மறைநூல் என்றால் என்ன?

பல சமய புனித நூல்களை சிறிதளவேனும் வாசித்த பிகு வேதம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிய முற்படும் பொழுது கீழ்கண்ட இலக்கணங்கள் வேதங்களுக்கு பொருந்தும் என தோன்றியது.
  1.  முன்னறிவிப்புகள்: பின்வருபவனவற்றை முன்னமே அறிவிக்கக் கூடியது (Prophecy) - உதாரணமாக பின்வரும் சம்பவங்கள் தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள்.   
  2.  கடந்த கால வேதத்தை மெய்ப்பிக்கக் கூடியது: எடுத்துக்காட்டாக, அவ்வையாரின் நன்னூல்,குறளையும், திருமந்திரத்தையும் ஒரே வாக்கு என்று கூறுவதும், ஆபிரகாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் முன் தோன்றிய வேதங்களை குறித்து கருத்துக்களை சொல்வதும், ரிக் யஜுர் சாம வேதங்கள் அதே போல முன் வந்த தூதர்களை பெருமை படுத்துவதும் இதில் அடங்கும்.
  3.  மனிதன் அறியாத உண்மைகளை விளக்குவது: கடவுளின் வரையறை, கடவுள் துதி முறைகள் மற்றும் மனித அறிவுக்கு எட்டாத விதி, சொர்கம் நரகம், உயிர், பிறப்பு இறப்பு தொடர்பான செய்திகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
  4.  நன்மை தீமையை வரையறுப்பது: மனிதனின் வாழ்க்கையில் எவையெவை அறம் எவையெவை  மறம் என்று பிரித்து வரையறுத்து கூறக்கூடியதாகவும், அறம் செய்தால் விளையும் நன்மையையும் மறம் செய்வதால் ஏற்படும் தீமையையும் விளக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஆனால் இந்த வரையறை முறையானதல்ல. இந்த வரையறை குறளுக்கும், தொல்காப்பியத்துக்கு பொருந்துமா? பொருந்தாது.! இவை இரண்டையும் வேதம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வரையறையை ஏற்படுத்த முயன்றதாக நீங்கள் கருதினால் அதில் பிழை ஏதும் இல்லை. 

குறள் ஒரு மறை நூல் என்பது "தேவர் குறளும்.....,மூலர் சொல்லும்....ஒன்றே என்றுனர்" எனும் அவ்வையார் வாக்கிலிருந்து புலப்படுகிறது. ஏனென்றால் மூலர் தனது திருமந்திரத்தில் "வேதம் செப்ப வந்தேனே" என்கிறார். இதன் மூலம் குறள் ஒரு மறைநூலாக இருக்க வாய்ப்புள்ளது.

தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்பதை அறிவோம். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அது எவை எவைக்கெல்லாம் இலக்கணம் சொல்கிறது என்று நாம் அறிந்தால் அதுவும் ஓர் மறைநூல் என்று நாம் கருதாமல் இருக்க முடியாது. 

  • தெய்வம் பாலினமற்றது: தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே - சொல்லதிகாரம் 1:4
  • மறைநூலுக்கான வரையறை: முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  • உலகம் எதனால் ஆனது: நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல். பொருள். மரபியல் - 635)

எனவே மனிதன் அறியாத பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதால் தொல்காப்பியமும் மறைநூல் எனக் கருதலாம். சொல்லும் எழுத்தும் புணரும் விதி உட்பட தொல்காப்பியத்தின் பல சூத்திரங்கள் மனித வாழ்வுக்கும் பொருந்தும் என தொல்காப்பிய அறிஞர்கள் கூறுவார். ஒரு சூத்திரம் பல இடங்களுக்கும், இனங்களுக்கும் பொருந்தும் ஒன்று மறைநூலாக கருதாமல் இருக்க  முடியவில்லை.  

மறைநூலுக்கான வரையறைகளாக பல்வேறு மரபுகளின் கருத்தை காண்போம். 

தமிழர் சமயம்

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
  • வினை-யின்: செயல்-இன் 
  • நீங்கி: அதை நீக்கி (அ) இல்லமால் 
  • விளங்கிய: உணரும் உணர்ச்சி 
  • அறிவு: அறிவு ஞானம் 
  • முனைவன்: முந்தியவன், மூத்தவன் 
  • கண்டது: "எழுதப்பட்டது" என்பது இதற்க்கு பொருந்தாது. ஏனென்றால் மனிதன் எழுத துவங்கும் முன்பே அறிவு நூற்கப் பட துவங்கி விட்டது. எனவே கண்டது என்பதே இங்கே குறிப்பிட சிறப்பான சொல், "எழுதப்பட்டது" என்பது "கண்டது" என்கிற சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. எடுத்துக் காட்டாக, கீதை - பாடல், வேதம் என்பது கீர்த்தனைகளின் தொகுப்பு, அத்-திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது) திருக்குர்ஆன் அழைக்கப் படுகிறது. அகத்தியம் (அகம்+இயம்) என்பதும் அகத்தில் ஒலிப்பது , பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் என்று பெயர். 
  • முதல்: ஆதி, ஆரம்ப, தொடக்க 
  • நூல்: (கோர்வையாக, வரிசைப் படுத்தி) நூற்கப்பட்டது 
வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641)  

வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால்,  முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும்.விக்கி  

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)
  • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
  • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
  • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
  • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அதாவது சிந்த அனுபவத்தில் அல்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அல்து இறைவனிடம் இருந்து போதிக்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதநூல் ஆகும்.

இஸ்லாம்

தமிழர் சமயம் கூறுவது போல "நூல்" (அல் கித்தப் - The Book) என்றும் குர்ஆன் தன்னை அடையாள படுத்துகிறது.

