எடையில் குறைக்காதே

கிறிஸ்தவம் 

பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே. - நீதிமொழிகள் 11:1

தமிழர் சமயம் 

அஃகஞ் சுருக்கேல்  - ஆத்திச்சூடி 13

பொருள்: அஃகம் என்றால் தானியம், சுருக்கேல் என்றால் குறைக்காதே. அதாவது தானியத்தைக் குறைவாக அளந்து கொடுக்காதே என்பது பொருள்.

இஸ்லாம் 

அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!  (குர்ஆன் 55:7-9)

கூத்து - சினிமா - நாடகம்

தமிழர் சமயம்


பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். ஏலாதி 25

பொருள்: பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள் தோன்றும்  நாடகஞ் காணாதொழிக. அவ்வாறு காணுமாயிற்பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,
ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,
இழுக்கம் இழவும் தரும். ஏலாதி 62

பொருள்: கூத்தாடு மிடத்தும், விழாச் செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்க முடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும்.

கருத்து: கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாகும்.

நாலடியார் 

85. செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய்,
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை,
வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை,
அலி ஆகி, ஆடி உண்பார். 

(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர்.

(க-து.) பிறர்மனைவியரைக் கூடியவரே இம்மையிலேயே கூத்தாடி இரந்து உண்பவர்.

இஸ்லாம் 

அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். இந்த இரண்டும் மனிதனது உள்ளத்தை தவறான பாதையின் பக்கம் அழைத்துச் செல்பவைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வுத்தஆலா அவன் தந்த உறுப்புகளை எப்படி பயன்படுத்தினோம் என்று மறுமையில் விசாரிக்க இருக்கிறான்.

“நிச்சயமாக செவிப்புலன்கள், பார்வைப்புலன்கள் உள்ளங்கள் இவை ஒவ்வொன்றும் அவைகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றன” (ஸுரதுல் இஸ்ரா:36) என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

“உடல் உறுப்புகள் ஏழாகும். அவைகளாவன: கண்கள், காதுகள், வாய், மர்ம உறுப்பு, கைகள், கால்களாகும். இந்த உறுப்புகள் வெற்றிக்கும் கைசேதத்துக்கும் மத்தியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் கவனமில்லாமல் அவைகளை பாதுகாக்கவில்லையோ அவன் கைசேதத்திற்குரியவனாவான். யார் அவைகளை கண்காணித்து பேணி பாதுகாத்து வருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அந்த உறுப்புகளை பாதுகாப்பது நலவுகளின் அஸ்திவாரமாகும். அவைகளை பாதுகாக்காமல் புறக்கணிப்பது எல்லா தீங்குகளுக்குறிய அஸ்திவாரமாகும். அல்லாஹ் கூறுகிறான்

விசுவாசிகள் தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்ம உறுப்புகளை பாதுகாக்குமாறும் (நபியே) நீர் கூறுவீராக…. (ஸூரதுன் நூர்30)”

(இஹாததுன் லிஹான்:1/80)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் சொல்லப்படுகின்ற பார்வையை தாழ்த்துதல், மர்ம உறுப்பைப் பாதுகாத்தல் என்ற விடயங்களை ஒன்று சேர்த்து பார்க்கின்ற போது பார்வையை தாழ்த்துவதானது மர்ம உறுப்பை பாதுகாப்பதற்குரிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது. பார்வையை தவறான பாதையில் செலுத்துவது மானக்கேடான காரியங்கள் இடம்பெறுவதற்குரிய காரணியாக அமையும் என்ற செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும். நாவினுடைய விபச்சாரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாகும். கையினுடைய விபச்சாரம் மோசமானவைகளை தொடுவதாகும். காலினுடைய விபச்சாரம் மோசமானவைகளின் பக்கம் நடந்து செல்வதாகும். உள்ளம் ஆசை கொள்கின்றது. மர்ம உறுப்பு அதனை உண்மையாகவும் பொய்யாகவும் ஆக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி:2643, முஸ்லிம்:2657)

இமாம் அல் அமீன் அஷ்ஷின்கீதீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

“இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற “கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும்” என்ற செய்தியில் வருகின்ற கண்ணுடைய விபச்சாரம் என்பது ஹலாலாக்கப்படாதவைகளை பார்ப்பைக் குறித்து நிற்கின்றது. எனவேதான் இப்படிப்பட்டவைகளை பார்ப்பது ஹராம் என்பதற்கும் இவைகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குரிய தெளிவான ஆதாரமாக இது இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நபிமொழிகள் இது போன்ற அதிகமான தகவல்களை தருகின்றன.

(மோசமான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய காரணம்தான் என்பது அறியப்பட்ட விடயமாகும். உதாரணத்திற்கு பார்வைகளில் அதிகமானவைகள் அழகான பெண்ணின் பால் செல்கின்றன. அதன் காரணமாக சிலவேளைகளில் அந்தப் பெண்ணை நேசிப்பது அவனுடைய உள்ளத்தில் உருவாகி அது அவனை அழிவின் பக்கம் செல்வதற்கும் காரணமாக அமைகிறது. – அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக- எனவேதான் (தவறான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய ஊடகங்களாகும். (அழ்வாஉல் பயான் 5/510)

எனவேதான் இப்படியான ஒவ்வொரு செய்திகளையும் நுணுக்கமாக வசிக்கின்ற போது மனிதனை தவறான நடத்தைகளுக்கு அழைத்து செல்பவைகளாக கண்களும் காதுகளும் காணப்படுகின்றன. அவைகளைக் கொண்டு மனிதன் தவறான ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதானது, கேட்பதானது மனிதனை பாவத்தின் பால் அழைத்து செல்கின்றன.

