அரக்கர்களும் அசுரர்களும்

தமிழர் சமயம்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேதொல்காப்பியம் 573 என தொல்காப்பியத்துக்கு விளக்க உரை எழுதிய இளம்பூரணர் கூறுவார் "பிறவாவது தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்" என்று.

அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை - (திருமந்திரம் 5)

பொருள்: சிவனன்றி அவனால் படைக்கப்பட்ட மூவர்களாகிய தேவர்கள், மனிதர்கள், அசுரர்களால் செய்ய முடிந்தது ஏதும் இல்லை.

மேற் சொன்ன கூற்று உண்மையா என்று ஆய்வோமா? அசுரர் என்ற சொல் தேவர் மற்றும் மனிதர் ஆகிய படைப்புகளோடு சேர்த்து பேசபப்டுவதன் மூலம் அசுரர் என்பது ஒரு தனி படைப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது.

 கீழ்கண்ட திருமந்திர பாடல்களில் அசுரர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுளள்து .

44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.

10 செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.

8 நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என
வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

5 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.

3 நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.

18 மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.

அதுமட்டுமில்லாமல் அசுரருக்கு வேறு சில பெயர்களும் தமிழ் நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... - (பரிபாடல் 60)

 மாயம் செய் அவுணரை - (கலித்தொகை 2:3)

 கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி (காலிததகை 1:3) 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் - (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)

பொழிப்பு: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
 
சொற்ப்பொருள்: அலகை - பேய் (evil sprit),  அவுணர் - அசுரர்கூளி - பேய், சாத்தான், அரக்கன் 

இஸ்லாம்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)'

 ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். - (அல்குர்ஆன் 7 : 27)

மேலும் சூரத்துல் ஜின் என்கிற அத்தியாயம் குர்ஆனில் இறக்கி அருளப்பட்டுள்ளது. அதில் அவர்களது உணவு, உறைவிடம் உட்பட  ஆற்றல், செயல்கள் மற்றும் பண்புகள் என பலவும் விரிவாக கொடுக்கப் பட்டுள்ளது.

கிறிஸ்தவம்

எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனிதனை படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். - (ஆதியாகமம் 1:27)

ஒருநாள், தேவதூதர்கள் யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள் சாத்தானும் அவர்களோடு வந்து நின்றான். - (யோபு 1:6)

சாத்தான் என்பவன் fallen Angel என்ற கருத்து கிறிஸ்த்தவர்களிடம் நிலவுகிறது அது பிழை என்பதற்கு ஆதாரம்  இந்த வசனம். தேவர்களுடன் சாத்தான் வந்து நின்றான் என்கிற வசனம் சாத்தான் தேவர் இனத்தை சார்ந்தவன் அல்ல என்று கூறுகிறது. ஆனால் சாத்தான் என்கிற பெயர் அவனது (அரக்க) செயலால் அவனுக்கு  வழங்கப் பேட்ட பெயர். எனவே மனிதனும் அல்லாமல், தேவரும் அல்லாமல், பேராற்றல் (அசுர பலம்) வழங்கப்பட்ட இனத்தை சார்ந்தவன் சாத்தான் என்று விளங்க முடிகிறது. 

எசேக்கியேல் 28- 14:18 (அசுரர் பற்றி) 
 
14 You were the anointed cherub who [h]covers, And I placed you there. You were on the holy mountain of God; You walked in the midst of the stones of fire.
 
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது சிறகுகள் என் சிங்காசனத்தின் மேல் விரிந்தன. நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன். நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய். நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.  

15 You were blameless in your ways, From the day you were created, Until unrighteousness was found in you.
 
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய். ஆனால் பிறகு கெட்டவனானாய் 
 
16. By the abundance of your trade, You were internally filled with violence, And you sinned; Therefore I have cast you as profane From the mountain of God. And I have destroyed you, you covering cherub, From the midst of the stones of fire. 
 
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது. ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய் எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன். நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன். நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன். உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன. ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும் நகைகளைவிட்டு விலகச் செய்தேன். 
 
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது. உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது. எனவே உன்னைத் தரையில் எறிவேன். இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.  
 
18  By the multitude of your wrongdoings, In the unrighteousness of your trade You profaned your sanctuaries. Therefore I have brought fire from the midst of you; It has consumed you, And I have turned you to ashes on the earth In the eyes of all who see you. 
 
18 நீ பல பாவங்களைச் செய்தாய் நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய். இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய். எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன். இது உன்னை எரித்தது! நீ தரையில் எரிந்து சாம்பலானாய். இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.

சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”— (யோபு 1:6)

சாத்தான்; சோதனைக்காரன்.— (மத்தேயு 4:3)
 
பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். (யோவான் 44)

உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 12:9)

முடிவுரை

இறைவனால் படைக்கப்பட்ட மூன்று இனங்கள்
  1. தேவர்கள் (அ) அமரர் (அ) தேவ தூதர்கள் (அ) வானவர்கள் (அ) மலக்குகள் (அ) Angel - இறைவனுக்கு பணிவிடை செய்பவர்கள் - with no free will
  2. அசுரர்கள் (அ) ஜின்கள் (அ) பூதம் (அ) அவுணர் (அ) கேரூப்கள் - பல்வேறு பிரமாண்ட "அசுர பலம்" கொண்டவர்கள் - with free will
  3. மனிதர்கள் (அ) இயக்கர்கள்  (அ) நரர் (அ) Humans - இது நாம் with free will 
இமூவரும் வெவேறு பரிமானங்களில் (Dimensions) வாழுகிறார்கள். அறிவியல் பதினோரு பரிமாணங்கள் இருப்பதாக கூறுகிறது.

அரக்கர்கள் - "அரக்க குணம்" என்பார்களே அவர்கள் தன் இனத்தில் சக நபருக்கு இடையில் இரக்கம் காட்டாதவர்கள். இறைவன் வகுத்த அறங்களை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாதவர்கள், பின்பற்றாதவர்கள்தான் அரக்கர்கள் ஆவர்.

பேய் (அ) அலகை (அ) கூளி (அ) அரக்கன் (அ) சாத்தான் (அ) சைத்தான் (அ) இராட்சதர் என்று இவர்கள் அழைக்கப் படுகிறார்கள். இந்த பண்பு முதலில் அசுரர் குலத்தில் தோன்றியதால் அரக்கர்கள் அசுர குலத்தை சார்ந்தவர்களாக கருதபடுகிறார்கள் ஆனால் மனிதர்களிலும் அரக்கர்கள் உள்ளார்கள் என்பதை கீழுள்ள செய்திகள் உறுதிப்படுத்துகிறது. 

இந்துமதம்  

மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || கீதை - 9.12||

மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம் மற்றும் குழப்பம்
ஸ்²ரிதா: = அடைக்கலம் கொள்கிறார்கள்

ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில் இருக்கிறார்கள்.

பொருள்: ஆசைகள், அந்த ஆசைகளை அடைய வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற அறிவு.... இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன் உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள். 

இஸ்லாம் 

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக. (குர்ஆன் 6:112)

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (குர்ஆன் 114:4-6)

 நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் மீண்டும் மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவர் தான் ஷைத்தான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (நூல் : புகாரீ 3275)

கிறிஸ்தவம் 

பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். (யோவான் 8:44)

ஜாதிகள் என்ற கற்களால் எழுப்பட்டுள்ளது ஹிந்து மதம், கற்களை அகற்றி விட்டால் எழும்பிய கட்டடம் சிதைந்து விடுமா அல்லது சிறப்படையுமா?

மனிதர்கள் மத்தியில் உள்ள ஏற்ற இறக்கத்தை மட்டுமே கொண்டு இந்து மதம் கட்டப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. கண்ணுக்கு எதிரே மக்கள் உடனுக்குடன் விளைவை பார்ப்பதால் சாதி பூதாகரமாக தெரியலாம்.

சாதி எப்படி கொடுமையானதோ அதைவிட பல தவறான விடயங்களை அடித்தளமாக கொண்டு இந்துமதம் கட்டப்பட்டுள்ளது.

