நாத்திகம்

நாத்திகம் என்றால் கடவுளும், அவன் வழங்கிய மறை நூல்களும், அதை போதிக்கும் குருமார்களும் இல்லை என்று நம்பிக்கை கொள்வதாகும். இது நாஸ்தீகம், இறைமறுப்பு, Atheism, குஃப்ர் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு பண்பாடுகளில் அழைக்கப் படுகிறது.

நாத்திகம் பொதுவாக இரண்டு வகைப்படும்
    • கடவுளின் இருப்பை ஏற்காமலும் மறுக்காமலும் இருத்தல் 
      • கடவுள் உண்டா இல்லையா என்று குழப்பமாக உள்ளது (Agnosticism)
      • கடவுள் உண்டா இல்லையா என்ற கவலை இல்லை (Apatheist)
    • கடவுளின் இருப்பை உறுதியாக மறுத்தல் 
      • இறைவனென்று எதுவுமில்லை (Atheism)
      • அரசியல் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட தத்துவங்களை பின்பற்றுவது (Capitalism, Socialism, Communism, Liberalism, Populism, and Nationalism)
      • அறிவியலையும் சமயத்தையும் இணக்கமாக புரிந்துகொள்ள முயலாமல் எதிரெதிராக சித்தரித்து அறிவியலை மட்டும் பின்பற்றுவது. (Scientism, Antheism)
நாத்திக சிந்தனை பல காரணங்களால் தோன்றுகிறது. அவைகளில் சில அடிப்படையான காரணங்களாவன,
    • அறியாமை - கல்வி வாடையே இல்லாமல் இருப்பதும், உலக நூல்களை மட்டும் கற்பதும் மனிதனை அறியாமையில் விட்டு விடுகிறது.
    • பெருமை - பணம், பதவி, அதிகாரம், புகழ், கல்வி, அறிவீனம் ஆகியவை மனிதனை பெருமையில் கொண்டு போய் சேர்க்கிறது.
    • பொறுமையின்மை - இன்ப துன்பம் ஏற்படும் பொழுதும், சோதனைக்கு உட்படுத்தப்படும் பொழுதும் பொறுமையை இழக்கும் நிலைக்கு மனிதன் செல்கிறான்.
    • பொறாமை - தன்னை விட சகமனிதன் செழிப்புடன், வெற்றியுடன், புகழுடன், அறிவுடன் வாழ்வதை தாங்கமுடியாத நிலை பொறாமை ஆகும். நல்லவரோ கெட்டவரோ, அழகானவரோ அசிங்கமானவரோ, கருப்பரோ வெள்ளையரோ, தமிழரோ மற்ற மொழிக்காரரோ, சொந்தக்காரரோ அந்நியரோ, நமது மதத்தை சார்ந்தவரோ மற்ற மதத்தை சார்ந்தவரோ, நம்மினத்தவரோ மற்ற இனத்தவரோ, ஏழையோ பணக்காரரோ, எவராயினும் அவருக்கு கிடைத்த அருட்கொடைகளை கண்டு நாம் விரும்பாமல் பெருமூச்சு விடுவது பொறாமை ஆகும்.
நாத்தீகம் பேசும் மனிதன் எக்காரணத்தை முன்வைத்தாலும் அக்கராணத்தை ஆராய்ந்தால் அதன் மூல காரணம் இவற்றில் ஒன்றாக தான் இருக்கும். இந்த பட்டியலில் உள்ள குணங்கள் எதுவும் கடந்து போகுமளவு சிறிய தவறல்ல.
 
சமயங்களை எளிதில் விமர்சிப்பது போல நாத்திகத்தை விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சமயத்தை விமர்சிக்க முயன்றால் 
    • அச்சமய மறைநூல்கள், 
    • அச்சமய மக்களிடம் புழக்கத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், 
    • அவர்களிடம் புழக்கத்தில் உள்ள மூட பழக்கங்கள், 
    • அவர்கள் வரலாற்றில் செய்த பிழை 
போன்ற சமய அடிப்படை செய்திகளை கொண்டு அச்சமயத்தின் மீது விமர்சனம் செய்ய முடியும், அது மூடத்தனமான வாதமாக இருந்தாலும் சரியே. ஆனால், நாத்தீக சிந்தனையை நீங்கள் விமர்சிக்க எண்ணி நீங்கள் ஒரு வாதத்தை முன் வைத்தால், "அது தவறுதான் என்றும் அது அந்த  தனிமனிதனின் பிழை" என்று கூறி, அல்லது "அதில் என்ன பிழை" என்று கூறி நாம் வைத்த அந்த வாதத்தை அவர் எளிதில் கடந்து சென்றுவிடுவார். ஏனென்றால் அறம் தொடர்பாக ஒட்டுமொத்த நாத்தீகர்களும் ஏற்கும் எந்தவித அடிப்படையும், மூலமும், வரைவிலக்கணமும் கிடையாது. மேலும் தனது நிலைப்பாட்டிற்கான காரணத்தையம் பெரும்பாலான நாத்திகர்கள் வெளிப்படுத்துவதில்லை. மேலும் அடிப்படையிலே கடவுள் நம்பிக்கை உடையவர்களை எதிரியாகவும் அறிவிலிகளாகவும் பார்த்து பழகியதால், அவர்களின் தத்துவத்துக்கு நிலையான அடிப்படை விதிகள் ஏதும் இல்லாததால் அவர்களின் நிலைப்பாடு பிழை என்று நாம் பெரும்பாலும் அவர்களுடன் வாதிட முடியாது. 
 
ஆனால் அதிலும் சில நேர்மையாளர்கள் உள்ளனர். அவர்கள் சரியான விளக்கம் கிடைக்கப் பெற்றால், உண்மை என்று விளங்கச் செய்தால் அதை நேர்மையாக எதிர்கொள்வர். அவர்களுக்கு இந்நூலில் கடவுளின் இருப்பை அறிய பல செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது.  
 
நாத்திக மக்களின் இருப்பை பற்றி சமய நெறி நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டு இருந்தாலும், நவீன காலத்தில் கூறப்பட்ட சில  அறிவியல் கோட்பாடுகள் இறைமறுப்பு கொள்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.
    • டார்வினின் பரிணாமக் கோட்பாடு 
    • பெருவெடிப்பு கோட்பாடு 
    • இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியல் - பொதுவுடைமை தத்துவம் 
பரிணாம கொள்கை 
 
டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஒருவர் ஏற்கும் பொழுது அது சமயங்கள் கூறும் படைப்பு தத்துவத்துக்கு எதிராக அவரை நகர்த்துகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் கடவுளையும் பரிணாமக் கோட்பாட்டையும் நம்பிக்கை கொள்ள முடியாது. 
 
எளிமையாக சொல்வதென்றால், பொதுவாக பரிணாமம் என்பது, படிப்படியான முன்னேற்றம் அல்லது மாற்றத்தை குறிக்கும். உயிரியலில் பரிணாமம் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் ஆகும். இதுவரை சமய நூல்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் மதங்கள் இதை சில இடங்களில் குறிப்பிடுகிறது.  
 