இது, சந்தேகத்துக்கு இடமில்லா அல் கிதாப் (நூல்) ஆகும். பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - (குர்ஆன்  2:2)

குர்ஆன் நூலானது அவரின் அனுபவமன்றி அவருக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் ஆகும். அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். இதில் வஹீ என்பது சில முறைகளில் வழங்கப் பட்டது.

(நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (தேவதூதர்) என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? - (குர்ஆன் 6:50)

1) வஹீயின் மூலமோ 2) திரைக்கப்பால் இருந்தோ அல்லது 3) ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன்:42:51)

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.

    1. வஹீயின் மூலம் பேசுவது - உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக (அசரீரியாகவோ, கனவிலோ ) அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. (திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)
    2. திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது - அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (திருக்குர்ஆன்:4:164.)
    3. வானவர் (ஜிப்ரீல்) மூலம் செய்தியைத் தெரிவிப்பது - என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (திருக்குர்ஆன்:16:2.)

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.  

சுருக்கமாக, முகமது நபி, தான் செய்த வினையின் மூலம் விளைந்த அறிவின்றி, அதாவது அனுபவத்தின் மூலமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கொண்டு குர்ஆனை மக்களுக்கு போதித்தார்.

கிறிஸ்தவம் 

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)

 பௌத்தம்

புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் இருந்தபொழுது ஞானம் கிடைத்தது என்று நாம் படித்துள்ளோம். யாரிடமிருந்து? புத்தமதம் நாத்தீக மதம் என்று சொல்லப்படுகிறது. முதலில் பகுதி தொலைந்த  அரைகுறை தகவல் உள்ள நூலையோ, அதன் முழு வரலாறு அறியாத நிலையிலோ அந்த முடிவுக்கு நாம் வர முடியாது.

முடிவுரை

எனவே மனிதனின் அனுபவ அறிவுமின்றி ஒரு கல்வி எல்லா காலங்களிலும், எல்லா மொழயிலும், எல்லா  நிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனுக்கு வழங்கப் பட்டுக் கொண்டே இருந்து இருக்கிறது. அவைகள்தாம் மறை நூல்களாகும், அவைகள் ஒரே இறைவனிடமுள்ள ஒரே மூல நூலின் சிறு சிறு பகுதிகளாம். 

நான்மறை

"நான்மறை" நாம் அறியாத சொல் அல்ல. அவ்வப்பொழுது ஆங்காங்கே ஆத்திகம் பற்றிய உரையாடல்களில் நாம் செவியுறும் வார்த்தை தான். உதாரணமாக,

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 
தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், 
திரு நான்மறை முடிவும் -மேலான நான்கு மறை நூல்களின் கருத்தும்
மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழும், 
முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, 
கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், 
திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், 
ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. (இது இவைகளெல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்கிற பொருளையும் தரும்)

ஆனால் பொதுவாக "நான்மறை" என்பது என்னவாகவெல்லாம் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்.

1) தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர்.

2) நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

3) நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! : ‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது.

4) தமிழர்களின் நான்மறை வேதம் திருக்குறள்: திருக்குறளை திருவள்ளுவர் பத்து பத்து பாடல்களை அதிகாரமாக பிரித்தாரே தவிர அதனை மூன்று பாலாக திருவள்ளுவர் பிரிக்கவில்லை. 133 அதிகாரங்களை மூன்று பாலாக பிரிக்காமல், நான்கு பாலாக மாற்றி அம்மைத்தல் வேண்டும். அதாவது அறம், பொருள், இன்பம், என்ற தலைப்பின் கீழ் வரையறுத்து இருப்பதை. மீள்வரையறை செய்து அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கு பாலில் வடிவமைக்க வேண்டும். அதுவே தமிழர்களின் நான்மறை வேத வடிவின் ஒத்ததாக இருக்கும்.


5) நான்மறை படைத்தது தமிழரே! : உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.

இன்னும் வேறு சில கருத்துக்கள் கூட இருக்கலாம். மேலே குறிப்பிட குறிப்புகளில்  சில உண்மை இருந்தாலும் அவர்களின் இறுதி முடிவில் உண்மை இல்லை எனபது திண்ணம். ஏனென்றால் அவர்களின் முடிவானது ஒரு பகுதி தகவல்களையும், யூகங்களையும் கொண்டு அமைந்துள்ளது. அவைகள் உண்மை அல்ல என்பதற்கான விளக்கங்கள் பின்வருமாறு.

நான்மறை என்பது ஆரிய வேதங்கள் அல்ல. ஏன்?

  • அதர்வணம் பிற்கலத்தில் வேதங்களில் இணைக்கப் பட்டது.
  • ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்றுகுறிப்பிட்டது ஆரிய வேதங்களை அல்ல என்கிற தகவலும், 
  • மற்ற மூன்று வேதங்களின் மதத்திற்கு மாறாக, அதர்வவேதம் வேறு ஒரு 'பிரபலமான மதத்தை' பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறப்படுகிற தகவலும்,  
  • அதர்வ வேதா என்ற பெயர், "அதர்வாணர்களின் வேதம்" என்பதற்காகவே என்று லாரி பாட்டன் கூறுகிற தகவலும்,
  •  அதன் சொந்த வசனம் 10.7.20-ன் படி, நூலின் மிகப் பழமையான பெயர், வேத அறிஞர்களான "அதர்வன்" மற்றும் "ஆங்கிரஸ்" ஆகியவற்றின் கலவையான அதர்வங்கிரசாகும் என்கிற தகவலும், 
  • ஆரம்பகால பௌத்த நிகாயா நூல்கள், அதர்வவேதத்தை நான்காவது வேதமாக அங்கீகரிக்கவில்லை, மேலும் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • பண்டைய சம்ஸ்கிருத பாரம்பரியம் ஆரம்பத்தில் மூன்று வேதங்களை மட்டுமே அங்கீகரித்தது என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், தைத்திரிய பிராமணத்தின் 3.12.9.1 வசனம், ஐதரேய பிராமணத்தின் 5.32-33 வசனம் மற்றும் பிற வேத கால நூல்கள் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், சாமவேதம் அல்லது யஜுர்வேதத்தை கடைபிடிக்கும் ஆசாரியர்களுடன் ஒப்பிடுகையில், அதர்வவேதத்தை கடைப்பிடிக்கும் புரோகிதர்கள் பிராமணர்களின் மிகக் குறைந்த அடுக்குகளாகக் கருதப்பட்டனர். ஒடிசாவில் அதர்வவேத குருமார்களுக்கு எதிரான களங்கம் நவீன காலம் வரை தொடர்கிறது என்கிற தகவலும் 

மேலும் ஒரு ஆதாரம் மனுதர்மசாஸ்திரம் ஆகும்.

But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yagus, and Saman, for the due performance of the sacrifice. (Law of Manu Ch.1:V.23)

பொருள்: ஆனால் நெருப்பு, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றிலிருந்து அவர் யாகத்தின் சரியான செயல்பாட்டிற்காக ரிக், யாகஸ், சமன் என்று அழைக்கப்படும் மூன்று நித்திய வேதங்களை உருவாக்கினார்.

எனவே நான்மறை என்பதை நிச்சயம் சம்ஸ்கிருத வேதங்களை குறிக்கவில்லை என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

நான்மறை என்பது தமிழர் மறைகள் மட்டுமோ, அல்லது திருக்குறள் மட்டுமோ அல்ல. 

ஏனென்றால் மற்றவர்களை போலல்லாமல் மறைநூல்கள் என்றால் என்ன? என்கிற வரையறையும், நான்மறை என்றால் என்ன? என்கிற வரையறையும் நமது மறைநூல்களில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பகுதி தகவல்களையும், யூகங்களையும் விட சில ஆதாரப்பூர்வமான தரவுகள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும். 

நான்மறை என்பது உண்மையில் எதை குறிக்கிறது?

நான் மறை என்பதை அறியும் முன்னர், மறைநூலின் வரையறையினை அறிதல் அடுத்த அடி எடுத்து வைப்பதில் நமக்கு தெளிவை தரும். அதை அறியாதவர்கள் இக்கட்டுரை-யை வாசித்தல் நலம். 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், 
    1. நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர் - மாடு அல்ல 
    2. அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் 
    3. அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நதிகள் உள்ளனர்.
    4. (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
    5. மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர் 
    6. நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது (தொடர் ஆய்வுகள் தேவைப்படும் இது தனிப்பெரும் தலைப்பு)
    1. மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
    2. வடக்கு (பதஞ்சலி) - ஆரிய வேத பொருள் 
    3. தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
    4. கிழக்கு (வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)
மொழிகளை, மதங்களை வகைப்படுத்தும் முறைமை உலக நடைமுறையில் வேறொன்றாக இருந்தாலும் இறைவனின் முறைமை இதுவாக உள்ளது. நான்மறை என்பது உலகம் முழுமைக்கானது என்றால் உலகம் முழுதும் உள்ள மறைநூல்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது அறமல்ல. உலகில் உள்ள அனைத்து சமய, மொழி, நில, இன மக்களின் வேதங்களும் சேர்ந்ததுதான் நான்மறையே தவிர, சம்ஸ்கிருத மறைகள் மட்டுமோ அல்லது தமிழர் நூல்கள் மட்டுமோ நான்மறை அல்ல.

நான்மறைக்கும் ஒரே இறைவன்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. - (தேவாரம் 3320)

பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி மறைநூல்களை ஓதுபவர்களை நன்னெறிக்கு ஊக்குவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும், அனைவருக்கும் ஆசிரியனானவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும். 
 
குறிப்பு: நான்மறை என்பது திசைக்கு ஒரு மறை எனவே அனைத்து மொழி சமய மறை நூல்களையும் இது குறிக்கும்.

நாலுவேத ஞானமும் ஒன்றே  

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவுஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்: நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய இறைவன் படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே, இந்த நூல்களும் அதை அடிபப்டையாக கொண்ட இந்த கட்டுரையும் கூறும் கூற்று எல்லாம் உண்மை என்று எந்த அடிப்படையில் ஏற்பது? என்ற கேள்வி தோன்றுவது இயற்கை தான்.

இதை மீண்டும் சில நூல் ஆதாரம் மற்றும் வரலாற்று ஆதாரம் கொண்டு ஆய்வு செய்வோம். 

    1. நான்கு வேதமும் ஒன்று தான் - அதாவது இவற்றின் போதனைகள் ஒன்றே 
    2. ஒரே கடவுள் மூலம் நான்கு திசைகளுக்கு நான்கு தேவர்கள் மூலம் வழங்கப்பட்ட ஒரே மூல நூலின் வகைகளே நான்மறை ஆகும் 
    3. ஒரே வேதம் நான்காக பிரிவதற்கு முன் மக்கள் ஒரே மொழியை பேசி இருக்க வேண்டும் அல்லது ஒரே சமுதாயமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.
    4. ஒரே இடத்திலிருந்து நான்கு நாதர்கள் அதாவது குருமார்கள் நான்கு திசைக்கு பிரிந்து சென்று இருக்க வேண்டும், அவர்களுக்கு நான்கு நந்திகள் மூலம் ஒரே இறைவன் ஒரே மூல நூலின் பகுதிகளை உபதேசமாக கொடுத்து இருக்க வேண்டும்.

