தமிழிலிருந்து பிரிந்த தெலுகு-இன் வருட பிறப்பான ஊகாதி-யையோ, மலயாளத்தின் வருட பிறப்பான விஷ்ணு-வையோ, அவ்வளவு ஏன் ஹிந்து வருட பிறப்பாக கருத்தபடும் சமஸ்கிருதத்தில் "சித்திர சுக்லா பிரதிப்பதா" என்று அறிய படுகிற மராத்திய வருட பிறப்பான "Gudhi Padva" வருடங்களின் பிறப்பையோ தமிழ்நாட்டில் யாரும் வெகு விமர்சாயாக கொண்டாடுவதில்லை. இவ்வளவு அருகில் இருக்கும் வருட பிறப்புகளை விட்டு, அதனை தூரம் இருக்கும் ஆங்கிலேய வருட பிறப்பை ஏன் கொண்டாடுகின்றனர் என்று தெரிய வில்லை!
இயேசு அவர்கள் பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25-லிருந்து 8வது-நாள் அவருக்கு விருத்தசேதனம்/கத்னா (circumcise) செய்ய பட்டு பெயர் சூட்ட பட்ட தினம்தான் ஜனவரி 1-ஆக புது வருடமாக கொண்டாட படுகிறது என்று எத்தனை கிருச்தவர்களுக்கோ கிறிஸ்தவர் அல்லதவருக்கோ தெரியும் என்று தெரியவில்லை.
பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்." - லூக்கா2:21
And when eight days were accomplished for the circumcising of the child, his name was called JESUS, which was so named of the angel before he was conceived in the womb. - Luke 2:21
ஆங்கில வருட பிறப்பை இரவு முழுதும் விழித்து குடித்து கேக் வெட்டி கொண்டாடுபவர்களும் உண்டு, எழுந்த உடன் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்களும் உண்டு. ஆங்கில வருட பிறப்பிற்கும் பெருமாள் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.. தமிழனுக்கும் ஆங்கில வருட பிறப்புக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.. கால அளவு காட்டியான வருடபிறப்பிருக்கும், ஜோசியத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை.
காலையில் எழுந்தால் அனைத்து சேனல்களிலும் இந்தவருடம் உஙகளுக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று கதை அளந்து காசு சம்பாதிக்க ஒரு கூட்டம்.. ஒரு வருசத்துக்கு எத்தன வருச பிறப்பு? எல்லா விதமான வருச பிறப்பன்னைக்கும் வந்து ஆத்து ஆத்துனு காலைல வந்து இவர்கள் ஆத்திக்கிட்டுதான் இருக்கிறார்கள் சொற்பொழிவு.. தமிழ் வருச பிறப்பன்னைக்கு சொல்லப்படுகின்ற சோசியம், ஆங்கில வருட பிறப்பு அன்று மாற்றி சொல்ல படுகிறது, ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.. எப்படி ஒரே காலத்திற்கு வெவ்வேறு சோசியம் சொல்ல படுகிறது, இயல்பில் எதாவது ஒன்று நிச்சயமாக நடகத்தான் போகிறது, கடசியில், பார்த்தாயா அவர் சொன்னது போல் நடந்து விட்டது என்று ஆரம்பித்து விடுவார்கள்.
வருட பிறப்பென்பது கால அளவுகோல் மட்டுமே, அதில் கொண்டாடாவோ, அந்த தினத்தை கொண்டு ஜாதகம் பாரப்பததிலோ எந்தவித தேவையும் புத்திசாலிதனமும் இல்லை என்பது என் கருத்து.. உடனே சகோதரத்துவத்திற்கு எதிராக பேசுவதாக என்மேல் கருத்து நிலவ வாய்ப்பு உள்ளது. அதில் துளியும் உண்மை இல்லை. நாம் செய்வதை ஏன் எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்யும் எண்ணத்திற்கும் சகோதர தன்மை இல்லாமைக்கும் எந்தவித சம்பந்தாமும் இல்லை. ஆங்கில வருட பிறப்பை கொண்டாடினால்தான் அவர்கள் மீது சகோதர உணர்வு உள்ளதாக அர்த்தம் இல்லை. சகோதரத்துவம் என்பது உண்மையில் மிகப்பெரும் வரையறை கொண்டது.