இஸ்லாம்
 
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்." (குர்ஆன்: 49:13)
 
"இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன."(குர்ஆன் 30:22)

கிறிஸ்தவம்

"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." (அப்போஸ்தலர் 17:26)

தமிழர் சமயம்

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (திருமந்திரம் 2104)

பொருள்: "ஒன்றே குலம்" என்பது மனிதர்கள் அனைவரும் ஒரே மனிதனிலிருந்து தழைத்தவர்கள் என்று பொருள் படுகிறது.  

மனிதர்களின் தோற்றம் ஒரே மனிதனிடமிருந்து இருந்ததென்றும் அவரிடமிருந்து இத்தனை நிறங்களாக, இனங்களாக பரிணமித்தது என்று மேலும் சில வசனங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. ஆனால் இந்த இயற்கை இயல்பை சற்று நீட்டித்து திரித்து ஒருசெல் உயிரிலிருந்துதான் அனைத்தும் பரிணமித்தது என்றும் குரங்குகளுக்கும் நமக்கும் ஒரே முன்னோர்கள் என்றும் பிழையான வாதத்தை ஏறக்குறைய உண்மை என்கிற அளவுக்கு நிலைநிறுத்தியதுதான் மோசடியின் உச்சம். பரிணாம வளர்ச்சிக் கொள்கை உண்மை அல்ல என்று பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் அது இன்னும் புழக்கத்தில் இருப்பதன் காரணம் உலக மக்களை நாத்திகர்களாய் திருப்பும் உலகலாவிய சதி ஆகும்  
 
 

 
இன்று பரிணாமக் கொள்கைக்கு எதிராக ஒருவர் பேசினால் அவர் அறிவியலுக்கு முரணாக பார்க்கப்படுவது எதார்த்தமாகிவிட்டது. எத்தனை எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் சமய நூல்களினால் நிகழ்ந்துள்ளது என்ற பட்டியலை நீங்கள் காண நேரிட்டால் ஆச்சரியமடைந்து போவீர்கள். வேதங்கள் முழுக்க முழுக்க அறிவியலை பேசவில்லை என்றாலும் சரியான அறிவியலை பேசாத வேதங்கள் இல்லையெனலாம். அறிவியல் பேசுவது வேதத்தின் நோக்கமல்ல, மனிதர்கள் அறியாத உண்மைகளை அவைகள் பேசுவதன் மூலம் அது யாரிடம் வந்தது என்று நிறுவ முயல்கிறது.
 
பெருவெடிப்பு கொள்கை 

திடீரென்று ஒருநாள் மனிதன் உலகம் படைக்கப்பட்டதல்ல என்று பேசுவான் என்று அறிந்த இறைவன் தனது வேதங்களில் உலகம் படைக்கப்பட்ட முறையினை விவரித்து உள்ளான். 

 தமிழர் சமயம் : பரிபாடல் உலகம் தோன்றிய விதத்தை பேசுகிறது 

(பரிபாடல் அடிகள்: 1 முதல் 19 வரை)
தொல் முறை இயற்கையின் மதிய………..
…………………………………………… மரபிற்று ஆக
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையின் தோன்றி            (5)
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு               (10)
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும்  வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை               (15)
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நிற் பேணுதும் தொழுதும்            (19)

பொருள்‌ ஒன்றுமில்லாத இடத்தில்‌ அண்டத்‌ தோற்றத்துக்குக்‌ காரணமான கரு -பரமாணு பேரொலியுடன்‌ தோன்றியது. உருவம்‌ அறிய இயலாத வளி முதலான பூதங்களின்‌ அணுக்களுடன்‌ வளர்கின்ற வானம்‌ என்னும்‌ முதல்‌ பூதத்தின்‌ ஊழி தோன்றியது. அந்த அணுக்களின்‌ ஆற்றல்‌ கிளர்ந்து பருப்பொருள்கள்‌ சிதறும் படியாகப்‌ பல ஊழிக்‌ காலங்கள்‌ கடந்து சென்றன. பிறகு நெருப்புப்‌ பந்துபோலப்‌ புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம்‌ தோன்றியது. பின்னர்ப்‌ பூமி குளிரும் படியாகத்‌ தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்காலம்‌ கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்‌ பூமி வெள்ளத்தில்‌ மூழ்கியது. மீண்டும்‌ மீண்டும்‌ சிறப்புடன்‌ வெள்ளத்தில்‌ மூழ்குதல்‌ நடந்த இப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்‌ உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல்‌ என்னும்‌ உள்ளீடூ தோன்றியது. அச்சூழலில்‌ உயிர்கள்‌ தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய பூமியில்‌ ஊழிக்காலம்‌ கடந்தது.

திருமந்திரம்  
 
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே. (திருமந்திரம் 5)

பொருள்: நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே! 

இஸ்லாம்  

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (குர்ஆன் 41:11

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (குர்ஆன் 21:30)

கிறிஸ்தவம் 

ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமி உருவமும் வெற்றிடமும் இல்லாமல் இருந்தது, ஆழத்தின் முகத்தில் இருள் இருந்தது. மேலும் தேவன் நீரின் மேல் இருந்தார். கடவுள், "ஒளி உண்டாகட்டும்" என்று கூறினார், அங்கே வெளிச்சம் ஏற்பட்டது. வெளிச்சம் நன்றாக இருப்பதைக் கடவுள் கண்டார். மேலும் கடவுள் ஒளியை இருளிலிருந்து பிரித்தார். கடவுள் ஒளிக்கு பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் வந்தது... (ஆதியாகமம் 1:1-5)

மேற்சொன்ன வசனங்களெல்லாம் பெருவெடிப்பு கொள்கையினை ஒத்ததாக  அமைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதில் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அறிவியலை மட்டும் நம்பும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஒரு ஆராய்ச்சியாளரால் நிறுவப்பட்ட பிறகு மக்கள் நம்பும் ஒரு கோட்பாட்டை சமய நம்பிக்கை கொண்ட மக்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக நம்பி வந்துள்ளனர். 

துவக்கத்தில் என்ன இருந்தது என்று சாத்திய கூறுகளை கொண்டு யூகித்து கூறும் ஒரு அறிவியலாளரை காட்டிலும் அப்பொழுது அதை நிகழ்த்தியவனின் கூற்றே நம்புவதற்கு தகுதியானது. ஏனென்றால் மனிதனின் ஆயுட்காலம் 60 - 100 வரை, இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன். இருவரின் அறிவின் அளவையும், ஆற்றலையும் ஒப்பு நோக்கினால் அவனது கருத்துதான் சிறந்ததாக சரியானதாக இருக்க முடியும்.