முதல் இரண்டு கருத்துக்கு ஏற்கனவே ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. 

மூன்றாவது கருத்தான "மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்: என்பதற்கு உள்ள ஆதாரம் என்ன?

கிறிஸ்தவம் / யூதம் 

வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். (ஆதியகமம் 11:1-2)

இஸ்லாம் 

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:22)

தமிழர் சமயம் 

தமிழ் சமயங்களை பொறுத்தவரையில்  மொழியே ஓர் ஆதாரமாகும். உலகில் உள்ள மொழிகளில் மிக பழமையானது தமிழ் என்பதும், உலக மொழிகளில் உள்ள சொற்களின் வேர்ச்சொல்லை தேடினால் அது தமிழில் முடிவதை தமிழ் சொல்லியல் அறிஞர்கள் பலர் விளக்கி வருவதை காணலாம். உதாரணமாக,

      • மா.சோ.விக்டர் 
      • கு. அரசேந்திரன்
      • அருளியார் 

ஆகியோர் சமகாலத்தில் உள்ளோர் ஆவர். 

ஆனால் மனிதர்கள் ஒரே மொழி பேசியதற்கு நான்மறைக்கும் என்ன தொடர்பு? உண்டு! எப்படி? 

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட திருமந்திர பாடல்களில் உள்ள நான்கு திசைகளை கணக்கெடுத்து கொண்டால், நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நந்தி (மனிதருக்கு வேதம் உபதேசம் செய்யும் தேவர் இனத்தை சேர்ந்த ஆசிரியர்) என்று சொல்லப்படுகிறது. இதில் நான்கு திசையை குறிப்பிடும் பொழுது எந்த இடத்தில் இருந்து அந்த திசைகளை கணக்கெடுத்து கொள்வது? என்ற கேள்வி எழுகிறது. 

அக்காலத்தில் வெள்ளப் பேரழிவுக்கு பிறகு மனிதர்கள் தங்கி, அவர்களின் நாகரிகம் ஓங்கி வளர்ந்து, பிறகு உலகெல்லாம் பரவியது என்று பைபிள் சொல்கிறது. அது இன்று ஆய்வாளர்களால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மெசபட்டோமியா அல்லது சிந்துசமவெளி நாகரிகம் என்று சொல்லப்படும் இடமாயிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் வெள்ளப் பிரளயத்துக்கு பிறகு மக்கள் சமவெளி பிரதேசத்தில் தங்கினார்கள் என்று பைபிள் கூறுகிறது. 

பின்னாளில் மேற்கு திசையின் சமய பாரம்பரியமான ஆபிரகாமிய மதங்களின் முன்னோடியான ஆப்ரஹாம் மெசபட்டோமியாவிலிருந்து  இன்றைய சிரியாவுக்கு குடி பெயர்ந்தார். இதைப்பற்றி யூதர்களின் பூர்வீகம் என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் விளக்கி உள்ளோம். 
 

அதே போல அகத்தியர் வடக்கிலிருந்து தெற்கிற்கு நடுநிலையை நிலைநிறுத்த வந்தவர் என்பதை நாம் அறிவோம். இந்த செய்தி புராண கற்பனை கதை இல்லை, ஏனென்றால் இதை திருமந்திரம் எனும் நூல் சொல்லுகிறது. ஆனால் "இவ்வுலகம் சரிந்து" என்கிற சொல்லாடலை "இவ்வுலக நிலம் சரிந்தது" என்று பொருள்படும் விதமாக புராணம் எழுதி அதை திரைப்படமாக எடுத்த அறிவு ஜீவிகள் நிறைந்த நிலம் இது. நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து என்பதற்கு, "இவ்வுலக அறம் மங்கி" இருந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். காரணம் அறம் கூறும் முனைவர் இந்த நிலப்பகுதிக்கு இல்லாமல் இருந்து இருக்கவில்லை என்பது மறைமுக செய்தி ஆகும்.

நடுவுநில்லாது இவ்வுலகஞ் சரிந்து
கெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
 
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல் பாலவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம், பாடல் எண் : 2)

மேலும் அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் நூல் தான் முதல் நூல் என்பது தொல்காப்பியம் அதன் வழிநூல் என்பதையும் நாம் அறிவோம்.

மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழி தான் பேசினார்கள் என்ற செய்தியும், பின்னாளில் மொழிகள் பிரிந்த பொழுது திசைக்கு ஒரு மொழியாகவும், ஒவ்வொரு மொழிக்கு ஒரு நந்தியும் இருந்ததை திருமந்திர நூலில் உள்ள குரு பாரம்பரியம் அத்தியாயம் மூலம் உணரமுடிகிறது. பின்னாளில் ஒவ்வொரு திசையிலும் உள்ள மொழிகள் திரிந்து, பல மொழிகளாக பிரிந்தது அவைகளை மொழிக் குடும்பமாக உருவெடுத்தது என்பதை மொழிகளின் வரலாறுகள் கூறுகிறது. 

இந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு பார்த்தலும் தொல்காப்பிய முதல் நூல் தத்துவத்தை பார்த்தாலும், ஒரு மொழிக்கு ஒரு முதல் நூல் மட்டும்தான் இருக்க முடியும், மற்றவைகள் எல்லாம் வழி நூல்கள் ஆகும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு நந்தி ஒரு முதல் நூலை மட்டுமே போதிப்பார், அவர் பின்னாளில் போதித்த அனைத்தும் வழி நூல்களாகும். மொழிகள் பிரிந்து திரியும் பொழுதும் அந்த மொழியில் உள்ள மறை நூல் என்பது வழிநூல் மட்டுமே, முதல் நூல் ஆகாது. அந்தவகையில் பார்த்தல் மேற்க்கத்திய சமய பாரம்பரியத்துக்கு எப்படி ஆப்ரஹாம் முன்னோடியோ அதேபோல தெற்கின் சமய பாரம்பரியத்துக்கு அகத்தியர் முன்னோடி ஆவார், அதோடு அவர் தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் எழுதியமையால் அதாவது முதல்நூல் எழுதியமையால் பழமையான மொழிகளில் தமிழ் இடம் பெற்று உள்ளது.

