யூதர்களின் பூர்வீகம்?

ஆப்ரஹாம் மெசபட்டோமியாவை சேர்ந்தவர். அங்கு அவருடைய ஊர் கஸ்திம் (Ur Kasdim) ஆகும். அவர் பின்னாளில் கானான் தேசத்துக்கு குடி பெயர்ந்தார். இதில் உள்ள ஊர் எனும் சொல் தமிழ் சொல்லா என்று கேட்டால் இருக்கலாம். காரணம் 1) சிந்துசமவெளி எழுத்துக்கள் தமிழை ஒட்டி இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. 2) தமிழுக்கும் எபிரேயத்துக்கும் உள்ள ஒற்றுமையைகளை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார் சொல்லியல் அறிஞர் M.S. விக்டர் அவர்கள்.  

இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்ட ஜேக்கப் கானானிலிருந்து லெபனானுக்கு குடி பெயர்ந்தார்.

அவர் கடைசி காலத்தில் அவரது தந்தை வாழ்ந்த ஊரான கானானின் உள்ள பெத்தேல் க்கு மீண்டும் வந்து வாழ்ந்து இறந்தார். ஆதியாகமம் 35

எனவே ஆப்ரஹாமியின் பூர்வீகமும் பாலத்தீன் அல்ல, ஜேக்கோப்பும் தனது இளமை காலத்தில் வாழ்ந்தது பாலத்தீனம் அல்ல.

இந்த யூதர்கள் ஜேக்கப்-இன் சந்ததியான 12 கோத்திரத்தில் ஒரே ஒரு கோத்திரத்தினர் ஆவர். எனவே இவர்கள் கொலை செய்வது யாரை? மீதி 11 கோத்திரத்தினர் எங்கே சென்றனர்?

அன்று அங்கு வாழ்ந்தவர்கள் தான் இன்று உள்ள பாலஸ்தீனியர்கள் ஆவர் அல்லது இஸ்ஹாக்கின் சந்ததியினர் ஆவர் அலல்து மீதி உள்ள 11 கோத்திரத்தினர் ஆவர் அல்லது இதுவெல்லாம் கலந்த மக்கள் ஆவர். இப்போ யூதர்களும் எனும் ஒரே ஒரு கோத்திரத்தினர் மட்டும் எங்கே போவார்கள்? சரி வந்து வாழ்ந்துவிட்டு போகட்டும் ஆனால், பூர்வகுடிகளை விரட்டுவதும் பட்டினி போடுவதும், கொலை செய்வதும் என்ன நியாயம்?  

கடவுள் பேரன்புடையவன், மன்னிப்பபவன், கருணை உடையவன் என்பதால் இது இறைவனின் தவறு அல்ல, எனில் தவறு யார் மீது உள்ளது?

சிறிதளவேனும் தானம் செய்க *

தமிழர் சமயம் 

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். (நாலடியார் 4)

பொருள்: நாள்தோறும் அரிசியின் உமி அளவாவது நம்மால் கொடுக்கக் கூடிய பொருட்களை இரவலர்க்குக் கொடுத்து உண்ண வேண்டும். இல்லையேல் கடல் சூழ்ந்த இவ்வுலகில், இரவலர் நம்மைப் ‘பிறர்க்கு உதவாதவர்கள்’ என்று இகழ்வர்

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். (நாலடியார் 9)

பொருள்: நம்மிடம் இருப்பது மிகவும் சிறிது என்று கருதாமலும், இல்லை என்று மறுத்து விடாமலும் எப்போதும் அறத்தைச் செய்ய வேண்டும். வாயில்கள் தோறும் இரக்கும் தவசியின் உண்கலம் போல புண்ணியம் மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

இஸ்லாம் 

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தானம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் ரலி)

கிறிஸ்தவம் / யூதம் 

 "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படியே அவனவன் தன் இயன்றவரைக் கொடுக்கவேண்டும்." — உபாகமம் 16:17

அரியும் சிவனும் ஒன்னு

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." இது இடம் பெற்ற நூலின் பெயர் என்ன?

இதற்கு நெருக்கமான பொருள் கொண்ட பாடல்…

அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - சிவவாக்கியம் 224

பொ-ரை: தானாக அரியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே!

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. - தேவாரம் 67

பொ-ரை: ஒளிவடிவினனாய்,உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய், அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய், பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய், மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.

அரியும் சிவனும் ஒன்று. ஆனால் திருமாலும் அரியும் வேறு வேறு.

ஜிஹாத்

 இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தில் தீவிரவாதிற்கு இடம் இல்லை என்றால் ஸலாஃபி ஜிகாதிசம் (போரின் மூலம் உலகம் முழுவதையும் இஸ்லாமிய அரசின் கீழ் கொண்டுவருவது) என்ற (தாலிபான், அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களின்) கொள்கையை சவூதி அரேபியா ஆதரிப்பது ஏன்?