மேலும் அமீபாவிலிருந்து மனிதன் பரிணமித்த நிகழ்வை கண்ட சாட்சியோ, உலக பெருவெடிப்பின் மூலம் தோன்றிய நிகழ்வை கண்ட சாட்சியோஇருக்க முடியாது. இத்தனை கடின உழைப்பின் மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை வெறுப்பதே மதவாதிகளின் இயல்பு என்று நாத்திகர்கள் சுருக்கினால், ஒவ்வொரு நிலத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மொழியிலும் மறை நூல் வழங்கப்பட்டு அதில் இதுபோல மனிதன் முன்பு அறியாத அறிவியல் ஆதாரங்களை சான்றாக கொடுத்தும் இறைவன் இல்லை என்று மீண்டும் மீண்டும் பிதற்றிக்கொண்டு அறிவாளியாக தன்னை கருதும் அறிவிலிகளுக்கு இதுதான் இயல்பு என்று சுறுக்குவதில் என்ன பிழை.

Thesciencebehindit.org கூற்றுப்படி பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனை செய்ய முடியாத வெப்பமான மற்றும் அடர்த்தியான புள்ளியிலிருந்து (அதாவது சிங்குலாரிட்டி-யிலிருந்து) உருவானது என்று கூறுகிறது. கற்பனை செய்ய முடியாத ஒன்றிலிருந்து அனைத்தும் படிப்பபடியாக தோன்றியது என்ற கூற்று கடவுள் கோட்பாட்டுக்கு எப்படி முரண்படமுடியும்?

கடவுளை கற்பனை செய்யமுடியுமா? முடியாது! என்றுதானே நான்மறைகளும் கூறுகிறது. 

buffalo.edu கூற்றுப்படி பெருவெடிப்புக்கு முன் - பிரபஞ்சம் ஒரு வினாடியின் ஒரு பகுதியிலேயே குறைந்தது 80 மடங்கு அளவு இரட்டிப்பாகி, மூச்சடைக்கக்கூடிய அண்ட விரிவாக்கத்திற்கு உட்பட்டது. இந்த வேகமான விரிவாக்கம், வெற்று இடத்தையே ஊடுருவிய ஒரு மர்மமான ஆற்றல் வடிவத்தால் தூண்டப்பட்டு, பிரபஞ்சத்தை தனித்தனியாக்கியது மற்றும் குளிர்ச்சியாகக்கியது.

ஒரு மர்மமான ஆற்றல்? 

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதன் பொருள் ஆற்றலுக்கு துவக்கமோ முடிவோ கிடையாது என்பதாகும். ஒன்றுமே இல்லாததிலிருந்து உலகமும் அதில் உள்ள ஆற்றலும் தோன்றியது என்று கூறும் முரண்பாடுள்ள பெருவெடிப்பு கொள்கையை ஏற்கும் நாம், எப்பொழுதும் இருக்கும் இறைவனிடமிருந்து உலகமும் அதிலுள்ள அழிவில்லா ஆற்றலும் வந்தது என்றால் நம்ப முடிவதில்லை. வேடிக்கை! 

ஆற்றல் இறைவனிடம் இருந்து வந்தது என்பதால்தான், ஆற்றல் பெற இறைவணக்கம் அவசியம் என்கிறது அனைத்து மறைநூல்களும். வாசிக்க.

பொருள் முதலா? கருத்து முதலா? 

மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட தத்துவமாகும்.

"இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும். அதன் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருகின்றன. மேலும் இயற்கையின் உள்ளே காணப்படும் முரண்பாடுகளின் வளர்ச்சி காரணமாகவும் நேர் எதிரான சக்திகள் மோதிக் கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என இயங்கியல் அணுகுமுறை கருதுகிறது. இந்த இயங்கியல் அணுகுமுறை Metaphysics எனப்படும் மாறாநிலைத் தத்துவத்திற்கு நேர் எதிர் தத்துவமாக வளர்ச்சி பெற்ற ஒன்றாகும்."

சமயங்கள் மாறாநிலைத் தத்துவத்தை போதிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த கருத்து எப்படி தோன்றியது என்று தெரியவில்லை. அநேகமாக மேலைநாடுகளில் இருந்து இந்த சொல்லாடல் தோன்றியதால் பைபிளில் அல்லது கிறிஸ்தவத்தில் முரண்பட்டு இது தோன்றி வளர்ச்சி பெற்று இருக்கும் என்று கருதுகிறேன்.

ஆனால் சமயங்கள் அதை போதித்தால், முதல்நூல் வழிநூல் கொள்கையே தேவையில்லை. முதல் நூலோடு நிறுத்தி இருக்கலாம், அதுவே உலகம் முடியும் வரை போதுமான அறமாக இருக்கும் என்று போதித்து இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழும் அதுதான் இறைவன் படைத்த இயற்கையின் பண்பு என்பதை காட்டும் விதமாக, பைபிளில் வெவேறு காலகட்டத்தில் தோன்றிய தீர்க்கதரிசிகளால் 40 நூல்களும், சமஸ்கிருதவேத நூல்களில் ஒன்றான ரிக் வேதம் வெவ்வேறு காலகட்டத்தில் 356 ஆசிரியர்கள் எழுதிய பாடல்களும், தமிழர் சமய நூல்களில் ஒன்றான புறநானூற்றில் 150 ஆசிரியர்கள் எழுதிய பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால மாற்றங்களுக்கு ஏற்ப சட்டமும் திருத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்பொழுது யாரால் எவ்வாறு திருத்தப்படும் என்பதும் தீர்க்க தரிசனமாக முந்தய நூல்களில் கொடுக்கப்பட்டு உள்ளது.

மெய்யியல்கள் எல்லாம் நிலையில்லா இவ்வுலகில் பொறுப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் நிலையில்லா உலகில் கிடைக்கும் வெற்றியை விளக்குவதையே முதன்மை நோக்கமாக கொண்டிருக்க, புரட்சி மூலம் இவ்வுலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக அதை பின்பற்றுபவர்களால்  கருதப்படுகிறது.


ஆனால் 1800-களின் கடைசியில் எழுதப்பட்ட "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை"-யில் கூறப்பட்ட  இந்த மேற்சொன்ன கருத்து 1950-களில் ரஷ்யாவிலும் இன்று சீனாவிலும் தென்கொரியாவிலும் கண்முன் நடைபெறுவதை காணலாம். இந்த தத்துவம் பிழை என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா?

