மண்ணால் படைக்கப்பட்ட மனிதன்

தமிழர் சமயம்


மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு. 7 
 
பொருள்: மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள்.

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு. 8

பொருள்: தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள்.

மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9- 

பொருள்: மண் நீர் தீ மதி காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள்

இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10- 

பொருள்: இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது.

இஸ்லாம் 


இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல் குர்ஆன் 30: 20)

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன்  21:30)

கிறிஸ்தவம் 


கர்த்தராகிய ஆண்டவர் பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார். அவர் தனது நாசியில் ஜீவ மூச்சை ஊதினார், மேலும் மனிதன் ஒரு உயிரினமானான். (ஆதியாகமம் 2.7)

சிறியாரையும் போற்று

பெரியோர் சிறியோர் என்பது வயதின் அடிபப்டையில் மட்டுமல்ல, அவரவர் பண்பு உட்பட பல்வேறு அடிப்படையிலும் கூட.

தமிழர் சமயம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - (புறநானூறு

பொருள்: எனவே, செல்வத்தாற் பெரியவரை வியந்து மதித்தலும் செய்ய மாட்டோம் ; சிறியோரை இகழ்தலும் செய்ய மாட்டோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே கருதுவோம்.

இஸ்லாம்

சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். [புகாரி 4918

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதை கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “விஷயம் தெரியுமா? (குழந்தைகளுக்கு) கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். அபூஹுரைரா (ஸஹீஹ் முஸ்லிம் 4637)

 கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையை (இரக்கக் குணத்தை)ப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 4636)

கிறிஸ்தவம் 

“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும்... ...இந்தச் சிறியவர்களில் ஒருவரையும் நீ அசட்டை செய்யாதபடி பார்த்துக்கொள். பரலோகத்தில் அவர்களுடைய தூதர்கள் எப்போதும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முகத்தைப் பார்க்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் (மத்தேயு 18:10)

கருத்து

செல்வத்தில், கல்வியில், வயதில், பதவியில் உயர்ந்தவர்களை அதிகமாக புகழ்தலும் கூடாது. இவைகள் இல்லாதவர்களை இகழ்தலும் கூடாது. உள்ளத்தில் உள்ளதை இறைவனே அறிவான். 


நல்லோரால் நிலைக்கும் உலகு *

தமிழர் சமயம் 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 

பொருள்:  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்  புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்)  எல்லாருக்குமே பயனைத் தரும்.

இஸ்லாம்  

மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

இது முஸ்லிம்களின் நன்மை, நம்பிக்கை மற்றும் பரவலின் ஒரு கட்டமாக இருக்கும். பின்னர் மற்றொரு கட்டம் வரும், அதில் விசுவாசிகளின் எண்ணிக்கை குறையும் வரை அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் ஒரு காற்றை அனுப்பும் வரை, அந்த நேரம் வரும் மனிதர்களில் மிகவும் தீயவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். முஸ்லீம் (148)

கிறிஸ்தவம் 

நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார் (மத்தேயு 5:45)

முடிவுரை 

 நல்லோரால் தான் மழை பொழிகிறது ஆனால் அதனால் தீமை செய்வோருக்கும் சேர்த்துதான் பொழிகிறது. 

கூடா நட்பு

தமிழர் சமயம் 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. - (மூதுரை)

பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்  கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.

இஸ்லாம் 


குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். 
 

கிறிஸ்தவம் 

ஏமாந்துவிடாதீர்கள்: "கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கத்தை அழிக்கிறது." - ( 1 கொரிந்தியர் 15:33 )

கோபம் கொண்ட மனிதனுடன் நட்பு கொள்ளாதே, கோபம் கொண்டவனுடன் செல்லாதே, அவனுடைய வழிகளைக் கற்று, கண்ணியில் சிக்கிக் கொள்ளாதே. ( நீதிமொழிகள் 22:24-25 )

ஞானிகளுடன் நடப்பவன் ஞானியாவான், ஆனால் மூடர்களின் தோழனோ கேடு அடைவான். (நீதிமொழிகள் 13:20 )

ஒரு முட்டாள் இருப்பை விட்டு விடுங்கள், ஏனென்றால் நீங்கள் அறிவின் வார்த்தைகளை சந்திக்கவில்லை. (நீதிமொழிகள் 14:7 )

விரயம் - வரவு எட்டணா செலவு பத்தனா

தமிழர் சமயம் 


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு நல்வழி வெண்பா : 25

விளக்கம் ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது 

இஸ்லாம் 

“இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்அன்ஆம்: 141)

“மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)

“(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)


கிறிஸ்தவம் 

 சில நாட்கள் கழித்து, அந்த இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். அங்கே அவன் மோசமான வாழ்க்கை* வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்.  லூக்கா 15:13