கடவுளை மறப்பது பாவத்தின் விளைவு

தமிழர் சமயம் 


தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே (பாடல் எண் : 13)

பொழிப்புரை: இறைவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அது  தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; அவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் பத்தி செய்பவராயே விளங்குவர்.

இஸ்லாம் 

“அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை (பாவங்களையும் தீய செயல்களும்) அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. உள்ளது” - (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்  83:14)

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள். (குர்ஆன்  59:19)


கிறிஸ்தவம் 

 
ஆனால் உங்கள் அக்கிரமங்கள் உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையே ஒரு பிரிவினை உண்டாக்கியது, உங்கள் பாவங்கள் அவர் கேட்காதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைத்துவிட்டது. (ஏசாயா 59:2)
 
கிருபையினாலே விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்கள் சொந்த செயல் அல்ல; இது கடவுளின் பரிசு, செயல்களின் விளைவு அல்ல, அதனால் யாரும் பெருமை பேசக்கூடாது. (எபேசியர் 2:8-9)

உயர்ந்தவன் செயல்களால் சிறந்தவனே

தமிழர் சமயம் 


பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. - (திருமந்திரம்)

பொழிப்புரை`பார்ப்பான்` என்னும் பெயரை மட்டும் பெற்று அப்பெயருக்கு உகந்த குணங்களான சிவபிரானிடத்து அன்பும், பக்தியும், பயமும், சிவாகம அறிவும், ஒழுக்கமும், அறமும் இல்லாதவன் சிவபெருமானைப் வணங்குவானால், அந்நாட்டில் அரசன் என்று சொல்லப் படுகிறவனுக்கு மோசமான வியாதிகளும், அந்த நாட்டில் பஞ்சமும் உண்டாகும் என்று நந்தி தேவர் கூறுகிறார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (குறள் 280)

பொருள்: உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்
 

இஸ்லாம் 


மக்களே, நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே, உங்கள் தந்தை ஒருவரே. உண்மையாகவே, ஒரு அரேபியருக்கு அரபியல்லாதவர் மீது எந்த மேன்மையும் இல்லை அல்லது அரபி அல்லாதவர் ஒரு அரேபியரை விட எந்த மேன்மையும் கொண்டிருக்கவில்லை; மேலும் ஒரு வெள்ளைக்காரனுக்கு கறுப்பினத்தை விட மேன்மை இல்லை அல்லது ஒரு கறுப்பனுக்கு வெள்ளைக்கு மேல் எந்த மேன்மையும் இல்லை, பக்தி மற்றும் நல்ல செயலைத் தவிர. (ஸஹீஹ் அத்-திர்மிதி, அஹ்மத் 2978
 

கிறிஸ்தவம் 

இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான். நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள். (கலாத்தியர் 3:28-29)

என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், மாறாக பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் பலர் என்னிடம், 'ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, உமது பெயரால் பேய்களைத் துரத்தி, உமது பெயரில் பல வல்லமைகளைச் செய்தோம் அல்லவா?' பின்னர் நான் அவர்களிடம், 'நான் உங்களை ஒருபோதும் அறிந்ததில்லை; அக்கிரமக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். (மத்தேயு 7:21-23)  

முடிவுரை:

பார்ப்பான், தமிழன், அரேபியன், சம்ஸ்கிருதம் பேசுறவர், ஆங்கிலேயர், யூதர், கிரேக்கர் என எதுவும் சிறப்பில்லை. அவரவர் சமய மறைநூல் கூறும் அறத்தின் வழி நிற்பதுதான் சிறப்பு. அனைத்தும் போதிப்பது ஒரே அறமாகும்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு *

 இஸ்லாம் 

மறுமை நாளில் அல்லாஹ் (வலிமையுடையவனும் உன்னதமானவனுமாக) கூறுவான்: ஆதாமின் மகனே, நான் நோய்வாய்ப்பட்டேன், நீங்கள் என்னைச் சந்திக்கவில்லை. 

அவர் கூறுவார்: ஆண்டவரே, நீங்கள் உலகங்களின் இறைவனாக இருக்கும்போது நான் எப்படி உம்மை தரிசிக்க வேண்டும்? 

அல்லாஹ் கூறுவான்: என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான் என்பது உனக்குத் தெரியாதா, நீங்கள் அவரைப் பார்க்கவில்லையா? நீங்கள் அவரைச் சந்தித்திருந்தால் அவருடன் என்னைக் கண்டிருப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 

ஆதாமின் மகனே, நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை. 

அவர் சொல்வார்: ஆண்டவரே, நீங்கள் உலகங்களின் இறைவனாக இருக்கும்போது நான் உங்களுக்கு எப்படி உணவளிக்க வேண்டும்? 

அல்லாஹ் கூறுவான்: என் அடியான் உன்னிடம் உணவு கேட்டதையும், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதையும் நீ அறியவில்லையா? நீங்கள் அவருக்கு உணவளித்திருந்தால், அதை (அவ்வாறு செய்ததற்கான வெகுமதியை) நீங்கள் நிச்சயமாகக் கண்டிருப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 
 
ஆதாமின் மகனே, நான் உன்னிடம் குடிக்கக் கொடு என்று கேட்டேன், நீ குடிக்காமல் கொடுத்தாய். 
 