கட்டாயமாக இஸ்லாமியர்களாக மாற்றபட்டோமா?
1000 ஆண்டுகள் இருந்த சமண மதத்தை விட்டு சைவராக மாறியவர்கள்தான் உயிருக்கு பயந்து மாறியவர்கள், சைவ சமண வைணவ வரலாறையும் பெரிய புராணத்தையும் புரட்டி பாருங்கள் உண்மை புரியும். 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பெரும்பாலானோர் நினைப்பது போல் கட்டாய மத மாற்றம் செய்து இருந்தால் இந்தியா இன்று ஹிந்து நாடாக இருந்து இருக்காது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.
தமிழர்களை குரங்காகவும் அரக்கனாகவும் தீண்ட தகாதவர்களாகவும் சித்தரிக்கும் புத்தகங்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகின்றீர் என்று எனக்கு புரியவில்லை..? இன்று தேவர், உடயார் முதலியார் கவுண்டர் என்று மீசையை முறுக்கி கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்கள் மதத்தில் சூத்திரன்தான் பிராமினுக்கு தீட்டு பொருள் தான் நீங்கள். சிந்திக்க விடாமல் சாதி வெறி என்னும் திசை நோக்கி மாற்றி வைத்து இருக்கிறார்கள் ஆளும் வர்கத்தினர் ..
படைப்பினங்களை வணங்குவோர் அந்தகார இருளின் ஆழத்தில் அழுத்தப்படுவர்! - யஜூர் வேதம் 40:9
யார் அசம்பூதியை (இயற்கை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - அதர்வவேதம் 40 : 09
வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். - பகவத்கீதை 7.20
மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)
source : https://www.facebook.com/TRafeequlislam/posts/483006018498005
பிராமணன் Vs இஸ்லாமியன்
யார் பிராமணன்?
“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)
கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.
வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.
எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.
சோவின் எங்கே பிராமணன்?
ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)
ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்பது, எது தர்மம் என்பதை வேதாந்த ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.
சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
குறிப்பு: எனவே வர்ணம் பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது.
மஹாபாரதத்தில் பல இடங்களில்"யார் பிராமணன்"? என்ற கேள்வி எழுகிறது.அதற்கு யுதிஷ்டிரனும்"எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல"
அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது:"எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்"
பிராமணன் என்றால் இவ்வகை குணங்களை கொண்டவர் மட்டுமே, அது சாதி அல்ல, பிறப்பால் வருவது அல்ல. ஆனால் பிராஹ்மின் என்ற கூட்டம் அதை ஒரு சாதியாகவும் மற்றவர்கள் தீண்ட தகாதவர்கள் என்றும் வேதம் அவர்களுக்கே சொந்தம் என்றும் மாற்றி விட்டது.
யார் அந்தணன்?
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான் (நீத்தார் பெருமை குறள் 30)
பொழிப்பு: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)
மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும், தான் செய் தொழிலினது (அதாவது செயலால்) ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது . எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
யார் இஸ்லாமியன்?
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள்(தேவர்கள் ), வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும் (தயாள குணத்துடன்), தொழுகையை (தவம்) நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் (உண்மை), வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே (பொறுமை) நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் (இஸ்லாமியன்). - அல் குர்ஆன் 2:177
வரையறை அடிப்படையில் இஸ்லாமியன் = அந்தணன் = பிராமணன் ஆகும்.
