நிலையான தர்மம் *

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

விளக்கவுரை:
  1. மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், 
  2. கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், 
  3. கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்
எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். 
 

இஸ்லாம் 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
  1. நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா)
  2. பயன்பெறப்படும் கல்வி 
  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3358)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
  1. "ஒருமுஃமினான மனிதன் கற்பித்த கல்வியும்,
  2. (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் ,
  3. அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும்,
  4. (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும்,
  5. அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும்,
  6. வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும்,
  7. அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும்,
  8. அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும்
கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (இப்னுமாஜா : 242)

மறுமணம்

இந்து மதம்


ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணத்தில், இந்த வாழ்நாளில் சந்ததி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கிறார்:: 
 
ஓ பெண்ணே, வாழும் உலகத்திற்கு மேலே செல்; இறந்த இவருக்காக நீ நிற்கிறாய்; வா! உங்கள் கையைப் பிடித்தவருக்கு, உங்கள் இரண்டாவது மனைவி ( திதிசு) , நீங்கள் இப்போது மனைவியுடன் கணவன் உறவில் நுழைந்துவிட்டீர்கள்.  ரிக் (x.18.8) 

புதிய கணவர் விதவையை அழைத்துச் செல்லும் போது, ​​அவரது மனைவி கூறுவது போல்: 
 
நம்மைத் தாக்கும் அனைத்து எதிரிகளையும் முறியடித்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வீரமும் வலிமையும் கொண்ட புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம்.

தனுர் ஹஸ்தாத் ஆதாதானோ ம்ருதஸ்யாஸ்மே க்ஷத்ராய வர்சஸே பாலாய |
அத்ரைவ த்வம் இஹ வயம் சுவீரா விஸ்வா ஸ்ப்ருதோ அபிமதிர் ஜயேம || ரிக் (X.18.9)

விதவை தற்போதைய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆசீர்வதிக்கிறது: 
 
ஓ மீற முடியாதவரே! (விதவை) உன் முன் ஞானத்தின் பாதையை மிதித்து, இந்த மனிதனை (மற்றொரு பொருத்தனை) உன் கணவனாகத் தேர்ந்தெடு. அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, நீங்கள் இருவரும் மகிழ்ச்சியின் உலகத்தை ஏற்றுங்கள்.

ப்ரஜானதி அக்னியே ஜீவலோகம் தேவானம் பந்தம் அனுஸஞ்சரந்தி |
அயந் தே கோபதிஸ் தஸ் ஜுஷஸ்வ ஸ்வர்கம் லோகம் அதி ரோஹயீனம் ||4 AV( XVIII.3.4)
 

தமிழர் சமயம் *

கணவனை இழந்த பெண்களை,

    1. ஆளில் பெண்டிர் (நற்.353)
    2. கழிகல மகளிர் (புறம்,280)
    3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)
    4. தொடிகழி மகளிர் (புறம்.238)
    5. கைம்மை (புறம்.125, 261)
    6. படிவமகளிர் (நற்.273)
    7. உயவற்மகளிர் (புறம்.246)
    8. பேஎய்ப் பெண்டிர் (ஐங்.- 70) என்று பல்வேறு பெயர்களில் தமிழ் நூல்கள் குறிப்பிடுகிறது. 
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்
சால்போடு பட்டது இல. (திரிகடுகம் 66)

விளக்கம் புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும். (இவை மூன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்படவேண்டும் என்று இப்பாடல் மறைமுகமாக கூறுகிறது.)  

கிறிஸ்தவம் & யூதம்  

ஒரு மனைவி தன் கணவன் வாழும் வரை அவனுக்குக் கட்டுப்பட்டவள். ஆனால் அவள் கணவன் இறந்துவிட்டால், அவள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது. (1 கொரிந்தியர் 7:39)

அதனால் நான் இளைய விதவைகளை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, அவர்களது குடும்பங்களை நடத்தவும், எதிரிக்கு அவதூறு சொல்ல வாய்ப்பளிக்கவும் செய்வேன். (1 தீமோத்தேயு 5:14)

திருமணமாகாதவர்களிடமும், விதவைகளிடமும், என்னைப் போலவே தனிமையில் இருப்பது நல்லது என்று கூறுகிறேன். ஆனால் அவர்களால் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உணர்ச்சியுடன் எரிவதை விட திருமணம் செய்வது நல்லது. (1 கொரிந்தியர் 7:8-9) 

குறிப்பு: கொரிந்தியர் எனும் இந்த சுவிசேஷம் (வேத வாக்கியம் அல்ல) கிறிஸ்தவத்தை உருவாக்கிய பவுல் எனும் நபரால் எழுதப்பட்டது,  அவர்தான் துறவரத்தை கிறிஸ்தவத்தில் புகுத்தினார், அவர் கூட விதைவளுக்கு மறுமணம் செய்யும் அவசியத்தை கூறி உள்ளார்.

