தேவையை இறைவனிடமே கேட்போம் *

கிறிஸ்தவம் 

1 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? 2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. 3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள். ( யாக்கோபு 4:1-3)

இஸ்லாம் 

 மனிதன் வாழ்வதற்கு வசதியாக பேரண்டத்தைப் படைத்தப் பேரறிவாளன் அல்லாஹ், மனிதனின் தேவைகளை தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனின் நியாயமான தேவைகளை அவனிடம் கேட்கும்போது அவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறான். 

''என்னிடம் கேளுங்கள் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்'' (அல்குர்ஆன் 40:60)

 ''அல்லாஹ்விடம் துஆ - பிரார்த்தனையை விட மதிப்பிற்குரியது எதுவுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - திர்மிதீ, இப்னுமாஜா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக