திருமந்திரம் இதற்கான பதிலை தருகிறது!
ஏன் திருமந்திரம் சொல்வதை நம்ப வேண்டும்? ஏனென்றால் திருமந்திரம் ஒரு வேதநூல்!
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (10.01 பாயிரம் - 05. திருமூலர் வரலாறு, பாடல் 5)
திருமூலருக்கு குருவாக (நாதனாக) இருந்து திருமந்திர வேதத்தை தந்தவர் யார்? நந்தி!
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.
எதத்னை நந்தி உண்டு? நான்கு!
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
இதில் திருமூலரின் ஆசிரியரான நந்தி யார்? எண்மர்!
இந்த நால்வரும் மனிதரா? பசுவா? தேவரா? தேவர்கள்!
சரி இந்த நான்கு பேரின் வேலை என்ன? ஒவ்வொரு திசைக்கும் குருவாக இருந்து வேதத்தை கொடுப்பவர்கள்!
நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நால் விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
ஒவ்வொரு திசைக்கும் ஒரு நந்தி!
அதில் தென்னாட்டவர்க்கு இறைவனின் வேதத்தை உபதேசிக்க வந்த நந்தி தேவரின் பெயர் எண்மர்!
மற்ற மூவரும் மற்ற மூன்று திசைக்கு உறியவர்கள்!
இப்போ தென்னாடு என்பதை புரிய வேண்டுமென்றால், சைவ வேதம் என்னென்ன மொழிகளில் உண்டு என்று அறிவதால் கிடைக்கும்! தமிழில் மட்டும்தான். மற்ற மொழிகளில் இதிலிருந்து தழுவி எழுதப்பட்டது, அதுவும் பொருள் புரியாமல்.!
தென்னாடு என்பது ஏறக்குறைய இந்தியா முழுவதும்! நான்கு திசைகளில் வடக்கு தெற்கை எங்கிருந்து பிரிப்பது? பூமிப்பந்தை சரியாக பிரித்தல் இமயமலைக்கு மேலே உள்ள பகுதி வடக்காகவும் கீழே உள்பகுதி தெற்க்காகவும் விளங்கும்! எப்படி?
இதற்கான ஆதாரங்கள்,
- ஆரியர்கள் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிற வரலாற்று தகவல் வடக்கு என்பதை இன்னும் தெளிவாக பிரித்தது அறிவிக்கிறது.
- சமஸ்கிருத மொழியின் இடமாக விக்கிபீடியா சொல்வது : சம்ஸ்கிருதத்தோடு ஒத்துப்போகும் மொழிகளாவன, இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் வேத சமஸ்கிருதத்தின் நெருங்கிய பழங்கால உறவினர்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு இமயமலையின் தொலைதூர இந்து குஷ் பகுதியில் காணப்படும் நூரிஸ்தானி மொழிகள், அத்துடன் அழிந்துபோன அவெஸ்தான் மற்றும் பழைய பாரசீக மொழிகள் - இரண்டும் ஈரானிய மொழிகள். சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த பூர்வீக மொழியின் இலக்கணத்தோடும் பொறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
- ரிக் வேதங்கள் முழுவதும் மாடு மற்றும் குதிரையினை பெருமை பேசுவதன் காரணம் ஸ்டெப்பி புல்வெளியில் கால்நடைகளை மேப்பதை தவிர வேறெந்த பொருளாதாரமும் கிடையாது.
- இமயமலையில் உள்ள ஸ்ரீநகர் என்கிற ஊர் "திருநகர்" என்று முக்காலத்தில் வழங்கப் பட்டது என்கிற தகவல்
- சிந்துசமவெளியில் தமிழன் மூல எழுத்துக்களோடு ஒத்துப் போகிறது என்கிற தகவல்
இதுவெல்லாம் போதுமான சான்றுகள்.
தமிழ் கூறும் நல்லுலகம் இமயமலைக்கு கீழயேயும், சமஸ்கிருதம் அதற்கு வெளியேயும் இருந்து வந்தது என்று.
எனவே தென்னாடு என்பது ஏறக்குறைய இன்றைய இந்தியா முழுவதும்!