இந்த வரையறை கொண்ட இஸ்லாத்தை பின் தொடர விரும்புகின்ற எவரையும் இஸ்லாமியனாக அங்கீகரிக்கலாம் ஆனால் இந்து சமயத்தில் பிராமினாக ஆக முடியுமா?
முடிவுரை :
பிராமணன் என்பதற்கும் இஸ்லாமியன் என்பதற்கும் குறிக்க படும் வரையறை ஒன்றே.
சரி இதுபோல் நடைமுறயில் உள்ள வேற்றுமையாக கருத்தப்படும் அனேக விஷயங்கள் ஒற்றுமையாகவே இருக்க, எதுதான் உண்மையான வேற்றுமை?
இஸ்லாமிற்கு முன் இருந்த எல்லா மதத்தினரும் அது முடியும் தருவாயில் செய்த அதே தவறுதான். படைத்தவனை அன்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வணங்குவது.. சரி இதனை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
அவரவருக்குரிய மரியாதையும், வெகுமதியும், அங்கீகாரமும் அவரவருக்கே சென்றடைய வேண்டும் என்பது எதார்த்த உண்மை.. படிக்காதவனுக்கு சம்பளம் குறைச்சல், படித்த திறமையானவனுக்கு அவனுக்கு உரிய அங்கீகாரமும் சம்பளமும் கொடுக்க படவேண்டும், அம்மாவை அத்தை என்று அழைக்க முடியாது, அப்பாவை மாமா என்று அழைக்க கூடாது.. பிச்சைகாரனை அரசே என்று அழைக்க முடியாது, அரசனை பிச்சைக்காரன் என்று கூறமுடியாது. அது ஏன் கடவுள் விஷயத்தில் மட்டும் இதனை அலட்சியம்? கண்ணில் பட்டவனெல்லாம் கடவுள், காசு குடுத்தா அவன் சாமி, செத்துபோனா அவன் தெய்வம், அழகான சிலை இருந்த அதுவும் கடவுள்!
சரி இறைவன் இந்த வழக்கத்தை ஏறுக்கொள்கிறானா?
இல்லை, இறைவன் நம்மோடு வேதத்தின் மூலமாக பேசுகிறான். நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிவிக்கிறான். செய்தால் என்ன நன்மை? இல்லை என்றால் என்ன தீமை? என்றும் விளக்குகிறான். அவன் எவ்வளவு அன்பு கொண்டவன் பாருங்கள், அவன்தான் இறைவன் என்று பல குறிப்புகள், அத்தாட்சிகள், அதிசயங்கள், முன்னறிவிப்பு, நமக்குத் தெரியாத அறிவியல் உண்மைகள் சொல்வதன் மூலம் நிரூபிக்கிறான். இதனை அவன் செய்வதற்கு எந்த அவசியமும் கட்டாயமும் அவனுக்கு கிடயாது, நம் மீது கொண்ட கருணை மட்டுமே காரணம். வேதங்கள் என்று எஞ்சி இருப்பவை வெகு சிலவே, அதை படிப்பதில் அல்லது அறிஞர்கள் மூலம் அறிவதில் என்ன சிரமம்? வேதங்களின் அறிவு நமக்கு விளக்கம் கொடுக்கும் என்பது உண்மை, அனைத்து வேதங்களையும் ஒப்பீடு செய்தல் அதிக விளக்கத்தை கொடுத்து ஞானமும் முக்தியும் பெற வழிவகுக்கும்.
நாலடியாரும் இஸ்லாமும்
ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக!
முன்னுரை :
இஸ்லாமிய பண்பாடு மற்றும் தமிழர் பண்பாடுகளின் ஒப்பீட்டின் நோக்கம் கொள்கைரீதியாக நாம் எந்த அளவு ஒத்துபோகின்றோம் என்ற புரிதல் ஏற்படவும் ஒற்றுமைக்கு வழிவகுக்கவும் செய்யப்படும் சிறுமுயற்சி.