அறிவியல் என்பது பொருட்களின் பண்புகள், அது உருவாகும் அல்லது அழியும் பண்புகளையும், மேலும் அதன் பரிமாணம் மற்றும் பரிணாமத்தை விளக்குகிறது. இவற்றை கொண்டு பொருட்களை கையாளும் அறிவை நம் பெறுகிறோம். ஆனால் ஆன்மிகம் என்பது அப்பொருள்கள் ஏன், எப்பொழுது, யாரால் வழங்கப்பட்டது என்பதையும் விளக்குகிறது. உதாரணமாக, ஒரு உணவு என்பது எதை சேர்த்து என்னென்ன பக்குவத்தில் எவ்வாறு செய்யப்படுகிறது என்று விளக்கும் முறையை அறிவியல் எனக்கொண்டால், அதை அந்த பக்குவத்தில் எதை, எப்படி, யார் செய்தார் என்று விளக்குவதை ஆன்மிகம் எனக்கொள்ளலாம். இரண்டும் ஒன்றை ஒன்று நிறுவும் கூறுகள். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று இணக்கமாக பயணித்த, பயணித்து கொண்டு இருக்க வேண்டிய ஒற்றை வண்டியின் இரட்டை மாடுகள். அதை திட்டமிட்டு பிரித்ததுதான் நாத்திக சிந்தனையின் வளர்ச்சிக்கு காரணம். மேற்கத்திய கல்விமுறையின் கட்டமைப்பு, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிறுவனர்கள் போன்றவைகளின் பின்புலங்கள் ஆராயப்படும் பொழுது திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

கடவுள், மறுமை போன்ற ஐம்புலன்களால் நேராடியாக தொட்டு உணரமுடியாத பல விடயங்களை Material-விதிகளை கொண்டே அணுகுவதால் இவைகளை நாத்தீகர்கள் எளிதாக நிராகரிக்கின்றனர். ஆனால் நாம் அணுகும் விடயத்தின் பண்பு நிலை மாறும் பொழுது அதற்கு ஏற்றாற்போல விதிகளும் அணுகும் முறையும் மாறும் எனபது அடிப்படை. இவ்வாறு புலன்களுக்கு எட்டாத விடயங்களை எந்த விதியின் அடிப்படையில் அணுகுவது என்பதும் இந்நூலில் ஆங்காங்கே விவரிக்கப் படுகிறது. 

குரங்கிலிருந்து மனிதனாகிய பிறகு, காலவோட்டத்தில் மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத் துவங்கிய பிறகு, இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாப்பு பெற இயற்கையை வணங்க துவங்கி, அதற்க்கு பிற்கலத்தில் முன்னோர்களை வணங்க துவங்கி, பின்பு மனிதனை நெறிப்படுத்த அனைத்தையும் மிஞ்சிய கடவுள் என்கிற சிந்தனை பிறந்தது என்றெல்லாம் மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளை நேரடியகவோ மறைமுகமாகவோ ஏற்ப்பவர்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவற்றின் அடிப்படையே பிழை என்பதை நீங்கள் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.

"அறிவியலும் தொழில்நுட்பமும் இவ்வளவு முன்னேறிய பிறகும் சாமி, பேய், வேதம் என்று எப்படி உங்களால் நம்பவோ பேசவோ முடிகிறது, அதெல்லாம் வெறும் Superstitious" என்று கூறுவோர் உண்டு. தொழிற்கல்வியில் முன்னேற்றம் அடைந்ததால் மட்டுமே இக்கல்வி அற்றுப் போகும் என்று வாதிடுவது பொருத்தமற்றது. இரண்டுமே கல்வி ஆகும். எனவே இரண்டிலும் உள்ள சரி பிழையை பிரித்து அறிவது நம் கடமை ஆகிறது. மேலும் இரண்டையும் பரஸ்பரம் புறக்கணிப்பதும் பிழை அல்லது அதிதீவிர எல்லைகளை அடைவதும் பிழை. இரண்டிலும் நடுநிலையை கையாள்வது அவசியம். ஆனால் அந்த நடுநிலையினை நாம் வரையறுக்க முடியாது, அதை மறை நூல்களின் உதவியோடு தான் பெறவேண்டும். 

சமயங்களில் தெய்வத்தின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் மனிதர்களால் உட்புகுத்தப்பட்ட பிழையான தகவல்களையும், நடைமுறைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் விமர்சிக்கும் மக்களிடமிருந்து நாத்திகம் உருவெடுக்கிறது. அறிவியலில் ஒரு தவறான கொள்கை சொல்லப் பட்டால் அதை பகுத்து அறிவது போல ஆன்மீகத்திலும் செய்யப்பட வேண்டும். அதற்கான வழிமுறையை அவரவர்  மொழியில் உள்ள மறைநூல்கள் மூலமே பெறமுடியும் என்பதை அறிவது தான் கலவியின் முதல் படி ஆகும், அவ்வாறு அறிபவர்தான் பகுத்தறிவாளர் ஆவார்.

இறைச்சி உணவு

தமிழர் சமயம்


சிவவாக்கியர் பாடல்கள்


புலால் புலால் அதேன்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருப்பது எங்ஙனே
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பெருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே! (சிவவாக்கியம்-149)

 
பதவுரை
புலால் - மாமிசம், இறைச்சி, சதை பிண்டம்; 
பேதைமை - அறிவீனம், மடமை, மூடத்தனம்; 
பிதற்று: உளறு, அறிவின்றிப் பேசும் பேச்சு; 
(பெருலா=பெரிய+உலா) உலா: காமுறுதல்;  
பித்தன் - பைத்தியக்காரன், அதீத அன்பு;
அத்தன் - தந்தை, அப்பா; 


பொழிப்புரை மாமிசம் மாமிசம் என்று மடமை பேசுகிறீர். மாமிசத்தை எம் இறைவன் பிரிந்து இருந்தது எங்கே? காமுறும்போது மாமிசத்தோடு உளறி அவன் வித்தாக மாமிசத்தில் முளைத்து எழும் பிள்ளையின் மீது அதீத அன்பு கொள்ளும் அப்பனே. 

உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டு பட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே! (சிவவாக்கியம்-150
 
பதவுரை 
உத்திரம்: இரத்தம், குருதி;
ஒக்க: ஒருமிக்க, ஒருசேர, சமமாயிருக்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க; இதரம்: வேறு, அன்னியம், வேறுவஸ்துகள், தேகப் பிணிப்பில்லாத ஆத்துமா
மதிரம் = மதிரை: கள் (சூடாமணி நிகண்டு); 
சதிரம்: உடல், தேகம், சரீரம்;

பொழிப்புரை: இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்து தகுதியாயிருக்கம் நீர் வளர்ந்ததும் வேறு வஸ்துவாய் இருந்த அது ஒன்று அல்லது இரண்டு என்று என்னக்கூடிய அளவில் கருவில் பட்டபொழுது விடவில்லை அது மாமிச புலால் என்று. அப்படி விட்டு இருந்தால் உடலாக எப்படி வளர்ந்து இருக்கும்? சைவரான மூடரே! 