அவர் கூறுவார்: ஆண்டவரே, நீயே அகிலங்களின் இறைவனாக இருக்கும் போது நான் எப்படி உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்? 
 
அல்லாஹ் கூறுவான்: என் அடியான் அதனால்-அவனுக்குக் குடிக்கக் கொடு என்று கேட்டான், நீ அவனுக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை. நீங்கள் அவருக்குக் குடிக்கக் கொடுத்திருந்தால், நீங்கள் நிச்சயமாக என்னுடன் அதைக் கண்டிருப்பீர்கள். (40 ஹதீஸ் குத்ஸி 18)

கிறிஸ்தவம் 

 34 ,“பின் அரசனானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.

37 ,“அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.

40 ,“பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.

41 ,“பின் அரசர் தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.

44 ,“அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.

45 ,“அப்போது அரசர், ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.

46 ,“பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.” (மத்தேயு 25:34-46)

 

தமிழர் சமயம் 

அதனால்தான் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறினர். திருமூலர்,

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” (திருமந்திரம்-1857)

சூனியம் *

இஸ்லாம்

 
சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)

யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)

மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு வானவர்கள் இறக்கப்பட்டிருந்த (தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

பொருள்: சூனியம் செய்பவன் இறைமறுப்பு செய்தவனாகிறான்  

கிறிஸ்தவம்


சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம். - (யாத்திராகமம் 22:18)

மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். (உபாகமம் 18:11-12





இறைவன் ஒளியால் ஆனவன்

தமிழர் சமயம் 

விளங்கொளி அங்கிவிரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே. (திருமந்திரம் 2683)

பொருள் : சோதி மயமான இறைவன் ஆன்மாவில் விளங்க, ஒளிமயமான அக்கினியும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும் சந்திரனும் வளமான ஒளிகளாக ஆன்மாவில் பிரகாசித்தன. வளப்பம் மிக்க ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன எனில், பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாகக் கொண்டு கலந்து விளங்கியதேயாம்.

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே (திருமந்திரம் 2684
 
பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)

இஸ்லாம் 

நிச்சியமாக அல்லாஹ் ஒளிமிக்கவன்... {அல்லாஹ், வானங்களுக்கும் பூமிக்கும் ஒளியாவான்} [ஸூரதுன் நூர் 35]

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 291)


கிறிஸ்தவம் 

தேவன் வெளிச்சம், அவருக்குள் இருளே இல்லை என்று நாங்கள் அவரிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே. (1 யோவான் 1:5 )

உயிருள்ள ஒவ்வொன்றும் இறைவனை போற்றி வணங்குகிறது *

கிறிஸ்தவம் & யூதம் 

எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்! கர்த்தரைத் துதிப்போம் (சங்கீதம் 150:6)

உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும். ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும். (சங்கீதம் 66:4)

எல்லா படைப்புகளும் கடவுளைப் போற்றுகின்றன 

1 கர்த்தரைத் துதியுங்கள்! பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்; அவரை உயரத்தில் போற்றி!

2 அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள்; அவருடைய புரவலர்களே, அவரைப் போற்றுங்கள்!

3 சூரியனும் சந்திரனும் அவரைத் துதியுங்கள், பிரகாசிக்கும் நட்சத்திரங்களே!

4 உயர்ந்த வானங்களே, வானத்தின் மேலுள்ள நீரே, அவரைத் துதியுங்கள்!

5 அவர்கள் கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கட்டும்! ஏனென்றால், அவர் கட்டளையிட்டார், அவை உருவாக்கப்பட்டன.

6 அவர் அவர்களை என்றென்றும் நிலைநிறுத்தினார்; அவர் ஒரு ஆணையைக் கொடுத்தார், அது ஒழிந்து போகாது. 
 
7 பெரிய கடல்வாழ் உயிரினங்களே, ஆழமான நிலங்களே, 
 
8 தீயும் ஆலங்கட்டியும், பனியும், மூடுபனியும், புயல்காற்றும் அவருடைய வார்த்தையை நிறைவேற்றும் காற்றே, பூமியிலிருந்து ஆண்டவரைத் துதியுங்கள் ! 
 
9 மலைகள் மற்றும் அனைத்து மலைகள், பழ மரங்கள் மற்றும் அனைத்து கேதுருக்கள்! 
 
10 மிருகங்கள் மற்றும் அனைத்து கால்நடைகள், ஊர்ந்து செல்லும் பொருட்கள் மற்றும் பறக்கும் பறவைகள்! 

11 பூமியின் ராஜாக்களும், எல்லா மக்களும், பிரபுக்களும், பூமியின் எல்லா ஆட்சியாளர்களும்!

12 வாலிபர்களும் கன்னிகளும் ஒன்றாக, முதியவர்களும் குழந்தைகளும்!

13 அவர்கள் கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கட்டும்; அவருடைய மகத்துவம் பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

14 அவர் தம்முடைய ஜனங்களுக்காக ஒரு கொம்பை உயர்த்தினார், தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்காகவும், தமக்கு அருகில் இருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் புகழ்கிறார். (சங்கீதம் 148: 1- 14)

இஸ்லாம் 

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை. (குர்ஆன் 16:49)

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன்  17:44)