சம்ஸ்கிருதம், சீனம் (Mandarin), ஆகியவற்றுக்கும் மெசபட்டோமியாவில் பேசப்பட்ட மொழிகளான சுமேரியன், பாபிலோனியன் மற்றும் அசிரியன் (ஒன்றாக சில நேரங்களில் 'அக்காடியன்' என்று அழைக்கப்படுகிறது), அமோரிட், மற்றும் அராமிக் ஆகிய மொழிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.  அதே நேரத்தில் மெசபட்டோமியாவில் பேசப்பட்ட சுமேரியன் மொழிக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், மேலும் ஹீப்ரு, அராமிக், மற்றும் அரபிக் மொழிகளுக்கும் அக்காடியன் மொழிக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நமது இந்த கட்டுரையில் வடக்கு (சமஸ்கிருத மொழி குடும்பம்) மற்றும் கிழக்கு (சீன மொழிக் குடும்பம்) பற்றிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படவேண்டி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த கோணத்தில் மொழி பற்றிய ஆய்வும், சமயங்கள் பற்றிய ஆய்வும் தொடங்கப்படும் பொழுது காலக்கோட்டில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. 

"யாது ஊரே யாவரும் கேளீர்" என்கிற வரிகள் மொழிப் பெருமைக்கானது அல்ல. அதை நிதர்சனமாக ஏற்று தமிழர் அறத்தை மொழியுடன் சுருக்கிக் கொள்ளாமல் இருப்பது அறிவுடைமை. 

முடிவாக, 
  • நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும். 
  • அவைகள் அனைத்தும் வழங்கிய இறைவன் ஒன்று,
  • அவைகள் பேசும் அறம் ஒன்று,
  • அவைகளுக்குள் ஒரு தொடர்பு உண்டு, 
  • அதை ஆய்ந்து, அறிந்து, கற்று, ஏற்று, வழிப்பட்டு பிறருக்கு கூறுவது நம் கடமை ஆகும். 

இயேசு Vs பவுல்

1. கர்த்தர் வரும் நேரம்:

பவுல் கூறுகிறார்: 
 
நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.- (ரோம் 13:11-12
 
இயேசு கூறுகிறார்: 
 
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக் கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள் - (லூக்கா 21:8)
 
2. சத்தியம் மற்றும் உண்மையான நற்செய்தியின் மூலத்தைப் பற்றி:

பவுல் கூறுகிறார்: 
 
மேலும் இதை மனித ஞானத்தால் கற்பிக்கப்படாமல், ஆவியானவரால் கற்பிக்கப்படும் வார்த்தைகளில், ஆவியை உடையவர்களுக்கு ஆன்மீக உண்மைகளை விளக்குகிறோம். ஏனென்றால், நான் அதை மனிதனிடமிருந்து பெறவில்லை, நான் அதைக் கற்பிக்கவில்லை, ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் மூலம் வந்தது. (1கொரி 2:13) 
 
இயேசு கூறுகிறார்: 
 
நான் அவர்களுக்கு உமது வார்த்தையைக் கொடுத்தேன்; சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தப் படுத்துங்கள்; உமது வார்த்தை உண்மை. (John.17:14)
 
3. இறந்தவர்களின் கடவுள் மீது:

பவுல் கூறுகிறார்:

இதற்காகவே கிறிஸ்து மரித்து, மரித்தோருக்கும் உயிரோடிருக் கிறவர்களுக்கும் ஆண்டவராக இருக்கும்படிக்கு மரித்து மீண்டும் வாழ்ந்தார். - Rom.14 [9]

இயேசு கூறுகிறார்:

இப்போது அவர் இறந்தவர்களின் கடவுள் அல்ல, ஆனால் உயிருள்ளவர்களின் கடவுள்; - லூக்கா.20 [38]
 
4. கட்டளைகளின் கூட்டுத்தொகையில்:

பவுல் கூறுகிறார்:

"விபசாரம் செய்யாதே, கொல்லாதே, திருடாதே, ஆசைப்படாதே" என்ற கட்டளைகள் மற்றும் பிற கட்டளைகள் இந்த வாக்கியத்தில் சுருக்கமாக, "உன்னைப் போலவே உன் அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும்". - Rom.13 [9]

இயேசு கூறுகிறார்:

மேலும் அவர் அவரிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர வேண்டும். உங்கள் முழு மனதுடன். இது பெரிய மற்றும் முதல் கட்டளை. ஒரு நொடி அதைப் போன்றது: உன்னில் நீ அன்புகூருவது போல் உன் அயலானையும் நேசிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகளிலும் எல்லா நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் சார்ந்திருக்கிறது. - மத்.22 [37-40] 
 
5. கடவுள் யார் மீது இரக்கம் காட்டுகிறார்:

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், அவர் மோசேயிடம், "நான் இரக்கமுள்ளவருக்கு இரக்கம் காட்டுவேன், நான் இரக்கமுள்ளவன் மீது இரக்கம் காட்டுவேன்" என்று கூறுகிறார். எனவே அது மனிதனின் விருப்பத்தையோ அல்லது உழைப்பையோ சார்ந்தது அல்ல, மாறாக கடவுளின் கருணையைப் பொறுத்தது. அப்பொழுது அவர் தாம் விரும்புகிறவர்கள்மேல் இரக்கம் காட்டுகிறார், அவர் விரும்புகிறவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார். - ரோம்.9 [15-18]

