வேத உபதேசத்தை மக்களுக்கு தெரியாமல் மறைத்தல் கூடாது

இஸ்லாம் 

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது” என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன்: 3:187)

உண்மையில் உலக வேதங்களில் இப்படி ஒரு செய்தி உள்ளதா? வாருங்கள் ஆய்வு செய்வோம்! 

தமிழர் சமயம் 

திருமந்திரம் எனும் வேதத்தை சீடர் மாலாங்கனுக்கு திருமூலர் உபதேசம் செய்தார். 

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. (திருமந்திரம்  138)

(ப. இ.) திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! நான் இங்கு  வந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் நந்தியிடம் நேரடியாக மொழிந்த மூலத்தில் இருந்து இறைவனின் விளையாட்டான சீலாங்க வேதத்தை கூறுவதற்கா வந்தேன.

திருமூலர் சீடருக்கு மட்டுமல்ல இவ்வையகம் அனைத்துக்கும் சொல்லப்பட்ட வேதம் திருமந்திரம். 

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. - (திருமந்திரம் 147)

(ப. இ.) நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் பெறவேண்டும். வானிலிருந்த மறை பொருளை இவ்வையக மக்களுக்கு சொல்லவில்லை என்றால் அது தவறு. இந்த உடலை பற்றி உணர்வுடைய திருமந்திரத்தை பற்ற பெற்ற அதாவது அதை ஓத ஓத நமக்கு அதன் விளக்கங்கள் புரியும். அதுவே இந்த உலக மக்களின் இன்பத்துக்கு காரணமாக அமையும். 

யூதம் 

இஸ்ரவேலே, கேளுங்கள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் நேசிக்கக்கடவாய். இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைப் பற்றிப் பேசக்கடவாய். (9. உபாகமம் 6:4–7)

கிறிஸ்தவம்  

பின்பு அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், ர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.  (மாற்கு 16:15)

எதிரிகள் துன்பம் அடைந்தால் மகிழ்ச்சி அடைய கூடாது

 யூதம் 

17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. 18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார். (நீதிமொழிகள் 24)

கிறிஸ்தவம் 

அனைவரையும் நேசியுங்கள்

43 ,“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும். (மத்தேயு 5:43-47)

இஸ்லாம்  

நன்மையும் தீமையும் சமமாக இருக்க முடியாது. தீமைக்கு சிறந்ததைக் கொண்டு பதிலளிக்கவும், அப்போது நீங்கள் பகைமை கொண்டவர் ஒரு நெருங்கிய நண்பரைப் போல இருப்பார். (41:34)

அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றுப்படி, "அல்லாஹ்வின் தூதரே, இணைவைப்பவர்களுக்கு எதிராக ஒரு சாபத்தைப் பிரார்த்திக்கவும்" என்று நான் கூறினார். அதற்கு முகமது நபி (ஸல்),  'நான் சபிப்பவனாக அனுப்பப்படவில்லை. கருணையின் உருவகமாக மட்டுமே அனுப்பப்பட்டேன்' என்று பதிலளித்தார். (முஸ்லீம்)

தமிழர் சமயம் 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (குறள் - 987)

பொருள்: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.  

நடனம் அனுமதிக்கப்பட்டதா?

தமிழர் சமயம்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. – (திருமந்திரம் – 56)

விளக்கம்: பாட்டும், இசையும், பரந்து ஆடும் மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில் மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் பயன் அனுபவிக்கும் இடம் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே.

(ஆட்டு – நடனம், அவனி – உலகம், விரதம் – உறுதி, இகல் – சிக்கல்). 

யூதம் / கிறிஸ்தவம் 

இஸ்லாம்  

ஒரு பெண்ணின் கவர்ச்சிகரமான அசைவுகள் அவளுடைய 'அவ்ராத்தின்' ஒரு பகுதியாகும், மேலும் அவற்றை அவள் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் காட்ட அனுமதிக்கப்படவில்லை. 

ஷேக் இப்னு உதைமின் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 

"நடனம் என்பது கொள்கையளவில் மக்ருஹ் ஆகும், ஆனால் அது மேற்கத்திய முறையில் அல்லது முஸ்லிம் அல்லாத பெண்களைப் பின்பற்றி செய்யப்பட்டால், அது ஹராம் ஆகும், ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மக்களைப் பின்பற்றுபவர் அவர்களில் ஒருவர்." மேலும் இது சில நேரங்களில் ஃபிட்னாவுக்கு வழிவகுக்கிறது, ஏனென்றால் நடனக் கலைஞர் ஒரு இளம், அழகான பெண்ணாக இருக்கலாம், எனவே மற்ற பெண்கள் சோதிக்கப்படுகிறார்கள். அவள் மற்ற பெண்களில் இருந்தாலும், மற்ற பெண்கள் அவளால் சோதிக்கப்படுவதைக் குறிக்கும் விஷயங்களைச் செய்யலாம். ஃபிட்னாவுக்கு என்ன காரணம் என்பது அனுமதிக்கப்படாது." (லிகா அல்-பாப் அல்-மஃப்து, கு. 1085) 

