இறைவன் அவதாரம் எடுப்பானா?

இந்துமதம் 

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || கீதை 10- 3||

அஜம் அநாதி³ம் லோகமஹேஸ்²வரம் ச = பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று
ய: வேத்தி = எவர் அறிவாரோ
மர்த்யேஷு அஸம்மூட⁴: ஸ = மானிடருக்குள்ளே மயக்கம் அவர்< /span>
ஸர்வபாபை: ப்ரமுச்யதே = பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்

விளக்கம்: பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கமடைந்தான்.

தமிழர் சமயம்

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)

சொற்பொருள்:

பிறப்பு இலி - பிறப்பற்ற
நாதனைப் - ஆசிரியனை
பேர் நந்தி - பெருமையுடைய நந்தியும் 
தன்னைச் -  தன்னைப் (நந்தியைப்) போல 
சிறப்பொடு - சிறப்புடைய 
வானவர் - வானவரும் 
சென்று கை கூப்பி - சென்று கை கூப்பி 
மறப்பிலர் - மறக்க மாட்டார்கள்
நெஞ்சினுள் - நெஞ்சினுள் 
மந்திர மாலை - திருமந்திர மாலைமந்திர மாலை
உறைப்போடும் - பொருளுணர்ந்து 
கூடிநின்று ஓதலும் ஆமே - கூடிநின்று ஓதுவார்கள்

விளக்கம்: பிறப்பற்ற நாதனை பெருமையுடைய நந்தியும் அவனைப் போல சிறப்புடைய வானவரும் சென்று கை கூப்பி மறக்காமல் தனது நெஞ்சில் திருமந்திர மாலையை பொருளுணர்ந்து கூடிநின்று ஓதுவார்கள். 

இஸ்லாம்

 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (குர்ஆன் 5:17)

யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது. (குர்ஆன்  5:18)

கிறிஸ்தவம் / யூதம் 


God is not a man, that he should lie; Neither the son of man.  (Numbers 23:19
 
தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடனின் மகனும் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார். (எண்ணாகமம் 23:19)

For I am God, and not a man.. (Hosea 11:9) 
 
நான் தேவன். மனிதனல்ல (ஓசியா 11:9)


பகுத்தறிவை விட வேதங்களை நம்பும் மனிதர்கள் முட்டாள்களாக மாறுகிறார்களா?

 பகுத்தறிவு என்றால் மனிதன் தனது அறிவு மற்றும் ஆற்றலை கொண்டு, எந்த ஒன்றையும் பல்வேறு கூறுகளை அடிப்படையாக கொண்டு, சரியான முறையான அணுகுமுறை மூலம் பகுத்து அறிதல் ஆகும். அதாவது கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் விளையும் அறிவு ஆகும்.

வேதம் எனும் சமய நெறி நூல்கள் என்பது மனிதனின் அனுபவத்தின் மூலம் விளைவதல்ல. மேலும் இது மனித கண்களிலிருந்து மறைந்த விடயங்கள் என்பதால் இது மறைநூல் என்றும் அறியப்படுகிறது.

இரண்டும் முற்றிலும் முரண்படுவது போல தோன்றினாலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைகள் ஆகும். ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் மனித வாழ்வில் பயணிக்க முடியும்.

மனித முயற்சியின் மூலம் விளையாத அறிவை (இறைவனால் வழங்கப்பட்ட வேதம்) மனித முயற்சியை கொண்டு பகுத்து அறிவது அவசியம், ஏனென்றால் பெறப்படும் அறிவு எதுவும் வாழ்வின் நெறிகளாக பயன்படுத்தப்படவே வழங்கப்படுகிறது.

வேதங்களை பகுத்தறியாத மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியாது. எதிர்ப்படும் எதையும் பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆவர்.

  • ஒரு சில செய்திகளை மட்டும் அறிந்து கொண்டு, அல்லது
  • ஒருசில மதத்தில் நிகழும் நிகழ்வுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, அல்லது
  • அறிவியல் ஆதாரங்கள் எனும் மனிதன் ஆய்ந்து அறிந்த உலகியல் விதிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு

இறை மறுப்புக்கு செல்வோர் எவரும் இறை மறுப்பாளர்கள் மட்டுமே, பகுத்தறிவாளர்கள் அல்ல.

