"வாய்மை" எனும் இந்த நூல் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் காரணங்களையும், நம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதையும் அப்பயணத்தில் வெற்றி அடைய அனைத்து மெய்யியலை சேர்ந்தவர்களுக்கும் வகுக்கப்பட்ட பொதுவான விதிகள் என்னென்ன என்பதை ஒப்பிட்டு அறியவும், அதை மீறும் பொழுது தனி மனிதனாக, குடும்பமாக, சமூகமாக என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அறியவும், அதை ஒழுங்கு படுத்ததும் முறையினை ஆய்ந்து அறியவும் எழுதப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால், இந்நூல் நமது உள்ளத்தில் உள்ள அடைப்படை நம்பிக்கையை ஆய்வு செய்து, மீட்டுருவாக்கம் செய்ய உதவுகிறது.
எல்லோரும் அறிய வேண்டிய மெய்மை அடங்கிய இந்நூலுக்கு "வாய்மை" என்று பெயரிட்ட காரணங்கள் இரண்டு.
1) இந்த நூலின் மூலம் சாதி மத இன மொழி பேதமின்றி ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை விளைவதை விரும்புகிறோம்.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
விளக்கம்: வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்கனைகழல் ஈசனைக் காண அரிதாம்கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திருமந்திரம் - 1795)
பொருள்: இறைவனை குறித்து இடையறாது எண்ணி இருப்பதும், தீதில்லாததை கூறுவதும், என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.
2) வாய்மை என்பது பொய் சொல்லாமையைக் குறிக்கும். மனம், சொல் & மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை, வாய்மை & மெய்மை எனக் கூறுவர். சமகாலத்தில் "வாய்மை" என்கிற பதம் இந்த அனைத்து பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஆழமான, வெளிப்ப்டையான & இரகசியமான உண்மையை உலகுக்கு கூறும் இந்நூலுக்கு "வாய்மை" தலைப்பாக பொருந்தும் என்று கருதியதால் இந்நூல் "வாய்மை"யானது.
பொய்யும், புரளியும், மற்றும் குறை ஞானமும் நிரம்பி வழியும் காலத்தில் "வாய்மை"-யை எழுத ஆதார கூறுகளை தேர்ந்தெடுக்க சில விதிகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று கருதினேன். ஆனால் அது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளப்படாமல், நூல்கள் வழிகாட்டும் முறையில் அமைய வேண்டும் என்று கருதி அதன்வழி அமைய முயற்சித்து உள்ளேன். இந்நூலை வாசித்து முடிக்கும் தருவாயில் இந்த விதிமுறைகள் எப்படி ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று நாம் உணரலாம்.
முதலாவதாக என்னென்ன ஆதாரங்களை பயன்படுத்தலாம் அதற்கான முறையான காரணம் என்ன என்று முடிவு செய்யவேண்டும். அவையாவன,
- தொல்பொருள் ஆய்வு முடிவுகள் & வரலாற்று நூல்கள்
- சமய நூல்கள் & அற நூல்கள்
ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடிய இவ்விரண்டு விதமான தரவுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப் படக்கூடியவைகளா என்று சிந்தித்தால் "இல்லை" என்பதுதான் உங்களது பதிலாக இருக்கும். ஏன்?
தொல்பொருள் ஆய்வு முடிவுகளை ஏற்கும் முன் பின்வரும் பட்டியல் அது முழுமையாக ஏற்கப்படாமல் இருக்க காரணமாக அமையலாம்
- தொல்பொருள் ஆய்வாளர்களின் சமய நம்பிக்கையும் அரசியல் நிலைப்பாடும் அறிவின் தாரமும்: ஆய்வு முடிவுகளை எழுதிய மற்றும் சரிபார்த்த மனிதர்களின் அறிவுத் தரமும் அரசியல் மற்றும் சமய நிலைப்பாடும் அவைகளுக்கு பிழையான விளக்கங்களை தந்திருக்க வாய்ப்பளிக்கும் அல்லது அவர்களின் நிலைப் பாட்டிற்கு சார்பாக முடிவுகளை வெளியிட்டு இருக்க கூடும்.
- விடுபட்ட தரவுகள்: தொல்பொருள் ஆய்வில் கிடைத்தது முழுமையான தரவாக இல்லாமல் இருக்கலாம். தொடர் ஆய்வுகள் அதன் முழு தரவுகளைத் தரலாம்.
- தரவுகளின் விளக்கம்: கிடைக்கப்படும் படிமங்கள் மற்றும் தரவுகள் அதன் முழுப் பொருளை தருவதில்லை. அது கிடைக்கப்பெற்ற மற்ற சில தரவுகளோடு இணைத்து புரிந்துகொள்ளப் படவேண்டும்.