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். (சி.வா. 157)

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே? (சி.வா. 148) 
 
 அகநானூறு   
 

மேலும் அகநானூற்றில் 136-ஆம் பாடலி லும் பண்டைத் தமிழரின் திருமண முறைகள் பற்றிப் பேசப்பட்டுள்ள காட்சிகளையும் காண்போம். நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண் சோற்றை மணவினை காணவந்தோர்க்குக் கொடுத்து, உரோகிணி கூடியதனால் எல்லாக் குற்றமும் நீங்கிய சுபநேரத்தில் மணவீட்டினை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணப்பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, மங்கல மகளிர் தலைவியை நீராட்டியபின், வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்ணூலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்றுகூடி, மழைச் சத்தம் போன்ற மணவொலி கூடிய பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினால் ஏற்பட்ட வியர்வையைத் துடைத்து, பெற்றோர் (தமர்) ‘நமக்கு இற்கிழத்தியாகத் தந்த தலைநாள் இரவின் கண்..’ என்று வதுவை மணம் நடந்தேறி முடிகின்றது.  

 

“மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்..
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய.
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்..
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்..” (அகம். 136)

புறநானூறு  

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
5 செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
10 மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே! - புறநானூறு - பாடல் 103

உரை: காவடியில் ஒரு பக்கம் பதலையும் ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு, ”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே! போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை, மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும் பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான். நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான். அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான். வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன். வாழ்க அவன் திருவடிகள்!

குறிப்பு: புறநானூறு ஒரு வழிநூல் ஆகும். முதல்நூல் மற்றும் வழிநூல்கள் என்பன மறை நூல்களாகும். 
 
நற்றிணை 
 
உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்
கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன் (நற்.59)

என்னும் நற்றிணைப் பாடலடிகளில் உடும்பு, நுணல், ஈயல், முயல் ஆகியவற்றை வேட்டையாடி வரும் வேட்டுவனின் செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகேசி 

சமண சிறு காப்பியமான நீலகேசி வேதப் பார்ப்பனர்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறது,

“வசுக்கள் உருத்திரர் பிதிரரொடு
இவர் முதலாப் பலர்க்கும்
பசுக்களோட எருமைகள் குதிரைகள்
புலியொடு நாய் முதலா
இசு கழிந்தன பல கொலைகளும்
இரங்கலிர் கொன்று அவரை
அசிப்பவர் போன்ற நீர் ஆயினும்
அருவினையா நுமக்கே”

பொருள் “வசுக்கள், உருத்திரர், பிதிரர் ஆகியோருக்காக என்று சொல்லிக் கொண்டு, வேள்வியில் சிறுதும் இரக்கமின்றி பசு, எருமை, குதிரை, புலி மற்றும் நாய் போன்ற விலங்குகளைக் கொலை செய்கிறீர்கள். அந்த தேவர்களுக்கு ஊட்டுவது போல நடித்து, நீங்களே புசிப்பீர்கள். எனவே இந்த தீவினை உங்களையே சாரும்.” இது வடநாட்டில் மட்டுமல்ல, அன்றைய தமிழகத்திலும் வேதப் பார்ப்பனர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட பல விலங்குகளைக் கொன்று தின்றதையே காட்டுகிறது.

அதே நீலகேசி அந்த வேள்விமுறையையே கீழ்வருமாறு கேள்விக்குள்ளாக்குகிறது

“நண்பரை நுதலியும் பகைவரை
நுதலியும் அமிர்தோடு நஞ்சு
உண்பார்க்கு அல்லது அவர்களுக்கு
ஆம் என உரைக்குநர் யார்
பண்பிலி தேவரை நுதலிய
கொலையினில் பல் வினைதான்
உண்பல வகையினின் அடைந்தலை
விளையுங்கள் உன் நுமக்கு என்றாள்”

தன் நண்பன் நீடு வாழ வேண்டும் என்று ஒருவன் அமிர்தம் உண்டான். இன்னொருவனோ தனது எதிரி அழிந்து போகட்டும் என நஞ்சு அருந்தினான். இந்த இரண்டின் பலனும் உண்டவர்களுக்குத் தானே போகும். அந்த நண்பர்களுக்கு போகும் என்று யார் சொல்வார்கள். அவ்வாறே தேவர்களுக்காக செய்யப்பட்ட கொலைகள் என்று சொன்னாலும், அதன் தீவினைப்பயன் கொன்ற உங்களுக்கே சேரும் என வேதவாதியைப் பார்த்து நீலகேசி சொல்கிறாள்.

இதில் வேள்விகள் ஏமாற்று வேலை என்பதையும், அவை வேத பார்ப்பனர்களின் மாமிச இச்சைக்கான பெரிய அடுப்புகளாகவே விளங்கின என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது நீலகேசி.

இன்னொரு இடத்தில் நீலகேசி வேதத்தைத் தாக்கித் தகர்க்கையில்,

“………….
கொலை மண்ணும் மருவுதலின்
ஐயம் இல் தீக்கதி செலுத்துவது”

என்று வேதத்தை சாடுகிறாள்.

இங்கு வேள்விக் கொலைகளையே தனது சாரமாகக் கொண்டிருந்த வேதப் பார்ப்பனீயத்தை நீலகேசி சரியாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது.

பவுத்த காப்பியமான மணிமேகலையோ ஆபுத்திரனின் கதை மூலம், வேதப் பார்ப்பனர்களின் மாட்டுக்கறி வெறியை அம்பலப்படுத்துகிறது. அக்கதை இதோ…

வாரணாசியில் அபஞ்சிகன் என்ற “மறை (வேதம்) ஓம்பாளன்” இருந்தாg. அவனுடைய மனையாளியின் பெயர் “பார்ப்பினி சாலி” அவள் ஒழுக்கம் தவறி நடந்து விட்ட காரணத்தால், அந்தப் பாவம் போக்கு “குமரி ஆடிய வருவாள்” வரும் வழியில் குழந்தை பிறந்து விடுகிறது. எனினும் “ஈன்ற குழந்தைக்கு இரங்காளாகி” மறைவானதொரு இடத்தில் அதை விட்டுவிட்டு சென்று விடுகிறாள்.

பசியால் குழந்தை அலற, அது கேட்டு “ஓர் ஆ (பசு) வந்து அணைந்து” ஆதரவு தந்தது. நாக்கால் நக்கி கொடுத்து, பாலும் கொடுத்தது. இப்படி அந்தக் குழந்தை ஆபுத்திரன் ஆனது. அப்போது அவ்வழியே வந்த இளம்பூதி என்கிற “மறை ஓம்பாலனும்” அவனது மனையாளும் குழந்தையைக் கண்டு அதை எடுத்து கொள்கிறார்கள். ஆ மகன் அல்லன் என் மகன் என்றே” கொஞ்சுகிறான் அவன்.