தமிழராய் இருக்கும் நாம், தமிழராய் பெருமை கொள்ளும் நாம் நம் வாழ்வியல் அறநெறியாக எதை கொண்டிருந்தோம் என்பதை தமிழ் பிரியர்கள் அறிவதும், அறிய முயற்சிப்பதும் இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவதில் திருக்குறளுக்கு அடுத்து மிகமுக்கியமானது "நாலடியார்".
"குர் 'ஆன் 3:64"-லும், "எசாயா 1:18-20"-இல் பைபிளிலும், "ரிக் 1.25,3-6"-லும் குறிபிட்டுள்ளதுபோல, வேதங்களிலே உள்ள பொதுவான விசயங்களை ஆராயும் நோக்கத்தில் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை கூறும் புனித குரானையும், தமிழர் வாழ்க்கை நெறியை கூறும் நாலடியாரையும் ஒப்பிடுகையில் 11(பழவினை) & 13(தீவினைஅச்சம்) அத்தியாயங்களில் சிலவைதவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய நெறிகளை அப்படியே வலியுறுத்துவதாக அமைந்துகின்றன.
முரண்பாடுகளை பார்பதற்குமுன், ஒற்றுமைகளில் மிக முக்கியமானவைகளை மட்டும் இங்கே பார்ப்போம், முழுவதையும் எழுதுவதென்றால் தனிஆய்வு புத்தகமாக வெளியிடலாம், நேரமும் பொருளாதாரமும் அனுமதிக்கின்ற காலத்தில் இறைவன் நாடினால் அந்த பணியை செய்வோம்.
இவ்விரு பண்பாடுகளில் மிகப்பெரும் வேற்றுமைகளாக கருதபடுபவைகள் அவ்வாறு இருந்திருக்கவில்லை, அவைகளை மட்டும் இங்கே பதிகிறோம். முரண்பாடுகளின் காரண காரியங்களை பிறகு பார்ப்போம். கீழே கொடுக்க பட்டவைகள் நாலடியாரின் அத்தியாய தலைப்புகள், இதில் சிகப்பு வண்ணமிட்டது முரண்பட்ட பகுதியை குறிக்கும், மற்றவை அனைத்தும் ஒரே போதனைகள்.
1. செல்வம் நிலையாமைபொருட்பால்
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அறன் வலியுறுத்தல்
5. தூய் தன்மை
6. துறவு
7. சினம் இன்மை
8. பொறையுடைமை
9. பிறர்மனை நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினை அச்சம்
14. கல்விகாமத்துப்பால்
15. குடிப்பிறப்பு
16. மேன் மக்கள்
17. பெரியாரைப் பிழையாமை
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற் பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
37. பன்னெறி
38. பொது மகளிர்குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள நாலடியாரின் விளக்கஉரைகள் திரு தி.சு.பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தில் 1945ல் வெளியிட்டது.
39. கற்புடை மகளிர்
40. காம நுதலியல்
ஒற்றுமைகள் :
1) "இறைவன்" வரையறை & அவனை வணங்கும் முறை
நாலடியார் செயுள் - 01 :
வான் இடு வில்லின் வரவு அறியா,வாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று.
பொருள் :இஸ்லாம் :
வான்இடு வில்லின் - மேகத்தால் உண்டாகின்ற வில்லைப்போல,
வரவு அறியா வாய்மையால் - பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மையினால்,
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் (புவியில்) படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி - தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது,
சேர்தும் -அடைக்கலமாகிறேன் .
கருத்து :
மேகத்தால் உண்டாகின்ற வில்லைப்போல பிறப்பின் காரணம் அறிந்து கொள்ளமுடியா உண்மை ஆகயால், எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை தரையில் எமது தலை பொருந்தும்படி தொழுது அடைக்கலமாகிறேன்.
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? - அல்குர்ஆன் 67: 16
கருத்து : வானத்தில் இருப்பவன் என்பதற்கு பூமிக்கு (நிலத்திற்கு) இறைவன் வருவது இல்லை என்று பொருள்.