இஸ்லாம் 

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 24:32)

(விதவையான) பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை (அவர்களின்) இத்தா காலத்தில் நீங்கள் சாடையாகத் தெரிவிப்பதிலோ, உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தத் தவறுமில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் (இதோ பாருங்கள்:) அவர்களிடம் இரகசிய உடன்படிக்கை எதுவும் செய்யாதீர்கள்! அவர்களிடம் பேச வேண்டியிருந்தால், வெளிப்படையாக நேர்த்தியாகப் பேசுங்கள்! நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்யத் தீர்மானிக்காதீர்கள்; மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையோனுமாய் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (குர்ஆன் 2:235)

விவாகரத்து

விவாகரத்து என்று இந்துமதத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுக்கு மணமுறிவு, மணவிலக்கு, தள்ளி வைத்தல், தலாக், குலா என்று பல்வேறு பண்பாடுகளில் குறிப்பிடப் படுகிறது.
 

தமிழர் சமயம் 


திருக்குறளில் மணவிலக்கு மறைமுகமாக உள்ளது 
 
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி (குறள் 887)

விளக்கம்: செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

 கிறிஸ்தவம் & யூத மதம்


அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம் பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்து போனாலும், அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளி விட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின் மேல் பாவம் வரப் பண்ணாயாக. (உபகாமம் 24:1-4) 

19 இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார். 2 மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.

3 யேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி,, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர்.

4 அவர்களுக்கு இயேசு,, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். 5 தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’  6 எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.

7 அதற்குப் பரிசேயர்கள்,, “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள்.

8 அதற்கு இயேசு,, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. 9 நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.

10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.

11 அதற்கு இயேசு,, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார். 12 சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.

மத்தேயு 5: விவாகரத்துப்பற்றிய போதனை

31 ,“‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான். (மத்தேயு 5:31-32)

இஸ்லாம்  


மணமுறிவை தடுக்க முயற்சி செய்யும் இஸ்லாம்.  
 
“(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.” (குர்ஆன் 4:35)

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, “(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி. (நூல் : புகாரி 5283) 

இணக்கம் ஏற்படாத நிலையில் விகாரத்துக்கு அனுமதிக்கிறது  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) - (நூல் : புகாரி 5273)

பெண்ணுக்கும் விவாகரத்து செய்ய உரிமை உண்டு. 

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி). (நூல் : நஸயீ  3441


ஹிஜ்ரத் *

கிறிஸ்தவம் 


மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். (மத்தேயு 19:29)

இஸ்லாம் 


“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’ என்று (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்:29:26)

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்:8:72.)

கற்பழிப்பு

தமிழர் சமயம்


கற்பழித்தவனுக்குத தண்டனை அகநானூறு 256

1.       பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு 5
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! 
 
விளக்கம்: பழமையான சேற்று வயலில் ஆமை மேயும் ஊரனே!
வள்ளைக்கொடி மண்டிக்கிடக்கும் நீர்ச்சோலை. அதில், வளைந்த நகம் கொண்ட ஆமை உறங்கும். கல்லில் மோதிய கல் போல் அது நகரும்.
கிழிந்த வாய் நிறையக் கள் உண்டவன் தள்ளாடி நடப்பது போல அது நடக்கும். வயல்களை நாசமாக்கும். ஆம்பல் இலைக்கடியில் பதுங்கிக்கொள்ளும். இப்படிப்பட்ட நிலம் கொண்ட ஊரன் நீ. 
 
2.       பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை 
 
விளக்கம்: பொய் சொல்லாதே. உன் மாயம் எனக்குத் தெரியும். கையும் களவுமாக நீ பிடிபட்டுக்கொண்டது எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியாது. 

3.       மை எழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் 
 
விளக்கம்: நேற்று வையைப் புனலில் உன்னவளோடு நீராடி அவளை உரிய முறையில் துய்த்தாய். அதனை அவளது உடன்பரத்தைத் தோழிமார் மறைத்தனர். என்றாலும் அதனை ஊரெல்லாம் பலபடப் பேசுகிறது. 
 
