நன்றியுடைமை

தமிழர் சமயம் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. குறள் 101

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. குறள் 102

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. குறள் 103


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். குறள் 104

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. குறள் 105

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. குறள் 106

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. குறள் 107

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் மாண்டு எழக்கூடியய பிறவியிலும்  மறவாமல் போற்றுவர் பெரியோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. குறள் 108

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
குறள் 109

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
குறள் 110

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

நாலடியாரில் செய்ந்நன்றியறிதல் எனும் அதிகாரம் அமைக்கப்பெறவில்லை. ஆனால் இவ்வறத்தை மெய்ம்மை, புல்லறிவாண்மை, கீழ்மை, கயமை போன்ற அதிகாரங்கள் எடுத்துரைக்கின்றன. தம்மால் தரமுடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று சொல்வது 

செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து (கு.111) 

என ஒரு பாடல் விளக்குகின்றது.

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும்.  (நாலடியார் 357 - பொருட்பால் - பொதுவியல் - கயமை)

பொருள்: ஒரே ஒரு உதவி மட்டும் செய்தார் ஆயினும் அதனைச் சான்றோர் மனத்தில் பொதித்து வைத்துக் கொண்டு  உதவி செய்தவர் நூற்றுக்கணக்கான பிழை தனக்குச் செய்தாலும் அனைத்தையும் பொறுத்துக்கொள்வர். எழுநூறு உதவி செய்திருந்தாலும் ஒரே ஒரு தீது செய்வாராயின், கயவர் தமக்குச் செய்த எழுநூறு உதவிக்களையும் தீயவை என ஆக்கிக்கொள்வர். 

நாலடியார் கீழ்மை எனும் அதிகாரத்தில் சான்றோர் நன்றியறிவார், கீழோர் நன்றி உணர்வில்லாதவர்கள் என்பதைக் கூறுகின்றது.

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து
என்றும் செயினும்  இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு  (நாலடியார் 344)

பொருள்: ஒளி திகழும் அருவி பாயும் நாட்டின் அரசனே! தினை அளவு சிறிய உதவி செய்தாலும் அந்த உதவியைச் சான்றோர் பனை அளவு பெரிதாக எண்ணித் திருப்பி உதவுவர். நன்றி உணர்வு இல்லாதவர் பனை அளவு மிகப் பெரிய உதவி செய்தாலும் அதனை எண்ணியும் பார்க்க மாட்டார்.

பழமொழி நானூறும் கீழ்மக்கள் இயல்பு, நன்றியில் செல்வம், இல்வாழ்க்கை, எனும் தலைப்புகளில் செய்ந்நன்றியறிதல் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இல்வாழ்க்கை எனும் தலைப்பில் செய்ந்நன்றியறிதல் குறித்துத் தம் சுற்றத்தான் என்று நினைத்து நமக்கு நாழி அரிசி கொடுத்தவன் கோபப்பட்டாலும் அதற்காக அவனை இகழாமல் அவன் செய்த உதவியை நினைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் (345) என்று கூறுகிறது.

மற்றொரு பாடல்களில் உதவி செய்தவர்கள் என்பதை மறந்து அவனைப் போற்றாமல், அவனைப் போற்றாமல், அவன் மீது கோபப்படக்கூடாது என்றும் 346 செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக் கோடின்றி அழிவது விதி 347 என்றும் கூறுகிறது. நன்றியணர்வு இன்றி உதவி செய்தவரை அவருடைய பகைவருடன் சேர்ந்து கொண்டு புறங்கூறுதல் கூடாது. கீழ்மக்கள் இயல்பு எனும் தலைப்பில் கொடியவர்க்கு நன்மை செய்தாலும் அவர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற கருத்தை கூறுகிறது.