உதாரணமாக,

  • இந்து மத மக்கள் பின்பற்றுவதில் பிரச்சனை என்றால், இந்து மத போதனையில் அந்த பிரச்சனை உண்டா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்ய துவங்கும் பொழுது இந்து மதத்துக்கு என்று தனியாக மறைநூல் கிடையாது ஏனென்றால் இந்துமதம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் உருவானது என்று அறிய வருவோம். இந்து மதம் எனபது அரசியல் காரணங்களுக்காக, தத்துவங்களில் முரண்பட்ட பல சமயங்களை வலுக்கட்டாயமாக இணைத்ததன் மூலம் உருவானது என்று ஆய்வில் கண்டறிந்தால், அவைகளை தனித்தனியே பிரிக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அதில் உள்ள சமணம், சைவம், வைணவம், சனாதனம் உட்பட பல சமயங்களின் வரலாறு மற்றும் மறைநூல்கள் ஆகியவற்றை அறிந்து, அதை கற்று, பகுத்து அறிய வேண்டும்.
  • அதே போல சமகாலத்தில் நம்முடன் வாழும் இஸ்லாமிய கிறிஸ்தவ சமயத்தை வாசிக்க வேண்டும். ஒரே உலகத்துக்கு ஒரே கடவுள்தான் என்றால் ஏன் இத்தனை சமயங்கள், ஏன் கடவுளின் பெயர் வேறுபடுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும். அவைகளின் வரையறைகள் மறைநூலின் படி வேறுபடுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • உலக சமயங்கள் அனைத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா? அதற்கான விதிகள் எதேனும் உண்டா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • இயற்பியலுக்கான விதியும் மெய்யியலுக்கான விதியும் வேறு படும் ஏனென்றால் இரண்டின் இயல்பும் வேறு வேறு என்று பகுத்து அறிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுளை நம்ப வேண்டும் என்றால் நான் என் கண்களால் பார்த்தல் தான் நம்புவேன் என்று கூறுவது பொருத்தமற்றது என்று உணர வேண்டும். ஏனென்றால் மெய்யியல் விதியின் இயல்பும் இயற்பியல் விதியின் இயல்பும் வெவ்வேறு தன்மைகளை உடையது ஆகும்.
  • இதையெல்லாம் பகுத்து அறிந்த பிறகு கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும்.

வேற வேலை இல்லையாப்பா என்று கேட்டால், இவைகளை செய்பவர்தான் பகுத்தறிவாளர், இல்லையேல் வெரும் நாத்திகர் மட்டுமே.

சரி, ஒருவர் வேதத்தை நம்பும் பொழுது ஒருவர் முட்டாளாக ஆகிறாரா என்று கேட்டால்…

  • வேதம் என்றால் என்ன என்று பகுத்து அறியாமல்,
  • எது வேதம் என்று பகுத்து அறியாமல்,
  • வேதம் கூறும் அறம் என்ன என்பதை கற்று அறியாமல்,
  • அதை சரியான இடத்தில் பயன்படுத்தாமல்,

வேதத்தை நம்பினால் மூட்டாள் என்ற நிலைக்குத்தான் செல்ல நேரிடும்.

சரியான வேதத்தை கண்டறிந்து, அதை ஓதி, உணர்ந்து, தானும் அடங்கி, பிறருக்கும் உரைத்தல், ஒவ்வொரு பகுத்தறிவு ஆன்மீகவாதிக்கும் அடிப்படை ஆகும்.

ஒவ்வொரு பகுத்தறிவாளரும் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு தான் வரமுடியும். வேதத்தை நம்பும் ஒவ்வொருவரும் பகுத்து அறிந்தால் தான் முட்டாள் ஆவதை தவிர்க்க முடியும்.

இந்து மதத்தில் உள்ள நபிமார்கள் யார்?

மிக நல்ல கேள்வி.. இவ்வாறு கேட்டவுடன் மாற்றுமத அன்பர்களுக்கு பிழையான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.

காரணம், இறைவன் ஒரு தேவதூதர் வாயிலாக ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களுக்கு வேதத்தை உபதேசம் செய்யும் முறை சைவ சமண வைணவ சமயங்களில் இருப்பதாக யாரும் கற்பனை கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால். ஆன்மீக சிந்தனை கொண்ட எம் மக்கள் தனது மொழியில் இறைவன் வேதம் வழங்கி உள்ளதாக கூட அவர்கள் நம்புவதில்லை.

சரி அது இருக்கட்டும், இந்து மதம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழர் சமயமான சைவ சமயத்தின் வேதமான திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்..!

முதலில் திருமந்திரம் வேதமா? ஆம், திருமூலரின் வாக்கு இந்த பாடல்களில் அவ்வாறுதான் கூறுகிறது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - (திருமந்திரம் 135.)

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (திருமந்திரம் 138.)

ஆப்ரஹாமிய மதங்களைப் போல வேதம் வழங்கப்படும் வழிமுறை உண்டா? திருமந்திர பாடல்கள் இவ்வாறு கூறுகிறது..

