நோன்பு

தமிழர் மதம்


பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. -திருமந்திரம் 1.6.2

விளக்கம்: உள்ளிருக்கும் பண்டங்களை மறைக்கும் கூரை என்ற உடல் வயதாகி விழுந்தால் அவரது பொருளை உண்ட மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள். அவர் செய்த விரதமும் அவர் பெற்ற ஞானமும் மட்டுமே அவருடன் வரும் என்கிறார் திருமூலர்.


திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. - (முதுமொழிக் காஞ்சி 5:9)

விளக்கம்: தனது தகுதிக்கேற்ற வகையில் நோற்காதது நோன்பு அல்ல.


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர். - நாலடியார் 57

விளக்கம் முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்தபோதும், எப்படியாவது அத்துன்பங்களை விலக்கித் தம் விரதங்களை நிலை நிறுத்தும் மன வலிமை மிக்கவரே ஒழுக்கத்தைக் காக்கும் சிறப்புடையவராவர்.  


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. குறள் 267

 விளக்கம்  சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும் - நோன்பு நோற்கின்றவருக்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து - குறள் 344

விளக்கம் நோன்பு செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். குறள் 160

விளக்கம் உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர் பெரியவர், ஆனாலவர் பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான். 
 

கிறிஸ்தவம்


"மோசே அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் கர்த்தருடனே இருந்தார். மேலும் அவர் உடன்படிக்கையின் வார்த்தைகளை - பத்துக் கட்டளைகளை பலகைகளில் எழுதினார்." யாத்திராகமம் 34:28 (NIV)

"நீங்கள் நோன்பு நோற்கும்போது, ​​நயவஞ்சகர்களைப் போல சோகமாக இருக்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் நோன்பு நோற்பதை மனிதர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் தங்கள் முகங்களைச் சிதைக்கிறார்கள், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாகப் பெற்றனர். ஆனால் நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் பூசவும். நீங்கள் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் என்பது மனிதர்களுக்குத் தெரியாமல், கண்ணுக்குத் தெரியாத உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியாமல் உங்கள் முகத்தைக் கழுவுங்கள்; மறைவில் நடப்பதைக் காணும் உங்கள் தந்தை உங்களுக்குப் பலன் அளிப்பார்.". - (மத்தேயு 6:16-18)

      நோன்பு எல்லா மக்களுக்கும் எல்லா வேதங்களிலும் கொடுக்கப்பட்டன ஒன்று.எனவே அதை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், ஆய்ந்து அறிந்து பின்பற்றுவதே சான்றோருக்கு அழகு.

6 கருத்துகள்:

  1. இஸ்லாம்

    நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி” என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் அவன் எனக்காக சாப்பிடுவதையும் குடிப்பதையும் மேலும் அவனுடைய இச்சைகளையும் எணக்காக விட்டு விட்டான் எனவே நோன்பு என்னுடையதாகும் அதற்கு நானே கூலி வழங்குவேன் மேலும் அதனுடைய கூலிகளை பத்து மடங்காக வழங்குவேன்.(ஆதாரம் புகாரி)

    கிறிஸ்தவம்

    உபவாசத்தைப் பற்றிய போதனை 16 ,“நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். 17 எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக் கொள்ளுங்கள். 18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
    பொருள்: உபவாசம் - உண்ணாமல் நோற்பது


    தமிழர் சமயம்

    திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. - முதுமொழிக் காஞ்சி 5:9.

    திறத்து ஆற்றின் - தத்தம் கூறுபாட்டிற்கு உரிய வழியில், நோலாதது - காவாத விரதம்,
    நோன்பு அன்று - விரதம் என்கிற கணக்கில் சேர்ந்ததன்று.

    பதிலளிநீக்கு

  2. உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை
    அலையாமை ஐயப்படாமை, நிலையாமை
    தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான்,
    நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. ஏலாதி 40


    தனக்குற்ற துன்பத்துக் கோடித் தளராது, பிறருயிரை வருந்த அலையாது, மறுமையை ஐயப்படாது, நிலையாத பிறப்பைத் தீர்க்கும் வா யாராய்ந்து, பசியினையு முண்டியினையு நீக்கித் தவஞ் செய்வா னுறைதற்கே யாராயுமிடம் விண்ணினுச்சி.

    கருத்து: உலையாமை முதலியன உடையான் விண்ணுலக நிலைக்கும் மேல் நிலையை அடையான்.

    பதிலளிநீக்கு
  3. அல்லாஹ் அனுமதித்த சலுகையின்றி ஒருவர் ரமழானில் ஒரு நாள் நோன்பை விட்டால், காலமெல்லாம் அவர் அந்தநோன்பை நோற்றாலும் அவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது- அஹ்மது, திர்மதி, அபூதாவூது

    பதிலளிநீக்கு
  4. உபாகமம் 9:9
    கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன்.

    https://www.biblegateway.com/quicksearch/?qs_version=ERV-TA&quicksearch=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&startnumber=26

    பதிலளிநீக்கு
  5. வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்,
    இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்
    செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர்
    உமிக் குற்றுக் கை வருத்துவார். . . . .[திரிகடுகம் 28]

    நோன்பு இருக்கும் போது கொபித்தல் கூடாது

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான போதனை
    14 பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள்.

    15 அதற்கு இயேசு அவர்களிடம்,, “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%209&version=ERV-TA

    பதிலளிநீக்கு