நன்றியில் செல்வம் எனும் தலைப்பில் உறவினர்களாலும்,நண்பர்களாலும் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை உதவி செய்ததை நன்றியுடன் போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை,நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை என்பதை,

தமராலும், தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி
நிகராகச் சென்றாரும் அல்லர் - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப செய்தது உதவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு (227)

நான்மணிக்கடிகையில் செய்நன்றியறிதல் பற்றி செய்திகள் இடம்பெறுகின்றன. 

பிறர் செய்த நன்றியை நன்றாக கொளல் (11:1) என்றும் 

 பிறர் செய்த நன்மையை மறந்த காலத்து செய்ந்நன்றி கெடும் என்பதை 

நன்றி சாம் நன்றறிய தார் முன்னர் (47:1) என்றும்,

 நன்மை செய்தாரைவிடப் பிறர் செய்த நன்றியை மறவாதவர் மிக மேலானவர் (70:3-4) என்று குறிப்பிடுகிறது.

நன்றிப் பயன் தூக்கா நாணிலி எச்சம் இழந்து வாழ்வார் (திரி.62) 

என்று திரிகடுகம் செய்ந்நன்றியறிதலைக் குறிப்பிட்டமைகின்றது (1:1), 

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனியினிது (30) 

 என்று இனியவை நாற்பது ஒரிடத்தில் மட்டும் செய்ந்நன்றியறிதலை வலியுறுத்துகிறது.

சிறுபஞ்சமூலத்தில் அமையும் நல்ல வெளிப்படுத்தி இயல்புடைவன் இனத்தைக் காப்பவனாகவும், பழிவந்த விடத்து உயிர்விடுபவனாகவும் காணப்படுகின்றனர். மேலும் அவர்கள் தீயதை மறக்க வேண்டும் என்ற கருத்தை சிறுபஞ்சமூலம் நவில்கிறது.

முதுமொழிக்காஞ்சி உள்ளொன்று வைத்து புறமொன்று பொய்யாக நடித்து செய்யப்படும் உதவி கீழ்மையிலும் கீழ்மையானது என்பதை,

பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது  (முது.4:6)

என்ற பாடலடியில் அறியலாம். இன்னா நாற்பது, ஏலாதி போன்ற நூல்கள் செய்ந்நன்றியறிதல் எனும் நெறியைக் கூறவில்லை. மேற்கூறப்பட்ட கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் பிற்காலத்தில் தோன்றிய நீதி இலக்கியங்களும் இக்கருத்தைக் குறிப்பிடுகின்றன. இந்நெறியை ஒளவையார்,

நன்றி மறவேல் (ஆத்தி.21)

என்றும் மேலும் கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை,

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்  (மூது.1)

என்ற பாடலில் வேர் மூலம் உண்ட நீரிலை உச்சியிலே இளநீர்க் காய்களாகத் தந்து நன்றியை வெளிப்படுத்துகிறது தென்னை. அது போல நல்லவர்களும் தாங்கள் பெற்ற உதவியைத் தக்க சமயத்தில் திருப்பிச் செய்வார்கள் என்று குறிப்பிடுகிறார். செய்த நன்றி மறக்க வேண்டாம் என்று உலகநீதியும் இயம்புகிறது இதனை,

செய்த நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம்  (உலக.8:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

இஸ்லாம்

“ (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் – எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை (குர்ஆன் 31:32)

” (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்(குர்ஆன் 7:10)

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:147)

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (குர்ஆன் 14:07)

எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ) (403)

‘மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.' (லுக்மான் : 14)

நூஹ் நபி அவர்கள் பல நூறு ஆண்டுகள் பல்வேறு சோதனைகளை அனுபவித்தும், அவர் நன்றி மறக்கவில்லை என்பதை ‘அவர் நன்றி மிக்க அடியாராக இருந்தார்’ (அல் இஸ்ர :03) 

கிறிஸ்தவம் 

“கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது” -  சங்கீதம் 106:1

“ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக” -  1 நாளாகமம் 16:34 

தீர்க்கதரிசிகள்

தீர்க்கதரிசிகள் என்போர் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் படுகிறார்கள். அவர்களை அடையாளம் காண அவர்களின் வரையறை என்ன என்று அறிவது அவசியம். தூதர்கள் என்ற வார்த்தை நமக்கு ஆபிரகாமிய மதங்களிலிருந்து பரிட்ச்சயமானது. எனவே அதற்கான வரையறையை தேடும் பணியை அங்கிருந்து துவங்குவோம்.