இயேசு கூறுகிறார்:

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் இரக்கம் பெறுவார்கள். - Matt.5 [7] 
 
6. குற்றங்களை மன்னிப்பதில்:

பவுல் கூறுகிறார்:

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, அவருடைய இரத்தத்தினாலே நம்முடைய குற்றங்களுக்கு மன்னிப்பும், நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் அவருக்குள் நமக்கு உண்டு - Eph.1 [7]

இயேசு கூறுகிறார்:

நீங்கள் மனிதர்களின் குற்றங்களை மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மனுஷருடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார். - Matt.6 [14-15] 
 
7. நீதிமானாக்கப்படுகையில்:

பவுல் கூறுகிறார்:

அவர்கள் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் மூலம் அவருடைய கிருபையால் பரிசுத்தமாக நீதிமான்களாக்கப் படுகிறார்கள், ஒரு மனிதன் கிரியைகளைத் தவிர்த்து விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுகிறான் என்று நாங்கள் கருதுகிறோம். சட்டத்தின் படி. ரோம்.3 [24&28]

ஆகையால், நாம் இப்பொழுது அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், தேவனுடைய கோபாக்கினைக்கு நீங்கலாக அவரால் இரட்சிக்கப்படுவோம். - Rom.5 [9]

இயேசு கூறுகிறார்:

ஏனெனில் உங்கள் வார்த்தைகளால் நீங்கள் நீதிமான்களாக்கப் படுவீர்கள், உங்கள் வார்த்தைகளால் நீங்கள் கண்டனம் செய்யப்படுவீர்கள். - Matt.12 [37] 
 
8. நித்திய வாழ்வின் விலையைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், பாவத்தின் சம்பளம் மரணம், ஆனால் கடவுளின் இலவச வரம் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நித்திய ஜீவன். - Rom.6 [23]

இயேசு கூறுகிறார்:

மேலும் என் பெயருக்காக வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தந்தையையோ தாயையோ பிள்ளைகளையோ நிலங்களையோ விட்டுப் பிரிந்த ஒவ்வொருவரும் நூற்றுக்கு மடங்காகப் பெற்று நித்திய ஜீவனைப் பெறுவார்கள். - Matt.19 [29]

உங்களில் எவர் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்புகிறாரோ, அதைச் செய்து முடிப்பதற்குப் போதுமானதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட மாட்டீர்களா? ஆகையால், உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் துறக்காதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். - லூக்கா.14 [28&33] 
 
9. மனிதர்களுக்குள்ளே கெளரவமானதைக் குறித்து:

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதர்களின் பார்வையிலும் நாம் கெளரவமானதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். - 2கொரி.8 [21]

இவ்வாறு கிறிஸ்துவைச் சேவிப்பவன் கடவுளுக்கு ஏற்புடையவன், மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவன். - Rom.14 [18]

நான் செய்யும் எல்லாவற்றிலும் எல்லாரையும் பிரியப்படுத்த முயல்கிறேன். - 1கொரி.10 [33]

இயேசு கூறுகிறார்:

ஆனால் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்களுக்கு முன்பாக உங்களை நீதிமான்களாக்குகிறீர்கள், ஆனால் கடவுள் உங்கள் இதயங்களை அறிவார்; ஏனென்றால், மனிதர்களுக்குள்ளே உயர்ந்தது கடவுளின் பார்வையில் அருவருப்பானது. - லூக்கா.16 [15]

எல்லா மனிதர்களும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ, அவர்களுடைய பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு அப்படியே செய்தார்கள். - லூக்கா.6 [26] 
 
10. இறக்கும் போது:

பவுல் கூறுகிறார்:

சகோதரரே, நான் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவைக் குறித்து உங்கள்மேல் கொண்ட பெருமையினால் நான் தினமும் மரிக்கிறேன். - I கொரிந்தியர் 15 31:

இயேசு கூறுகிறார்:

மேலும் வாழ்ந்து என்னில் நம்பிக்கை கொள்பவன் ஒருக்காலும் மரிக்கமாட்டான். - யோவான் 11 26 
 
11. நியாயத்தீர்ப்பின் அடிப்படையில்:

பவுல் கூறுகிறார்:

சட்டம் இல்லாமல் பாவம் செய்த அனைவரும் சட்டமின்றி அழிந்து போவார்கள், மேலும் நியாயப்பிரமாணத்தின் கீழ் பாவம் செய்த அனைவரும் நியாயப்பிரமாணத்தால் நியாயந்தீர்க்கப்படுவார்கள். - ரோம்.2 [12]

இயேசு கூறுகிறார்:

என்னை நிராகரித்து என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனுக்கு ஒரு நீதிபதி உண்டு; நான் சொன்ன வார்த்தையே கடைசி நாளில் அவனுடைய நியாயாதிபதியாக இருக்கும். - யோவான்.12 [48] 
 
12. கட்டளைகள் மற்றும் நித்திய ஜீவனைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

நான் ஒரு காலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உயிருடன் இருந்தேன், ஆனால் கட்டளை வந்தபோது, ​​பாவம் புத்துயிர் பெற்றது, நான் இறந்தேன்; வாழ்வை வாக்களித்த கட்டளையே எனக்கு மரணமாக இருந்தது. - Rom.7 [9-10]

இயேசு கூறுகிறார்:

மேலும் அவர் அவரிடம், "நல்லதைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?" அதில் ஒருவர் நல்லவர். நீங்கள் வாழ்க்கையில் நுழைய விரும்பினால், கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். - Matt.19 [17] 
 
