1) கவிதை எழுதி இசை இசைத்து பாடல் பாடுவது ஏறக்குறைய அனைத்து சமயங்களும் தடை செய்த ஒன்று.
தமிழர் சமயம்
பண்அமை யாழ்குழல் கீதம்என்று இன்னவை
நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொல்நீக்கி விண்இன்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி. - (அறநெறிச்சாராம் - 196)
விளக்கவுரை இசையுடன் பொருந்திய யாழும் குழலும் இசைப் பாட்டும் என்னும் இவற்றை அவை நிகழும் இடங்களுக்குப் போய் அவற்றை விரும்பிக் கேட்பவை செவிகள் ஆகா. உறுதியுடன் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைக் கேளாது நீக்கித் துறக்க இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும் உறுதிமொழிகளைக் கேட்பதே செவிகளாகும்.
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தம்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)
வாழ்க்கை நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் கடமையை உடனுக்குடன் செய்வர். இடையறாத இசையை சோதிடத்தை பார்த்துப் பிதற்றிக்கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை.
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். (ஏலாதி 25)
பொருள்: பாடல் பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள்தோன்றும் நாடகங் காணாமை. அவ்வாறு கண்டால், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.
இஸ்லாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) (நூல் : புகாரி 5590)
அல் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: புல்லாங்குழல், கம்பி வாத்தியங்கள் மற்றும் டிரம்ஸைப் பொறுத்தவரை, அவற்றைக் கேட்பது தடைசெய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. முந்தைய தலைமுறையினர் மற்றும் பிற்காலத் தலைமுறையின் முன்னணி அறிஞர்கள் மத்தியில் யாருடைய கருத்துக்கள் எடைபோடுகின்றனவோ அவர்களில் எவரிடமிருந்தும் அவர்கள் அனுமதித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. மது அருந்துவதற்கும், தீய செயல்களுக்குக் கொடுக்கப்பட்டவர்களின் அடையாளமாகவும், ஆசைகளையும், ஒழுக்கக்கேட்டையும், விபச்சாரத்தையும் தூண்டும் போது அது எப்படி ஹராம் ஆகாமல் இருக்கும்? அப்படி எதுவாக இருந்தாலும் அதன் தடை பற்றியோ, அதைச் செய்பவன் தீயவன், பாவி என்பதிலோ எந்த சந்தேகமும் இருக்க முடியாது. (az-Zawaajir 'an Iqtiraaf al-Kabaa'ir (2/337)
யார்(இவ்வுலகில்) பாட்டுசப்தத்தை கேட்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ரூஹானிய்யீன் (சுவனத்துகாரிகளின்) சப்தத்தை கேட்க அனுமதிக்கப் படமாட்டாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி) நூல்: தப்ஸீர் குர்துபி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்ள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (ஆடுவதையும்)| மற்றும் அல்-கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு நச்சுப் பொருளும் தடை செய்யப்பட்டதே. இந்த ஹதீஸை தனக்கு அறிவித்த அலி பின் பதீமா அவர்களிடம் சுஃப்யான் அவர்கள், அல் கூபா என்றால் என்ன என்று வினவிய போது, அல்-கூபா என்றால் மத்தளம் (னுசரஅ) என்று பதில் கூறினார். (முஸ்னத் அஹ்மது. பாகம்.1. பக்.289., பாகம்.2 பக்கம்.158 மற்றும் 171-172).
இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும். முதலாவது, ஷைத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும்| இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன். (அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன்)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: காற்றினால் ஒலி எழுப்பக் கூடியதும் (றiனெ)| புல்லாங்குழல் (ஆணைஅயயச) போன்றும் உள்ள இரு இசைக்கருவிகளை சந்தோசமான, உற்சாகமான நேரத்திலும், மற்றும் துக்ககரமான நேரத்திலும் இசைப்பதை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (அல் ஹாக்கிம்)
கிறிஸ்தவம்
மூடர்களின் பாடலைக் கேட்பதைவிட , ஞானிகளின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது மனுஷனுக்கு நலம். - பிரசங்கி 7:5
2) பெண்களை பாடகர்களாக ஆக்குதல் கூடாது
தமிழர் சமயம்
வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னும் சொல்
கூதற்குக் கூதிர் அனைத்து. (பெண் மயக்கு பாடல் - 111)
விளக்கவுரை பெண் ஒருத்தியைப் பாடுமிடத்து உலகத்தவர் விரைவாகச் சென்று விரும்பி விருப்புடன் கேட்காமல் மாறுபாடு இல்லாத நூல்களைக் கற்பீராக. கற்று அவற்றுக்கு ஏற்றபடி ஒழுகுவீராக என்று சான்றோர் கூறும் சொல் முன்னமே குளிரால் நடுங்கும் உடலுக்கு குளிர் காற்று வீசியதைப் போன்றதாகும்.
இஸ்லாம்
பாடகிகளை தன்னுடன் வைத்திருந்த ஒருவர் மரணித்துவிட்டால் அவர்மீது (ஜனாஸா) தொழ வைக்காதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்..(அறிவிப்பாளர்: ஆயிசா(ரலி). நூல்:தப்ஸீர் குர்துபி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)
முடிவுரை
இஸ்லாத்தில் குர்ஆனை அழகாக ராகமாக ஓத ஆர்வமூட்டப் பட்டுள்ளது:
குர்ஆனை அழகிய குரலில் ராகத்துடன் ஓதுவதும் ஓதும் ஒழுங்கு முறைகளைச் சேர்ந்ததே. "அழகிய குரலுடைய ஒரு நபி, குர்ஆனை சப்தமாக-ராகமிட்டு ஓதுவதை அல்லாஹ் கேட்டது போன்று வேறெதையும் கேட்டதில்லை!” (நூல்: புகாரி,முஸ்லிம்)
ஜுபைர் பின் முத்இம் (ரலி)அவர்கள் அறிவிக்கிறர்கள்: “நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபி(ஸல்) அவர்களைவிட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை” (புகாரி. முஸ்லிம்)
கிறிஸ்தவத்தில் கர்த்தரை பாட அனுமதிக்கப் பட்டுள்ளது
நான் உயிரோடிருக்கும் வரை கர்த்தரைப் பாடுவேன்: நான் இருக்கும்வரை என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். அவரைப் பற்றிய என் தியானம் இனிமையாயிருக்கும்: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். - (சங்கீதம் 104:33-34)
பெரும்பாலான மதச்சார்பற்ற இசை பிலிப்பியர் 4:8 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தமிழர் சமயங்களிலும் மறைநூல்களை பாடல் என்றும் பண் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. எனவே மறைநூல்களை அழகிய முறையில் ஓத அனுமதி அனைத்து சமயங்களிலும் உண்டு. ஆனால் அதுவல்லாமல் வேறு ஒன்றை கருப்பொருளாக எடுத்து, கவிதை எழுதி, பாடி, இசைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக பல இசை கருவிகளும் பெண்கள் பாடுவதும் தடை செய்யப் பட்டுள்ளது.