ஆப்ரகாமிய மதங்கள் 

கிறிஸ்தவம் & யூத மதம்: Mesaya, Envoy, Christ, Prophet, Messenger  

தேவதூதர்கள் தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தரின் வேதத்தை போதிப்பார்கள்   

இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார்...(வெளி 1:1) பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். (வெளி 14:6) (இது இறுதி வேதம் குர்ஆனை குறிக்கிறது) 

சகரியாவிடம் தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். (லூக்கா 1:19)

காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது. (தானியேல் 8:19)

தீர்க்கதரிசிகள் கர்த்தரின் வேதத்தை மக்களுக்கு போதிக்கும் வேலைக்காரர்கள்
 
மேலும் அவர் கூறினார்: இப்போது என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களில் ஒரு தீர்க்கதரிசி இருந்தால், கர்த்தராகிய நான் அவருக்கு ஒரு மாராவில் (தரிசனத்தில்) என்னை வெளிப்படுத்துவேன், மேலும் அவருடன் ஒரு சத்தத்தில் பேசுவேன். (எண்ணாகமம் 12:6) 
 
தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன்... (சகரியா 1:6)  

இயேசு கூறினார் "நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. (யோவான் 7:16)

தீர்க்கதரிசிகள் பின்வருவனவற்றை முன்னறிவிப்பு செய்வர்  

எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். - (ஆமோஸ் 3:7-8) 

உங்களுக்கும் எனக்கும் முந்திய தீர்க்கதரிசிகள் பண்டைய காலங்களிலிருந்து பல நாடுகளுக்கும் பெரிய ராஜ்யங்களுக்கும் எதிராக போர், பஞ்சம் மற்றும் கொள்ளைநோய் போன்றவற்றை முன்னறிவித்தனர். சமாதானத்தை தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை, அந்த தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறும்போது, ​​கர்த்தர் உண்மையிலேயே தீர்க்கதரிசியை அனுப்பினார் என்பது தெரியவரும் (எரேமியா 28:8-9)

கர்த்தரின் அனுமதியோடு தீர்க்கதரிசிகள் அதிசயங்கள் செய்து காட்டுவர்  

தீர்க்கதரிசிகள், “ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள். நீங்கள் வியப்புறக்கூடும், ஆனால் மரித்து அழிவீர்கள். ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன். சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்றனர். (அப்போஸ்தலர் 13:41

தீர்க்கதரிசிகளின் மரபு

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். (மத்தேயு 1:1)

மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)

இஸ்லாம்: நபி, ரசூல், இறைதூதர், முத்திரை நபி, 

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். (குர்ஆன் 7:35) 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளிக்கும்ஏக இறைவனை தவிர மற்ற வாங்கப் படும்) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (குர்ஆன் 16:36) 

அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) (நூல் : அஹ்மத், தப்ரானி)

முதல் நபி  யார்? ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள்.