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸலஃபி, ஜிஹாதி போன்ற வார்த்தைகளுக்கு உரிய பொருளை முதலில் அறிவோம்.

ஸலஃப்?

ஸலஃபி (அ) ஸலஃபிசம்?

அதாவது நபியின் வழிகாட்டுதல் மற்றும் குர்ஆனின் கொள்கைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் போகும் பொழுது அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று முகமது நபி சொல்லி சென்ற வழிகாட்டுதல் தான் இந்த ஸலஃபியிசம் ஆகும்.

நபி அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு அதற்கடுத்த தலைமுறையினர் (புகாரி)

மேலும் அன்னிஸா 115 அத்தியாயத்தில் கூறுகிறான்:

இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்கு தெளிவான தன் பின்னர் எவர் தூதருக்கு மாறு செய்து, முஃமின்களின் வழியல்லாத (வேறு) வழியை பின்பற்றுவாரோ அவரை நாம் அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பி விடுவோம். அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.

இவ்வசனத்தில் அல்லாஹ், நேர்வழியை பற்றி கூறும் போது இரண்டு விஷயங்களை கூறுகிறான்.

1 – தூதரின் வழி
2 – முஃமின்களின் வழி

முஃமின்களின் வழிக்கு மாற்றமாக செல்வதும் ஒருவரை வழிகேட்டின் பக்கம் கொண்டு சென்று நரகத்தில் தள்ளும் என்கிறான்.

சுருங்க சொன்னால், முகமது நபி அவர்களின் போதனையை அப்படியே பின்பற்றிய மக்களை சண்ட்ரோர்களாக எடுத்துகொண்டு வாழ்வது ஆகும்.

சரி ஜிஹாத் அல்லது போர் பற்றி அந்த சலஃப்களின் பார்வையும் நடைமுறையும் எப்படி இருந்தது? அதற்கான வரலாற்று ஆதாரங்கள் என்ன என்று ஆய்வு செய்வோம்.

ஜிஹாத்?

இது புனிதப்போர் ("Holy War") எனவும் பரவலாக மொழிப்பெயர்க்கப்படுகின்றது. இது சர்ச்சைக்குரிய மொழிப்பெயர்ப்பாகும். பெரும்பான்மையான இஸ்லாமியர்களும், அறிஞர்களும் 'புனித போர்' என்ற மொழியாக்கத்தை ஏற்பதில்லை. மொழியியலாளரான பெர்னார்டு லீவிஸ் (Bernard Lewis) ஜிஹாத் என்பது ஆயுதப் போராட்டம் என்ற பொருளிலேயே பலராலும் புரிந்து கொள்ளப்படுவதாக குறிப்பிடுகிறார்.

உதாரணமாக,

உழைத்தல் என்ற பொருளில் குரான் வசனங்கள் 9:79, 29:6, 29:69 ஆகியவற்றில் ஜிகாத் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு (9:79)

வற்புறுத்துதல் என்ற பொருளில் ஜிகாத், குரான் வசனங்கள் 29:8, 31:15 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.[38]

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். (29:8)

ஜிகாத் என்பதற்கு உறுதி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 5:53, 6:109, 16:38, 24:53, 35:42-43 ஆகியவை ஆகும். இந்த வசனங்களில் 'உறுதி' என்பதை குறிக்க ஜஹத என்ற ஜிகாத் கிளைச் சொல் இடம்பெற்றுள்ளது.

ஜிகாத் என்பதற்கு 'நன்மையை உபதேசம் செய்தல்' என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 22:78, 25:52, 9:73 ஆகியவை ஆகும்.

குரானைப் போல, நபிமொழி தொகுப்புகளான ஹதீஸ்களிலும் ஜிகாத் பல்வேறு அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளது.

'தன்னுடைய உள்ளத்தை எதிர்த்து போராடுவதே ஜிகாத் (உள்ளக ஆன்மீக போராட்டம்)' என்று முஹம்மது நபி கூறியதாக நஸயி நூலில் வரும் ஹதீஸ் பதிவு செய்கிறது.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். - (திரிமிதி 1546)

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் (புனித யாத்திரை) செய்வதே ஜிஹாத் என்ற பொருளிலும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளது.

நபி அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்" என்றார்கள். நபி அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை என்று முஹம்மது நபியின் மனைவி ஆயிஷா அறிவிக்கிறார் - (புகாரி 1529)

முஹம்மது நபி கூறியதாக அபூதாவுத் மற்றும் அஹ்மத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்" என்று பதிலளித்தார்கள். - (அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப், நூல்: அஹ்மத் 18074)

சரி ஜிஹாத் என்பது போரை குறிப்பிடவில்லையா? குறிப்பிட்டுள்ளது, ஆனால் அதற்கென்று உள்ள வரையறையும் சூழ்நிலையும் இந்த கேள்வியில் குறிப்பிட்டது போல் அல்ல.