4.       தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், 15
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை, 20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 
 
விளக்கம்கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமி நல்லவளை ஒருவன் தன் வலிமையைப் பயன்படுத்தி அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டான்.
அந்தக் கொடுமைக்காரன் ஊரார் முன்னிலையில் “அவளை எனக்குத் தெரியாது” என்றான். ஊரார் கரியாளர்களை (சாட்சியாளர்களை) வினவினர். அவன் அவளைக் கெடுத்தது உண்மை எனத் தெரியவந்தது.
ஊர் மன்றத்தார் அவனது உறவினர்களைக் கூட்டினர். அவர்கள் முன்னிலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டினர். அப்போது ஊரே ஆரவாரம் செய்தது. அந்த ஆரவாரம் போல உன் பரத்தை-உறவு பற்றி ஊரார் பேசிக்கொள்கின்றனர்.  
 

இஸ்லாம்


இஸ்லாத்தில் கற்பழிப்புக்கான (இத்திஷாப் / ஜினா பில்-ஜப்ர்) தண்டனையும் விபச்சாரத்திற்க்கான (ஜினா) தண்டனையும் ஒன்றுதான். குற்றவாளி திருமணம் செய்தவராக இருந்தால் கல்லெறியும் தண்டனையும், திருமணம் ஆகவில்லை என்றால் நூறு கசையடிகளும், ஓராண்டுக்கு நாடு கடத்தப்படுதலும் ஆகும். 
 
பலாத்காரம் கத்தி முனையிலோ அல்லது துப்பாக்கி முனையிலோ நடத்தப்படாவிட்டாலும், கற்பழிப்பாளர் ஜினாவுக்கான ஹுதுத் தண்டனைக்கு உட்பட்டவர். இஸ்லாமிய சட்டத்தில்,  ஹத் என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அல்லது சுன்னாவால்  விதிக்கப்படும் தண்டனையைக் குறிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு ஹத்  உத்தரவாதம் அளிக்கப்பட்டால், நீதிமன்றம் அல்லது அரசு அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்தத் தண்டனைகளைச் செயல்படுத்துவதில் எந்தச் சலுகையும் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆயுதம் பயன்படுத்தப்படுவது அச்சுறுத்தப்பட்டால், அவர் ஒரு முஹாரிப் ஆவார், மேலும் அல்லாஹ் கூறும் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஹத் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்  
 
“அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் செய்து, தேசத்தில் அக்கிரமம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் கூலி அவர்கள் கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்களின் கைகளும் கால்களும் எதிரெதிர் பக்கங்களிலிருந்து துண்டிக்கப்படுவதும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் மட்டுமே. அதுவே இவ்வுலகில் அவர்களுக்கு இழிவு, மறுமையில் பெரும் வேதனை அவர்களுக்கு உண்டு” [அல்-மாயிதா 5:33] (IslamQA)  
 

கற்பழிப்பாளர் ஹத் தண்டனைக்கு தகுதியானவர் என்பதற்கு அவருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தால் அல்லது அவர் அதை ஒப்புக்கொண்டால் அவர் ஹட் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். (அல்-இஸ்தித்கார், 7/146)

கற்பழிப்புக்கான ஹத் தண்டனை என்பது கல்லால் அடித்து கொலை செய்வது ஆகும்.  

கிறிஸ்தவம் & யூதம் 

“ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் (கல்லெறிந்து) கொன்றுவிட வேண்டும். அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம். (உபாகமம் 22:25-27)

இந்து மதம்

பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண் நிரபராதி என்றும், கற்பழிப்பில் ஈடுபடும் ஆணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் 
 
    • 8.323. பெண்களை கடத்துபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
    • 8.352. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு தூண்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், இது போன்ற ஒரு குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

குற்றம்: விபச்சாரத்தில் ஈடுபடுதல், பெண்களை சித்திரவதை செய்தல், கட்டாய பாலுறவு தொடர்பு.

தண்டனை: மக்கள் தங்கள் பிறப்புறுப்பு இடைவெளியில் சூடான திடமான வடிவமான தடி மற்றும் தடிகளால் துளைக்கப்படுகிறார்கள், மேலும் யமாவின் வேலைக்காரர்கள் பாதிக்கப்பட்டவரை பின்னால் அடிக்கிறார்கள்.