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. இத்ரீஸ் (அலை)
  3. நூஹ் (அலை)
  4. ஹுது (அலை)
  5. சாலீஹ் (அலை)
  6. இப்ராகிம் (அலை)
  7. இஸ்மாயீல் (அலை)
  8. இஸ்ஹாக் (அலை)
  9. லூத் (அலை)
  10. யாகூபு (அலை)
  11. யூசுப் (அலை)
  12. சுஹைபு (அலை)
  13. அய்யூப் (அலை)
  14. மூசா (அலை)
  15. ஹாரூன் (அலை)
  16. துல்கிப்ல் (அலை)
  17. தாவூது (அலை)
  18. சுலைமான் (அலை)
  19. இலியாஸ் (அலை)
  20. யஹ்யா (அலை)
  21. யூனுஸ் (அலை)
  22. ஜக்கரியா (அலை)
  23. அல் யசஉ (அலை)
  24. ஈசா (அலை)
  25. முஹம்மத் (ஸல்)

இதில், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­) (நூல் : புகாரீ 3340)

இறுதித்தூதர்  யார் ? அதற்குரிய ஆதாரம் என்ன?

இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது. 

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (குர்ஆன் 33:40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ர­) (நூல்:புகாரி 438) 

தேவதூதர்களின் தலைவர் ஜிபிரியேல் முகமது நபிக்கு அல்லாஹ்வின் வேதத்தை போதித்தார்

(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. (16:102)

 மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) தெளிவான அரபி மொழியில். நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது. (26:192-96)

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (2:285)

(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள். (6:130)

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? (12:109) 

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். (அல்குர்ஆன் 16:43) 

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). (16:43)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188) 

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது (அல்குர்ஆன் 13:38) 

”அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; ( என முஃமின்கள் கூறுவார்கள்.) (குர்ஆன் 2:285) 

“(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை” (அல்குர்ஆன்: 40:78)

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (7:6) 

முகமது நபி எந்த பாரம்பரியத்தை சார்ந்தவர்? 

வாத்திலா இப்னு அல்-அஸ்கா அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டேன், "நிச்சயமாக, அல்லாஹ் இஸ்மாயீலின் மகன்களிடமிருந்து கினானாவைத் தேர்ந்தெடுத்தான், மேலும் அவர் கினானாவிலிருந்து குரைஷிகளைத் தேர்ந்தெடுத்தார், அவர் தேர்ந்தெடுத்தார். குரைஷிகளில் இருந்து ஹாஷிம் கோத்திரம், அவர் ஹாஷிம் கோத்திரத்திலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார்." (முஸ்லிம் 2276)

                 

தமிழர் சமயம்: சித்தர், குரு, ஆசிரியர், நாதன், முனைவன், முனிவன், தலைவன்

ஆபிரகாமிய மதங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இறைவன் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசிகளிடம் தேவர்களை தூதர்களாகவும் ஆசிரியர்களாகவும் அனுப்புகிறான். தூதர்கள் என்ற பதத்தை தமிழ் வேதங்கள் பயன்படுத்தியது குறைவே. ஆனால் தூதர்கள் என்று ஆபிரகாமிய மதங்கள் யாரை குறிப்பிட்டதோ, தூதர்கள் என்பவர்களுக்கு ஆபிரகாமிய மதங்கள் என்ன வரையறையை தருகிறதோ அந்த அமைப்பில் உள்ளதா என்று ஆய்வு செய்வோம்

நந்தி தேவர் மூலம் சிவனின் வேதம் நாதர்களுக்கு வழங்கப் பட்டது.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (திருமந்திரம் பாயிரம் பாடல் 6)

பதவுரை: நாதர் - ஆசிரியர்; 

பொழிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசிரியர் யார் என்று அறிய விரும்பினால், நந்திகள் நான்கு பேர் : 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியாக்கிரமர்என்றும் என்னொடுகூட இருப்பவர் 4) எண்மர் என்பவர்களாம். (இதில் சிவயோக மாமுனி என்பவர் ஜிப்ரயிலாக இருக்கலாம்)

குறிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசியரைத்தான் நாம் தேடவேண்டும், நந்தியின் உதவி இல்லாமல் ஒருவர் ஓர் வேதத்தையோ, சமயத்தையோ கொண்டுவந்தால் அது இறைவனிடம் வந்ததல்ல என்று குறிப்புணர்த்துவதோடு, அந்த நதிகள் யார் என்ற என்ற விளக்கத்தையும் இந்த பாடல்கள் தருகிறது. 