  • பல்வேறு நிலத்தில் இருந்த பல்வேறு சமயங்களை, மறை நூல்களை, தத்துவங்களை உள்வாங்கி செரித்து அவைகளின் வரலாற்றை, மொழியை அழித்து அம்மக்களை வரலாறற்ற அனாதைகளாக மாற்றியது இந்து மதம்.
  • ஒவ்வொரு சமயத்துக்கும் மொழிக்கும் வேதம் இருக்கும் பொழுது, யாரும் அறியா சம்ஸ்கிருத வேதத்தை எல்லோருக்கும் பொதுவாக்கி, கற்று ஏற்று பின்பற்ற வேண்டிய நூலை வாசிக்க கூட இயலாமல் வைத்தது இந்து மதம்.
  • தமிழர் சமயமாக இருந்தாலும், இந்து மதமாக இருந்தாலும், ஆப்ரஹாமிய மதமாக இருந்தாலும், பல்வேறு தீர்க்க தர்சிகளால் பல்வேறு காலங்களில் தொடராக வேதங்கள் எழுதப் பட்டது வரலாறு. ஆனால் பல்வேறு புராண நூல்களை எழுதியவர் வேதவியாசர் என்கிற தனி நபர் என்கிற முரண் மட்டுமல்ல வேதங்கள் கூறும் அறநெறிக்கு எதிராக ஒழுக்க சீர்கேட்டை போதிக்கும் இந்த புராணங்களை வேத நூல்களை விட அதி முக்கியமாக ஆக்கியது இந்து மதம்.
  • இறைவன், வேதம், சொர்கம் நரகம், இம்மை மறுமை, நன்மை தீமை, என எல்லாவற்றுக்கும் மாற்று விளக்கம் கூறியதோடு, ஆன்மிகம் என்பதையே கேலிக்கு உரியதாக்கியது இந்து மதம்.
  • இவை அனைத்தின் மூலமும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே பெரும் திரையை ஏற்படுத்தியது இந்து மதம்.

எனவே சாதியை ஒழித்தால் மட்டும் இந்துமதம் சிறப்படையாது. 

இவை அனைத்தையும் ஒழித்தால் இந்து மதமே இருக்காது. 

https://ta.quora.com/ 

கர்த்தரை பற்றிய இயேசுவின் முக்கிய போதனை என்ன?


- இஸ்ரவேலரே கேள்! நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே (மாற்கு 12:29)

“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).

கர்த்தரை கண்டவர் உண்டா?

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18)

கர்த்தருக்கு பிறப்பு இறப்பு உண்டா?

கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார். (சங்கீதம் 9:7)

கடவுளை கொலை செய்ய முடியுமா ?

உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே! (எசக்கியேல் 28:9)

பூமியில் உள்ளவர்கள் இறைவனாவார்களா?

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா(இறைவன்) என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:9)

சிலைகள் இறைவனா?

அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள் (1 கொரி 10:7)

சரி இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று கூறுகிறார்?

என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். (மத்தேயு 10:40,41)

இந்த வசனம் இயேசு கிறிஸ்து அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கிறது. மேலும் அவர் போதகர் என்று அறியப்பட்டு இருந்தார்.

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டும் அனுப்பபட்டவர் !

அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். - மத்தேயு 15:24

இயேசு சீடர்களிடம் ,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். (மத்தேயு 10:5)

எதற்கு இயேசு உலகுக்கு அனுப்பபட்டார் ?

மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)

இயேசு தாமாகவே அனைத்தையும் செய்தாரா?

நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். னக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது(யோவான் 5:30)

எனவே அவர் கர்த்தரும் இல்லை கர்த்தரின் மகனும் இல்லை என்று பொருள்.

வேத வசனங்களை மனிதர்கள் எழுதலாமா?

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

பைபிளில் மாற்றம் செய்ய மனிதருக்கு உரிமை உண்டா?

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர்உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய் - (நீதிமொழிகள் 30:6)

எனில் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தைகள் மட்டுமே இறைவனின் வசனங்கள் மற்றவைகள் பவுல் என்பவரால் எழுத பட்டது : இறைவசனததோடு பவுல் சேர்த்த வார்த்தைகள் பொய் என்பது உறுதியாகிறது மேலும் அதில் இயேசு கிறிஸ்து அவர்களின் போதனைக்கு எதிரான வசனங்களும் உள்ளது? கர்த்தர் ரட்சிப்பானாக...

மேலுள்ள அனைத்து கொள்கைகளும் போதனைகளும் முகமுது நபி அவர்களாலும் போதிக்க பட்டுள்ளது. ஒவ்ருவொம் முஸ்லிமும் இயேசு கிறிஸ்து அவர்கள் மீது அன்பு கொள்வதும் அவரை நம்புவதும் கடைமை ஆகும்.

முகமது நபி அவர்கள் பற்றி மோசே மற்றும் இயேசு கிறிஸ்துவும் முன்னறிவிப்பு செய்து உள்ளனர். இயேசு கிறிஸ்து அவர்களை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் உண்மையில் கிருஸ்துவை நேசிப்பது உண்மையானால் அவர்கள் முகமுது நபி அவர்களை நம்புவதும் பின் பற்றுவதும் அவசியமாகிறது.