மேலும் அவர் கூறினார்: 

"பெண்கள் நடனமாடுவதைப் பொறுத்தவரை, அது ஒரு தீய செயல், அது அனுமதிக்கப்பட்டது என்று நாம் கூற முடியாது, ஏனென்றால் அதன் காரணமாகப் பெண்களிடையே நடந்த சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆண்களால் அது செய்யப்பட்டால் அது இன்னும் மோசமானது, ஏனென்றால் அது ஆண்கள் பெண்களைப் பின்பற்றுவதாகும், மேலும் அதில் உள்ள தீமை நன்கு அறியப்பட்டதாகும். சில முட்டாள்கள் செய்வது போல, ஆண்களும் பெண்களும் கலந்த குழுவிற்குள் நடனமாடப்பட்டால், அது இன்னும் மோசமானது, ஏனெனில் அது சம்பந்தப்பட்ட கலப்பு மற்றும் பெரிய ஃபித்னா காரணமாக, குறிப்பாக ஒரு திருமண விருந்தில் செய்யப்படும்போது." (ஃபதாவா இஸ்லாமிய்யா, 3/187

முடிவுரை:

 நடனமாடுவதை எந்த சமயமும் முழுமையாக தடைசெய்ய்யவில்லை. மகிழ்ச்சியில்,  இறைவனை துதிக்கும் பொழுது, தலைவனும் தலைவியும் தனிமையில் இருக்கும் பொழுது நடனம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் ஆண்களும் பெண்களும் கலந்து நடனம் ஆடுவதோ, பொதுவில் பாலியல் ரீதியான நடனமோ ஆடப்படுவது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் தடைசெய்யப்பட்ட செயல். அந்தவகையில் நாம் தனிமையில் நமக்கு உரிமை உள்ளவர்கள் முன்பு இசை இல்லாமல் நடனமாடலாம். பொதுவில் அரங்கேற்றமாகவோ, சினிமாவிலோ,  மேடைகளிலோ, இசையுடன் கலந்தோ, ஒரு பெண்ணோ அல்லது ஆணோ நடனம் ஆடுவது கூடாது.

ஆட்சியாளருக்கு கட்டுப்படுதல் *

யூதம் 

 21 மகனே! கர்த்தருக்கும் அரசனுக்கும் மரியாதை செய். அவர்களுக்கு எதிரானவர்களோடு சேராதே. 22 ஏனென்றால் அத்தகையவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள். தேவனும் அரசனும் தம் எதிரிகளுக்கு எவ்வளவு துன்பத்தைக்கொடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியாது. - நீதிமொழிகள் 24

கிறிஸ்தவம் 

14 அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். 15 எனவே புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசும் முட்டாள் மனிதர்களின் வாயை அடைக்கும் பொருட்டு நற்செயல்களைச் செய்யுங்கள். இதையே தேவன் விரும்புகிறார். 16 சுதந்திரமான மனிதரைப்போன்று வாழுங்கள். தீயன செய்வதற்கு ஒரு காரணமாக உங்கள் விடுதலையைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்பவர்களாகவே வாழுங்கள். 1 பேதுரு 2:14-16

இஸ்லாம் 

 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். - திருக்குர்ஆன் 4:59

ஒருவர் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் ஒருவர் அமீரை விட்டு ஒரு ஜான் அளவு வெளியேறி விட்டாலும் அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 7053) 

காய்ந்த திராட்சை போன்ற தலையைக் கொண்ட அபீசினிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்குச் செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 693) , மற்றும் 696, 7142

உயர்வான அல்லாஹ்வின் வேதத்தின் படி உங்களை வழி நடத்திச் செல்லும் கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்! கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முல் ஹூஸைன் (ரலி). நூல் : முஸ்லிம். 

கட்டுப்படுவது முஸ்லிமான ஒருவர் மீது கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ, கட்டுப்படுவதோ கூடாது.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: (புகாரி: 7144) , மற்றும் 2955 


மதத்தை விட்டு வெளியேறுதல் *

யூதம் / கிறிஸ்தவம் 

விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள்

2 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். 3 அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். 4 இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, 5 நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். 6 ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். 7 தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும். (உபாகமம் 17)

இஸ்லாம் 

அபூ மூஸா(ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, ‘இவர் யார்?’ என்று முஆத்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா(ரலி) அவர்கள் ‘இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) யூதராகிவிட்டார்’ என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா(ரலி) அவர்கள் முஆத்(ரலி) அவர்களிடம்) ‘அமருங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) அவர்கள், ‘இல்லை'. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)’ என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா(ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். (புஹாரி பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6923)

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் : புகாரி 3017) 

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. 

  1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
  2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.
  3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (முஸ்லிம்)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல்: நஸயீ 3980)

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள் (திருக்குர்ஆன் (5 : 54)