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே. (பாடல் எண் : 7)

பதவுரை: என் - எட்டு;  
 
பொழிப்புரை: நந்தியால் அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர் பெற்றேன். நந்தியின் உதவியால் மூலோனாகிய சிவபெருமானை நாடினேன். எட்டு சமயங்கள் செய்யும் நாட்டினில் நந்தி காட்டும் வழியில் நான் இருந்தேன். 

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே. (பாடல் 9)

பதவுரை: நானாபலவகைப்பட்ட; 

பொழிப்புரை: நான்கு நந்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும் (நான்கு மரபுகளுக்கு) ஒரு ஆசிரியராக உள்ளனர். நந்திகள் எனப்பட்ட நால்வரும் பலவகை பொருள்களை (Subject) கைக்கொண்டு  எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுக என்று நான்கு நந்தி தேவர்களும் ஆசிரியர்கள் ஆனார்கள்.

நந்திகள் நால்வருக்கும் வேதத்தை மொழிந்தவன் சிவன் ஆவான்  

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10)

பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் மொழிந்தவன் ஈசன் ஆவான். 

நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு
புத்தியினுள்ளே புகப் பெய்து போற்றி செய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தை செய்து  ஆகமம் செப்பலுற்றேனே. (பாடல் எண் : 12)

பொழிப்புரை: ஆசிரியராகிய நந்தி தேவதூதருக்கு அடிபணிந்து இணைந்து என் தலையில் ஏற்றி, சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்தவற்றால், நந்தியினால் சிவாகமம் போதிக்கப்பட்டேன்.   
 
தூதர்களின் மரபு 
 
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபு நிலை திரிதல் என்றால், உரைக்கும் ஆசிரியர் அவர் மரபில் உரைக்கப்பட்ட நூலில் முன் அறிவிக்கப்பட்டவராகவும், அவர் உரைக்கும் நூலில் தனது மரபை கூறக்கூடியவராகவும் இருப்பர். அவ்வாறு உரைக்கும் நூலில் அவருக்கு முந்தியது முதல் நூல் என்றும், அவரு கூறுவது வழிநூல் என்றும் ஆகும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - (குறள் 681)
 
பதவுரை: அன்புடைமை - பிறர் மீது அன்பு கொள்ளுதல்; ஆன்றகுடி - மாட்சிமை, மேன்மை, உயர்வு, மகிமை பெற்ற குடியில் ; பிறத்தல்-பிறத்தல்; வேந்த - இறைவனால்; அவாம் - விரும்பப்படும்; பண்புடைமை - குணம் உடைமை; தூது - தூது; உரைப்பான் - சொல்லுபவன்; பண்பு - இலக்கணம். 

பொருளுரை: பிறர்மீது அன்புடையவனாக இருத்தல், மேன்மை பொருந்திய குடியில் பிறத்தல், இறைவனால் விரும்பப்படும் குணம் உடைமை தூது சொல்லுபவன் இலக்கணம் ஆகும்.  

குறிப்புரை: இது அரசனிடமிருந்து இன்னொரு அரசனுக்கு செல்லும் தூதனைக் குறிக்காது. ஏனென்றால் முதலில், எல்லா அரசனும் ஆன்ற குடியில் பிறப்பதில்லை, ஆட்சி பொறுப்பில் இல்லாத இனமே இல்லை எனலாம். ஆட்சி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்திடமும் மாறி மாறி வரும். ஆனால் தூதர்கள் உயர் குளத்திலும், பாரம்பரியம் / மரபு உள்ள குலத்திலும் பிறப்பர். இரண்டாவது, அரசனே தூதுவனாக செல்வதில்லை. மூன்றாவது, தூதனுக்கு பண்பு இருக்க வேண்டும் எனலாம், அன்பு இருக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே இது அரசனின் தூதுவனைக் குறிக்கவில்லை, மாறாக இறைதூதனை குறிக்கிறது. நான்காவது, இது இறை தூதுவை குறிப்பிடவில்லை என்றால், 

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4

எனும் முதுமொழி காஞ்சியின் வாக்கு மறைநூல்களை புரிய குறள் உதவும் என்கிறது. மறைநூல்கள் தூதர்களின் மூலமாக வருகிறது என்று தொல்காப்பிய முதல்நூல் சூத்திரம் கூறுகிறது. 

