மண்ணறை வாழ்வு

தமிழர் சமயம்

எழுமையும் எழுபிறப்பும்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள் 
விழுமம் துடைத்தவர் நட்பு. (குறள் 107) 
 

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

குறிப்பு: எழுமை என்பது சொர்க அல்லது நரக வாழ்வை குறிக்கும். ஏழுபிறப்பு என்பது இறப்புக்கும் எழுமைக்கும் இடைப்பட்ட காலத்தை குறிக்கும்.

எழுமை நிலைகள்: 1) இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்படும் வாழ்வுக்கும் இடைப்பட்ட காலம், 2) அடுத்து செய்த வினைகளை விசாரிக்கும் காலம், 3) சொர்கம் அல்லது நரகத்தை அடையும் காலம்.

இதில் எழுபிறப்பு என்பது எழுமைக்கு முந்தய நிலை, அதாவது மண்ணறை அல்லது விசாரணைக்காக எழுப்பப்படுவதை குறிக்கலாம்.  

 

பிறப்பின்றி வீடு - பிறப்பறுத்தல் 
 

உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்

பிறப்பின்றி வீடாம் பரம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 174) 


உறக்கம் உணர்வோடு உயிர்ப்பின்மை அற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்

சொற்பொருள்: பரம் - சொர்கம், உயர்ந்த 

உரைஉறக்கம், உணர்வு, உயிர் கொடுக்கப்படாமை இவை இல்லாமல் போனால் பிறப்பு இன்றி சொர்கத்தை வீடாக பெறலாம்


குறிப்பு: உறக்கமும் உணர்வும் கொடுக்கபப்ட்டு, இறப்பதற்கு முன் உயிர் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனவே உயிர் கொடுக்கப் படுதல் என்பது இறந்த பின்பு நிகழ வேண்டியது. அதே சமயம் அது வீடு என்று சொல்லப்படக்கூடிய சொர்க்கத்துக்கு செல்லும் நிலையையும் குறிப்பிடவில்லை. எனவே மரணித்து பின் சொர்கம் அல்லது நரகதத்துக்கு செல்லும் நிலைக்கு இடையில் உள்ள நிலையை குறிக்கிறது. இது பிறக்கும் முன் உள்ள நிலையையும் குறிக்காது என்பதை குறள் 833 ஐ வாசித்து அறிக.


உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். (ஞானக்குறள் , 11 பிறப்பறுத்தல் 176.)

உடம்பு இரண்டும் கெட்டாலும் உறுபயன் ஒன்று உண்டு
திடம் படும் ஈசன் திறம்.

உறுபயன் - உண்டான பயன் 
திடம் - உறுதி 
திறம் - ஆற்றல் 

உயிருள்ள உடம்பும், இறப்புக்கு பிறகுள்ள உயிரற்ற உடல் இரண்டும் கெட்டு அழிந்தாலும், செய்த வினையின் பயன் உண்டு, அவ்வினைப்பயன் நிலைபெறும் இறைவனின் ஆற்றலினால். 

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 177) 
 
தன்னை அறிந்து செறிந்து அடங்கித் தான் அற்றால்
பின்னைப் பிறப்பு இல்லை வீடு.

தனது நிலையை அறிந்து நிறைவாக அறநூல்களுக்கு கட்டுப்பட்டால்  இறந்த பின் மண்ணறை வாழ்க்கை இல்லை, சுவர்க்கம் மட்டுமே.  
 
செறிந்து - நிறைந்து 
அற்றால் - மரணித்தால்

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 178) 
 
மருள் அன்றி மாசு அறுக்கின் மா தூ வெளியாய்
இருள் இன்றி நிற்கும் இடம். 
 
மருள் = மயக்கம், பிசாசம்
மாசு = குற்றம் 
மா = மிகப்பெரிய 
தூ = தூய, பரிசுத்தமான 
வெளி  = மைதானம் 

மயக்கமன்றி குற்றங்களை அறுத்தால் பெரிய பரிசுத்தமான மைதானம் போல இருள் இல்லாத இடமாக மண்ணறை மாறும். 

(பிறப்பறுத்தல் எனபது மண்ணறை வாழ்க்கையில் மற்றும் விசாரணை கால வாழ்க்கையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது) 

இஸ்லாம் 


இஸ்லாத்தில் இந்த ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 174 க்கான விளக்கம் உள்ளது.

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.” சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்.” மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (”எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்” என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்.) (அறிவிப்பவர்: ஹானிஃ (ரஹ்) திர்மிதி 2230)

 மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர் மற்றொருவர் “நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள். இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான். அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (நூல் : திர்மிதீ 991) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். (முஸ்லிம் 5503)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ‘அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன( த்)தில் மஸீஹித் தஜ்ஜால். பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின்தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 924)

கிறிஸ்தவம் 

பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். - (தானியேல் 12:2) 

முடிவுரை

பிறப்பறுத்தல் என்று கூறப்படுவது மண்ணறை வாழ்க்கை மற்றும் வினைகள் விசாரிக்கப்படும் காலத்துக்குள் செல்லாமல் நேரடியாக சொர்கத்துக்குள் செல்லும் பேரு பெறுவதை குறிக்கிறது. 