- அரசியல் தலையீடு: ஆய்வாளர்கள் நேர்மையாக இருந்தாலும், ஆட்சி அதிகாரம் உள்ள ஒரு தனிமனிதன் அல்லது குழு, ஆய்வு முடிவுகளை தனக்கு சாதகமாக எழுத முயற்சிக்கிறது. உதாரணமாக கீழடி போன்ற புராதான இடங்களை மத்திய அரசு காழ்ப்புணர்வின் காரணமாக புறந்தள்ளுவதை நாம் அறிவோம்.
எனவே இவ்வாறு கடுமையான முயற்சியில் கண்டறிந்த தொல்பொருள் ஆய்வு தரவுகளை பல்வேறு நிலத்தை சார்ந்த நூல்களில் உள்ள தரவுகளோடு ஒப்பு நோக்கினால் ஆய்வு முடிவு உண்மையை நெருங்கி அமைந்து இருக்கும். இதை வள்ளுவர் கூறும் பொழுது,
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்னிற் பவை (அதிகாரம்:அமைச்சு குறள் 636)
பொருளுரை: மனிதன் கடும் முயற்சியால் வளர்த்துக்கொள்ளும் நுட்ப அறிவை நூலறிவோடு. ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?
எனவே நூல்களோடு ஒப்பிட எண்ணும் பொழுது "எந்த நூல்களோடு ஒப்பிட வேண்டும்?" என்ற பெரும் கேள்வி எழுகிறது. பொதுவாக நூலகள் என்பவைகள் காலம், மொழி, சமையம் மற்றும் துறை போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு முரண்பட்ட கருத்துக்களை மொழிகிறது. இவ்வாறு இருக்கையில் எந்த நூலை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் ஏற்படும் பொழுது, அதை கண்டறிவதற்கான ஒரு விதியை அல்லது ஒரு சூத்திரத்தை யாராவது கூறினால் நலமாக இருக்கும் என்று தோன்றியது.
ஆச்சரியமான விடயம் என்றால் அப்படி ஒரு சூத்திரம் உலகெங்கும் உள்ள மறைநூல்களில் விரவிக் கிடக்கிறது. அவைகளை ஒப்பு நோக்கி ஆய்ந்து "உண்மை"யை வேலியில் விழுந்த ஆடையை கவனமாக எடுப்பது போல இந்நூலில் நாம் எடுக்க முயன்றுள்ளோம். நூல் என்கிற வார்த்தை மறைநூல்களையே அக்காலத்தில் குறித்தது. மேலும் போலி நூலின் வரையறையும் அவைகளைக் களையும் முறையினையும் அறிவது மிக மிக அவசியம். இவ்வரும் உண்மை நூலை கண்டறிந்து பொய் நூல்களை களையும் முறையினை "புனித நூல்கள்" தலைப்பில் காணலாம்.
- உலகில் மனிதர்கள் அனைவரின் உடலமைப்பும் அதன் செயல்பாடுகளும் ஒரே அமைப்பில் உள்ளது, எல்லோரும் ஒரே வானையும், புவியையும், காற்றையும், மழையையும் பகிர்ந்து கொள்கிறோம். எனவே இவைகளை படைத்த தெய்வம் பலவாக இருக்க வாய்ப்பில்லை.
- ஒரே தெய்வம் என்கிற முடிவுக்கு வந்தால், மதம் மொழி மற்றும் இனம் ஆகியவற்றை தாண்டி நம்மை இணைப்பது எது என ஆய்ந்து அறிய முற்படும் பொழுது நமக்கு உள்ள ஒரே ஆதாரம் மறை நூல்கள்.
- மறை நூலை அணுகும் முன் ஒரு அடிப்படையை நாம் அறிய வேண்டும் : பாலையும் மில்க்-யும் இருவேறு பொருட்களாக கருத இயலாது. ஏனென்றால் இரண்டு சொற்களின் வரையறையும் ஒன்று என்று நாம் அறிவோம். அதாவது பால் என்றால் என்ன என்கிற விளக்கத்துக்கும், மில்க் என்றால் என்ன என்கிற விளக்கத்துக்கும், பாலின் பண்புக்கும் மில்க்-இன் பண்புக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே இது ஒரே பொருளை குறிக்கும் இருவேறு சொற்கள் அல்லது ஒரே பொருளை குறிக்கும் இருவேறு மொழிச்சொற்கள் என்று நாம் எளிமையாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். அதே போல வெவ்வேறு மறைநூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ள இறைவனின் பெயரை மட்டுமல்ல, இறைவனின் வரையறை மற்றும் ஒவ்வொரு அடிப்படை கூறுகளையும் ஒப்பிட்டு ஆய்ந்து அறிய வேண்டும்.