13. உங்கள் தகப்பன் மீது:

பவுல் கூறுகிறார்:

கிறிஸ்துவில் உங்களுக்கு எண்ணற்ற வழிகாட்டிகள் இருந்தாலும், உங்களுக்கு அதிகமான தந்தைகள் இல்லை. ஏனெனில், நான் நற்செய்தியின் மூலம் கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் தந்தையானேன். - 1கொரி.4 [15]

நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் குழந்தை ஒனேசிமுசுக்காக நான் உங்களிடம் முறையிடுகிறேன். - Phlm.1 [10]

இயேசு கூறுகிறார்:

மேலும் பூமியில் உங்கள் தந்தை என்று அழைக்க வேண்டாம், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். - Matt.23 [9] 
 
14. நித்திய ஜீவனுக்கான தகுதியைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

அதனால், பாவம் மரணத்தில் ஆட்சி செய்தது போல, கிருபையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலம் நீதியின் மூலம் நித்திய வாழ்வுக்கு ஆட்சி செய்யும். - ரோம்.5 [21]

இயேசு கூறுகிறார்:

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவர் நியாயத்தீர்ப்புக்கு வரவில்லை, ஆனால் மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டார். - John.5 [24]
 
15. படைப்பின் விதி (வானம் மற்றும் பூமி):

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், படைப்பே சிதைவதற்கான அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளின் மகிமையான சுதந்திரத்தைப் பெறுகிறது. - Rom.8 [21]

இயேசு கூறுகிறார்:

வானமும் பூமியும் ஒழிந்துபோம், - மத்.24 [35]

16. நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் விதியைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

விசுவாசமுள்ள யாவரும் நீதிமான்களாக்கப் படுவதற்கு, கிறிஸ்துவே நியாயப் பிரமாணத்தின் முடிவு. - Rom.10 [4]

இயேசு கூறுகிறார்:

நான் நியாயப் பிரமாணத்தையும் தீர்க்க தரிசிகளையும் ஒழிக்க வந்தேன் என்று நினைக்காதே; அவற்றை ஒழிக்க அல்ல, நிறைவேற்றுவதற்காக வந்துள்ளேன். நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வானமும் பூமியும் ஒழிந்துபோகும்வரை, அனைத்தும் நிறைவேறுமளவும், சட்டத்திலிருந்து ஒரு துளியும், ஒரு புள்ளியும் மறையாது. - Matt.5 [17-18]

17. ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளத்தைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

மேலும் தேவன் சபையில் முதல் அப்போஸ்தலர்கள், இரண்டாவது தீர்க்கதரிசிகள், மூன்றாவது, ஆசிரியர்கள், - 1கொரி.12 [28]

மேலும் சிலர் இருக்க வேண்டும் என்பது அவருடைய பரிசுகளாகும். அப்போஸ்தலர்கள், சில தீர்க்கதரிசிகள், சில சுவிசேஷகர்கள், சில போதகர்கள் மற்றும் ஆசிரியர்கள், - எபி.4 [11]

இதற்காக நான் பிரசங்கியாகவும் அப்போஸ்தலனாகவும் நியமிக்கப்பட்டேன் (நான் உண்மையைச் சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை), விசுவாசத்திலும் சத்தியத்திலும் புறஜாதிகளுக்கு போதகனாக நியமிக்கப்பட்டேன். - 1Tim.2 [7]

இந்த நற்செய்திக்காக நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், போதகராகவும் நியமிக்கப்பட்டேன் - 2Tim.1 [11]

இயேசு கூறுகிறார்:

ஆனால் நீங்கள் ரபி என்று அழைக்கப்பட மாட்டீர்கள், ஏனென்றால் உங்களுக்கு ஒரு போதகர் இருக்கிறார், நீங்கள் அனைவரும் சகோதரர்கள். - மத்.23 [8]
 
18. இரட்சிக்கப்பட வேண்டிய எண்ணைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

உங்கள் சொந்த எண்ணத்தில் நீங்கள் ஞானமாக இருக்கக்கூடாது என்பதற்காக, சகோதரர்களே, இந்த மர்மத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: முழு எண்ணிக்கை வரை இஸ்ரவேலின் ஒரு பகுதியை கடினப்படுத்துதல் வந்துவிட்டது. புறஜாதிகள் உள்ளே வருகிறார்கள், இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்; "சீயோனிலிருந்து மீட்பவர் வருவார், யாக்கோபை விட்டும் தேவபக்தியை அகற்றுவார்" என்று எழுதப்பட்டிருக்கிறது - Rom.11 [25-26]

இயேசு கூறுகிறார்:

இடுக்கமான வாசல் வழியே நுழையுங்கள்; ஏனென்றால், வாசல் அகலமானது, வழி எளிதானது, அது அழிவுக்கு வழிவகுக்கும், அதன் வழியாக நுழைபவர்கள் பலர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி கடினமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் குறைவு. - Matt.7 [13-14]

19. போதகர்களின் (மேய்ப்பர்களின்) எண்ணிக்கை மற்றும் அடையாளம் குறித்து:

பவுல் கூறுகிறார்:

மேலும் அவருடைய பரிசுகள் சிலர் அப்போஸ்தலர்களாகவும், சில தீர்க்கதரிசிகளாகவும், சில சுவிசேஷகர்களாகவும், சில போதகர்களாகவும் (மேய்ப்பர்கள்) மற்றும் போதகர்களாகவும் இருக்க வேண்டும்.. - எபி.4 [11]

இயேசு கூறுகிறார்:

இந்த தொழுவத்தில் இல்லாத வேறு ஆடுகளும் என்னிடம் உள்ளன; நான் அவர்களையும் அழைத்து வர வேண்டும், அவர்கள் என் குரலைக் கேட்பார்கள். எனவே ஒரே மந்தை, ஒரு மேய்ப்பன். - ஜான் .10 [16] 
 
20. தலைவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளத்தைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

கிறிஸ்துவில் உங்களுக்கு எண்ணற்ற தலைவர்கள் இருந்தாலும் . . .. - 1கொரி.4 [15]

இயேசு கூறுகிறார்:

தலைவர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு ஒரு தலைவர், கிறிஸ்து. - Matt.23 [10] 
 
21: மொத்த சீரழிவு பற்றி:

பவுல் கூறுகிறார்:

பிறகு என்ன? யூதர்களாகிய நாம் இன்னும் நன்றாக இருக்கிறோமா? இல்லை, இல்லை; ஏனென்றால், யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் ஆகிய எல்லா மனிதர்களும் பாவத்தின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே குற்றஞ்சாட்டினேன், அதில் எழுதப்பட்டுள்ளது: "ஒருவனும் நீதிமான் இல்லை, இல்லை, ஒருவனல்ல; எந்த வித்தியாசமும் இல்லை; எல்லாரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டதால், .. .. - ரோம்.3 [9,10,22,23]

இயேசு கூறுகிறார்:

நல்ல மனிதன் தன் நல்ல பொக்கிஷத்திலிருந்து நன்மையைப் பெறுகிறான், தீயவன் தன் தீய பொக்கிஷத்திலிருந்து வெளிவருகிறான். -- Matt.12 [35]

நல்ல மனிதன் தன் இதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து நன்மையை உண்டாக்குகிறான், தீயவன் தன் தீய பொக்கிஷத்திலிருந்து தீமையை உண்டாக்குகிறான்; ஏனென்றால், இதயத்தின் நிறைவிலிருந்து அவருடைய வாய் பேசுகிறது. - லூக்கா.6 [45]

நீங்கள் பரிசுத்த ஸ்தலத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் கொலைசெய்த குற்றமற்ற ஆபேலின் இரத்தத்திலிருந்து பரக்கியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரை பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தம் அனைத்தும் உங்கள்மேல் வரும். - Matt.23 [35]
 
22. நிபந்தனையற்ற தேர்தல்:

பவுல் கூறுகிறார்:

எனவே இது மனிதனின் விருப்பத்தையோ அல்லது உழைப்பையோ சார்ந்தது அல்ல, மாறாக கடவுளின் கருணையைப் பொறுத்தது. - ரோம்.9 [16]

இயேசு கூறுகிறார்:

என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ஆண்டவரே, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்து, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தி, உமது நாமத்தினாலே அநேக வல்லமைகளைச் செய்தோம் அல்லவா? [23]அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நான் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். - மத்.7 [21&22]
 
23. கடவுளுக்குப் பலியிடும்போது:

பவுல் கூறுகிறார்:

கிறிஸ்து, நம்முடைய பாஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டார். - 1கொரி.5 [7]

மேலும், கிறிஸ்து நம்மை நேசித்தது போலவும், நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தது போலவும் அன்பில் நடந்துகொள்ளுங்கள். - Eph.5 [2]

இயேசு கூறுகிறார்:

'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் பொருளைப் போய் அறிந்து கொள்ளுங்கள். - மத்.9 [13]
 
24. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஊதியம் பற்றி:

பவுல் கூறுகிறார்:

சிறப்பாக ஆட்சி செய்யும் மூப்பர்கள், குறிப்பாக பிரசங்கம் மற்றும் போதனைகளில் உழைப்பவர்கள் இரட்டிப்பு மரியாதைக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்; ஏனெனில், "எருது தானியத்தை மிதிக்கும் போது அதன் முகத்தை மூடாதே " என்றும், "வேலை செய்பவன் அவனுடைய கூலிக்குத் தகுதியானவன்" என்றும் வேதம் கூறுகிறது. - 1Tim.5 [17-18]  
 
உங்கள் பொருள் பலன்களை நாங்கள் அறுவடை செய்தால் அதிகமாகவா? இந்த உரிமையை மற்றவர்கள் உங்கள் மீது பகிர்ந்து கொண்டால், நாங்கள் இன்னும் அதிகமாக வேண்டாமா? - 1கொரி.9&12.  
 
இயேசு கூறுகிறார்:

மேலும் நீங்கள் போகும்போது, ​​'பரலோகராஜ்யம்' என்று பிரசங்கியுங்கள். கையில்.' நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்திகரியுங்கள், பிசாசுகளைத் துரத்துவீர்கள், நீங்கள் பணம் கொடுக்காமல் பெற்றீர்கள், கூலியின்றிக் கொடுங்கள், - Matt.10 [7-8] 

25. ஒருவர் எவ்வாறு கடவுளின் பிள்ளையாகிறார்:

பவுல் கூறுகிறார்:

மற்றும் படைப்பு மட்டுமல்ல, ஆவியின் முதல் கனிகளைப் பெற்ற நாமே, நம் உடல்களை மீட்கும் மகன்களாக தத்தெடுப்புக்காகக் காத்திருக்கும்போது உள்ளுக்குள் புலம்புகிறோம். - Rom.8 [23] 

நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளாக தத்தெடுப்பு பெறலாம். - கலா.4 [5] 

இயேசு கூறுகிறார்:

உண்மையாகவே, உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மேலிருந்து பிறக்காவிட்டால் * தேவனுடைய ராஜ்யத்தைக் காண முடியாது. மாம்சத்தினால் உண்டானது மாம்சம், ஆவியினாலே உண்டானது ஆவி. நீ மேலிருந்து பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம். - யோவான்.3 [3,6,7] 

ஆய்வும் முரண்களும் தொடரும்..