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

சொற்பொருள்:

நந்தி: தேவர் இனத்தில் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் செய்தி பரிமாறும் செயலை செய்பவர்கள்.

நாதன்: ஆசிரியன், குரு  

குறிப்பு: நந்தி தேவர்கள் நால்வர், ஒவ்வொரு திசைக்கு ஒருவர் பொறுப்பு, நந்தி தேவர் மூலமாக இறைவனை நாடலாம், நந்தி தேவர் திருமூலர் போன்ற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாதராக வழிகாட்டியாக இருக்கிறார். திருமூலர் போன்றவர்கள் மக்களுக்கு நாதனாக வழிகாட்டியாக மக்களுக்கு ஆக்கப் படுகிறார்கள்.

எனவே ஆப்ரஹாமிய சமயங்களைப் போலவே தமிழர் சமயங்களும் புனித செய்திகள் கீழ்கண்ட முறையில்தான் வேத உபதேசம் நடைபெற்றது.

கடவுள் >> நந்தி >> முனைவன் >> சீடர்கள் > >  மக்கள்

அதாவது அனைத்தையும் படைத்த இறைவன் ஆசிரியராக இருந்து தேவர்களின் தலைவரான சிவயோக மாமுனியிடம் கூறிய வேதத்தை, மற்ற மூன்று தேவர்களுக்கு (நந்திகளுக்கு) உபதேசித்து, இவர்கள் நால்வரும் அவரவருக்கு உரிய முனைவருக்கு ஆசிரியராக இருந்து வேதத்தை உபதேசிக்கின்றனர். இப்பொழுது வேதம் உபதேசிக்கப்பட்ட முனைவர் ஆசிரியராக இருந்து மக்களுக்கு அந்த வேதத்தை உபதேசிக்கிறார். அவரிடம் வேதத்தை கற்ற சீடர்கள் அதை மக்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்து உபதேசிப்பதன் மூலம் வேதம் மக்களிடம் பரவுகிறது. இந்த முனைவர்கள் காலத்துக்கு காலம் வேறுபடுகின்றனர், அவர்கள் முன்னே உள்ள வேதத்தில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டு தான் வருவார். 

மேலும் இவ்வாறுதான் உலக சமயங்களில் செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக திருமந்திரம் கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் கூறிய அனைவரும் நபிமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் வேதம் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது என்ற பதில் நீண்ட ஆய்வு பயணத்துக்கு பிறகுதான் கிடைக்கும்.

அந்த வகையில் கீழ்கண்டவர்கள் தமிழுக்கு வந்த நபிமார்களாக இருக்கலாம்.

    1. அகத்தியர்
    2. தொல்காப்பியர்
    3. திருவள்ளுவர்
    4. அவ்வையார் (இவர் பெண் என்பது கற்பனை)
    5. புறநானூறு எழுதிய 150 ஆசிரியர்கள்
    6. அகநானூறு எழுதியவர்கள்
    7. முனைப்பாடியார்
    8. அருஞ்செக்கலப்பு எழுதியவர்
    9. காயத்தூர் பெய்வாயின் முள்ளியார்
    10. கபில தேவர்
    11. பூதஞ் சேந்தனார்
    12. நாதகுத்தனார்
    13. காரியாசான்
    14. கணி மேதாவியார்
    15. நல்லாதனார்
    16. அப்பர்
    17. சுந்தரர்
    18. ஞானசம்பந்தர்
    19. திருமூலர்
    20. மாணிக்கவாசகர்
    21. சிவவாக்கியர்

போன்றவர்கள் சிலராக இருக்கலாம்.

இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

ஹிந்துக்களாகும் முன் சைவம், வைணவம், சமணம் மற்றும் புத்தம் என்று ஒருவருக்கொருவர் வன்முறைகளை செய்துகொண்டிருந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

  • தெற்கில் இருந்த சைவம் வைணவம் சமணம் மட்டுமல்ல,
  • மேற்கில் உள்ள யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற சமயங்களுக்கும்,
  • வடக்கே இருந்த வேத மதம், புத்தம் Tengris சமயங்களுக்கும்,
  • கிழக்கில் இருந்த Confucianism, Daoism, Shinto போன்ற மதங்களுக்கு இடையிலேயேயும்,
  • திசைகளை மீறி மேலே குறிப்பிட்ட சமயங்களுக்கு இடையிலேயேயும்,
  • கடவுளை நம்பும் மக்களுக்கும் நம்பாத மக்களுக்கு இடையிலேயேயும்,

போர்கள் நடைபெற்றது, நடைபெறுவது வரலாறு.