- சமூக கலப்பின் பொழுது அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த வெவ்வேறு பாரம்பரியங்களில் உள்ள ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களை வெவ்வேறு கதாபாத்திரமாக்கி புராணம் எழுதிய துயரம் நமது நாட்டில் ஏராளம். உதாரணமாக அரியும் சிவனும் ஒரே கடவுளை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஆனால் புராணத்தில் இவர்கள் மாமன் மச்சான். இன்னொரு புராணத்தில் இருவரும் களவி செய்து ஐயப்பன் என்கிற கடவுளை பெற்றதாக ஒரு செய்தி உண்டு.
- இந்த புரிதலின்மை மேலும் பல தீமைகளுக்கு உள்ளாக்க நேரிடும். உதாரணமாக, பாலும் மில்கும் ஒன்று என்று அறியாமல் இருந்தால் சில வேளைகளில் உங்களுக்கு கடுமையான தேவை இருந்தும், பாலை கல் என்று கருதுவதால் நீங்கள் அதை நிராகரிக்க நேரிடும். அல்லது கல்லை பால் என்று கருதி மதிமயங்க நேரிடும்.
- ஆனால் இதைவிட மிகமிக ஆபத்தான ஒன்று என்னவென்றால் அறியாமல் அவர்களின் தெய்வத்தை நீங்கள் சாடுவதாக எண்ணிக்கொண்டு, நீங்கள் வணங்கும், இருக்கும் ஒரே இறைவனை சாடும் நிலை ஏற்படும்.
- உங்கள் புனித நூலின் தொடர்ச்சியாக அதாவது வழிநூலாக இருந்து அதை நீங்கள் புறக்கணித்தால், உங்கள் வேதத்தை நீங்களே மறுக்கிறீர்கள் என்று பொருள். அதன் மூலம் இறைவனை நீங்கள் மறுத்தவராகிவிடுகின்றீர்.
- தமிழர்சமயம்: தொல்காப்பியம், குறள், திருமந்திரம், சிவவாக்கியம், நாலடியார், ஆத்திச்சூடி, நல்வழி, புறநானூறு, அகநானூறு, அருஞ்செக்கலப்பு, திரிகடுகம், தேவாரம், திருவாசகம். (இதில் வைணவ நூற்கள் 6 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வந்ததாலும், நல்வழி பாடல் 40 இல் குறிப்பிடப் படாததாலும் தவிர்க்கப்பட்டுள்ளது)
- இஸ்லாம்: குர்ஆன், புஹாரி, முஸ்லீம், அபூதாவூத், திரிமிதி, முஅத்தா
- கிறிஸ்தவம் & யூதம்: யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை. தோரா, பைபிள்
- இந்து மதம்: ரிக், யஜுர், சாம, மனுதர்மம், கீதை
- தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்த நூல்கள், ஆய்வு முடிவுகள்.
- மேலும் நமது விதிகளுக்கு பொருந்திவரும் மற்ற சில நூல்கள், செய்திகள் மற்றும் தரவுகள்.
அறம் என்றால் என்ன? ஒரு நிகழ்கால பிரச்சனைக்கு எப்படி தீர்வு தரப்படுகிறது? எப்படி தரப்படவேண்டும்?
நாத்திகர்களிடம் கேட்டால்,
"தனக்கும் பிறருக்கு துன்பம் தராத செயல் அறம் ஆகும்" என்பர். "பிறருக்கு துன்பம் தராத வழிமுறைகளை நாம் நம் கடந்தகால அனுபவத்தில் அதாவது "Trial & Error" முறையில் படிப்பினை பெற்று அதை சட்டமாக அல்லது நெறியாக முறைப்படுத்தி, அதை நாம் அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும்" என்றும் கூறுவர்.
