நான்மறை எது? க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
நான்மறை எது? க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

நான்மறை

"நான்மறை" நாம் அறியாத சொல் அல்ல. அவ்வப்பொழுது ஆங்காங்கே ஆத்திகம் பற்றிய உரையாடல்களில் நாம் செவியுறும் வார்த்தை தான். உதாரணமாக,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 
தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், 
திரு நான்மறை முடிவும் -மேலான நான்கு மறை நூல்களின் கருத்தும்
மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழும், 
முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, 
கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், 
திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், 
ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. (இது இவைகளெல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்கிற பொருளையும் தரும்)

ஆனால் பொதுவாக "நான்மறை" என்பது என்னவாகவெல்லாம் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்.

1) தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர்.

2) நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

3) நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! : ‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது.

4) தமிழர்களின் நான்மறை வேதம் திருக்குறள்: திருக்குறளை திருவள்ளுவர் பத்து பத்து பாடல்களை அதிகாரமாக பிரித்தாரே தவிர அதனை மூன்று பாலாக திருவள்ளுவர் பிரிக்கவில்லை. 133 அதிகாரங்களை மூன்று பாலாக பிரிக்காமல், நான்கு பாலாக மாற்றி அம்மைத்தல் வேண்டும். அதாவது அறம், பொருள், இன்பம், என்ற தலைப்பின் கீழ் வரையறுத்து இருப்பதை. மீள்வரையறை செய்து அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கு பாலில் வடிவமைக்க வேண்டும். அதுவே தமிழர்களின் நான்மறை வேத வடிவின் ஒத்ததாக இருக்கும்.


5) நான்மறை படைத்தது தமிழரே! : உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.

இன்னும் வேறு சில கருத்துக்கள் கூட இருக்கலாம். மேலே குறிப்பிட குறிப்புகளில்  சில உண்மை இருந்தாலும் அவர்களின் இறுதி முடிவில் உண்மை இல்லை எனபது திண்ணம். ஏனென்றால் அவர்களின் முடிவானது ஒரு பகுதி தகவல்களையும், யூகங்களையும் கொண்டு அமைந்துள்ளது. அவைகள் உண்மை அல்ல என்பதற்கான விளக்கங்கள் பின்வருமாறு.

நான்மறை என்பது ஆரிய வேதங்கள் அல்ல. ஏன்?

  • அதர்வணம் பிற்கலத்தில் வேதங்களில் இணைக்கப் பட்டது.
  • ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்றுகுறிப்பிட்டது ஆரிய வேதங்களை அல்ல என்கிற தகவலும், 
  • மற்ற மூன்று வேதங்களின் மதத்திற்கு மாறாக, அதர்வவேதம் வேறு ஒரு 'பிரபலமான மதத்தை' பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறப்படுகிற தகவலும்,  
  • அதர்வ வேதா என்ற பெயர், "அதர்வாணர்களின் வேதம்" என்பதற்காகவே என்று லாரி பாட்டன் கூறுகிற தகவலும்,
  •  அதன் சொந்த வசனம் 10.7.20-ன் படி, நூலின் மிகப் பழமையான பெயர், வேத அறிஞர்களான "அதர்வன்" மற்றும் "ஆங்கிரஸ்" ஆகியவற்றின் கலவையான அதர்வங்கிரசாகும் என்கிற தகவலும், 
  • ஆரம்பகால பௌத்த நிகாயா நூல்கள், அதர்வவேதத்தை நான்காவது வேதமாக அங்கீகரிக்கவில்லை, மேலும் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • பண்டைய சம்ஸ்கிருத பாரம்பரியம் ஆரம்பத்தில் மூன்று வேதங்களை மட்டுமே அங்கீகரித்தது என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், தைத்திரிய பிராமணத்தின் 3.12.9.1 வசனம், ஐதரேய பிராமணத்தின் 5.32-33 வசனம் மற்றும் பிற வேத கால நூல்கள் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், சாமவேதம் அல்லது யஜுர்வேதத்தை கடைபிடிக்கும் ஆசாரியர்களுடன் ஒப்பிடுகையில், அதர்வவேதத்தை கடைப்பிடிக்கும் புரோகிதர்கள் பிராமணர்களின் மிகக் குறைந்த அடுக்குகளாகக் கருதப்பட்டனர். ஒடிசாவில் அதர்வவேத குருமார்களுக்கு எதிரான களங்கம் நவீன காலம் வரை தொடர்கிறது என்கிற தகவலும் 

நான்மறை என்பதை நிச்சயம் சம்ஸ்கிருத வேதங்களை குறிக்கவில்லை என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நான்மறை என்பது தமிழர் மறைகள் மட்டுமோ, அல்லது திருக்குறள் மட்டுமோ அல்ல. ஏனென்றால் மற்றவர்களை போலல்லாமல் மறைநூல்கள் என்றால் என்ன? என்கிற வரையறையும், நான்மறை என்றால் என்ன? என்கிற வரையறையும் நமது மறைநூல்களில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பகுதி தகவல்களையும், யூகங்களையும் விட சில ஆதாரப்பூர்வமான தரவுகள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும். 