1. "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)

2. மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)

3. உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது,

4. உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

கிறிஸ்து சத்தியத்தை போதித்தார் :

ஆனால் இன்றைய நடைமுறையில்
  • கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாட படும் நாள் அவரின் உண்மை பிறந்த நாள் அல்ல என்பதை அனைவரும் அறிவர்.
  • பைபிளில் சுவிசேசம் எழுதிய பலர் இயேசுவின் உண்மை சீடர்கள் இல்லை.
  • பவுல் இயேசு அவர்களை நேரில் பார்க்காத பல வருடங்களுக்கு பின் வந்த மனிதர், தன்னை தானே இயேசுவின் சீடராக அறிவித்து கொண்ட யூதர்.
  • இயேசு அவர்களின் போதனைக்கு எதிரான போதனைகளை பவுல் செய்கிறார்.
  • கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் பைபிளில் எங்கும் இல்லை.
  • இயேசு தன்னை கர்த்தர் என்றோ கர்த்தரின் நேரடி மகன் என்றோ தன் வாயால் சொன்னதே இல்லை.
  • இயேசு ஒரே இறைவனை வணங்க சொல்லியும் சிலை வணக்கம் கூடாது என்றும் சொல்லி இருக்க நடப்பது அனைத்தும் அவருக்கு எதிரான செயல்களே..
  • கிருஸ்தவர்கள் என்பவர்கள் இயேசு கிறிஸ்து போதித்ததை மட்டும் பின்பற்றுபவர்கள். தேவை என்கிற பட்சத்தில் சிகப்பு பைபிள் என்ற ஒரு பதிப்பில அவரது வார்த்தைகள் மட்டும் சிகப்பு நிறத்தில் அச்சிட பட்டு இருக்கும் அவைகளையும் திருக்குரானில் இயேசு கிறிஸ்து பற்றிய வாசகங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும்..
  • பவுல் என்பவர் இயேசு கிறித்து அவர்களின் போதநீகு எதிராக செய்தவற்றின் சில எடுத்துக்காட்டுகள் கீழே..


மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?

பொதுப்படையான கேள்விக்கு பொதுப்படையாக பதில் சுருக்கமாக தருவதென்றால்,

சமயம் சார்ந்த கருத்துக்கள் பொதுவாக உலக நன்மைக்கே வித்திடும். முரண்பாடாகதெரியும் இந்த கருத்து அதை ஆழ்ந்து கற்காததன் விளைவு. மொழி, இட, கால பாகுபாடு அன்றி ஒரே தத்துவத்தை தாங்கி நிற்பதன் மூலம் அதன் நம்பகத்தன்மை உறுதி ஆகிறது. சமயங்கள் ஓவ்வொன்றுக்கும் முரண்கள் பல இருப்பதாக போதிக்கப்படும் நாம், ஒற்றுமைகளை பட்டியலிட்டால், சமயங்களுக்கு இடையேயான வேற்றுமை என்பது மக்களை பிளவு படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று என்னும் அளவுக்கு மிகப் பெரியது. இந்த வளையொலி முழுவதும் ஒற்றுமைகளை பட்டியலிடும் வேலையை தான் செய்கிறது.

அப்படி அனைத்து மதங்களிலும் பொது விடயங்களாவன,

  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  2. நிலையில்லா உலகுக்கு மட்டுமே உழைக்காமல் நிலையான வீடு பேரு பெறவும் உழை
  3. குலத்தால், மொழியால், நிறத்தால் சிறப்பில்லை, அவரவர் செய்யும் செயலால்தான் சிறப்பு
  4. அவரவர் செய்த வினைப்பயனும் உண்டு, இறைவன் எழுதிய விதிப்பயனுமுண்டு
  5. பொறாமை, பெருமை, கோபம், நயவஞ்சகம் கொள்ளாதே
  6. கொலை, திருட்டு, கொள்ளை, ஏமாற்று செய்யாதே
  7. அன்பு, கருணை, தருமம், உதவி செய்
  8. பிறன் மனை நோக்காதே, விபச்சாரம் செய்யாதே
  9. வட்டி வாங்காதே, கொடுக்காதே
  10. எடையில் குறைக்காதே
  11. நன்மை தீமையின் அளவு பொறுத்து சொர்கம் நரகம் உண்டு
  12. இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை

இவைகளை ஏற்று பின்பற்றும் ஒருவனால் தனக்கும் தன சமூகத்துக்கும் நன்மையை தவிர வேறு ஏற்படுத்த முடியாது.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமை என்பது சற்று சிக்கலான ஆனால் எல்லோரும் கற்று அறிய வேண்டிய பகுதி ஆகும்.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமையாக சொல்லப்படுவது 