இதற்கு காரணம் அறிய வேண்டுமென்றால் வாசிக்க வாய்மை

ஒரு வரியில் சொல்வதென்றால் இது நமைக்கும் தீமைக்குமான யுத்தம். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் தங்களை நன்மையின் பக்கம் இருப்பதாகவும் எதிரியை தீமையின் பக்கம் இருப்பதாகவும் கருதுவர். ஆனால் தத்தம் மறைநூல் வாசிக்கப்பட்டு தங்களை தாங்களே எடை போடும் பொழுது அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று அவர்களே அறிந்துகொள்ளலாம். மற்றொருவர் கூறும் பொழுது ஏற்க்கும் மனநிலை எவருக்கும் இருக்காது. இந்த உலகம் இருப்பதன் நோக்கமான இந்த யுத்தத்தை உலகம் முடியும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளமல் (கருத்தை மறுத்து பிழை என்று நிருவாமல்) தனிநபரை வசைபாடும் அணுகுமுறை சரியா? பிழையா? இவ்வாறு செய்யும் ஒருவரை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 100% பிழையான அணுகு முறை.

அவர்களை மன நோயாளிகளாக பார்க்கிறேன். முற்றிய மன நோயாளிகள்தான் எதிர் இருப்பவர் யார்? என்ன பேசுகிறார்? எதற்காக பேசுகிறார்? என்று எதையும் நோக்காமல் அவரை எதிரியாக கருதி அவரை காயப்படுத்துவத்திலே குறியாக இருப்பார். அவர்களுக்காக பரிதாப பாட்டு கடந்து செல்வதே சிறந்தது.

சமயங்கள் கூறும் அறநெறிகளான பணிவு, அன்பு, மறைநூல் வரி சான்றுகள் ஆகியவற்றை கொண்டு அவர்களிடம் பேசினாலும் தொடர்ந்து வசை சொற்களையே பயன்படுத்தும் வழக்கம் அவர்களிடம் வெகுவாக இருக்கிறது.

அதீத வெறுப்பு ஆன்மாவுக்கும், அமைதிக்கும், ஆரோக்கியத்துக்கும் தீங்கு தரும் என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வைத்துவிட முடியாது.

ஆன்மீக ஈடுபாடு உடைய ஒருவர் இன்னொரு ஆன்மீக தத்துவத்தை நம்புகிறவரை வெறுப்புடன் கையாள முடிகிறதென்றால் அவரின் ஆன்மீகமும் அவர் வாசிக்கும் மறை நூல்களும் அவருக்கு எவ்வித பலனையும் தரவில்லை என்று பொருள்.

எந்த சமயத்தை சார்ந்தவராயினும் அது இன்னொருவரை வசைபாடுவதால் எந்த ஒன்றையும் சாதித்து விட முடியாது என்று அவரவர் மறைநூல் கூறுகிறது.

கிறிஸ்தவம்

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.’ (எபேசியர் 4:29)

உங்களை எல்லா வகையிலும் நல்ல செயல்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுங்கள், உங்கள் போதனையில் நேர்மை, கண்ணியம் மற்றும் கண்டிக்க முடியாத தெளிவான பேச்சைக் காட்டுங்கள் - டைட்டஸ் 2:7-9

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் இறை நமபிக்கையினுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். - நூல் : திர்மிதி (1950)

வீணா­ன­வற்றைக் கடக்­கும்­போது கண்­ணி­ய­மாகக் கடந்து விடு­வார்கள். அல்­குர்ஆன் (25 : 72)

அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) நல்­லதைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.” நூல்: புகாரி (6018)

தமிழர் சமயம்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் - (நல்வழி வெண்பா : 33)

விளக்கம்: பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி

இருப்பக் காய்கவர்ந் தற்று. (௱ - 100)

பொருள்: இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!

நாம் பிழை என்று கருதுவதை இன்னொருவர் சரி என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நமது அடுத்த நகர்வு, நமது நம்பிக்கையை நாம் ஏன் சரி என்று கருதுகிறோம் என்று ஆரயாவதும், அவரது நம்பிக்கை ஏன் பிழை என்று நாம் கருதுகிறோம் என்பதையும் முறையாக தெரிவிப்பதும் என்றவாறு இருக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பில் வசைபாடுவது, அவரது கல்வி அவருக்கு எந்த வித பயனும் அளிக்கவில்லை என்பது கண்கூடாக வெளிப்படும் நிலை ஆகும். அவருக்கு பதில் அளிக்காமல் கடந்து செல்வது தான் அனைத்து சமய மறை நூல்களும் தரும் வழிகாட்டுதல் ஆகும், அதை செய்வது தன் நமது கடமை.