  • அநீதி இழைக்கப்படும் சூழலிலும்,
  • பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் பொருட்டும் ஆயுத போராட்டம் நடத்தப்படலாம் என்று குரான் கூறுகின்றது.
  • மேலும், உடன்படிக்கைகள் முறிக்கப்படும் போதும்,
  • சொந்த நிலத்தை விட்டு மக்கள் வெளியேற்றப்படும் சூழலிலும் ஆயுத போராட்டத்தை நடத்திக்கொள்ள குரான் அனுமதிக்கின்றது.

எப்படியான சூழல்களில் ஆயுதப்போராட்டம் நடத்தப்படக்கூடாது என்பதற்கும் குரானில் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன.

  • மதத்தை பரப்ப போர் செய்யக்கூடாது என்றும்,
  • போரை முதலில் துவக்கக்கூடாது என்றும்,
  • சமாதானம் செய்துக்கொள்ள விரும்புபவர்களுடனும்,
  • விலகிக்கொள்ள விரும்புபவர்களுடனும் சண்டையிட கூடாது

என்றும் குரான் விதிமுறைகளை வகுத்துள்ளது.

மேலும் போர் விதிமுறைகளையும் வகுத்துள்ளது, அவ்வாறுதான் சலஃப்கள் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வரலாற்றில் பல ஆதாரம் உண்டு. போரில் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றாத இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இல்லவே இல்லையா? இது அந்த ஆட்சியாளரின் பிழை. மதம் அவ்வாறு போதித்தால் மதத்தின் பிழை, மத வழிகாட்டுதல் படி ஆட்சியாளர்கள் நடக்காமல் தவறு செய்தால் அது ஆட்சியாளர்களின் பிழை. இருக்கலாம், ஆனால் அது இஸ்லாம் அல்ல. இன்றைய தமிழ் ஆட்சியாளர்கள் தமிழ் அறப்படியா நடந்து கொள்கிறார்கள்? அதே போலத்தான் கிறிஸ்தவம், யூதம், பௌத்தம், இந்து என எல்லா மத ஆட்சியாளர்களும்.

இது இன்றைய தமிழ் ஆட்சியாளர்கள், கிறிஸ்தவ, யூத, பௌத்த இந்து ஆட்சியாளர்கள் என எல்லா ஆட்சியாளர்களும் பொருந்தும்.

எனவே ஜிஹாத் என்றால் போரின் மூலம் உலகை இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ் கொண்டு வருவது என்பது அநீதியான விளக்கம் ஆகும்.

சரி, சவூதி அல்கொய்தாவை ஆதரிக்கிறதா? நிச்சயமாக இல்லை என்பதற்கு இணையத்தில் பல ஆதாரங்கள் உண்டு.

சவூதி தலிபான்களை ஆதரிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

இன்று தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் ஆட்சியாளர்கள் ஆவர். அந்த அடிப்படையில் அவர்களுடன் ராஜ்ய உறவை மற்ற நாடுகள் பேனவெண்டிய நிலை உள்ளது. இதை ஐக்கிய நாடுகளின் சபையே எர்க்கும் பொழுது சவூதி ஏற்க கூடாதா?

உதாரணமாக குஜராத் கலவரம் காரணமாக மோடியை அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்து வைத்து இருந்தது பிறகு பிரதமரானதும் இதே காரணத்துக்காக அந்த தடையை அமெரிக்கா நீக்கியது என்பதை நாம் அறிவோம்.

எனவே இந்த கேள்வியில் உள்ள ஒவ்வொன்றும் பொய் அல்லது அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.

வெறுப்பை விதைக்காமல் அன்பை விதைப்போம், எதிர்காலம் வசந்தத்தை அறுவடை செய்யட்டும்.

இந்த தலைப்பில் மேலும் அறிய வாசிக்க..

லவ் ஜிகாத் என்றால் என்ன?

 ஒரு முஸ்லீம் ஆணோ பெண்ணோ, முஸ்லீம் அல்லாத ஆணையோ பெண்ணையோ மதம் மாற்றுவதற்காக காதலித்து திருமணம் செய்வதை லவ் ஜிஹாத் என்று இந்துத்துவ ஆதரவாளர்களும் அரசியல் நோக்கம் கொண்டவர்களும் கூறி வருகின்றனர்.