அந்தடிப்படையில்தான் இன்றைய முஸ்லிம்கள் எந்தவொரு வயது வித்தியாசமுமின்றி திரைப்படங்கள் சினிமாக்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சினிமாக்கள் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடிப்பததனாலும் மனித உள்ளங்களில் ஒரு விதமான தவறான எண்ணங்களை அது தோற்றுவிக்கின்றன.   

ஆகவேதான் முஃமினான ஆண்களையும் பெண்களையும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறி இருப்பதனால் சினிமாக்கள் பார்ப்பது முஃமின்கள் மீது ஹராமான ஒன்றாக காணப்படுகின்றது.

திரைப்படத்தின் அடிப்படையான இசை-யும் தடைசெய்யப் பட்ட ஒன்று. மேலும், திரைப்படம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளையும் நடைமுறைகளையும் கொண்டதாகவும், புறம் மற்றும் அவதூறு பேசுவனவாகவும், உள்ளது. சுருக்கமாக, மறை நூல்கள் கூறும் தீய செயல்களை பட்டியலிட்டால் அவற்றில் பெரும்பாலானவை அதில் இடம் பெற்று இருக்கும். தீய செயல்களை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகமே சினிமா.

எப்படி உணவு விடயத்தில், வியாபார நேரத்தில் ஹராத்தை தவிர்ந்து கொள்கிறோமோ அதே போன்று இந்த விடயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக.மேலும் 


கிறிஸ்தவம்

 
வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” — (சங்கீதம் 119:37)

 

யூதர்களின் சதி  




உபதேசத்தை மறுக்காதே


தமிழர் சமயம் 


அறவுரையின் இன்றியமையாமை 
 
மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். (அறநெறிச்சாரம் பாடல் - 2)

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அறம் கேட்டற்குத் தகாதவர்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம். - (அறநெறிச்சாரம்பாடல் பாடல் - 7)

விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொரியோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள். 
 

கிறிஸ்தவம் 


ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது. - நீதிமொழிகள் 25:12 

முட்டாளின் வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையானது, ஆனால் ஞானி அறிவுரையைக் கேட்கிறான். - (நீதிமொழிகள் 12:15) 
 
றிவுரைகளைக் கேளுங்கள், அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் ஞானத்தைப் பெறுவீர்கள். - (நீதிமொழிகள் 19:20) 
 
ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது. - (நீதிமொழிகள் 29:1) 
 
கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்; முட்டாள்கள் ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7) 

ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான் - (நீதிமொழிகள் 16:20) 

 

இஸ்லாம் 


ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். (குர்ஆன் 87:9-12)

 (அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (திருக்குர்ஆன் 2:269.)

திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? - (திருக்குர்ஆன் 54:17) 
 

சியோனிச பயங்கரவாதிகளின் சிந்தனையும் திட்டமும் 



முடிவுரை 

இன்றைய இளைஞர்கள் உபதேசம் செய்வோரை "பூமர்அங்கிள்" என்று இளித்து கூறுவதை கண்டால் பரிதாப மட்டுமே படமுடியும். அறநூல்கள் உபதேசம் கேட்பதின் அவசியத்தை கூறுவதையும், இவ்வுலகை கெடுக்கும் நோக்கத்தை கொண்டு உள்ள சியோனிச பயங்கரவாதிகள் மக்களிடம் இதில் உள்ள சிறிய சுனக்கத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவலும் உபதேசத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. 


நல்லொழுக்கம்

தமிழர் சமயம்


நல்லொழுக்கமே முத்திக்கு விதை

இருளே உலகத்து இயற்கை; இருள் அகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை; - கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத்து அருள்உடைமை,
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவு 
இல்லா மேல் உலகம் எய்துபவர். (அறநெறிச்சாரம்-193)

விளக்கவுரை இவ்வுலகம் அறியாமை என்னும் இருள் நிறைந்ததாகும். ஞான நூல்களைக் கற்றதால் ஏற்பட்ட அறிவுடைமை அந்த இருளைப் போக்கும் கைவிளக்கே ஆகும். மனத்தில் உள்ள அருள் அந்த விளக்கை ஏற்றுவதற்குரிய நெய் ஆகும். நெய்க்குக் காரணமான பால் போன்ற ஒழுக்கத்தை உடையவரே துன்பம் அற்ற வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்.

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை குறள்134)

பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

இஸ்லாம் 


நபி (ஸல்) அவர்கள் "நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது" என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)

கிறிஸ்தவம் 


அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான். - நீதிமொழிகள் 5:23

 அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய். - நீதிமொழிகள் 19:20

எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது. - நீதிமொழிகள் 8:10

விவாதம்

தமிழர் சமயம்

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமந்திரம் 51

பொருள்: வேதம் கூறாமல் விட்டு விட்ட அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் (உலக நீதி 75)

கிறிஸ்தவம் 

எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது. - நீதிமொழிகள் 17:1  

வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக்கொள்கிறாய். -  நீதிமொழிகள் 17:19

எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும். - நீதிமொழிகள் 20:3  

நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும். கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர். ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும். - நீதிமொழிகள் 26:20-22

நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்” - எபேசியர் 5:4  

ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும். - நீதிமொழிகள் 22.10   

வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். - (நீதிமொழிகள் 18:18)

இஸ்லாம் 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டு இருப்பவனேயாவான்.  என ஆயிஷா(ரலி) அறிவித்தார். - (ஸஹீஹுல் புகாரி: 2457. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை) 

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! (16:125)

ஜியோனிச பயங்கரவாதிகளின் திட்டம்