நான்மறை என்பது உண்மையில் எதை குறிக்கிறது?

நான் மறை என்பதை அறியும் முன்னர், மறைநூலின் வரையறையினை அறிதல் அடுத்த அடி எடுத்து வைப்பதில் நமக்கு தெளிவை தரும். அதை அறியாதவர்கள் இக்கட்டுரையை வாசித்தல் நலம். 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், 
    1. நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர் - மாடு அல்ல 
    2. அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் 
    3. அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நதிகள் உள்ளனர்.
    4. (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
    5. மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர் 
    6. நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது (தொடர் ஆய்வுகள் தேவைப்படும் இது தனிப்பெரும் தலைப்பு)
    1. மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
    2. வடக்கு (பதஞ்சலி) - ஆரிய வேத பொருள் 
    3. தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
    4. கிழக்கு (வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)

மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிகளின் ரூட் சாட்-இல் ஏகபோக பிழைகள் உள்ளது. ஏனென்றால்  
  • எந்தெந்த மொழி எவைகளிலிருந்து பிறந்தது, 
  • எவை எவையோடு புணர்ந்தது, 
  • எது எதன் இலக்கணத்தை எது கடன் வாங்கியது, 
  • எது எதன் எழுத்தை கடன் வாங்கியது 
என்கிற அடிப்படையில் இந்த சாட் வடிவமைக்கப் படவில்லை. மேலும் இந்த தகவல்கள் இன்னும் முழுமையாக கண்டறியப் படவில்லை, கண்டறியப்பட்ட சில செய்திகள் காழ்ப்புணர்வின் காரணாமாக அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான ரஷ்ய, அமெரிக்க மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுப் படி தமிழ் மூத்த மொழி என்று கருதப் படுகிறது. ஆனால் இந்த சாட் அதை பறைசாற்றவில்லை என்பதை நம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொழிகளை, மதங்களை வகைப்படுத்தும் முறைமை உலக நடைமுறையில் வேறொன்றாக இருந்தாலும் இறைவனின் முறைமை இதுவாக உள்ளது. நான்மறை என்பது உலகம் முழுமைக்கானது என்றால் உலகம் முழுதும் உள்ள மறைநூல்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது அறமல்ல. உலகில் உள்ள அனைத்து சமய, மொழி, நில, இன மக்களின் வேதங்களும் சேர்ந்ததுதான் நான்மறையே தவிர, சம்ஸ்கிருத மறைகள் மட்டுமோ அல்லது தமிழர் நூல்கள் மட்டுமோ நான்மறை அல்ல.

நான்மறைக்கும் ஒரே இறைவன்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. - (தேவாரம் 3320)

பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி மறைநூல்களை ஓதுபவர்களை நன்னெறிக்கு ஊக்குவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும், அனைவருக்கும் ஆசிரியனானவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும். 
 
குறிப்பு: நான்மறை என்பது திசைக்கு ஒரு மறை எனவே அனைத்து மொழி சமய மறை நூல்களையும் இது குறிக்கும்.

நாலுவேத ஞானமும் ஒன்றே  

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவுஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்: நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய இறைவன் படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)
 
"யாது ஊரே யாவரும் கேளீர்" என்கிற வரிகள் மொழிப் பெருமைக்கானது அல்ல. அதை நிதர்சனமாக ஏற்று நம்மை மொழியுடன் சுருக்கிக் கொள்ளாமல் இருப்பது அறிவுடைமை. 

எனவே நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும். 
அவைகள் அனைத்தும் ஒரே இறைவனால் வழங்கபப்ட்டது. 
அவைகள் பேசும் அறம் ஒன்றே. 
அவைகளுக்குள் ஒரு தொடர்பு உண்டு, அதை ஆய்ந்து, அறிந்து, கற்று, ஏற்று, வழிப்படுவது நம் கடமை. 


 

முகமதுவும் இயேசுவும் வருவதை சித்தர்கள் கணித்தார்களா?

முகமதுவும் இயேசுவும் வருவதை சித்தர்கள் கணித்தார்களா? ஆம் என்றால் தமிழர்களாகிய நாம் ஏன் அவர்களின் குரான் மற்றும் சுன்னாவைப் பின்பற்றுவதில்லை?

இயேசு வருவதை முன்கூட்டியே எந்த சித்தரும் சொன்னதில்லை.. அது தேவையும் இல்லை. ஏனென்றால் இயேசு யூதர்களுக்கு மட்டும் வந்ததவர்.

அதற்கு இயேசு, "நான் இஸ்ரேலின் காணாமல் போன ஆடுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டேன்" என்று பதிலளித்தார். (மத்தேயு 15:24)

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)

ஆனால் முகமது தான் உலகம் முழுமைக்கும் வந்த தூதராக கூறினார்.

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 34:28)

மேலும் அவர் வருவதை முன்னமே உலக வேதங்கள் கூறுவதாக குர்ஆன் கூறுகிறது.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)

உலகில் உள்ள வேதங்களை போல, தமிழர் வேதமும் அவரின் வருகையை பேசுகிறது.

பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப்

புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி

அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)

பதவுரை

பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு

ஏதாகிலும் - எது ஆகினாலும்

பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி

புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்

நின்று - நின்று

பூசனை- அன்றாட இறை வணக்கம்

செய்யும் - செய்யக்கூடிய

முகமத் - ஓடு - முகமத் உடன்

ஒத்து - சேர்ந்து, இணங்கி

நின்று - நின்று

ஊழி தோறூழி-ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்

அகமத் - தராகி - அகமத் தராகி

நின்று - நின்று

ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்

ஒழிந்தாரே - நீக்கினார்

விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.

குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகமதோடு என்றும் அகம்+அது+ராகி = அகமதராகி = என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+தராகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு. எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.

ஆனால் தமிழர்கள் ஏன் அவரை வாசிப்பதோ பின்பற்றுவதோ இல்லை?

  • ஒரு சமயத்துக்கு வேதம் தான் அடிப்படை என்று அறியாதார் பலர் அதாவது வேதமல்லாமல் ஒரு சமயம் தோன்றவோ நிலைக்கவோ முடியாது என்ற அடிப்படையை அறியாதார் பலர்.
  • தமிழில் வேதம் இருப்பதை அறியாதார் பலர்
  • சமஸ்கிருத வேதத்தை ஏற்றோர் பலர்
  • அறிந்தவர்கள் கூட அதற்கு பார்ப்பனர்களின் பொழிப்புறையை வாசிகின்றனர் அதாவது தமிழ் வேதத்துக்கு சமஸ்கிருத வேதத்தை மட்டுமே வேதம் என்று நம்புவோரின் பொழிப்புரையை அல்லது புராணங்களை நம்புவோரின் பொழிப்புரையை வசிக்கின்றனர். அவர் எப்படி சரியான பொழிப்புரை கொடுப்பார் அல்லது கொடுக்க முடியும்?
  • நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற அறிவு இல்லாமல் சமஸ்கிருத வேதங்களை நால் வேதம் என்று கருதுவோர்.
  • வேற்று மொழியில் உள்ள வேதத்தை அதாவது அரபியில் உள்ள வேதத்தை தனதாக ஏற்க மறுப்பது. அடிப்படையில் அவ்வாறு ஏற்க்க தேவை இல்லை ஆனால் அவரவர் மொழியில் உள்ள வேதத்தில் தான் அடுத்த குருவை அறியும் வழிகாட்டுதல் உண்டு. அதை கற்காததும் ஏற்க்காததும் இந்த நிலையில் தான் மனிதனை விடும். குறிப்பு: இது சமஸ்கிருதத்தில் உள்ள வேதத்துக்கு பொருந்தாது என்பதை நான்மறை தத்துவத்தை திருமந்திரத்தில் வாசித்தால் புரியலாம்.
  • எவ்வித ஆன்மீக அக்கறையும் இல்லாமல் அதாவது சரி பிழை எதையும் பற்றி கவலைப்படாமல் தற்காலிக நன்மை, பொருளாதாரம், பெருமை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செயல்கள் செய்யப்படுகிறது.
  • உதாரணமாக, வேதம் என்பது வாழ்வில் சோதனை ஏற்படும், நன்மை தீமை இரண்டும் மனிதனுக்கு ஏற்படும், எந்த துன்பத்திலும் நன்மையே செய்ய வேண்டும், நிலையாமை வாழ்க்கையின் அடிப்படை, அன்றாட வாழ்வில் இது இது சரி, இதெல்லாம் பிழை என்று வரையறுத்தி கூறுவதுடன் பல எதார்த்தங்களை சத்தியத்தை பேசும் ஆனால் ஜோதிடம் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா? வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமா இதை இதை செய்யுங்கள் என்று கூறும். எனவே இறைவன் மனிதனுக்கு கொடுத்த வலிகட்டுதல்களான வேதத்தை விட்டு ஜோதிடத்தை நம்புவது எளிமையாக உள்ளது. இவர்கள் நம்பும் ஜோதிடம் 100இல் ஒரு முறை நடந்தால் கூட, அதைத்தான் நம்புகிறார்கள். அதே போல தமது மொழியில் உள்ள வேதத்தை விட்டு இதிகாச புராணங்களை நம்புகிறார்கள்.
  • தற்காலத்தில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் ஆன்மீகத்தை மக்கள் ஏற்று நடக்கின்றனர். இரண்டும் அடிப்படையிலே முரனானது. எனவே அவர்களது ஆன்மீகம் ஏற்க்கதகுந்தது அல்ல என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கின்றனர்.

சுருக்கமாக மக்கள் உண்மையை புரிந்துகொள்வதை தடுக்க என்னவெல்லாம் வழிகள் உள்ளதோ அத்தனையும் மக்கள்மீது ஒரு யுத்தம் போல தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த உண்மைகளை ஆய்ந்து தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் எழுதும் நம்க்கு வரும் விமர்சனங்களும் வசைச்சொல்லும் ஒன்று இரண்டு அல்ல. ஆனால் இதை ஏற்ப்பதில் யாருக்கும் கட்டாயம் இல்லை. விருப்பமிருந்தால் வாசித்து பெறட்டும்.