ஹிஜாப் என்ற சொல் ஒரு அரபிக் மொழியின் சொல் இதற்கு தடை, பிரித்தல் அல்லது மறைக்கும் துணி என பொருள், ஜன்னலில் போடும் கர்ட்டன், அறையை இரண்டாக பிரிக்க போடப்படும் துணி, என ஒரு விஷயத்தை மறைப்பதற்காக போடப்படும் துணிக்கு ஹிஜாப் என பெயர் இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் பொது இடங்களுக்கு வரும் போது அவர்களது தலை முதல் காதல் வரை மறைக்க வேண்டும் என்பதால் அதற்கான துணியை ஹிஜாப் என்கிறார்கள்.
Hijab = Veil, முக்காடு, தலைமறைவுச்சீலை, முகத்திரை, மறைப்பு ஆடை, மறைத்து மூடுகிற
இஸ்லாம்
1. தம் கணவர்கள், 2. தந்தையர்கள். 3. கணவனின் தந்தை. 4. தம் மகன்கள். 5. கணவரின் மகன்கள். 6. தம் சகோதரர்கள். 7. தம் சகோதரர்களின் புதல்வர்கள். 8. சகோதரிகளின் புதல்வர்கள். 9. முஸ்லிம் பெண்கள். 10. தங்களது அடிமைகள். 11. பெண்களை விரும்ப முடியாத அளவு வயதான ஆண்கள். 12. பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறியாத சிறுவர்கள்.
முஃமினான பெண்கள் தங்கள் அலங்காரங்களை வெளிக்காட்ட அனுமதிக்கப்பட்டவர்கள்:
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:59)
முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக,அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்,தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,தங்கள் அலங்காரத்தை அதனின்றும் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர,(வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல் குர்ஆன் 24:30)
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜிக்கு வரும்போது இஹ்ராமுக்காக நாங்கள் முகத்தை திறந்து வைத்திருந்தோம். வியாபார கூட்டத்தினர் எங்களை கடந்து செல்லும்போது நாங்கள் முகத்தை மூடிக் கொள்வோம். (ஆதாரம்: புகாரி)
இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும். தம் தலையை மூடிக்கொள்ளாக எந்தப் பெண்ணும் தம் கூந்தலை வெட்டிக் கொள்ளட்டும். கூந்தலை வெட்டிக்கொள்வதையும் தலையை மழித்து விடுவதையும் இகழ்ச்சியாகக் கருதினால் அவர் தம் தலையை மூடிக்கொள்ளட்டும். (1 கொரிந்தியர் 11:5-6)
யூதம்
ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ண வெளியே போயிருந்தபோது தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது,ஒட்டகங்கள் வரக்கண்டான்.ஒட்டகத்தில் வந்த ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை கண்ட போது...அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள் (ஆதியாகமம் 24:62-65)
16 கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் தூக்கிய வண்ணம் நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்” என்றார். 17 சீயோனிலுள்ள பெண்களின் உச்சந்தலையை என் ஆண்டவர் புண்ணாக்குவார். அவர்களின் முடிகளெல்லாம் உதிர்ந்து மொட்டையாகும்படிச் செய்வார். 18 அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களை கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார். 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும், 20 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துப்போடுவார்.. (ஏசாயா 3:16-23)
இந்து
“When Brahma has made you a woman, you should lower your gaze and should not look up. You should put your feet together and you should not reveal what the garment and the veil conceals.”
கடவுள் பெண்களை படைத்து, அவர்களை கூச்சமுடையவராக ஆக்கியுள்ளார். பெண்கள் எந்த ஆணையும் தலைதூக்கி பார்க்க கூடாது. பார்வையை தாழ்த்திக்கொண்டவராக, உச்சி முதல் பாதம் வரை ஆடை கொண்டு மூடப்பட்டவராக பெண்கள் இருத்தல் வேண்டும். (ஆதாரம் : ரிக் வேதம் - எட்டாம் நூல் 33வது மந்திரம் 19-20 வரை)
பெண்களுடைய உடைகளை ஆண்கள் ஒருபோதும் உடுத்த கூடாது (ஆதாரம் : ரிக் வேதம் - 10வது நூல் 85வது பாடல் மந்திரம் 30)
பரசுராமர், ராமரை சந்திக்க வந்த போது... சீதையை பார்த்து ராமர் கூறுகிறார்... "சீதையே! நீ திரைகளுக்குள் இருந்து கொள், உன் பார்வையை தாழ்த்திக்கொள்" என்று (ஆதாரம் : மஹாவீர சரித்திரம் - அதிகாரம் 2, 71வது பக்கம்)
பிரம்மா, பெண்ணை படைக்கும் போதே அவளுக்கு கட்டளையிடுகிறார் , "பெண்ணே நீ பார்வையை தாழ்த்திக்கொள், ஆடவர்களை தலைதூக்கி பார்க்காதே, ஆடைகள் கொண்டு மூடப்பட்ட உனது அங்கங்களை யாருக்கும் வெளிப்படுத்தாதே, பெண்மையை பேணிக்கொள்வது உன் மீது கடமையாகிறது". (ஆதாரம் : ரிக் வேதம் ,பாகம் 19, மந்திரம் 8 - 33வது வரி)
இன்னும் பல சான்றுகள் உள்ளன
பழந்தமிழர்கள் அணிந்த பல்வேறு ஆடைகளின் பெயர்கள்
உடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை, கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை, தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம், கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம், மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு, காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
...........................................................................
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தரஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்துஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇமுயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்பஅஞ்சினள் உயிர்த்தகாலை ..... - (அகம்.86)
முதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா?. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.
இதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
...............................................................
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவிமுருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇபெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்உறு வளி ஆற்ற சிறு வரை திற எனஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்பமறை திறன் அறியாள் ஆகி ஒய்யெனநாணினள் இறைஞ்சியோளே .......... - (அகம். 136)
இப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.
பழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்டதாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்புகாதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கியமாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக.. (கலி 69)
திருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:
...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - (பெருங். உஞ்சை. 42)
இதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்கள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.
கடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில் - (குறள் 1087)
இக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும். சங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களையும் முகத்தையும் மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் படுகிறது.
சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை - (குறள் 57)
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
பொழிப்பு: மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது. பரிமேலழகர்
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.
பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப கற்பு நெறி காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் வீரியம் வாய்க்கின்றது.
உபதேசங்களுக்கு பஞ்சம் இல்லை. பின்பற்ற வேண்டும் என்றால் பஞ்சம்தான். மு வரதராசன்
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்http://anichchem.blogspot.com
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. (தொல்காப்பியம்: களவியல் 8)
“உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் / செயிர்தீர்க் காட்சிக் கற்புசிறந் தன்றெனத்” (தொல். களவு. 111)