இளம்பூதிgன் இல்லத்தில் குழந்தை வளர்கிறான். உபநயனத்திற்கு முன்னரே அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறான். சிறுவன் ஒருநாள் அந்த ஊரிலுள்ள இன்னொரு அந்தணர் வீட்டிற்கு செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சியை மணிமேகலை விளக்குகிறது, 
 
“ஆங்கு புலைசூழ் வேள்வியில்
குரூரத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சிவெய் துயிர்த்து புலம்பிக்
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று அங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங்கண் நீர் உடுத்து”

இதற்கு பொ. வே. சோமசுந்தரனார் கொடுத்துள்ள விளக்கவுரையை அப்படியே தருவோம் 

     “அவ்விடத்தே அப்பார்ப்பனர்கள் தாம் மறுநாள் ஊன் தின்பதற்கு ஏதுவாக வேள்வி செய்வதாக ஒரு சூழ்ச்சி செய்து, நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று தின்பதற்காக நிறமிக்க மலர் மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டுத் தன்னைக் கொல்பவரும், தான் பெரிதும் அஞ்சுதற்குக் காரணமாகியவரும் கொடியவருமாகிய அப்பார்ப்பனர்க்குப் பெரிதும் அஞ்சி, உய்தி காணாமல் வெய்தாக மூச்செறிந்து வருந்தி, கொலைத் தொழிலை மிகுதியாக செய்கின்ற வேடர் வில்லிற்கு அஞ்சி ஓடிப்போய் அவர் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான் போல அஞ்சி, அவரால் கட்டப்பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு. தனது நெஞ்சம் நடுங்கி, நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து”

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வேதியர்களும் வேள்வியில் பசுவைக் கொன்றார்கள். பசு மாமிசத்தை உண்பதற்காகவே பசுவைக் கொன்றார்கள் என்பது தெளிவாகிறது. பவுத்த சமயமே இது கண்டு கொந்தளித்தது. தனது எதிர்ப்பை அந்த சிறுவனின் செய்கை மூலம் இலக்கியமாக்குகிறார் சாத்தனார். அன்று இரவு அந்தப் பசுவை அவிழ்த்துக் கொண்டு, ஆபுத்திரன் ஊரை விட்டுக் கிளம்பி விடுகிறான். அந்தணர்கள் விசயம் அறிந்து, அவனையும் பசுவையும் வளைத்துக் கொள்கிறார்கள். “புலைச் சிறுமகனே போக்கப்படுதி என அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப” என்பது நடக்கிறது. அதாவது மரணத்திலிருந்து பசுவைக் காப்பாற்றியவனை “புலைச் சிறுமகனே” என்று திட்டியிருக்கிறார்கள்! கோல் கொண்டு அடித்திருக்கிறார்கள்!

அடிபட்டாலும் பசுவைக் காப்பாற்றிய மன நிறைவோடு, “நோவன செய்யமின்” என சிறுவன் அந்தணர்களுக்குப் புத்தி சொல்கிறான். அவர்களுக்குக் கோபம் வருகிறது. தங்களின் வேள்வியை இகழ்ந்ததன் மூலம் தங்களின் புனித வேதத்தையே இகழ்ந்துவிட்டதாகக் குமுறுகிறார்கள். “அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை” என்கிறார்கள். இதிலிருந்து மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லும் வேள்வி முறையையே தங்களது வேத உட்பொருளாக வேதியர்கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

மேலும் பல தமிழ் நூல்கள்  

  • விலங்குகளில் ஆட்டிறைச்சி (பொருநர்.103-140, புறம்.366:18-20, புறம்.261:8-9), 
  • ஆமான் என்றழைக்கபடும் காட்டுப்பசு இறைச்சி (சிறுபாண்.175-177), 
  • முயல் இறைச்சி (புறம்.319:6-9), 
  • முளவு மா என்னும் முள்ளுடைய பன்றி இறைச்சி (ஐங்.364:1-2, புறம்.177:13-15, மலை.175-177), 
  • யானை இறைச்சி (அகம்.106:12, அகம்.169:3-7), 
  • மான் (இரலை, உழா, கடமா, நவ்வி, மரையான்) இறைச்சி (புறம்.150:5-15, புறம்.152:25-27, மலை.175-185, அகம்.107:5-10) 
  • ஆமை (பட்.64, புறம்.42, புறம்.176), 
  • உடும்பு இறைச்சி (புறம்.325, புறம்.326, பெரும்பாண்.131-133, மலை.175-177) 
போன்றன உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

இந்துமதம் 

இந்து மதம் உள்ளிட்ட உலகில் உள்ள அனேக மதங்கள் மதப் புனிதத்தைப் போற்றிக்காக்க விலங்குகளை பலியிட்டுள்ளனர். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் உணவுக்காகவே விலங்குகள் பலியிடப்பட்டதற்கு மனுஸ்மிருதி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், தர்மசூத்திரங்கள் உள்ளிட்ட இந்து மத சமய நூல்கள்களே சான்றாக உள்ளன.

”சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல”. (மனு: 5-30)

பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி

திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு... க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் - தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?)

மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும் விவேகானந்தர்

“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4)

“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9)

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) - தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏப்ரல் 2015

“நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான்” - சத்பத பிராமணத்தில் மகரிஷி யாக்யவல்கியன். (3/1/2/21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்” என்கிறது அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1/3/10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும் (10/85/13), பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான் (6/17/1) என்கிறது ரிக் வேதம்.

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான் என்கிறது வஷிஸ்த தர்ம சூத்திரம் (11/34).

புனிதம் தான் காரணம் என்றால் இந்த ஆதாரங்கள் போதும் இவர்களுக்கு. ஆனால் இவர்கள் செய்வது அரசியல், எத்தனை ஆதாரங்களை அடுக்கினாலும் இவர்கள் அதை ஆய்வு செய்வது கூட கிடையாது, வெறுமனே புறந்தள்ளி விடுவார்கள்.  

கிறிஸ்தவம்


லேவியராகமம் 11 - இறைச்சி உண்பது பற்றிய விதிகள்


1 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,  

 

2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் கூற வேண்டியதாவது: நீங்கள் உண்ணத்தக்க மிருகங்கள் பின்வருவனவாகும்,  

 

3 இரண்டாகப் பிளந்த குளம்புடைய மற்றும் அசைபோடும் மிருகங்களின் இறைச்சியை உண்ணலாம். 

 

4-6 “சில மிருகங்கள் அசைபோடும். ஆனால் அவற்றுக்குப் பிளந்த குளம்புகள் இருக்காது. அவற்றை நீங்கள் உண்ணக் கூடாது. ஒட்டகம், குழிமுயல், முயல் ஆகிய மிருகங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. அவை தீட்டு உள்ளவை.  

 

7 இன்னும் சில மிருகங்களுக்குக் குளம்புகள் விரிந்திருக்கும். ஆனால் அசை போடாது. அவற்றையும் நீங்கள் உண்ணக் கூடாது. பன்றிகள் இத்தகையவை. எனவே இவை தீட்டுள்ளவை.  

 

8 அவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள்! அவற்றின் பிணத்தையும் தொடாதீர்கள்! அவை உங்களுக்குத் தீட்டுள்ளவை!


கடல் உணவைப்பற்றிய விதிகள்


9 “சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ வாழ்ந்து அவற்றுக்குச் செதில்களும், சிறகுகளும் இருந்தால் அவற்றை நீங்கள் உண்ணலாம்.  

