தான் சார்ந்த மதத்தை பிறரிடம் எடுத்துரைப்பது தவறா?

தமிழர் சமயம்

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147) 
 
பொருள்"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."  
 
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)

பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.  
 
அறம் விளக்கல்

அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு. - (அருங்கலச்செப்பு, 24)

பொருள்: அனைவருக்கும் றத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்க வைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம். 
 

யூதம்  

நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். என்று மோசே கூறினார் - (உபாகமம் 4:14)  
கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்” (சங்கீதம் 105:1)   

கிறிஸ்தவம் 

அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்” (மத்தேயு 15:24)  

ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத்தேயு 24: 14)  

இஸ்லாம்

வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187) 
 
(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களிடம் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)

ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! -  (அல்குர்ஆன் 103:3)

 (நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான் - (அல்குர்ஆன்16:125)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராகவும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)

 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - (அல்குர்ஆன் 2:256)  

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99) 
 

முடிவுரை

வேதத்தை ஓதினால் மட்டும் போதாது அதை பொருள் உணர்ந்து அது கூறும் நெறிகளை பின்பற்றி பிறருக்கும் எடுத்து கூறவேண்டும் என்பது அனைத்து நெறிகளும் இடும் கட்டளை ஆகும். ஆனால் மற்றவரை கட்டாய படுத்துவதை அவைகள் விரும்பவில்லை. 

எல்லோரும் அவரவர் சமயத்தை போதிக்க வேண்டும் என்றால் மாதங்களுக்கு இடையே சண்டை வராமல் இருக்குமா என்று சிந்தித்தால், நான்மறை என்றால் என்ன? கல்வி என்றால் என்ன? என்று அறிந்தால் இப்படி பட்ட குழப்பங்கள் தோன்றாது. இறைவன் ஒருவனே, அனைத்து வேதங்களும் அவனிடம் இருந்தே வந்தது, அனைத்து சமயங்களும் அவன் உருவாக்கியது. அதை கற்காமல் பிழையாக புரிந்துகொண்டு அவன் கூறும் அறத்தில் நில்லாமல் போன மக்களால் ஏற்படும் குழப்பங்கள் இவைகளெல்லாம்.

மேல் & கீழ் உலகில் உள்ள அனைத்தும் இறைவனிடமிருந்துதான் வந்தது

பைபிள்

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1
 
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (I கொரிந்தியர் 8:6)

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.  (கொலோசெயர் 1:16)


திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள் 01)

மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.


பரிபாடல்

ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
          இரண்டி னுணரும் வளியும் நீயே!
          மூன்றி னுணரும் தீயும் நீயே!
          நான்கி னுணரும் நீரும் நீயே!
          ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)


குர்ஆன்

நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். (15:86



தேவர்களும் இறைவனின் கட்டளையின்றி எதையும் சுயமாக செய்ய இயலாது

தமிழர் மதம்


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். - (குறள் 1073
 
உரை: தேவர்கள் கயவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது. 
 
பொருள் : இறைவனின் அனுமதியின்றி தேவர்கள் மனம் விரும்பியபடி செயவார்களாயின் அவர்களும் கயவர்களே.

இஸ்லாம்


தேவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். - (குர்ஆன் 2:32) 
 
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (குர்ஆன்  21:26,27)  
 
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் (குர்ஆன் 16:50

 

கிறிஸ்தவம் 


தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள்.. (சங்கீதம் 103:20, 21)

பெரியோரையும் சிறியோரையும் மதித்தல்

கிறிஸ்தவம்

“இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:10)

தமிழர் மதம்

பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


இஸ்லாம்

‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).


தூதர்கள் முற்றும் உணர்ந்தவர்களா? அவர்கள் விரும்பியதையெல்லாம் சொல்லவோ செய்யவோ முடியுமா?

தமிழர் மதம்


நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே - (திருமந்திரம் 7)

கிறிஸ்தவம் 


"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)

என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். (மத்தேயு 20 : 23)

30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.  (யோவான் 14:30&31

இஸ்லாம் 


நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 21:45)

எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை, ஒவ்வொரு தவணைக் கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. (குர்ஆன் 13:38)