இந்துக்களிடம் கேட்டால்,
வேதமே அறம் என்பர். மனுநீதி என்பது வேதத்தின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக கூறுவர். ஆனால் எந்த வேத வசனத்தின் அடிப்பையில் மனுநீதியின் ஒரு குறிப்பிட்ட சட்டம் சொல்லப்படுகிறது என்கிற ஆதாரமும் சான்றும் அதில் குறிப்பிடுவதில்லை. மேலும் சமகால இந்து மத அறிஞர்கள் அல்லது பக்தர்கள் இது போன்ற மறைநூலின் வசன ஆதாரம் எதையும் குறிப்பிடாமல் கேட்கப் படும் கேள்விக்கு தான்தோன்றி தனமாக பதில் தரும் நிலை நிலவுகிறது. அதிக பட்சமாக இது ஆகமத்தில் அல்லது வேதத்தில் அல்லது புராணத்தில் அல்லது மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுவர். எந்த நூலில்? எந்த வசனத்தில்? என்ன பொருளில்? என்ன சூழ்நிலையில்? கூறப்பட்டுள்ளது என்கிற எந்த ஆதாரமும் அவர்களால் தரமுடியாது. பொய் நூல் உண்டு என்று சித்தர்கள் வாக்காக இருக்கும் பொழுது உண்மை நூல் எது என்று ஆய்ந்து அறியும் கடமை அவர்களுக்கு உண்டு அல்லவா?. வாழ்வின் அறத்தை கூறும் நூல் என்றால், அதை வாசித்து புரிந்து செயல்படுத்தும் வாய்ப்பு எல்லோருக்கும் இருப்பது தானே நியாயம். கடவுள் நியாயமானவர் தானே!
தமிழ் பற்றளர்களை கேட்டால்,
திருக்குறள் தான் அறம் அல்லது உலகப்பொதுமறை என்று கூறுவோம். ஆனால் நிகழ்கால பிரச்சனைக்கு நாம் அதை தீர்வுதரும் நூலாக பார்ப்பது இல்லை. தமிழில் வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மறைநூல்களும் அறநூல்களும் திருக்குறளோடு சேர்த்து வேறென்னென்ன உள்ளது என்பதை அறிய முற்படாததால் "நீயா? நானா?" போன்ற தொலைக் காட்சி நிகழ்வுகள் நிகழ்கால பிரச்சனைக்கு இரு தரப்பை மோதவிட்ட பணம் பார்க்கிறது. தமிழின் மீது பற்று கொண்டு கூறும் அறத்தை வாசிக்கும் சிலரும் அதை மேடை பேச்சுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர், அதற்க்கு வழிப்படுவது இல்லை.
கிறிஸ்தவர்களை கேட்டால்,
பைபிள் தான் அறம் என்பர். அவர்களும் அதை கொண்டு தீர்வு தரும் பொழுது பெரும்பாலானவர்கள் வசன எண்களை தான் குறிப்பிட்டு அதன் சாரத்தை சுருக்கமாக எழுதுகிறார்கள் தவிர, வசனத்தை முழுவதும் கூறி அவ்வசனத்தை விளக்கி தீர்வை கூறுவதில்லை. அது மக்களுக்கு சலிப்பை தரும் என்று கருதுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இஸ்லாமியர்களை கேட்டால்,
திருக்குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு அதன் வசன எண்ணையும் குறிப்பிட்டு அவ்வசனத்தின் விளக்கமாக நபிகள் கூறிய விளக்கம் நிறைந்த நபி மொழி நூலை குறிப்பிட்டு அதன் வசன எண்ணை குறிப்பிட்டு அது யாரால் பதியப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு அதன் நம்பக தன்மையையும் குறிப்பிட்டு அந்த நபி மொழி வசனத்தையும் குறிப்பிட்டு தீர்வு தரும் நிலையை காணலாம்.
முடிவாக, இந்நூல் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளதென்றால், தமிழ் பேசும் நல்லுலகில் பிரதான தத்துவங்களாக பின்பற்றப் படும் சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மற்றும் நாத்தீக சிந்தனைகளுக்கு அவர்கள் ஏற்ற தத்துவத்தின் மூல நூல்களை கொண்டு "மெய்"யை எப்படி அறிய வேண்டும் என விளக்கும் முகமாக முயற்சி செய்யப் பட்டுள்ளது.
இந்த நூலை எப்படி வாசிப்பது?
ஒரு தலைப்பில் உள்ள பாடல்கள் மற்றும் விளக்கவுரை அனைத்தையும் வாசிக்க சிரமமாக இருந்தால் bold செய்யப்பட்ட அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகளை மட்டும் வாசித்தல் கட்டுரையின் முழு சாரமும் அதில் விளங்கிவிடும்.
வாய்மை http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10838
பதிலளிநீக்குவாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
பதிலளிநீக்குதூய்மையா மீச னருள். 103
வாய்மையினால், பொய் கொண்டிராத மனதினால், மாசற்ற உடல் தூய்மையால் ஈசன் அருள் கிடைக்கும்.
குறள் 688:
பதிலளிநீக்குதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
மணக்குடவர் உரை:
தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்
பதிலளிநீக்கு291
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
292
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
296
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
298
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
300
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.