 

10-11 ஆனால் சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ, வாழ்ந்தும் அவற்றுக்குச் செதில்களும் சிறகுகளும் இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது. கர்த்தர் இத்தகைய மிருகங்கள் உண்பதற்குத் தகுந்தவையல்ல என்கிறார். இவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள். இவற்றின் பிணத்தைத் தொடவும் கூடாது.  

 

12 எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள்.


உண்ணத் தகாத பறவைகள்


13 “தேவன் உண்ணத்தகாத மிருகங்களைப்பற்றி சொன்னது போலவே உண்ணத்தகாத பறவைகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது கழுகு, கருடன், கடலுராஞ்சி,  

 

14 பருந்து, வல்லூறு வகைகள்,  

 

15 காக வகைகள்,  

 

16 நெருப்புக் கோழி, கூகை, செம்புகம், டேகை,  

 

17 ஆந்தைகள், நீர்க்காகம், கோட்டான்,  

 

18 நாரை, கூழக்கடா, குருகு,  

 

19 கொக்கு, ராஜாளி வகைகள், புழுக்கொத்தி, வௌவால் ஆகியவற்றை நீங்கள் உண்ணக் கூடாது.


உண்ணத்தக்க பூச்சிகள் பற்றிய விதிகள்


20 “சிறகும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.  

 

21 ஆனால் நீங்கள் தரையிலே தாவுவதற்கேற்ற வகையில் கால்களுக்கு மேல் தொடைகளைக் கொண்டவற்றை உண்ணலாம்.  

 

22 வெட்டுக்கிளி வகைகளையும், சோலையாம் என்னும் கிளி வகைகளையும் அர்கொல், ஆகாபு என்னும் கிளி வகைகளையும் நீங்கள் உண்ணலாம். 

 

23 “ஆனால் சிறகுகளும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை, கர்த்தர் உண்ணக் கூடாது என்றார்.  

 

24 அப்பூச்சிகள் உங்களைத் தீட்டுக்குள்ளாக்கும். எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டாலும் மாலைவரை தீட்டுள்ளவர்களாவர்.  

 

25 எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டு எடுத்தால் அவர்கள் தங்கள் ஆடைகளை துவைக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டாக இருப்பார்கள்.


மிருகங்களைப்பற்றி மேலும் சில விதிகள்


26-27 “சில மிருகங்களுக்குப் பிளந்த குளம்புகள் இருக்கும். ஆனால் அவை சரியாக இரண்டாக பிளந்திருக்காது. சில மிருகங்கள் அசைபோடாது. சில மிருகங்கள் குளம்புகளால் நடக்காமல் உள்ளங்கால்களால் நடக்கும். இவை அனைத்தும் தீட்டுள்ளவை. அவற்றைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.  

 

28 எவராவது இவற்றின் சடலத்தை எடுத்தால் அவர்கள் தம் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவர்களும் மாலைவரை தீட்டு உள்ளவர்களாக இருப்பார்கள். அம்மிருகங்கள் உங்களுக்கு தீட்டானவை.


ஊர்ந்து செல்லும் பிராணிகள் பற்றிய விதிகள்


29 “பெருச்சாளி, எலி, பெரிய பல்லி வகைகள்,  

 

30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி  

 

31 ஆகிய ஊர்ந்து செல்லும் பிராணிகள் அனைத்தும் உங்களுக்குத் தீட்டானவை. இவற்றின் செத்த உடலைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.


தீட்டான மிருகங்களைப்பற்றிய விதிகள்


32 “மேற்சொன்ன தீட்டான மிருகங்கள் செத்து எதன் மேலாவது விழுந்தாலும் அது தீட்டாகும். அவை மரப்பொருள், ஆடை, தோல், துக்க நேரத்திற்குரிய ஆடை, வேலைக்குரிய கருவி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவானாலும் உடனடியாக அதை தண்ணீரால் கழுவ வேண்டும். அது மாலைவரை தீட்டாக இருக்கும். அதன் பிறகே அவை தீட்டு கழிந்து சுத்தமாகும்.  

 

33 அவற்றில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால், பாத்திரமும் அதில் உள்ள பொருளும் தீட்டாகிவிடும். எனவே அதனை உடைத்துப் போட வேண்டும்.  

 

34 தீட்டான மண்பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து உணவுப் பொருட்கள் மேல் படுமேயானால், அவ்வுணவும் தீட்டாகிவிடும்.  

 

35 மரித்து தீட்டாகிப் போன மிருகத்தின் உடலானது எதன் மேலாவது விழுமானால், அதுவும் தீட்டாகிப்போகும். அது களிமண்ணாலான அடுப்பாகவோ, அல்லது மண் தொட்டியாகவோ இருக்கலாம், அவற்றை உடைத்துப் போட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டாய் இருக்கட்டும். 

 

36 “நீரூற்றும், தண்ணீருள்ள கிணறும் சுத்தமாக இருக்கும். ஆனால் எவராவது தீட்டான மிருகத்தின் செத்த உடலைத் தொட்டால் அவர்களும் தீட்டாகிவிடுவார்கள்.  

 

37 தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது.  

 

38 ஆனால் தீட்டான மிருகங்களின் செத்த உடலின் பாகங்கள் தண்ணீர் பட்ட விதையின்மேல் பட்டால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். 

 

39 “உங்களது உணவுக்கான ஒரு மிருகம் செத்தால், அதன் உடலைத் தொடுகிறவன் மாலைவரை தீட்டாக இருப்பான்.  

 

40 அதன் இறைச்சியைத் தின்றவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அம்மிருகங்களின் செத்த உடலைத் தூக்குகிறவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். இவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 

 

41 “தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களை கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது.  

 

42 தரையில் ஊர்ந்து செல்லும் சகல மிருகங்களிலும் வயிற்றினால் நகர்ந்து செல்லுகின்றவற்றையும் நாலு கால்களால் நடமாடுகின்றவற்றையும் பற்பல கால்கள் உள்ளவற்றையும் உண்ண வேண்டாம். அவை தீட்டுள்ளவை.  

 

43 அவை உங்களைத் தீட்டுப் பண்ணாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  

 

44 ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர் நீங்களும் உங்களைப் பரிசுத்தமானவர்களாக வைத்துக் கொள்ளுங்கள். ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ளாதீர்கள்.  

 

45 நான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். நான் இதைச் செய்ததால் நீங்கள் சிறப்பான ஜனங்களாக விளங்குகிறீர்கள். உங்களது தேவனாகிய நான் பரிசுத்தமானவராக இருக்கிறேன். நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருங்கள்” என்றார். 

 

46 இவை அனைத்தும் மிருகம், பறவை, ஊர்வன பற்றிய விதிகள் ஆகும். இவை அனைத்தும் கடலிலும், தரையிலும் உள்ள மிருகங்களைப்பற்றியவை.  