  1. சில கருத்துக்கள் அறிவியலுக்கு எதிராக பேசுகிறது
  2. கடும் போக்கு வாதத்தை போதிக்கிறது
  3. சமயங்களுக்கு இடையேயான இணக்கங்களை உடைக்கிறது
  4. மக்களின் மனித தன்மையை இழக்க செய்கிறது

ஆனால் இந்த தீமைகள் எல்லாம் எதன் மூலம் ஏற்படுகிறதென்றால்,

  1. ஒரே இறைவன் தான் அனைத்து மொழிகளுக்கும் அவனது பிரதிநிதிகளை (சித்தர்/ரிஷி/நபி/தீர்க்கதரிசி/குரு) அனுப்பி மக்களை வழி நடத்துகிறான் என்பதை மறுப்பதன் மூலம் பல இறைவனை கற்பனை செய்கிறான், பல இறைவன் கோட்பாடு மக்களை பிளவுபடுத்தவும் யுத்தங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
  2. இறைவன் தேவ தூதர்கள் (நந்தி/ஜிபிரியேல்/கேப்ரியேல்) வாயிலாக அவனது பிரதிநிதிகளுக்கு கட்டளைகளை அனுப்புகிறான் என்பதை மறுப்பதன் மூலம் இறைவனின் grand design-ஐ புரிய  மறுக்கிறான், அது அவனை அறியாமையில் ஆழ்த்தும், அறியாமை அழிவின் வாசல் ஆகும்.
  3. அந்த பிரதிநிதிகளை பற்றிய முன்னறிவிப்புமுன் சென்ற வேத ஆகம நூல்களில் கொடுக்கப்படாமல் அவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவதில்லை என்பதை அறியாமையினால், வசீகரமாக பேசும் எவரையும் குரு என்று நம்பி தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகி ஏமாற்றம் அடையும் பொழுது இறைவனை மறுக்கும் சூழலுக்கு செல்கிறான். போலி மருத்துவரால் மருத்துவத்தை விடாத மனிதன், போலி குருவால் ஆன்மீகத்தை விடுகிறான்.
  4. இறைவன் தந்த வேத நூலின் மூலமே மக்களாகிய நாம் வழிநடத்தப் படவேண்டும் என்பதை அறியாமல், அவனுடைய வேதம் என்ன என்று கூட அறியாமல் அறமும் வழிகாட்டுதலும் இல்லாமல் மனிதன் அநியாயங்களை செய்ய துவங்குகிறான்.
  5. உண்மையை, சத்தியத்தை, ஹக்கை அறியாமல் பொய் தெய்வங்களை, பொய் குருக்களை, பொய் வேதங்களை ஏற்று பாவங்களை விதைத்து நரகத்தை அறுவடை செய்யும் துர்பாக்கிய சாலிகளாக மனிதன் மாறிப்போய் நிற்கிறான்.
  6. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி அதற்கே உரிய விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதோ அதேபோல இறைவனை அறியவும், உண்மையான வேதத்தை அறியவும், வேதங்களில் கலக்கப்பட்ட பொய்களை களையவும், வேதங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை திரிபுகளையும் அடையாளம் காணவும் விதிகள் உள்ளன என்பதை அறியாத நிலையில் மனிதன் உள்ளான்.

சமயம் என்பது அறிவியலை போன்று, ஆற்றல் போன்று, வாகனத்தை போன்று - முறையாக கற்று கையாளப்பட வேண்டிய ஒன்று. அறிவியலை புறந்தள்ள முடிவு செய்வது அறிவீனம், அப்படியேதான் சமயமும்.

https://ta.quora.com/மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?


கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?

 ஆம்.

தவறுகளை மட்டுமல்ல நற்செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரவர் செயலுக்கான கூலி அவருக்கு தவறாமல் வழங்கப்படும் என்று அனைத்து வேதங்களும் கூறுவதின் சாரம் நம் செயல்கள் கண்காணிக்கப் படுகிறது என்பதாம். சொர்கம் நரகம் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல வழங்கப் பிஸ்ட்டும் என்பதும் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் கணக்கெடுக்கப் படுகிறது எனபதற்கான சான்று.

தமிழர் நெறி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே. (7ம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம் - பாடல் 1)

பொழிப்புரை: அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

இஸ்லாமிய நெறி

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். - (அன்-ஆனாம் 6:103)

கிறிஸ்தவ நெறி

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். - (யோபு 34:21)

முடிவுரை

எல்லாமும் கணக்கெடுக்கப் பட்டு அவைகளுக்கான கூலி சிலவற்றுக்கு இம்மையிலும் சிலவற்றுக்கு மறுமையிலும் வழங்கப்படும். வாசிக்க