தமிழர் மதம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறநானூறு:192
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் - குறள் 505
பொருள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் செயலே.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். - குறள் 319
பொருள் முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்துஅண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே (திருமந்திரம் - 1647)
விளக்கம்: புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!
கிறிஸ்தவம்
இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். - வெளி 20:12தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுவார்கள். நீதிமொழிகள் 14:14
“ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.
இஸ்லாம்
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். திருக்குரான் - 45:22.நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும் - 17.7.
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான். - 4:123.
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். - 4:124.
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. 2:281.