 

47 இதன் மூலம் ஜனங்கள் தீட்டுள்ள மிருகங்களுக்கும் தீட்டில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறு பாட்டைக் கண்டுகொள்ளலாம். அதோடு உண்ணத் தக்க மிருகம் எது, உண்ணத்தகாத மிருகம் எது என்றும் அறிந்துகொள்ளலாம்.


ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான். - (லேவியராகமம் 5:2)

அந்நிய தெய்வங்களுக்கு படைக்கப்பட்டது  

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை என்றும் அறிந்திருக்கிறோம். - (1 கொரிந்தியர் 8:4)

நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன். அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள். எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர், அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். (எரேமியா 1:16) 

 

இஸ்லாம்

 

சைவ உணவு பொருத்த வரை அனைத்துமே அனுமதிக்கப்பட்டது 

- ஒரு தாவரத்தை சாப்பிடுவது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றால் அதை நாம் உண்ண கூடாது அதை தவிர்த்து மற்ற உணவுகளை நாம் உண்ணலாம்! 

அசைவ உணவை மூன்று வகையாக பிரிக்கலாம்  

- ஒன்று தரையில் வாழும் விலங்குகள்
- இரண்டாவது கடலில் வாழும் விலங்குகள்
- மூன்று வானத்தில் பறக்கும் பறவைகள் 

தரையில் வாழும் விலங்குகள் 

கீறிக் கிழித்து விலங்கு எதுவாக இருந்தாலும் அதை உண்ணுவது ஹராம் ஆகும்! 
 
ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? 

இஸ்லாத்தில் இரண்டு வகை பிராணிகளை உண்ண நேரடியான தடை உள்ளது  

1) பன்றி (அல் குர்ஆன் 5:3)
2) வீட்டு கழுதை (ஸஹீஹ் புஹாரி : 4217) 

கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அல்குர்ஆன் : 5:3) 

ஷிர்க் ஆன இடத்தில் அறுக்கப்பட்ட பிராணிகள் அல்லது உணவுகள் உண்ண கூடாது 

இவைகளை தவிர பிற பிராணிகளில் ஹலால் ஹராம் கண்டுபிடிக்க நபி (ஸல்) அவர்கள் சில வழிமுறைகளை கூறி உள்ளார்கள்! 

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும். 

கடல்வாழ் உயிரினங்கள் 

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ 64) 

ஆனால் சிலர் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை நாம் உண்ணக் கூடாது! அவற்றிக்கும் கோரை பல் உள்ளது என்று கூறுவார்கள் ஆனால் இதற்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த வித ஆதாரமும் கிடையாது

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 5:96) 

இருந்தாலும் கடலில் உள்ள அனைத்துமே நமது உடலுக்கு நல்லது அல்ல அதில் உள்ள சில மீன்களை சாப்பிட்டால் நமது உடலுக்கு தீங்கு ஏற்படும்! 

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் :4:29) 

இந்த வசனங்களின் அடிப்படையில் நாம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கடல் வாழ் உயிரினங்களை தவிர்த்து ! மற்ற கடல் வாழ் உயிரினங்களை நாம் உண்ணலாம்! 

பறவைகள்  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் : பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3914) 

ஒரு பொருள் ஹராமா அல்லது ஹலாலா என்று சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? 

சில உணவுப் பொருட்களை அது ஹலாலா? ஹராமா? என கண்டறிவது கடினமாக இருக்கலாம்! 
 
நமக்கு அவ்வாறு ஏதேனும் சந்தேகமானது இருந்தால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து கொள்ளுவது சிறந்தது!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். (ஸஹீஹ் புகாரி : 2051)

இவைகளை தவிர (தானாகச்) செத்தவைகள் - இரத்தம் - அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும்

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள். (நூல்: புகாரி : 5530)

ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்துமே சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும் ஆனால் பூனை,நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

கோரைப் பல் உள்ள எந்த பிராணியையும் நாம் உண்ண கூடாது !

இந்த அளவுகோலை வைத்து நாம் எந்த பிராணிகளை உண்ணலாம் / உண்ண கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்!

 கடல் வாழ் உயிரினங்களை பொருத்த வரை அனைத்துமே நமக்கு அனுமதிக்கப்பட்டது - அவைகள் செத்தால் கூட நாம் அவற்றை உண்ணலாம் - கடல் வாழ் உயிரினங்களில் ஹராம் என்று எதுவும் கிடையாது

 கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை!

 கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ண கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது!

பறவைகளை பொருத்த பொருத்த கால்நடைகளுக்கு உள்ள அதே சட்டம் போன்று தான்!

கீறி கிழித்து உண்ணும் பறவைகள் காகம், கழுகு, பருந்து போன்றவைகளை உண்ணுவது ஹராம்!

கோழி, கொக்கு, மயில் போன்றவைகளை கூட நாம் உண்ணலாம்!

தற்போதைய காலத்தில் ஹலால் ஹராம் என்பது பெரும்பாலானவர்கள் பேணுவதே கிடையாது.

ஒரு காலம் வரும் ஹலாலா? ஹராமா? என்பதை மனிதன் பொருட்படுத்த மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி) 
 
முடிவுரை

இறைச்சி உணவிற்கான தடை ஒரு சில காலத்தில் ஒரு சில பண்பாட்டில் இருந்ததை மறுக்க முடியாது ஆனால் பொதுவாக மனிதன் இறைச்சி உண்ணும் அமைப்பிலேயே படைக்கப் பட்டுள்ளான் என்பதற்கான சான்று அவனது பற்களும், குடலமைப்பும், அதை சிரிக்க சுரக்கும் அமிலங்களும் ஆகும். மேலும் இறைச்சி உண்ணும் முறையை ஒவ்வொரு சமய பண்பாட்டிலும் வழிகாட்டப் பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன ஆதாரங்கள் நிரூபிக்கின்றது. 

பெரும்பாலான சமயங்கள், பன்றி, நாய், தானாக செத்தது, ஊனுண்ணி விலங்குகள் ஆகியவைகளை தடை செய்துள்ளது என்பதை காணமுடிகிறது. ஆனால் அனைத்து மதத்திலும் மாட்டுக்கறி பிரதான உணவாக இருந்து வந்துள்ளது.  

மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதல் இடம்

காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை ஆண்ட வரை மாட்டு இறைச்சியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. பசுக்களைக் காப்பாற்று வதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உணவு உரிமையைத் தடை செய்யும் மோடி அரசு வந்த பிறகு உலக அளவில் முதல் இடத்தைப் பிடித் துள்ளது. 2014-2015இல், ஆண்டுக்கு 24 இலட்சம் டன் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு. மாட்டுக் கறி வணிகத்தில் உலகிலேயே முதல் இடம். நமது பண்பாட்டையும் உரிமையையும் பறிப்பதற்கு பசுப் பாது காப்பு நாடகம். (‘தி இந்து’, 10.8.2015)

மாட்டு இறைச்சிக்கு எதிரான அரசியலை முறியடிப்போம்!