தமிழர் சமயம்
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. - (திருமந்திரம்)
பொழிப்புரை: `பார்ப்பான்` என்னும் பெயரை மட்டும் பெற்று அப்பெயருக்கு உகந்த குணங்களான சிவபிரானிடத்து அன்பும், பக்தியும், பயமும், சிவாகம அறிவும், ஒழுக்கமும், அறமும் இல்லாதவன் சிவபெருமானைப் வணங்குவானால், அந்நாட்டில் அரசன் என்று சொல்லப் படுகிறவனுக்கு மோசமான வியாதிகளும், அந்த நாட்டில் பஞ்சமும் உண்டாகும் என்று நந்தி தேவர் கூறுகிறார்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (குறள் 280)
பொருள்: உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
இஸ்லாம்
மக்களே, நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே, உங்கள் தந்தை ஒருவரே. உண்மையாகவே, ஒரு அரேபியருக்கு அரபியல்லாதவர் மீது எந்த மேன்மையும் இல்லை அல்லது அரபி அல்லாதவர் ஒரு அரேபியரை விட எந்த மேன்மையும் கொண்டிருக்கவில்லை; மேலும் ஒரு வெள்ளைக்காரனுக்கு கறுப்பினத்தை விட மேன்மை இல்லை அல்லது ஒரு கறுப்பனுக்கு வெள்ளைக்கு மேல் எந்த மேன்மையும் இல்லை, பக்தி மற்றும் நல்ல செயலைத் தவிர. (ஸஹீஹ் அத்-திர்மிதி, அஹ்மத் 2978)
கிறிஸ்தவம்
இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான். நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள். (கலாத்தியர் 3:28-29)
“என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், மாறாக பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் பலர் என்னிடம், 'ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, உமது பெயரால் பேய்களைத் துரத்தி, உமது பெயரில் பல வல்லமைகளைச் செய்தோம் அல்லவா?' பின்னர் நான் அவர்களிடம், 'நான் உங்களை ஒருபோதும் அறிந்ததில்லை; அக்கிரமக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். (மத்தேயு 7:21-23)
முடிவுரை:
பார்ப்பான், தமிழன், அரேபியன், சம்ஸ்கிருதம் பேசுறவர், ஆங்கிலேயர், யூதர், கிரேக்கர் என எதுவும் சிறப்பில்லை. அவரவர் சமய மறைநூல் கூறும் அறத்தின் வழி நிற்பதுதான் சிறப்பு. அனைத்தும் போதிப்பது ஒரே அறமாகும்.