1 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? 2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. 3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள். ( யாக்கோபு 4:1-3)
இஸ்லாம்
மனிதன் வாழ்வதற்கு வசதியாக பேரண்டத்தைப் படைத்தப் பேரறிவாளன் அல்லாஹ், மனிதனின் தேவைகளை தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனின் நியாயமான தேவைகளை அவனிடம் கேட்கும்போது அவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறான்.
1 நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன்.
2 தூதன் என்னிடம், “என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான். “நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது” என்று நான் சொன்னேன்.
3 பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: “அந்த புத்தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச்சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது.
4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”
இஸ்லாம்
அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (குர்ஆன் 5:38)
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்.அவன் (விலை மதிப்புள்ள)தலைக்கவசத்தைத் திருடுகிறான்;அதனால் அவனது கை வெட்டப்படுகிறது.(விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்;அதனாலும் அவனது கை துண்டிக்கப்படுகிறது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (புகாரி 6783)
தமிழர் சமயம்
களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் (கள்ளாமை குறள் எண்:287)
பரிமேலழகர் உரை: களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைகளைப் போன்ற மேகக் கூட்டங்களிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான் ; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன் : 24:43)
மழையின் மூலமே உணவுகள்
இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் , வானத்தை விதானமாகவும் அமைத்து , வானத்தினின்றும் மழை பொழியச்செய்து ; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22)
அல்லாஹ்வின் அருளை கொண்டே விளைச்சல்
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை) களை வெளிப்படுத்துகிறது ; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம் . (அல்குர்ஆன் : 7:58)
மழை நீரை சேகரிப்பதில்
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (அல்குர்ஆன் : 15:22)
நூஹ் (நபி) காலத்தில் ஈமான் கொண்டவர்கள் கப்பலில் உயிர் பிழைத்தும்.அநியாயம் செய்தவர்கள் கன மழையால் அழிந்ததும். (அல்குர்ஆன் : 11:44)
பூமியே ! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள் என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது .
மூஸா (நபி) சமூகத்தார்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும் , இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக ) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். (அல்குர்ஆன் : 7:133)
லூத் (நபி) சமூகத்தவர்களின் அழிவு
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே , எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 27:58)
மறுமைக்கு மழை ஓர் உவமை
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களைக் கிளப்பி ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வறண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வறண்டு இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது (அல்குர்ஆன் : 35:9).
மழையின் படிப்பினைகளை புரிந்து அல்லாஹ்வை நாடுவோம்
எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம். (அல்குர்ஆன் : 6:6)
என்னுடைய சமூகத்தார்களே ! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள் ; இன்னும் ( தவ்பா செய்து ) அவன் பக்கமே மீளுங்கள் ; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான் ; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள் ” (என்றும் எச்சரித்துக் கூறினார்) - (அல்குர்ஆன் : 11:52)
மழை வேண்டி பிரார்த்தனை
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஸஹீஹ் புகாரி : 1012)
பெரு மழையால் பாதிக்கப்பட்டால் பிரார்த்திப்பது
அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது. (ஸஹீஹ் புகாரி : 1017)
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள். (ஸஹீஹ் புகாரி : 1030)
எனக் கூறிப்பிடுகிறார். வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்துகுறட்பாக்களில் கூறுகிறார். அவற்றில்,
விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)
எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது எனகுறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.
மழையும் அறிவியலும்
சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாகமாறுகிறது. இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போதுமேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இந்நிலையில் மேகங்கள் காற்றின்போக்கிற்கேற்ப செல்கிறது. இவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள்தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாகஅப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக்காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.
அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ளவெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தைநிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றது. இவ்வாறு குளிர்க்காற்றுவருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக் காரணமாகிறது. காடுகள்மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல் குளிர்விக்கப் பட்டுமழைப்பெய்கின்றது. இவையாவும் மழை பொழிவிற்கான அறிவியல்காரணங்களாகும்.
இலக்கியமும் மழையும்
மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில்இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்துசூரியனால் நீராக்கப்படுகிறது. இந்த நீராவியை, பூமியின் காற்றுமண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள், நிலப்பரப்புக்குஇழுத்து வருகின்றன’’
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே (அகம் 183)
என்று குறிப்பிடப்படுகின்றது. பெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர்ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின்அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.
பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]
அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றது. அதனால்மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது,தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக்குறுந்தொகை குறிப்பிடுகிறது.