இதற்கு முதலில் இஸ்லாத்தில் அனுமதி உண்டா என்று பார்ப்போம். ஏனென்றால் இஸ்லாம்தான் இதற்க்கெல்லாம் தூண்டுகிறது என்று இஸ்லாத்தின் மேல் பழி சுமத்தப்படும் பொழுது இந்த விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

1) இஸ்லாத்தில் காதலிக்க உரிமை உண்டா?

  1. எதிர் பாலினத்தை கண்டால் பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்,
  2. எதிர் பாலினத்தோடு தனித்து இருக்க வேண்டாம்,
  3. கற்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
  4. விபச்சாரம் செய்யாதீர்கள்

என்று ஆண் பெண் இருவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ஆண்களுக்கான வழிகாட்டுதல்:

"...நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்" (அன்நூர் 24:30)

“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.” (அல்குர்அன் 24:30)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.” (நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.)

(திருமணமாகாத) ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனி த்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். - நூல் : புகாரி 3006

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி. - நூல் : புகாரி 5233

“உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்” என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி 1905.)

ஆண்களுக்கான இந்த விதிமுறை இஸ்லாமிய பெண்களுடன் மட்டுமல்ல, மாற்று சமய சகோதரிகளியும் சேர்த்துதான்.

பெண்களுக்கான வழிகாட்டுதல்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (24:31)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.” (அல்குர்அன் 33:32)

“ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்” என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதீ,முஸ்னத் அஹ்மத்)

“விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம) உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன. கண் செய்யும் விபசாரம் தவறான பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் தவறான (உணர்வுகளை தூண்டிவிடும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது மர்ம உறுப்பு இதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்யாக்குகிறது.” அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி; நூல் : புஹாரி

எனவே தற்காலத்தில் நடைபெறுவது போல பார்த்து பழகி காதல் செய்ய, லிவ் இன் டுகேதர் போன்றவற்றுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

2) ஒரு முஸ்லீம் ஆண் முஸ்லீம் அல்லாத பெண்களை திருமணம் செய்யலாமா?

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)

அதற்காக காதலித்து ஒருவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றலாமா?

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - (அல்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)

ஜிஹாத் என்றால் என்ன ?

ஜிகாத் என்பதற்கு உறுதி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 5:53, 6:109, 16:38, 24:53, 35:42-43 ஆகியவை ஆகும். இந்த வசனங்களில் 'உறுதி' என்பதை குறிக்க ஜஹத என்ற ஜிகாத் கிளைச் சொல் இடம்பெற்றுள்ளது.

ஜிகாத் என்பதற்கு 'நன்மையை உபதேசம் செய்தல்' என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 22:78, 25:52, 9:73 ஆகியவை ஆகும்.

குரானைப் போல, நபிமொழி தொகுப்புகளான ஹதீஸ்களிலும் ஜிகாத் பல்வேறு அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளது.

'தன்னுடைய உள்ளத்தை எதிர்த்து போராடுவதே ஜிகாத் (உள்ளக ஆன்மீக போராட்டம்)' என்று முஹம்மது நபி கூறியதாக நஸயி நூலில் வரும் ஹதீஸ் பதிவு செய்கிறது.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். - (திரிமிதி 1546)

முடிவுரை

அந்நிய பெண்களை பார்க்கவோ, தொட்டு பேசவோ அனுமதிக்காத மார்க்கம் இஸ்லாம். கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக அல்லாஹ்வே பேசுகிறான் எனும் பொழுது இந்த லவ் ஜொஹாத் என்பது நிச்சயமாக அரசியல் சூழ்ச்சிதானே தவிர வேறொன்றும் இல்லை. 
ஒரு முஸ்லீம் பெண்ணோ பையனோ இன்னொரு சமய ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்யும் பொருட்டு மதம் மாற்றவில்லையா? என்று கேட்டால் அப்படி ஒருவர் செய்தால் அது அந்த தனிநபரின் தவறே தவிர அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது முற்றிலும் இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது. 
ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால் திருமணத்துக்காக மதம் மாறுவது என்பது முஸ்லீம் மக்கள் மத்தியில் மட்டுமல்லமல் யூத மதம் ஹிந்து மதம் கிறிஸ்த்தவ மதம் உள்ளிட்ட எல்லா சமயங்களிலும் உண்டு. 
உதாரணமாக: ஜோதிகா, நதியா, குஷ்பு ஆகியோர் ஹிந்துவாக மாறிவிட்டனர். ஆனால் ஷாரூக்கானின் மனைவி கௌரி இன்றும் ஹிந்துவாக இருக்கிறார், ஹிருத்திக்கின் மனைவி இன்றும் முஸ்லிமாக தான் இருக்கிறார்.

இவைகளெல்லாம் நவீன காலத்தில் சமூகத்தில் இயல்பாக நடக்கும் திருமணங்களே தவிர திட்டமிட்டு நடப்பவைகள் அல்ல.