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (2:154

இதன் பொருள் இறைவனுக்கு கட்டுப்பட்டு நல்ல ஒழுக்கமுள்ள  வாழ்வு வாழும் ஒருவர், அவர் அதற்காகவே கொல்லப்பட்டார் என்றால் அவர் இறப்பதில்லை. இதைத்தான் இக்கட்டுரையில் உள்ள முதல் ஞானக்குறள் கூறுகிறது. 


இறைவனை எண்ணி அழுதல் - பக்தி


தமிழர் சமயம் 


அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. (ஞானக்குறள் 93)

சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.

இஸ்லாம்

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத மனிதன் நரகத்தில் நுழைய மாட்டான் கறந்த பால் மடியில் மீண்டும் செல்லும் வரை. (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1633, தரம் : ஸஹீஹ் (அல்பானி))

ஏழு மனிதர்களுக்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் அர்ஷின் நிழலை கொடுக்கின்றான். அதிலே ஒருவர்; தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடிக்கும் மனிதன். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.)

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; இரண்டு கண்கள், நரக நெருப்பு அவற்றை தீண்டாது. ஒன்று அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத கண்கள், இரண்டாவது அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வுடைய அடியார்களை பாதுகாத்துக்கொண்டிருந்த கண்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1639, தரம் : ஸஹீஹ் அல்பானி)

 கிறிஸ்தவம் 


என் வருத்தத்தை நீர் அறிகிறீர். என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர். (சங்கீதம் 56:8)

அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள் (1சாமு. 1:10)

மண்ணால் படைக்கப்பட்ட மனிதன்

தமிழர் சமயம்


மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு. 7 
 
பொருள்: மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள்.

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு. 8

பொருள்: தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள்.

மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9- 

பொருள்: மண் நீர் தீ மதி காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள்

இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10- 

பொருள்: இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது.

இஸ்லாம் 


இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல் குர்ஆன் 30: 20)

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன்  21:30)

கிறிஸ்தவம் 


கர்த்தராகிய ஆண்டவர் பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார். அவர் தனது நாசியில் ஜீவ மூச்சை ஊதினார், மேலும் மனிதன் ஒரு உயிரினமானான். (ஆதியாகமம் 2.7)

சிறியாரையும் போற்று

பெரியோர் சிறியோர் என்பது வயதின் அடிபப்டையில் மட்டுமல்ல, அவரவர் பண்பு உட்பட பல்வேறு அடிப்படையிலும் கூட.

தமிழர் சமயம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - (புறநானூறு

பொருள்: எனவே, செல்வத்தாற் பெரியவரை வியந்து மதித்தலும் செய்ய மாட்டோம் ; சிறியோரை இகழ்தலும் செய்ய மாட்டோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே கருதுவோம்.

இஸ்லாம்

சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். [புகாரி 4918

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதை கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “விஷயம் தெரியுமா? (குழந்தைகளுக்கு) கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். அபூஹுரைரா (ஸஹீஹ் முஸ்லிம் 4637)

 கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையை (இரக்கக் குணத்தை)ப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 4636)

கிறிஸ்தவம் 

“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும்... ...இந்தச் சிறியவர்களில் ஒருவரையும் நீ அசட்டை செய்யாதபடி பார்த்துக்கொள். பரலோகத்தில் அவர்களுடைய தூதர்கள் எப்போதும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முகத்தைப் பார்க்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் (மத்தேயு 18:10)

கருத்து

செல்வத்தில், கல்வியில், வயதில், பதவியில் உயர்ந்தவர்களை அதிகமாக புகழ்தலும் கூடாது. இவைகள் இல்லாதவர்களை இகழ்தலும் கூடாது. உள்ளத்தில் உள்ளதை இறைவனே அறிவான். 


நல்லோரால் நிலைக்கும் உலகு *

தமிழர் சமயம் 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 

பொருள்:  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்  புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்)  எல்லாருக்குமே பயனைத் தரும்.

இஸ்லாம்  

மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

இது முஸ்லிம்களின் நன்மை, நம்பிக்கை மற்றும் பரவலின் ஒரு கட்டமாக இருக்கும். பின்னர் மற்றொரு கட்டம் வரும், அதில் விசுவாசிகளின் எண்ணிக்கை குறையும் வரை அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் ஒரு காற்றை அனுப்பும் வரை, அந்த நேரம் வரும் மனிதர்களில் மிகவும் தீயவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். முஸ்லீம் (148)

கிறிஸ்தவம் 

நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார் (மத்தேயு 5:45)

முடிவுரை 

 நல்லோரால் தான் மழை பொழிகிறது ஆனால் அதனால் தீமை செய்வோருக்கும் சேர்த்துதான் பொழிகிறது.