திருமூலரின் மரபு தொடர்ச்சி   

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே. - (திருமந்திரம், 04 குருபாரம்பரியம், பாடல்  2)

பொழிப்புரை : இத்திருமந்திரத்தைப் என்னிடமிருந்து பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர் 1) மாலாங்கன், 2) இந்திரன், 3) சோமன், 4) பிரமன், 5) உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் 6) காலாக்கினி, 7) கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

"நந்தி மாதிரி குறுக்க வர" என்று திட்டுவது பெரும் பாவம் என்று இதன் மூலம் புலப்படுகிறது.

இந்து மதம்: ரிஷி, குரு, ஆச்சாரியார்


ஆபிரகாமிய மதங்கள் (யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) கடவுளின் தூதர்களால் தோன்றியவை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்து மதத்தில் "கடவுளின் தூதர்" என்று எதுவும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். பதிலாக, கடவுள் மனிதனாக உலகில் அவதரிக்கிறார் என்று கருதுகிறோம். கடவுள் பிறப்பும் இறப்பும் அற்றவன் என்பதற்கான பல சான்றுகள் சனாதன தர்ம வேதங்களில் பல உள்ளன. அவதரிப்பவர்கள் தூதர்கள் அன்றி கடவுள் அல்ல. இந்த கட்டுரையில் அவ்வாறு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை பற்றி உலக வேதங்கள் என்ன சொல்கிறது? விரும்புகிறவர் களெல்லாம் தனது முயற்சியால் அவ்வாறு ஆகிவிட முடியுமா? என்று பார்ப்போம். 

அக்னி - கடவுளின் தூதர்

1) தெய்வீகப் பூசாரியும் என்னுடைய தூதருமான அக்னியை மகிமைப்படுத்துங்கள் செழிப்பை அருளும் கடவுளுக்கு காணிக்கைகள். - (RIG 1.1.1 மந்திரம் 1:1)

2) ஆணைப்படி பிறந்த அக்னி வைஸ்வாணர், பூமியின் தூதர், சொர்க்கத்தின் தலைவர், முனிவர், சோவ்ரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை கடவுள் உருவாக்கினார். - (SAMA 3.2.4.2.3 கந்தா (பிரிவு) 3:1)

3) அக்னி பூமி மற்றும் வானத்தின் தூதரானார் - (RIG 1.1.59 மந்திரம் 59:2)

4) 
அக்னி கடவுளின் தூதராக இருந்தார்.. ..அக்னியை தூதராக நாம் தேர்வு செய்கிறோம், தன்னை வளப்படுத்துகிறான், அவனது எதிரி தோற்கடிக்கப்படுகிறான்... - (யஜூர் 2.2.5.8 மந்திரம் 8:5
 
 

5) அக்னி கடவுளின் தூதுவர் - (யஜூர் 2.2.5.12 மந்திரம் 12:8)

6) இந்த என்னுடைய மரியாதையுடன், வலிமையின் மகனே, உனக்காக நான் அக்னியை அழைக்கிறேன். அன்பே, புத்திசாலித்தனமான தூதுவர், உன்னத தியாகத்தில் கைதேர்ந்தவர், அனைவருக்கும் அழியாத தூதர். - (சாமா 3.1.1.1.5 தசதி (தசாப்தம்) 5:1)