கருத்து :
ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்) என்று 30 வசனங்களை கொண்ட முழு தனி அத்தியாயம் புனித குர்ஆன் -இல் உள்ளது, சஜிதா/ஸுஜூது /ஸஜ்தா என்பதற்கு நெற்றியும் அதன் முடியும் தரையில் பொருந்தும்படி தொழுதல் அல்லது வணங்குதல் என்றுபொருள்.
இரண்டு நூல்களிலும்,
இறைவனின் வரையறை : இறைவன் என்பவன் புவியில் கால் பதிப்பவன் இல்லை, அவன் வானத்தில் இருப்பவன் என்று மறைமுகமாகவும் நேர்முகமாகவும் குறிப்பிடபடுகின்றது.
தொழும்முறை : இறைவனை தரையில் தலையை வைத்து தொழுதல் வேண்டும் என்றே குறிப்பிடுகிறது.
2) சோதிடம் கூடாது
நாலடியார் செயுள் - 52 :
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
பொருள் :
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து,
தலையாயார் - சிறந்தவர்கள்,
தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள்,
தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட,
பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.
கருத்து :இஸ்லாம் :
நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து. சிறந்தவர்கள் தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள் கற்று முடிதலில்லாத இசையும் சோதிடமும் கூவிக் கொண்டிருக்கும் பித்தரைவிட அறிவிலாதவர் பிறர் இல்லை
யாரேனும் சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட இறைவனின் சட்டத்தை (ஷரீஅத்தை) அவர் நிராகரித்து விட்டார்” - அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904
ஒப்பீடு :
இரண்டு நூல்களும் சோதிடம் பார்ப்பதை, கற்பதை ஊக்குவிக்கவில்லை மட்டுமின்றி தடைசெய்கிறது.
3) சாதி கூடாது :
நாலடியார் செயுள் - 136 :
தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
பொருள் :
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்று இகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாகஆற்றைக் கடந்துபோதல் போல;
நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று.
கருத்து :இஸ்லாம் :
படகுசெலுத்துவோன் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணிக்காது அவன் துணையாக ஆற்றைக் கடந்துபோதலை போல, நூல்கள் கற்றவன் துணையுடன் அறிந்து கொள்ளுதல் நன்று. (கல்வியாலே உயர்வு தாழ்வு, சாதியால் அல்ல என்பது கரு.)
கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? - அல் குர்ஆன் 39:9
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" - அல் குர்ஆன் 49:13
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
வேற்றுமைகள் :
1)...
பதிவு தொடரும்...
குறிப்பு :
1) மறுமை வாழ்க்கை பற்றி குர்'ஆன்-ஐ போல் மிகவும் வலியுறுத்தும் நூல் நாலடியார்.
2) பல கடவுள் கொள்கையோ, பெயர்களோ, உருவ வழிபாட்டு முறையோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சான்றாதாரங்கள் :
In PDF :
1) http://noolaham.net/project/38/3800/3800.pdf
In tamil :
1) http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar.html#.VJ_1_ABA
2) http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm
3) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0016.html
In English : http://tamilnation.co/literature/pathinen/naladiyar_english.htm
History :
1) http://www.thoguppukal.in/2012/04/blog-post.html
2) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
4) http://www.valaitamil.com/literature_old-literature-books_pathinen-kezhkanakku/
Other :
1) https://www.facebook.com/Thonmai.Tamizh/posts/219218961543752
2) http://literature-comp.blogspot.in/2011/12/naladiyar.html
3) http://agarathi.com/
Islamic source:
1) http://labbaikudikadutoday.blogspot.in/2012/10/blog-post_4484.html
2) http://www.islamiyapenmani.com/2012/05/muslim-womens-education.html
3) http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/thozil_adipadayil_uyrvu_thazvu_unda/rss#.VKJ9oABA