ஆம், வேதம் ஓதி வீடுபெறலாம்.
தமிழர் சமயம்
வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)
பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளதுகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)
பதவுரை: நண்ணல் - நெருங்குதல்;
பொழிப்புரை: மூலன் உரைசெய்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் காலையில் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் உலகத்தின் தலைவனை நெருங்கலாமே.
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் (மறுமையில் செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படும்) நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்)
இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழி தவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி)
கிறிஸ்தவம் & யூதமதம்
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். - (சங்கீதம் 1:2-6)
கிறிஸ்தவம் & யூதமதம்
தமிழர் சமயம்இயேசு கூறினார் “ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்" (மத்தேயு 5:19,20)
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. (திருமந்திர 1:20:2)
பொருள் : உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகியது. அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர் கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறர்க்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கும்படி செய்வர். கற்றறி - கல்+தறி = கற்றூண். கயல்- மீன். கண்ணுக்கு ஆயிற்று.
யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147)
பொருள்: "இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்கனைகழல் ஈசனைக் காண அரிதாம்கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)
பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.
இஸ்லாம்
வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன் 2:44)
ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! - (குர்ஆன் 103:3)
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)பொருள்: அரு மறை – மறை நூல்களை; சோரும் – கடைபிடிக்காது தவறும்; அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்; செய்யும் – செய்து கொள்வர்; பெரு மிறை – பெரிய துன்பத்தை; தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். - (திருக்குறள் : பொருட்பால் : பேதைமை 834)
பொருள்: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அதை செய்யாத பேதையார் போலப் பேதையார் உலகத்தில் இல்லைகற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. - (குறள் 391)பொருள்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே! - (சிவவாக்கியம் 140)வேதம் உரைத்தானும் ஆகிலன்வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிடவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. - (திருமந்திரம் 3. வேதச் சிறப்பு - 2)
பொருள்: வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி ("வேள்வி" என்பதற்கு அறச்செயல் என்று பொருள்) செய்வதற்காக, உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.
இஸ்லாம்
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன் 2:44)
நீங்கள் செய்யாததை(ப்பிறருக்கு)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகி விட்டது. (குர்ஆன் 61:3)
நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை;(மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.” - (குர்ஆன் 2:38)
கிறிஸ்தவம்
இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8)
பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். - (மத்தேயு 23:1-3)
ஏனென்றால் வேதத்தை விட்ட அறமில்லை!
கிறிஸ்தவம்
அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான். (2 தீமோத்தேயு 3:16,17)
தமிழர் சமயம்
வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)
பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்வேதம் உரைத்தானும் வேதா விளங்கிடவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காவேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. (திருமந்திரம்: 52)
பொருள் : வேதத்தை ஒத்துகின்றவன் வெஹியான் அல்ல, வேதத்தை ஓத வேண்டும் அதை விளங்கி கொள்வதற்கு, வேதத்தை ஓதி அதை செயல் படுத்தவேண்டும், இதுதான் வேதம் உரைத்தல் என்பதன் மெய்ப்பொருள் ஆகும்.
இஸ்லாம்
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி (திருக்குர்ஆன் 2:2)
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (திருக்குர்ஆன் 2:185)
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது. (திருக்குர்ஆன் 16 : 64)
முடிவுரை
வேதத்தை ஓதி மட்டும் வீடுபேறு அடைய முடியாது ஏனென்றால் வேதம் வழங்கப்பட்ட காரணம் அதை ஓதி அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காகவே. எனவே நாம் ஓதும் வேத பாடல்களின் வசனங்களின் பொருள் உணராமல் ஓதுதல் ஆகாது. எனவே ஓதுதல் மட்டும் நோக்கமல்ல, ஓதுவதை புரிந்து நாமும் அதன்படி வாழ்ந்து பிறர்க்கும் உபதேசிப்பது நோக்கமாகும்.
ஓதி, உணர்ந்து, பிறர்க்கு சொல்லி, தானும் கடைபிடிப்பவன் வீடுபேறு அடைவான்!