காற்றும் மழையும்
மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமானஇடத்தைப்பெறுகின்றது. நீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப்பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது.இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)
எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறதுவிளக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப்பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும்.இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின்காரணத்தாலும் தமிழகம் புவியின் நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும்கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத்தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை
வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம் (ஐங். 469)
என்றும்
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)
என்றும் சுட்டப்படுகின்றன. காற்று வலம் நோக்கி செல்வதற்கானகாரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.
நனந்தலை உலகம் வளையி நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை (முல்லை. 1-2)
என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது.
இதனை வலியுறுத்தும் விதமாக
பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840
எனக் குறிப்பிடுகின்றது. காற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்தகாரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும்வல்லவர்களாக இருந்தனர். கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்குஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்தமுடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்துவைத்திருந்தனர்.
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]
என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப்பார்க்கத் தக்கதாகும்.
மலையும் மழையும்
காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள்தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில்காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்திஅதிகமாகின்றன. காடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள்தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன்மூலமாக உறிஞ்சுகினறன. ஆனால் மிக குறைந்த அளவுதண்ணீரையே தங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றன.இதனால் தான் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும்குளிர்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர்இலைத்துளைகளின் வழியாக நீராவியாக காற்று மண்டலத்தில்மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும்விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)
இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக்காட்டுகிறது. அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும்சொல்லால் சுட்டபடுகிறது. காற்று வீசும் திசைக்கு குறுக்காகஉள்ள மலைகள் மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்தபுலவர்கள் தங்கள் பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.
கருவி வானம் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]
என்றும்
வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து. (நற்றிணை 261)
என்றும் குறிப்பிடுகின்றன. இதற்கு மருதலையாக மலைகள்மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன.இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப்பொழிவதை
வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]
எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.
சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாகபண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக,அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன.அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக்காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதைஇகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.
மொழிகள் மனிதர்களால் வளர்ந்தவை எனில் மத நூல்கள் குறிப்பிடும் கடவுள்கள் எப்படி உண்மையாக இருக்க முடியும்? மனிதர்களின் கற்பனையாகத் தானே அவை இருக்க முடியும்?
மொழிகள் மனிதனால் வளந்தவைகள் என்பதற்கு என்ன சான்று? உலக சமயங்கள் இதற்கு மாற்றமாக கூறுகிறது.
கடவுள் தான் மொழியை கற்றுக் கொடுத்தார். மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழியை பேசினார்கள். வெள்ளப்பெருக்கு வரை ஒரே மொழியை பேசினர்.
கிறிஸ்தவம்
ஆதியகமம் 11:11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.
ஆதியகமாம் 11:7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். 8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.
விளக்கம்: கடவுள் பல மொழிகளை உருவாகியதை இங்கே குறிப்பிடுகிறார்.
இஸ்லாம்
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)
(குர்ஆன் 30:22). மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்: மொழிகள் வேறுபட்டு இருப்பது இறைவனால்.
