செயலை இறைவனுக்காக செய்

இந்து மதம்

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்சமநிலையே (பக்தியே) யோகம் ஆகும். (கீதை 2:48)

ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். (கீதை 2:49) 

அர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. (கீதை 2:50)

செயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். (கீதை 2:51)

தமிழர் சமயம் 

மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். நாலடியார் 37

கருத்துரைநீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள். 

இஸ்லாம் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்(அல்குர்ஆன் 2:264)

கிறிஸ்தவம் 

நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! க்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. - (மத்தேயு 6:6)


பிறந்த நாள் *

கிறிஸ்தவம் 

நல்ல தைலத்தை விட நல்ல பெயர் சிறந்தது, ஒருவர் பிறந்த நாளை விட இறந்த நாள் சிறந்தது. (பிரசங்கி 7:1)

இஸ்லாம் 

நபி அவர்கள் பிறந்தநாளை கொண்டாடியதற்கான ஆதாரம் இஸ்லாமிய ஆதாரநூல்களில் எதிலும் காணப்படவில்லை. அவர்களின் சஹாபாக்கள் கொண்டாடியதற்கான ஆதாரமும் இல்லை. எனவே அது வேற்று சமய மக்களின் கன்டுபிடிப்பாகும்.

“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116

நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் *

தமிழர் சமயம்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே. (தொல்காப்பியம் புறத்திணை இயல் 88)

உவகை: மகிழ்ச்சி
எச்சம்: மிச்சம்
புள்: பறவை
நிமித்தம்: சகுனம், குறி பார்த்தல், சாதகம்
கண்ணிய: நினைத்த, அரும்பு, சுருக்கு, பொறி, சிக்கு
ஓம்படை (ஓம்பு+அடை=பாதுகாப்பு+சேர்): பாதுகாப்பான இடம் சேர்த்தல்

விளக்கம்: பயம் விருப்பம் என்பன சிறிதும் இன்றி, நல்ல நாள் கெட்ட நாள், பறவை உள்பட மற்ற சகுனம் பார்ப்பதும், கடுங் காலத்தில் சிக்கியதை நினைத்து பாதுகாப்பான காலம் வருவது பற்றி அறிய விரும்புதல் உள்பட உலகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது ஆகியவற்றை அறிய விரும்பினால் முக்காலத்திலும் (இம்மை, பிறப்பு, மறுமை) சிக்கிகொள்வீர்கள்.

இஸ்லாம் 

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

அன்றை அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெரியும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னைவிட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்) 

ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல்: புஹாரி 4826


 

அண்டை வீடு

தமிழர் சமயம் 

அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு,
மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக்
கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல்,
உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. - (சிறுபஞ்ச மூலம் 60)

கிளை - உறவினர்கள்

பொருள் : அரம் போன்ற சுற்றமும், அடங்காத மனைவியும், அடங்காதன செய்யும் அடிமையும், மரம் போன்ற புதல்வனும், வஞ்சனை செய்கின்ற அயலிருப்பும் உடையவர்களுக்கு வேறு நோய் எதுவும் வேண்டாம். அவையே பெரும் துன்பத்தைத் தரும்

யூதம் 

இதுபோலவே உனது அண்டை வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான். (நீதிமொழிகள் 25:17)

 உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள். (நீதிமொழிகள் 3:29)

உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஆடாவது மாடாவது வழிதப்பிச் செல்வதைக் கண்டால், நீங்கள் அதைக் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள். அதை உரியவர்களிடம் திருப்பிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். 2 ஒருவேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். 3 அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும். (உபாகமம் 22:1-3)

கிறிஸ்தவம் 

37 இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ [a] 38 இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. 39 இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே அண்டை வீட்டானையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:37-39)

15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. (யாக்கோபு 2:15-16)

இஸ்லாம் 

“மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” (குர்ஆன் 4:36).



பெண்கள் தனியே வெளியே செல்லுதல்

தமிழர் சமயம்

கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள் 

தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்து
வேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோல்தொடியாள் கோள் அழியுமாறு. (பாடல் - 161)

விளக்கவுரை: கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.


கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162


அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்

கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்

வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்

தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.


விளக்கவுரை: கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் செல்லும் இயமனாவாள்.

இஸ்லாம் 

மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1862)

கிறிஸ்தவம் 

அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை. (யோவான் 4:27)

குறிப்பு: பெண்ணோடு தனியே பேசுவது கூட யூத சமுதாயத்தில் வழக்கமாக இருந்திருக்கவில்லை என்று இந்த வசனம் காட்டுகிறது.