7) அக்னி வைஸ்வாணரா, ஆணைப்படி பிறந்தவர், பூமியின் தூதர், வானத்தின் தலைவர், முனிவர், சோவரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை, தேவர்கள் உருவாக்கியுள்ளனர். - (சாமா 3.1.1.2.2 தசதி (தசாப்தம்) 2:4)

மேலும், RIG VEDA 
1.1.12 மந்திரம் 12:8, 1.1.36 மந்திரம் 36:3,4 & 5, 1.1.44 மந்திரம் 44:2,3,9 &11, 1.2.2 மந்திரம் 2:2, 1.2.4 மந்திரம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும். 4:2, 1.3.11 மந்திரம் 11:2, 1.3.17 மந்திரம் 17:4, 1.4.1 மந்திரம் 1:1, 1.4.9 மந்திரம் மற்றும் பல வசனங்கள் அக்னியின் தூதுத்துவம் பற்றி பேசுகிறது.

ரிக் பண்டைய தூதுவர்களைப் பற்றியும் பேசுகிறது 

1) கடவுள் தன் பண்டைய தூதுவர்கள் - வருணன், மித்ரா, ஆரியமன் ஆகியோரை.. (RIG 1.1.36 மந்திரம் 36:4)

வைச்வாணர் - யஜுர் வேதத்தில் கடவுளின் தூதர்

1) வானத்தின் தலைவன், பூமியின் தூதர், வைச்சுவாணர், புனித ஆணைக்காகப் பிறந்தவர், அக்னி, முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தினர், தேவர்கள் தங்கள் வாய்க்குக் கோப்பையாகத் தயாரித்துள்ளனர். - (யஜூர் 2.1.4.13 மந்திரம் 13)

2) "..பூமியின் தூதர்'... ..'வைச்சனாரா, புனித ஆணைக்குப் பிறந்தவர்'..." - (2.6.5.2 V 2:1) 
 
கடவுளின் தூதர் என்ற கருத்து இந்து மதத்தில் உள்ளது, RIG இன் குறிப்புடன், இந்து மதத்தின் தோற்றம் கடவுளின் தூதரிடம் இருந்து வந்தது என்பதை நிறுவுகிறது.

ஆனால் அவர்கள் தானாக உருவாக முடியாது. அவர்கள் HOLY ORDER-ல் தான் வருவார்கள். ஒரு தூதரை பற்றிய முன்னறிவிப்புகள் முந்தய வேதங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும். 

ஆபிரகாமிய மதத்தின் தீர்க்கதரிசிகள்/கடவுளின் தூதர்கள் புனித வரிசையில் பிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் வரிசை இங்கே ஒரு படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தூதர்களின் புனித மரபு 
 
இந்து மதத்தில் தூதுவர்கள் இருப்பதைப் பார்த்தோம், ஆனால் இந்து மதத்தில் விரும்பியவர்கள் எல்லாம் அலல்து கடுமையாக தவம் புரிவோர் எல்லாம் தூதர்களாக மாற முடியுமாஅல்லது புனித ஒழுங்கில் (Holy Order) பிறந்தவர்களுக்கு தான் வாய்ப்பு உண்டா?, வேதம் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்?

1) ஹோலியார்டரின் அனைத்து வழிகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர், அவர் முழு அறிவுடன், இந்த செயல்களை வழிபாட்டின் மூலம் பகிர்ந்து கொண்டார். - (ரிக் 1.3.31 மந்திரம் 31)

2) அக்னி தன்னைப் புகழ்பவர்களின் கீர்த்தனைகளால் போற்றப்படுவதற்காக, புகழ்ச்சிகளால் வலிமைமிக்கவராக வளர்த்தார். விடியலின் முதல் ஃப்ளஷில் ஹோலி ஆர்டரின் பல்வேறு நிகழ்ச்சிகளை விரும்பி அவர் தூதுவராக ஜொலிக்கிறார்.- (ரிக் 1.3.5 மந்திரம் 5"2)