தமிழர் சமயம்
என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)
ஆரம்ப காலத்தில் நூல் என்றாலே இறைவன் வழங்கியதுதான் என்று அருங்கலச்செப்பு கூறுகிறது.
அதை முதல் மற்றும் வழி நூல் என்று பிரித்த தொல்காப்பிய நூல் இறைவன் வழங்கிய தமிழ் இலக்கண நூல் ஆகும்.
அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம் (தொல்.பொருள்.649.பேரா.)
மேலும் தமிழ் வளர்க்க தன்னை அனுப்பியதாக திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)
முடிவுரை
மொழிகள் இறைவன் வழங்கியது மட்டுமே. பிற்கால மொழிகளான ஆங்கிலம், ஹிந்தி போன்றவைகள் இறைவன் வழங்கிய மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அவற்றின் மூல கருப்பொருள்களான எழுத்துரு, இலக்கணம், சொற்கள் ஆகியவை வெவ்வேறு மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது கண்கூடு. இவ்வாறு பிரித்தும் சேர்த்தும் செய்யப்படும் மாற்றங்கள் மொழியில் மட்டுமல்ல, மாறாக அரசியல் தத்துவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதாரம் போன்ற பல தலைப்புகளில் நீண்டு செல்கிறது. எனவே உலக வேதங்கள் உள்ளடக்கிய நான்மறைகளை வாசிக்கமல் எல்லாவற்றையும் கற்பனையாக யூகமாக பேசுவதை நாம் குறைத்து கொண்டு இந்த நூல்களை கற்க வேண்டும். எனவே கடவுள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்
அதாவது ஆரம்பகாலத்தில் நூல் என்றாலே அது இறைவனால் வழங்கப் பட்ட சமய நெறி நூல் தான், அது பின்னாளில் வேதம், ஆகமம், மறைநூல், கிதாப் என்று அறியப்பட்டது. அது ஒருமுறை வழங்கப்பட்டதும் முடிந்துவிடவில்லை. அது தொடர்ந்து வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முனைவர்கள் மூலம் வரக்கூடியது ஆகும். அதில் முதலில் வந்த நூல் முதல் நூல் என்றும், அந்த குறிப்பிட்ட முதல் நூலை தொடர்ந்து வரக்கூடிய நூல்கள் அதன் வழிநூல்கள் ஆகும். இவ்வாறு வரக்கூடிய நூல்கள் சில பொழுது ஒரே பெயரில் வழங்கப்பட்டது எனவே அது ஒரே நூலாக தொகுக்கப் பட்டது. சில பொழுது வெவ்வேறு பெயரில் வழங்கப்பட்டு அது வழி நூல் என அடையாளம் காணப்பட்டு அதன் முதல் நூலின் கீழ் இணைக்கப்பட்டது. உதாரணமாக,
ரிக் வேதம் எழுதியவர்கள் 346 ரிஷிகள் ,
பைபிள் எழுதியவர்கள் 10 இயேசுவின் சீடர்கள் மற்றும் துறவிகள்,
தோராவை எழுதியவர்கள் 22 தீர்க்கதரிசிகள்,
தேவாரம் எழுதியவர்கள் 3 நாயன்மார்கள்,
புறநானூறு எழுதியவர்கள் 150 புலவர்கள்,
அகநானூறு எழுதியவர்கள் 146 புலவர்கள்,
நற்றிணை எழுதியவர்கள் 275 புலவர்கள் ,
குறுந்தொகை எழுதியவர்கள் 206 புலவர்கள் ,
நாலடியார் எழுதியவர்கள் பல சமண முனிவர்கள்,
நபிமொழி எழுதியவர்கள் பல இமாம்கள்
மேலும் இந்த பட்டியல் மிக நீண்டது. அனைத்து சமயங்களிலும் இது எப்படி சாதித்தியமானது என்று நாம் சிந்தித்ததுண்டா?
இந்த வழிநூல்கள் அடையாளம் காணப்படாமல், அல்லது அடையாளம் காணப்பட்டும் ஒரே பெயரில் இணைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. உதாரணமாக,
ஒன்று என்று அறிய முடிகிறது. இந்த பாடலின் அடிப்படையில் ஆராய்ந்தால் இவை அனைத்தும் ஒரே கருத்தை கூறுவதை உணர முடியும். மேலும் நாலடியாரின் சுருக்கம்தான் குறள் என்பதும், குறளின் சுருக்கம்தான் ஆத்திச்சூடி என்பதை ஆய்வாளர்கள் அறிவர்.
சரி, இதற்கும் ஆபிரகாமிய மதங்களுக்கும் என்ன தொடர்பு.?
ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் ஒரே மொழியை பேசியதையும் அவர்கள் ஒரே சமயத்தை பின்பற்றியதையும் நாம் அறிவோம்.
“பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது” (ஆதியாகமும்11:1)
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)
பின்னாளில் அவர்கள் அனைவருக்கும் தூதர்கள் மூலம் வேதம் சென்றடைய வேண்டுமே? அதற்கு கடவுள் என்ன வழியை கையாண்டார்? இந்த திருமந்திர பாடல் ஒரு தெளிவான பதிலை தருவதாக நம்பலாம்.
அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்
அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நந்திகள் உள்ளனர்.
(திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர்
நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது
மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
வடக்கு (பதஞ்சலி (அ) வியாக்ரமர்) - ஆரிய வேத பொருள்
தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
கிழக்கு (பதஞ்சலி (அ) வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)
அதாவது முதல் நூல் மொத்தம் நான்கு உண்டு, அதனை தொடர்ந்து வரக்கூடிய நூல்கள் அந்த குறிப்பிட்ட முதல் நூலின் வழிநூல்கள் ஆகும்.
மேற்கில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் வேதம் கொண்டு வந்தவர் ஒரே தேவர், அவர் சிவயோக மாமுனி என்று தமிழர் சமயத்திலும், ஆபிரகாமிய மதங்களில் தேவர்களின் தலைவரான அவர் ஜிப்ராயீல் / கேபிரியேல் என்று அழைக்கப் படுகிறார்.
முடிவுரை:
குர்ஆன் காப்பி அடித்தது அல்ல. மாறாக இந்த வேதங்கள் அனைத்தின் மூலமம் ஒரே கடவுள், அவை அனைத்தையும் தூதர்களுக்கு கொண்டுவந்த தேவர் ஒருவர், இந்த மக்கள் அனைவரும் ஒரே பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் (ஆப்ரஹாமின் குடும்பம்) என்பதால் ஒற்றுமைகள் பல உண்டு எனபதுதான் சரியான புரிதல்.