3) அவர், பூமியின் தூதுவரும், சொர்க்கத்தின் தலைவருமான, அக்னி வைஸ்வாணரா, புனித ஒழுங்கில் பிறந்தவர், முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற பாத்திரம், கடவுள் உருவாக்கியிருக்கிறார் - (ரிக் 1.6.7 மந்திரம் 7: 1)

4) வருணன் மற்றும் மித்ராவின் அந்த வலிமைமிக்க கண், தவறாத மற்றும் அன்பே, மேல்நோக்கி நகர்கிறது. புனித ஒழுங்கின் தூய்மையான மற்றும் அழகான முகம் அதன் எழுச்சியில் சொர்க்கத்தின் தங்கம் போல் பிரகாசித்தது. - (1.6.51 மந்திரம் 51:1)

5) ஓ மித்ரா மற்றும் வருணா, யார் புனித ஒழுங்கை செழிக்கச் செய்கிறார்கள்; - (2.1.4.5 மந்திரம் 5:a)

6) வானத்தின் தலைவர், பூமியின் தூதர், வைச்வாணரா, ஹோலியார்டரில் பிறந்தவர், அக்னி - (2.1.4.13 மந்திரம் 13:a)

முடிவுரை 

தீர்க்கதரிசிகள் என்று இக்கட்டுரை குறிப்பிடும் பதவி பல்வேறு பண்பாடுகளில் பல்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் அவைகளின் வரையறையை எடுத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதை உணரலாம்.

தமிழ்: முனைவன், முனிவர், சித்தர், நாதர், குரு, ஆசிரியன்

இந்து: ரிஷி, குரு, ஆச்சாரி

கிறிஸ்தவம்: Mesaya, Envoy, Christ, Prophet, Messenger 

இஸ்லாம்: இறைதூதர், ரசூல், நபி

இதைவிட வேறு பெயர்களும் இருக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கு தெரிந்தால் ஆதார வசனத்துடன் தெரியப்படுத்த்துங்கள்.

தாய் தந்தையருக்கு கீழ்ப்படிதல்

கிறிஸ்தவம்


உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.  நீதிமொழிகள் 23:22

என் மகனே, உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே. நீதிமொழிகள் 6:20

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. - யாத்திராகமம் 20:12   

இஸ்லாம் 


மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வ­யுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். (அல்குர்ஆன் 31:14)

எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)

  நபி (ஸல்) அவர்கள், ”மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று கூறினார்கள். ”யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) முஸ்லி­ம் 4987) 

தமிழர் சமயம்

தந்தை தாய் பேண் - ஆத்திச்சூடி 20 

பொருள்: தந்தை தாய்- பெற்றோரை;பேண்- ஆதரி  

 

பெற்றோரை திட்டாதீர்கள் 

தமிழர் சமயம் 

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே. - (2ஆம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை: 1)

பொழிப்புரை: கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!


கிறிஸ்தவம்


தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன். - யாத்திராகமம் 21:17

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம். - நீதிமொழிகள் 20:20

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். உபாகமம் 27:16

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப் படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.  (மத்தேயு 15:4)

இஸ்லாம் 


“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ’ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 146)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)  நூல்: புகாரி (2653))

 

பெற்றோருக்கு கீழ்ப்படித்தலில் உள்ள விதி விலக்கு என்ன?

கிறிஸ்தவம்

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். - (எபேசியர் 6:1)

"கர்த்தருக்குள்" என்றால் என்ன?

வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள் - (எசேக்கியேல் 20:18-19) 


இஸ்லாம் 

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன். 29:8

தெய்வத்தை இகழவேண்டாம்

தமிழர் சமயம்  


வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம் - (உலக நீதி 12)

 பொருள்: வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வத்தை  இகழவேண்டாம் - இகழாதே.

இஸ்லாம்


அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். (குர்ஆன் 6:108)

கிறிஸ்தவம்  


 நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது. - (யாத்திராகமம் 22:20)